Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பிகு சீமான் சபரிசனை சந்தித்தது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. ஜூனியர் விகடன் எழுதியுள்ளது. அதை எதிர்த்து சீமான் வழக்கு போடவில்லை. ஏன் என கேட்டால் நீங்கள் நேரம் இல்லை என சப்பை கட்டு கட்டுகிறீர்கள். பொதுவெளியில் வைக்கபட்ட குற்றசாட்டு, அது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. இவை எல்லாத்தையும் விட அரசியலுக்கு நெஞ்சுரம் வேண்டும். இது அனைவருக்கும் அமைவதில்லை. விஜை மிக மென்மையானவராக தெரிகிறார். அரசியலில் நல்ல மனது அல்லது கெட்ட மனது எது இருந்தாலும் வெல்லலாம், ஆனால் கெட்டவன் போன்ற மன உறுதி இல்லாமல் வெல்ல முடியாது. அதேபோல் கொஞ்சம் சமயோசிதமும் வேண்டும். இப்படி போய் பொறியில் சிக்கும் ஒருவர் நாளை முதல்வர் ஆனால், அமித் ஷாவும் நட்டாவும் கூடி கும்மி அடித்து விடுவார்கள்.
  2. இதில் நான் என்ன அரசியல் பரப்புரை அல்லது எனக்கு பிடித்த தலைவரை தூக்கி பிடித்து கருத்து எழுதினேன். எந்தளவுக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்தேனோ, அதே அளவுக்கு சீமான் என்ன செய்ய கூடும் என்ற என் விமர்சனபார்வையையும் முன்வைத்தேன். இந்த திரியில் நீங்களும், நானும் இன்னும் பலரும் அரசியல் பேசினோம். அது தவறில்லை. இது ஒரு சோக செய்தி எனிலும் அரசியல் சார்ந்த திரிதான். ஆனால் இந்த திரியில், சீமானியர்கள் மட்டும்தான் இதை வைத்து சீமானுக்கு பஜனை பாடினீர்கள். நீங்கள் மட்டும் இல்லை, இன்னும் இருவரும். வேறு எவரும் - செத்தவீட்டில் அழும் என் அண்ணணை பாருங்கடா, தங்கம்டா என்ற வகையில் எழுதவில்லை. இதைத்தான் கேவலம் என்கிறேன்.
  3. நேற்று வரை என்னை திமுக சொம்பு, 200 ரூபாய் உபி என சொன்னீர்களே? உங்களை போல் நான் எந்த கட்சிக்கும் நேர்ந்து விட்ட குதிரை அல்ல - த வெ க ஆதரவாளனும் இல்லை. திமுக. அதிமுக, பாஜக வுக்கு மாற்றாக விஜை முன்வைத்த கொள்கைகள் சிறப்பானவை என்பதால் அவரின் அரசியல் வருகையை ஆதரித்தேன், with reservations. அதே போல் நிலவரம் கலவரம் ஆகியதும் விஜையை போல் பனையூரில் போய் ஒழிந்துகொள்ளும் கோழையும் நானல்ல. சீமானின் கருத்து கூலிப்படையை பலவருடமாக யாழில் பல திரிகளில் தனி ஆளாக நின்று ஓட ஓட விரட்டிய எனக்கு இதை இட்டு ஒழிய வேண்டிய அவசியம் இல்லை. நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my beef.
  4. இப்படி மரணவீட்டில் சுய தம்பட்டம் அடிக்கும் பிண அரசியலை இதில் சீமான் கூட செய்யவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் செய்கிறார்கள்…. இதுக்கு பெயர்தான் எச்ச….
  5. கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார் Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 2:36 [IST] கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்? மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.! கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
  6. சீமானை நான் எதிர்க்க வேறு எவர் மீதான என அபிமானமும் காரணம் இல்லை. சீமான் எப்படிபட்டவர் என்ற புரிதல் மட்டுமே காரணம். 😭😭😭 ஒரு ஈழத்தமிழனாக…. அந்த மீண்டும், மீண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் கடினமாது, கொடுமையானது… ஆனாலும் சம்மட்டியால் அடித்தது போல் உண்மையானது. இப்படித்தான் நமது மக்களும் மாட்டிகொண்டார்கள் இல்லையா?
  7. ஏற்றுகொள்கிறேன் - இந்த விடயத்தில் சீமான் மிகவும் நியாயமாகவே நடந்து கொள்கிறார். எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும். இதை நீங்கள் பலதடவை எழுதியும் உள்ளீர்கள். நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது கூட ஒரு டிவீட்டின் பின் ஒளிந்து கொள்ள நினைப்பது மிக மோசமானது. உண்மையில் இதை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லை என்றால் மன்னிப்பு கோரி விலகிவிட வேண்டும். பிகு இது ஜோக் அடிக்கும் விசயம் அல்ல ஆனால் அன்பில் மகேஷ் அழுத அழுகை ஆஸ்கார் ரகம்.
