Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நன்றி. செயல் சொல்லும்படி இல்லை எனிலும் கொள்கையளவிலாவது ஈழ தமிழர் விடயத்தை சரியாக அணுகுபவர் ராம்தாஸ்.
  2. சுமன் நல்ல சட்டத்தரணியும் இல்லை, நல்ல அரசியல்வாதியும் இல்லை, மனிதரை மனிதராக மதித்து நடத்த கூடிய நல்ல மனிதர் கூட இல்லை. பண்பு கிலோ என்னவிலை எனக்கேட்கும் சுண்ணாம்பு படிந்த மூளைதான் அவருக்கும். இதனால் மட்டும் அவர் சொல்லும் கருத்துகளை பிழை என பொய்யாக நாண்டு கொண்டு நிண்டு வாதிட வேண்டியதில்லை.
  3. திட்டம் சரியானது என சொல்லவும் முடியவில்லை…. சுமனை குறை சொல்லவும் வேண்டும்… #டெலிகேட் பொசிசன்😂 பிகு ஒழுங்கா சட்டதுறையில் வேலை செய்ய தெரிந்த சட்டதரணிகள் அரசியலுக்கு வருவதில்லை 😉. இது சுமனுக்கும் பொருந்தும். நன்றி. நானும் உடன்படுகிறேன். கிழிஞ்சுது லம்பாடி லுங்கி😂
  4. பார் சிறி விழுந்து போனார் எண்டு யாழ்களத்தின் 1ம், 2ம் குடி-மகன்கள் கவலைபடுகிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்😂 நடிகர் செந்தாமரை தொட்டு பல விடயங்களில் பொய் என தெரிந்தும் அதை மீள மீள பகிர்ந்து நிர்வாகத்திடம் குட்டு வாங்கிய “பொய்யர் திலகம்” தான் எங்கள் தமிழ் சிறி அண்ணா 😂. எனவே பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது. புராண காலே இந்தாங், தையிட்டி கம சிங்கள மாத்ரு பூமியக் ஹட்டியட்ட வார்த்தா வெலா தியன்னே…. தெமலயா பழயாங்ளா இந்தியாவட்ட… ஒயவாகே முஸ்லீம் லா பழயாங்களா அரேபியாவட்ட…
  5. ஓம்…brown belt, green belt என சொல்வார்கள். ஏலவே கட்டிடம் அல்லது கார்பார்க் இருந்தால் அது பிரவுன் பெல்ட். பிரவுன் பெல்டில் புதிய கட்டிடங்களை கட்ட அனுமதி கிடைப்பது இலகு. ஆனால் கிரீன் பெல்டில் கட்ட அனுமதி எடுப்பது மிக கடினம். கிரேட்டர் இலண்டனின் புறநகரில் கூட இந்த கிரீன்பெல்ட் அதிகம் உண்டு. போக்குவரத்துக்காக இலண்டன் 1-6 வலயங்களாக பிரிக்கப்பட்டுளது. 1,2,3 இல் கிரீன்பெல்ட் குறைவு ஆனால் சாலையோர மரங்கள், பாரிய நிலப்பரப்பை கொண்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்கா என்பதை விட meadow எனப்படும் பற்றைகள் போலவே இருக்கும். வலயம் 4 இல் கணிசமாக ஆரம்பிக்கும் கிரீன் பெல்ட்டின் அளவு,5,6 என கூடி அதற்கு அப்பால் கிரீன் பெல்ட்த்தான் அதிகம் இருக்கும். அடுத்த நகரை அல்லது ஊரை அடையும் வரை. போன அரசும், இந்த அரசும் கிரீன்பெல்டில் கட்டுவதை கொஞ்சம் இலகுவாக்க முயல்கிறார்கள் ஆனால் பலத்த எதிர்ப்பு உள்ளது.
  6. இதை வாசித்த போது… போக்கிரி படத்தில் பீச்சியடிக்கும் பவுசர் தண்ணியை வடிவேலு அண்டகுடுத்து முட்டு கொடுத்த காட்சி கண் முன் வந்து போனது. இன்றைய அகதிகளை பார்த்து 20 வருடம் முந்திய அகதிகள் நகைக்க கூடாது. புலிகள் நிழல் அரசு இருந்த போது, புலிகள் பகுதியிலும் எம்மால் பாதுகாப்பாக வாழ முடியாது, புலிகள் கட்டாய ஆட் சேர்ப்புக்கு ஆளானேன், தப்பினேன் என பொய் கேஸ் கொடுத்த பச்சோந்திகால், அகதிகளை பற்றி கதைக்கவே இலாயக்கற்றவர்கள். ஆனால் யூகேயில் ஏல்ஸ்பெரி போன்ற நகர்களில் தமிழரை விட சிங்களவர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது உண்மைதான். போற போக்கில் யூகேயிலும் மோட்டு சிங்களவன் உங்களை 9 வாயில்களிலும் பிதுக்கினாலும் ஆச்சரியமில்லை.
  7. உங்களுக்கு எல்லாமுமே தப்பு தப்பாக தெரிவது இன்று நேற்று நடப்பதல்ல. 2009 வரை புலிகள்/தலைவர் மற்றும் சமயம் இந்த இரெண்டும் ஒன்றாக கலக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில்…. 2009 ற்கு பின் எவன் ஒருவன் ஒருகையில் தலைவரையும், மறுகையில் ஏதோ ஒரு சமயத்தையும் ஏந்தி வந்தால் - அவர்களை சந்தேகத்துடன் அணுகுவதே அறிவுடமை. குறிப்பாக சங்கியாந்தம், வேலன், உமாகரன் என ஏலவே பலரை இப்படி எமக்கு வடக்கே உள்ளவர்கள் இறக்கி விட்டுள்ள நிலையில். அதுவும் இவர் உமாகரனின் தம்பி… அவரின் வேடம் கலைந்த பின் இவர் களம் இறங்கினார்…அல்லது இறக்கப்பட்டார்…. இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான வரவேற்பும் சந்தேகத்தை வலுக்க வைக்கிறது. இலண்டன் வந்த போது இலவச டிக்கெட் வேணுமா என கேட்டார்கள் - மறுத்து விட்டேன்.
  8. ஓம்…. இவர்கள் பின்னால் மற(கழண்ட)வன்புலவு சங்கியானந்தாத்தை இயக்கும் காவிக்கரம் போல் ