Everything posted by goshan_che
-
யாழில் விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு
புலிமுக சிலந்தியோ? யாழில் ஆளை கொல்லும் அளவு விசமுள்ள பூச்சிகள் உண்டா?
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
அஞ்சலிகள். மிக வித்தியாசமான, மானிட நேயம் காட்டிய அரசியல்வாதி. ————— இது தான் உயிருடன் இருக்கும் போதே இவர் தனக்கென கட்டிய கல்லறை. மொழிபெயர்காமைக்கு வருந்துகிறேன். நிலையாமையை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறார்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
முடிந்தளவு யாழில் இம்முறை எடுத்து வரும் தின்பண்டங்களை உற்பத்தியாளர்களிடமே வாங்கினேன். வெளிநாட்டுக்கு, எனக்கு என சொல்லியே வாங்கினேன். ஒருவர் கூட ஏய்க்கவில்லை. அதுவும் அந்த எள்ளுபாகு வித்த அம்மா, “சாப்பிட்டு பாருங்கோ, சாப்பிட்டு பாருங்கோ” என எனக்கும் ஆட்டோ ஓட்டியவருக்கும் சேர்த்து ஒரு பக்கெட்டையே இனாமாக தந்து விட்டார். நான் வங்கியதோ வெறும் 10 பக்கெட். இதில் இவர் இனி எங்கே இலாபம் பார்பது?(11க்கு விலை கொடுத்தேன்). போர் பலதை பறித்து கொண்டாலும் என் மக்களின் என் மக்களின் தன்மானத்தை, நாணயத்தை பறிக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா சமூகத்திலும் கறுபாடுகள் உண்டே. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. இதை இங்கே தூக்கி பிடிக்கும் புலம்பெயர் சமூகம் மட்டும் என்ன திறமா? இலண்டன் கடைகளில் விலை அடிக்காமல், நான் போனால் ஒரு விலையும், என் இளவயது மகன் போனால் கூடிய விலையும் பல தரம் அடித்துள்ளார்கள். எனது திரியில் கூட பதிந்தேன், எப்படி 80ரூபாய்க்கு ஊரில் மஞ்சள் கடலை வாங்கி அதை இங்கே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
————-————— ————— போதை சுற்றுலா வரும் புலம்பெயர் தமிழரிடம், யாழில் யாசகர் காசு வாங்கி கஞ்சா அடிக்கிறார்கள் என்பது எந்தளவு தூரம் உண்மை என தெரியவில்லை. நீங்கள் இங்கே இருந்து அனுப்பும் பணம் அங்கே உங்கள் இளவயது உறவினர்களால் தப்பாக பயன்படுத்தபடக்கூடும். கஞ்சா பாவனை மாணவர், பல்கலை, வேலை செய்யும் இள வயதினர் மத்தியில்தான் அதிகம் என கேள்விப்பட்டேன். யாசகம் கேட்பவர்கள் மிக பெரும்பாலோனோர் 40+ தனி ஆண்/பெண்கள். நம்மிடம் யாசகம் கேட்பதால் அவர்களை சகட்டு மேனிக்கு கஞ்சா கேசில் பிடித்து போட கூடாது. அதே போல் யாழ் மக்களும், ஏனைய இலங்கை வாசிகளும் அறுதி பெரும்பான்மையானோர் நாணயமானோரே. திரி எல்லாரும் கொள்ளைகாரர் என்ற ரீதியில் போக தலைபடுவதாக தெரிகிறது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நக்கலாக இல்லை….தகவலுக்காகவே கேட்கிறேன். நீங்கள் கடைசியாக ஊர் போனது எப்போ? நீங்கள் விபரிக்கும் உதாரணம் தமிழ்நாட்டுக்கு 100% சரி. ஆனால் சென்னைக்கும், யாழுக்கும்கொ/ழும்புக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு இன்றும் உள்ளது.
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அண்மையில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு 1900 ஆண்டு பதிப்பித்த தமிழ் புத்தகம் ஒன்றின் சில பக்கங்களை அனுப்பி - இந்த புத்தகம் எதை பற்றியது என கேட்டிருந்தார். நான் சும்மா தமிழ் இலக்கியம் அது, இது என உடான்ஸ் விட்டு திரிவதால் - என்னை விசயகாரர் என தப்பு கணக்கு போட்டுள்ளார் என்பது புரிந்தாலும், மானத்தை விட்டு கொடுக்க முடியாதல்லவா? சரி அப்படி என்னதான் இருக்கு என பார்ப்போம் என முயற்சித்தேன். எழுத்து சீர்திருத்தம் வர முந்திய பதிப்பு. அது பெரிய பாதிப்பாக இருக்கவில்லை. ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள்…. 6 பக்கம்…. 95% எமக்கு தெரிந்த தமிழ் எழுத்துருக்கள்தான். ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்கும் போது ஏதோ ஒரு அர்த்தம் விளங்கினாலும்…. ஒரு வசனமாக சேர்த்து வாசித்தால் ஒரு அறுப்பும் விளங்கவில்லை. பந்தி? சான்சே இல்லை… பக்கம்? ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்து முடிக்க மூளை மூக்கால் வடியாத குறை. இதற்கு மேல் வாசித்து அர்த்தம் காண விளைந்தால் - மூளைகாய்ச்சல் நிச்சயம் என தோன்ற - என் தோல்வியை ஒப்பு கொண்டு நண்பரிடம் சரண்டர் ஆகி விட்டேன். # deja vu
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றி.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