  8. வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
  9. சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது. உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார். கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST] இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.
  10. எது ஒழுக்கம்? தலைவரின் ஆளுரய படத்தின் முன் வைத்து, ஒரு சிறுமியை நாதக நிர்வாகி வன்கொடுமை செய்த வீடியோ உலவுகிறதே அதன் பி. அவருடன் சீமான் போட்டோவும் எடுத்தாரே அந்த ஒழுக்கமா? அல்லது அடிக்கடி செய்யிகளில் அடிபடும் நா தக வினரின் “ஒழுக்கமா”? இங்கே ஒழுக்க கேட்டால் யாரும் சாகவில்லை. கூட்ட நெரிசல். ஆகவே சீமானை இது உயர்தியது என்பது - இதிலாவது நாதகவுக்கு ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற அங்கலாய்பே.
  11. அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், "விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 👆 அதிமுக ராஜசபா எம்பி இன்பதுரை. பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவு சமிக்ஞை? இதை வைத்து விஜைய வழிக்கு கொண்டுவர பாஜக/அமித் ஷா முயல கூடும். இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துத்தான், முத்துகுமாரை கொலை செய்துவிட்டு, றோ சீமானை கட்டுப்பாட்டில் எடுத்தது.
  12. அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள். ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை பதில் சொல்வதில்லை. இன்று நிலமை வேறு என உணர்ந்து பதில் சொல்லி இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு நடிகன் - இவ்வளவுதான் என்ற பேச்சு எழும் என தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே மக்கள் கொலையை செய்து விட்டு அழுபவனை நம்புவார்கள். கொலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவனை இரக்கம் அற்றவன் என திட்டுவார்கள். ஆனால் இதை கூட விளங்கி கொள்ளவில்லை எனில் - விஜை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதே உண்மை. இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது. ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.
  13. மேலே சொல்லி உள்ளேன் மாசி மக நீராடலுக்கு ஜெ போனபோது நடந்தது. ஜெ அளவுக்கு விஜைக்கு துணிவு அல்லது மன தைரியம் இல்லை என்றே படுகிறது. மனதைரியம் இல்லை எண்டால் அரசியல் சரிவராது.
  14. விஜை பனையூரில் போய் முடங்கி கிடப்பது மிக பிழை. ஆனால் மேலே புலவர் எழுதி இருப்பது வரிக்கு, வரி திமுக ஐடி விங் தயாரித்து கொடுத்து பல கணக்குகளில் இருந்து பகிரப்படும் “கருத்து” க்களை ஒத்து இருக்கிறது.
  15. யாழிலும் மனித சோகத்தில் அரசியல் செய்யும் நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள்.
  16. விஜை ரொம்பவும் இமோசனலானவர் என நான் நினைப்பதை இந்த அறிக்கை கொஞ்சம் உறுதி செய்வது போல் உள்ளது. இத்தனை உயிர்கள் தன் கூட்டத்தில் பலி, அதுவும் தன்னை நேசித்தவர்கள், தன்னை காண என மணிக்கணக்கில் காத்து நின்ற குழந்தைகள் என்பதை கடந்து போவது, மீண்டு வருவது மிக கடினமானது. ஒத்தாசைக்கு ஒரு கூட்டணி கட்சி கூட இல்லை. சந்தர்ப்பம் காத்திருந்து நிலைய வித்துவான்கள் ரஜனி, கமல் நன்றாக வாசிக்கிறார்கள். விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும். 30+ உயிர் என்பது இலகுவாக கடந்து போக முடியாத விடயம்.
  17. பிகு நாளை முதல்வர் கரூர் போகிறாராம். ஆனால் ஒரு ஆள் கூட நெரிசல் படாமல் பொலிஸ் பார்த்துகொள்ளும். விஜையின் மக்கள் ஆதரவு என்ற ஆயுதத்தை விஜை மீதே நாகாஸ்திரமாக திருப்பி விட்டுள்ளது திமுக. ஒன்றில் பெட்டி கொடுத்து வாங்குவார்கள், அல்லது இப்படி கட்டம் கட்டுவார்கள். இவர்களுக்கு தண்ணி காட்டிய இருவர் என்றால் அது எம் ஜி ஆரும், ஜெயும்தான். அவர்களை போல் விஜை, விஜயகாந்த் இல்லை. நான் முன்பு கேள்விபட்ட கதை ஒன்று - விஜை அவரின் தங்கை இறப்பின் பின், ஒரு சிறுவனாக, மிகவும் மனநிலை தளம்பி இருந்தாராம். சில விடயங்களில் இப்போதும் மன அளுத்தம் வருமாம். விஜை தார்மீக பொறுபேற்று - அரசியலுக்கு முழுக்க போட்டாலும் போடக்கூடும் என எண்ணுகிறேன்.
