Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கள்ளடிக்கிறத நியாப்படுத்த என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டி கிடக்கு🤣
  2. நீங்கள் இருவரும் இப்போதுதான் முதன் முதலால காதலிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நான் கண்டுபிடித்துவிட்டேன்🤣. காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! கவிஞர் : வைரமுத்து
  3. தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா. ஏனையோருக்கு அவை நோய் அறிகுறிகளை கண்டு பிடித்து, நிவாரணம் தேட உதவும் கருகிவிகள்.
  4. நல்ல வேளையாக நீங்கள் முந்தி கொண்டீர்கள். அல்லது இந்த விளக்கத்தை கஸ்டபட்டு எழுத வேண்டி வந்திருக்கும். நன்றி. கேள்வியை யார் இப்பெல்லாம் கவனிக்கிறார்கள். மாடு, மரம், கட்டுதல் ரகத்தில்தான் பதில்கள் பெரும்பாலும். தமிழர்கள் ஏன் விமானியாக போவதில்லை (கேள்வி குறைவு, வழங்கல் அல்ல) என நியாயத்துக்கு நான் சொன்னமைக்க்கான வாழ்க்கை உதாரணம். பிகு எவரேனும் பிள்ளைகள் இந்த துறையை விரும்பினால் Air Traffic Controller நல்ல வேலை. ரிஸ்க் குறைவு. குடும்ப வாழ்வும் குலையாது. 8 மணி நேரம் பெட்டிக்குள் இருந்து விட்டு, அங்கே போய் படுத்தெழும்பி, மீண்டும் 8 மணி நேரம் பெட்டிக்குள் இருக்கும் அலுப்புகள் இல்லை. ஆனால் விமானியை விட stress அதிகம்.
  5. ஆதரங்களுக்கு நன்றி ரஞ்சித். ஜோக்குகளுக்கு அப்பால்… இப்படியானவற்றை சும்மா புலித்தேவனை வைத்து பொத்தாம் பொதுவாக மறுப்பறிக்கை விடாமல் - இதை விட வலுவாக புலிகள் ஆணித்தரமான மறுத்திருக்க வேண்டும். இதையே நான் அப்போதும் நினைத்தேன். இப்போதும் நம்புகிறேன். இந்த தாக்குதல் நடந்த சமயம் - தலைவர் பிபிசியையோ அல்லது சி என் என் நையோ அழைத்து - திட்டவட்டமாக இதை தாம் செய்யவில்லை என ஒரு பேட்டி கொடுத்திருக்கலாம். தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை பகிரங்கபடுத்தி - இதில் தமக்கு சம்பந்தம் இல்லை, யாருக்கும் சம்பந்தம் என கூறி இருக்கலாம். இராஜதந்திர விடயத்தில் “குற்றம் சொன்னவர்தான் நிரூபிக்க வேண்டும்” என்ற கதை எடுபடாது. ஏலவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, அல்லது அப்படி முத்திரை குத்தப்பட்ட இயக்கம், நடக்கும் சதியை புரிந்து கொண்டு, இந்த களங்கத்தை துடைக்க வலுவாக உழைத்திருக்க வேண்டும். எவனை பற்றியும் எனக்கு கவலை இல்லை, எனது ஊரில் நாந்தான் ராஜா என்ற ஏண்டாப்பில், அல்லது யுத்தம் எப்படியாவது தொடங்கட்டும் (மகிந்தவை வெல்ல வைத்த அணுகுமுறை) போன்ற காரணங்களுக்காக இவற்றை இயக்கம் சும்மா ஒப்புக்கு ஒரு அறிக்கை என்ற அளவில் நிறுத்தி கொண்டது. இதனால் மகிந்தவின் சதி திட்டம் வெற்றியாகியது. இதுதான் உண்மை.
  6. அவருக்கு தெரியுமோ இல்லையோ - அது அவர் தன் தொழில் தகமை, வாய்புகள் பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்திருப்பார் என நம்பலாம். இன்னும் ஒரு விடயத்தைதுயும் நீங்கள் தெரிந்து கொள்ள என சொல்கிறேன். இதே போல இலகுரக விமானங்களை ஒரு பொழுதுபோக்காக பறக்கும் தமிழ் ஆட்கள் கூட உள்ளார்கள். ஒரு சின்ன விமானத்தின் உரிமையை, அதன் பராமரிப்பை பலர் சேர்ந்து ஒரு சிண்டிகேட் போல வாங்கி கொள்வது, பின்னர் விமான லைசன்ஸ் பெற்று கொண்டு, இந்த விமானத்தில் அவர்களுக்குரிய நேர்ந்த்தில் பறப்பது. இப்படி இந்த வகை விமான ஓட்டி லைசன்ஸ் பெறுவது என்பது ஒன்றும் செய்தி வரும் அளவு சாதனை அல்ல. 🤣 கோஷான், ஜஸ்டின் உங்களை எதிர்த்தால் - ஜேர்மனியில் இருந்து உங்களுக்கு வாழ்த்து கராண்டீட்🤣.