காரா? ஹெலிகொப்டர் அண்ணை. ஹெலிகொப்டர்🤣. உண்மையில் இப்படி யாரும் என் கையை பிடித்து கடைகளில் கெஞ்சவில்லை. அதுவும் யாழில் - பஸ் நிலையத்தில் யாசகர்கள் கொஞ்சம் அலுப்புத்தந்தார்கள். யாழ்பாண கடைகாரர்கள் - window shopping செய்பவர்களையே விரட்டுவார்கள். அவ்வளவு இறுக்கமானவர்கள். தமது கடையில் நிற்கும் கஸ்டமரை இப்படி அலுப்பு கொடுக்க விடுவார்களா? சில சமயம் முதிர்ந்த வெளிநாட்டு மனிதர் என்பதால் எல்லாரும் சேர்ந்து பாஞ்ச் ஐயாவை மொய்த்தார்களோ என்னமோ? அதே போல் நான் இந்த அனுபவத்தை பெறாமைக்கும் வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது வேட்டி கட்டுவது என நினைக்கிறேன். என் அன்பையும் சொல்லவும். மணந்துதான்….. Oil of Olay, Gucci, Tom Ford, DKNY, Versace, Armani, CK, Tommy…… வெளிநாட்டு வாசம் என்று ஒரு விசயம் நிச்சயம் உள்ளது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ரைட்டு, சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣. பிகு 1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை. யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர். எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர். @MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே. 3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். “நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. பிகு:பிகு: மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும். காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
தமிழர் உரிமை பெற்றால் ரத்த ஆறு ஓடும் என்பதை நான் எங்கே மறுத்தேன்? நான் சொல்லாத ஒன்றை சொல்லி ஏன் பூசணிக்காயை என் தலையில் கட்டுகிறீர்கள்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஓம் இது அவர்களின் சுற்றுலாத்துறைக்கே ஒரு நாறடிப்புத்தான். எப்போ? இதை நிழலி சொல்லுமாப்போல் ஈழத்தமிழர் அல்லாதோர் முன் கொண்டு செல்லும்போது. இலங்கை உண்மையிலே கொலைகளமாக இருந்த போதே சுற்றுலா போன வெள்ளைகள் பல கோடி. எனவே இப்படி செய்வது பெரிய தாக்கத்தை தராவிடினும் - ஒரு செய்தியையாவது சொல்லும். ஆனால் இப்படியா சுத்துமாத்தோடு வாழ்ந்து வளர்ந்த எமக்கே இதை வைத்து பிம்பம் எழுப்ப முனைவது பேதமை. இதெல்லாம் சப்பை மேட்டர். 2024 நல்லூர் சீசனுக்கு போகும் வெளிநாட்டு தமிழர் அளவு நான் சொல்வதை உறுதி செய்யும். விரட்டப்பட்டதை வடக்கில் இருந்து பார்த்தவர்களுக்கு மறந்தாலும், விரட்டப்பட்டவர்களுக்கு மறக்காது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அது. இது நியாயமான, தேவையான, வினத்திறனான செயல். ஈழத்தமிழர், சொற்பமாக ஏனைய தமிழர் மட்டும் வாசிக்கும் தளத்தில் வந்து சிங்களவன் மோடன், இலங்கையில் ஒரே களவு என எழுதுவது ஒரு பயனையும் தராது. எல்லாம் மங்கி, கடைசியில் பார்வையும்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
களவை கள்ளன் மட்டுமே “இருக்கலாம்” என சொல்வான். ஆனால் ஒரு டி+வடை நானே 350 க்கு வாங்கியுள்ளேன். வெள்ளை தோல் தேவையில்லை, பாட்டா வோடும், அயர்ன் பண்ணாத சேர்டோடும் போய் ஆனால் கொழும்பு பஸ்சில் இருந்து இறங்கி கேட்டா ஆட்டோ வழமைக்கு 200, 300 கூட. சரி நமக்கு சின்ன வித்தியாசம் தானே என ஏறிப்போவது. ஒரு டி+வடை 600, 1000 கொத்து 1800 - களவுதான். ஆனால் இதை ஏதோ போபர்ஸ் ஊழல் மாதிரி எழுதுவது ? அந்த பெல்ஜியன் கடைசியில் காசை கொடுத்தும் வாங்காமல் - இனி ஏமாத்தாதே என சொல்லி போகிறான். அவன் மனிதன். பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது, ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது. -பட்டுகோட்டை- பிகு அடுத்த தடவை இலண்டன் வரும் போது அந்த Black Cab Taxi யில் ஏறி ஒரு 20 மைல் பயணித்து பாருங்கள். ஓட்டுவது 99% மத்திய தர ஆங்கிலேயர் மட்டும்தான். உங்கள் கொலிடே பட்ஜெட்டில் 50% உருவி விட்டு அனுப்புவார்கள். அல்லது எந்த இத்தாலிய குறிப்பாக வெனிஸ் போய் நல்ல காசை வைத்து பின் பொக்கெட்டில் வைத்து அதே அனுபவத்தை அடையலாம். அறுவார் ஒண்டுமில்லாத எண்ட முதலாவது ஐடி கார்ட் படத்தை செண்டிமெண்டா வச்சிருந்த பேர்சையே லவட்டினவனுக.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள் 🤣. *அண்மையில் ஒரு பீச்சில் whites only பார்ட்டி ஏற்பாடு செய்து சர்ச்சையாகியது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்… யாரும் போக வேணாம் ….போகவே வேணாம்…. ஆயிரகணக்கில் போகும் வெள்ளைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்… போதும்தானே🤣
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான். ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ஒரு குட்டி ஸ்டோரி 50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
-
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
#பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.