  18. உங்களின் மனநிலையில்தான் பலர் இருப்பார்கள். பல காலத்துக்கு பின், திமுக வை ஓரம்கட்டி, அதேவேளை ஓரளவு திராவிட, தமிழ்தேசிய அரசியலை முந்தள்ள கூடிய ஒரு புதிய சக்தி, ஆரம்பமாக முதலே அணைந்து விட்டது போலவே படுகிறது. வேஸ்ட்டு பெலோ பொருத்தமான வார்த்தைதான்.
  19. மாசி மகத்தில் ஜெ போனபோது அவரின் பாதுகாப்பால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்தனர். அந்த ஜெவை கூட மக்கள் மன்னித்தனர். இது விஜை வேண்டும் என்று செய்த ஒன்றல்ல - இதில் இருந்தும் மீளலாம். ஆனால் விரைவு நடவடிக்கை முக்கியம். இப்போதே கூட்டத்தில் இருந்த ஆட்கள் என திமுக சொம்பு ஊடகங்கள் narrative set பண்ணுகிறார்கள். நாளைக்கு அண்ணன் சீமான் இறங்கி அடிப்பார். விஜை பனையூரில் பதுங்கினால் - வழித்து எடுத்து விடுவார்கள். இதில் விஜை தெளிவாக செயல்படின் அவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என கருதலாம்.
  20. தொடர்ந்தும் கூடும் சனத்தை பார்த்த பிறகும் - ஊர் மத்தியில் தரும் இடத்தை ஏற்று கொண்டதன் மூலம் - விஜை தனக்கு தானே ஆப்பு வைத்துள்ளார். இது அவரினதும், அவரை சூழ உள்ளோரதும் அரசியல் முதிர்ச்சி அற்ற நிலையையே காட்டுகிறது. இதில் ஏதேனும் சதி இருக்கலாம் இல்லை என்றாலும்….போன 2 சனிக்கிழமை கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும் பொலிஸ் 100 அடி வீதியை கொடுத்தது - இதை எதிர்பார்த்தே செய்தார்கள் என்றே நினைக்க வைக்கிறது. விஜை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் அரசியல் ஒவ்வொரு அடியாக அழிவை நோக்கி போகிறது. விரைவாக வெளியே வந்து, பேட்டி கொடுத்து ஆவன செய்ய வேண்டும். முதலாவது மன்னிப்பு. இரெண்டாவது நட்டைஈடு, உறவினருடன் ஆறுதல். மூன்றாவது - இதில் சதி இருப்பதாக சந்தேகிக்கின் சிபிஐ விசாரணை நேரா அமிதாஷாவிடம் கோர வேண்டும். பிகு திமுக, அதிமுக, பாஜக வை தாண்டி ஒரு மாற்று சக்தி வரமுயன்றால் இப்படித்தான் அடக்குவார்கள். சும்மா மேசையில் வாய் கிழிய கத்திவிட்டு, பெட்டி வாங்கும் அரசியல்வாதிகளை விட்டுவிடுவார்கள். ஆனால் விஜை திமுகவின் அடித்தளத்தை அசைக்க முயன்றார். அதற்குத்தான் இந்த எதிர்வினை. ஆனால் திமுகவை எதிர்பதாக சொல்லும் பலர் - விஜையை போட்டு துவைப்பதிலேயே இப்போ ஆர்வம் காட்டுவார்கள், யாழ் களத்திலும் இதை காணலாம்😂.
  21. அதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் அப்படி நம்பவில்லை. விஜை தனித்து நின்றால் ஒரு சீட் 10-15% வாக்கு என்பதே என் தற்போதைய கணிப்பு. A week is a long time in politics என்பார்கள். 7 மாதத்தில் என்னவும் நடக்கலாம். கரூர் மரணங்களை விஜை எப்படி எதிர் கொள்கிறார் என்பது அவரின் அரசியலுக்கு வாழ்வா, சாவா கேள்வி. ஆனால் 2026 இல் அதிபர் ஆட்சி அமைப்பது உறுதி😂.
  22. கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்! Halley KarthikUpdated: Saturday, September 27, 2025, 20:52 [IST] கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். டிஸ்கி செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா? இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள். என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.