  7. என் செய்வேன்… நான் எடுத்தது சி டி பி பஸ். உண்மையில் விமானி ஆவது டாக்டர் எஞ்சினியர் ஆவதை விட மிக இலகு. சாதாரண தரத்தில் மிக சாதாரண சித்தி இருந்தால் போதும். செலவாகும் பணம் கூட ஒரு டாக்டரோடு ஒப்பிடும் போது குறைவுதான். இங்கே பிரிடிஷ் ஏர்வேஸ், ரோயல் ஏந்ர் போசில் பயிற்றுனராக சேர்ந்து காசு கட்டாமல் ஐந்து வருடத்தில் விமானியாகலாம், சம்பளமும் தருவார்கள். இந்தியாவில் படிப்பது இன்னும் இலகு. ஆனால் பெரும்பாலும் ஒரு விமானியாக பல மணி நேர பயிற்ற்சி பறப்பை பெற்ற ஒருவர் எடுக்கும் சம்பளத்தை விட இலண்டன் underground tube ஓட்டுனர், ஒரு வருட பயிற்சியின் பின் எடுக்கும் சம்பளம் அதிகம். ரிஸ்கும் குறைவு. வீட்டை விட்டு போய் வேலை செய்ய தேவையில்லை, ஒரு மூடிய பெட்டிக்குள் 18 மணத்தியாலம் வரை இருக்க தேவையும் இல்லை. இப்படி விமானி தொழிலில் பல பிரதிகூலங்கள் இருப்பதாலே மக்கள் அதை நாடுவதில்லை. இங்கே வழங்கல் அல்ல பிரச்சனை, விமானி தொழிலுக்கு எம் மக்களிடம் கேள்வி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இலண்டனில் bin collection செய்யும் வேலைக்கு ஓரளவு நல்ல சம்பளம். ஆனால் நம்மவர் எவரும் செய்வதில்லை. அதனால் தமிழர் ஒருவர் rubbish truck ஓட்டும் உரிமம் எடுத்தால் அதை ஆதவனில் செய்தியாகவா போடுவார்கள். இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது? அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.
  8. Tamils 4 Martians ! எலி அம்மணமா ஓடுவதே தப்பு, அதிலும் சைக்கிளில் ஏறி வேறு ஓடுகிறது🤣
  9. ஆண் சிங்கம் இன்னொரு ஆணுக்கும் தன் துணைக்கும் பிறந்த குட்டிகளை கொல்லும். சில சமயம் தன் குட்டிகளை கூட என நினைக்கிறேன். அதேபோல் ஏனைய சில மிருகங்களிடமும் குட்டிகளை கொல்லும் வழக்கம் உண்டு. அத்துடன், பிறப்பின் போதே குட்டிகளை கைவிடும் உயிரினங்களும் உண்டு. பென்குவின் போல உறைபனியில் நின்றபடி, ஆண் அதன் குஞ்சுகளை அடைகாக்கும் இனக்களும் உண்டு. பொதுப்படையாக “மிருகங்கள் கூட செய்யாது” என்பது ஒரு பேச்சுக்காக சொல்வது மட்டுமே.
  10. வேற என்ன. அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம். அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.
  11. அண்ணன் பார்த்தாலே ஆம்பிளை கூட கர்ப்பம் கன்பர்ம்டா 🔥🔥🔥 இவ்வண், தம்பிகள்
  12. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். சாலமன் பாப்பையா விளக்கம்: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ. வேறு எது இல்லாவிட்டாலும்….எம் ஜி ஆரிடம் இந்த விடயத்தில் வள்ளுவன் சொன்ன நல்லாண்மை இருந்துள்ளது தெளிவு.
  13. மேற்கு நாட்டு குடியுரிமை சட்டங்கள் கூட ஒரு காலத்தில் தகப்பன் சார்பாகவே இருந்தன. இப்போ எல்லாமும் ஒன்றே. எமது சமூகத்தில் முன்னர் கூட மிக அரிதாகவே தாயார் கைவிட்ட பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் இனிசலுக்கு மட்டுமே உபகோகப்பட்ட “ஆண் சிங்கங்கள்” அதிகம் இருந்தார்கள். இவர்களை எல்லாம் பிறப்பு சான்றிதழில் இருந்து தூக்கினால் கூட ஒன்றும் குடி மூழ்கிபோகாது🤣.
  14. ஐயா, உங்கள் சமூகம் எண்டால் ஜேர்மனியை சொல்கிறீர்களா? . அமேசன் பழங்குடிகள் உட்பட பல தாயாதி (matriarchal ) சமூகங்கள் உள்ளன. தமிழர் கூட தந்தை பெயரை காவும் மரபினர் அல்ல. இடுபெயர் (given name ) மட்டும்தான். நீங்கள் அடிக்கடி சிலாகிக்கும் வெள்ளைகார அடிமைத்தனத்தின் ஒரு கூறுதான் surname போடும் வழக்கம். நான் சின்ன வயதில் பார்த்த ஒரு விபரணத்தில் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை குட்டிகளை விலக்கி போட்டு தான் முதலில் தின்றுவிட்டு, சோம்பேறியாக ஓய்வெடுக்கும் ஆண் சிங்கம். ஆகவே சோம்பேறி ஆண்களை விட சோறு போடும் பெண்கள் பெயரை வைப்பதே நியாயம்.
