goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா? இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான். London living wage மணிக்கு £13.15. கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780 ஒரு வருடம்= 780x52= £40560 ஒரு மாசம் = 3380. ——— பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்? ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம். ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர். அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அது எல்லாருக்குமானதல்ல. கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர். அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள். எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள். பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன். 👆🏼👇
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣. கொசுறு இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1 தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது. எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்? அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை. எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே? (நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣). ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன். பிகு இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன். இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி. இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
போன டிசம்பர் மாதம், நாதமுனியோடு சேர்ந்து ஒரு மானஸ்தர், சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம், இலங்கை தமிழ் மக்கள் இனி மேற்கை, இந்தியாவை, யாரையும் நம்பாது - சிங்களவரோடு நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என எழுதினார். அந்த நல்லிணக்க நாயகனை நான் தேடுகிறேன்🤣. அரோ ஹரா!
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் ராஜபக்ஷர்கள் பதவி விலகினார்கள் - கிரியெல்ல
இந்த மனோநிலை இவரது மட்டும் அல்ல. பெரும்பாலனா சிங்களவர் மனோநிலையும் இதுவே. அறகல நேரம் இந்த மனநிலை மாறுகிறதோ என பலர் யாழில் எழுதினர். அதில் பல தெள்ளிய தமிழ் தேசிய வாதிகள் (அல்லது அப்படி காட்டி கொள்வோரும் அடக்கம்). ஆனால் - அவர்களை பொறுத்தவரை அது இன்றும் மனிதாபிமானப்போர் தான்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வீரத்துடன் போட்டியில் குதித்துள்ள @தமிழ் சிறி. மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையளுக்கு ஒரு சல்யூட்🤪 பாத்தியளே பெரிசுக்கு குசும்ப🤣. விட்டால், வீரப்பா, நம்பியார், செந்தாமரை, ரகுவரன், பிரகாஷ்ராஜ் எண்டு போடுவார் போல கிடக்கு🤣
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது 3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது. அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான். உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி? அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று. முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣. அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள். உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣. 🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣. துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
(நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. நான் யாரையும் எதுவும் ஆக்குவதுமில்லை. என்னை யாரும் எதுவும் ஆக்க முடியும் என நம்பவும் இல்லை. நான் பலமுறை சொல்லிவிட்டேன். நான் நீங்கள் நினைக்கும் நபர் இல்லை. எனக்கு நீங்கள் வைத்துள்ள உத்தேச வயது கூட மிகவும் அதிகம். ஆனால் என்னை அடையாளத்தை வெளிகொணர்வதில் இப்போதைக்கு எனக்கு உடன்பாடில்லை. நான் யார் என சொல்லி விட்டால் பிறகு நினைத்ததை எழுத முடியாது. அது தேவையும் இல்லாதது. அதேபோல் என் தந்தை யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், ஹாஸ்டலில் தங்கி படித்தார். அவருக்கும் ஏனையோருக்கும் முள்ளு கரண்டியால் சாப்பிடும் முறை, எந்த கரண்டியை எப்படி, எந்த நேரத்தில் பாவிக்க வேண்டும் என்பதை, டைகட்டும் விதத்தை, சூ பாலிஷ் அடிப்பது, நேரம் தவறாமை இப்படி பலதை அதிபர் ஸ்மித் சொல்லி கொடுத்தார் என்பது பற்றி எல்லாம் முன்பே யாழில் எழுதியுமுள்ளேன் என நினைக்கிறேன்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
எல்லாரும் அப்படி இல்லை என்பதை ஏற்கிறேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
ஓ…உங்கள் வயதை வைத்து நீங்கள் இலங்கையில் வேலை செய்திருக்க கூடும் என நினைத்தேன். நானும் இலங்கையில் வேலை செய்யவில்லை, ஆனால் பெற்றாரின் விடயங்களை கையாளும் போது இது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன. இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது. இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும். இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது. இதை விட அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன். இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது. அதே போலவே மருத்துவமும் இலவசம். அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள். எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர். நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம். அதை இப்போ அடைக்கிறார்கள். கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது. https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் யாழை தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை. பராக்கு பார்ப்பதோடு சரி. வேறு எங்கும் எழுத வேண்டிய தேவையும் எனக்கில்லை. என்னை பொறுத்து ஈழதமிழரின் அபிப்பிராயம் எனபதை அறிய யாழை தவிர வேறு திறமான இடம் இல்லை. பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣. ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான். சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கு ஒரு புரட்சியும் நடத்தும் எண்ணமில்லை. ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன். மற்றும்படி சோசல் மீடியாவில் தேர்தல் வைத்தால் நாம் தமிழர் அமரிக்க காங்கிரசையே கைப்பற்றும் என்பதை நானும் ஏற்கிறேன்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இதை 2004 க்கு பிறகு இலங்கை போகாதவர் எழுதக்கூடாது. அங்கே இருப்பவர் என்ன நிலாந்தனே எழுதியுள்ளாரே? பார்க்கவில்லையா அல்லது selective blindness ஆ?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
எனது கேள்வி காளியம்மாள் பற்றிய தற்போதைய கருத்துக்கள் சர்சைகள் பற்றியதல்ல.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வேட்டியை மட்டும்தான் உருவலாம்…. இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣 என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.