  15. 👍 சூரியனுக்கு டோர்ச் அடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை 🤣. ஆகவேதான் இதை பிற்சேர்த்தேன்👇. 🙏 அருள்நிதியின் படங்கள் பார்த்ததில்லை ஆனால் அவரின் முரட்டு மனேரிசம் பேட்டிலளில் பார்க்க வினோதமாயும், கவரும் விதமாயும் இருக்கும். 80,90 கிராமத்து ஹீரோக்கள் போல நடந்து கொள்வார். ஆனால் சிட்டி போய் என நினைக்கிறேன்.
  16. நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣
  17. சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன. ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார். ஊருக்குத்தான் உபதேசம்.
  18. ஆனால் இந்த ராஜபார்ட் எதுவும் வேண்டாமென அரசாங்க குமாஸ்தாவாக காலத்தை ஓட்டியவர் கருணாநிதியின் மகன் முக தமிழரசு. பின்னர் திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். இவரின் மகந்தான் நடிகர் அருள்நிதி. அதே போலவே செல்வி என்ற மகளும். முறை மாமனாகிய முரசொலி செல்வத்தை மணந்தார். பொதுவாழ்வில் இல்லை. ரசோ அண்ணாவுக்கு இவை கட்டாயம் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக.
  19. நானும் குடித்திருக்கேன்… குடிப்போனை பார்த்திருக்கேன்… நல்ல புத்தி வருவதில்லை குடியிலே… ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே… -கண்ணதாசன்- குடியால் வீழ்ந்த மு.க.முத்து.. ஊற்றி கொடுத்து கெடுத்தது ‘இந்த’ நடிகரா? அந்த நடிகையின் தாத்தா ஆச்சே! Rajkumar RUpdated: Sunday, July 20, 2025, 13:26 [IST] சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து நேற்று மரணம் அடைந்தார். அரசியல் திரை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட மு.க.முத்து, வீழ்ந்தது குடிப்பழக்கத்தால் தான் எனவும், அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே அவரது உறவினரான பிரபல நடிகர் எனக் கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமது. ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல கோளாரால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இதை அடுத்து மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த எம்ஜிஆர், அடுத்த கலைஞர் என அரசியல் வாரிசாகவும் கலைவாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க.முத்து குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார். இந்த நிலையில் தான் ஏன் அப்படி ஆனேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமதுவிடம் தெரிவித்திருக்கிறார் மு.க.முத்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் இர்ஷாத் அகமது, முக முத்துவை பேசுயிருக்கிறார். அப்போது பேசிய அவர்," சென்னையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததால் திருச்சியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை. எனது அப்பாவை போலவே நானும் பத்தாம் வகுப்பில் பெயில். ஆனால் அவர் போராடி ஜெயித்தார். நான் தோற்றுவிட்டேன். Recommended For You என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என அப்பா முயற்சி செய்தார். ஆனால் நான் பேச்சை கேட்டு நடக்கவில்லை. சினிமாவில் என்னை எம்.ஜி.ஆர் போல் ஆக்க வேண்டும் என அப்பாதான் கொண்டு வந்தார். அந்த முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அந்த படத்தை தொடங்கி வைத்ததே பெரியப்பா எம்ஜிஆர் தான். அப்பாவின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பெரியப்பா எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். ஆனால் நான் கேட்கவில்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அரசியல் என்னையும் என் அப்பாவையும் பெரியப்பாவையும் பிரித்து விட்டது. குடி என் வாழ்வையே திருப்பிப் போட்டுவிட்டது. நடிகர் ரவிச்சந்திரன் தான் ( நடிகை தன்யாவின் தாத்தா) முதன் முதலில் எனக்கு தண்ணீ அடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். முதன் முதலில் அவர் கற்றுக் கொடுத்த பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதே நேரத்தில் அப்பா உள்ளிட்ட யாருமே என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை" எனக் கூறியிருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/m-k-muthus-life-tragedy-how-actor-ravichandran-introduced-him-to-alcohol-721905.html
  20. பின்னே…. எங்களுக்கு எந்த தீமையும் செய்ய முடியாத தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை மட்டும் வாட்டி எடுப்போம்… ஆனால் நாம் வாழும் நாடுகளை, நாம் கொலிடே போகும் இலங்கை அரசியல்வாதிகளை கண்டுக்க மாட்டோம் என்றால் அதை சொல்லத்தானே வேணும்? ஏலும் எண்டால் இலங்கை போய் அனுரவின் புஞ்சி அம்மே பற்றி சிறி அண்ணையை ஒரு யூடியூப் பதிவு போடச்சொல்லவும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.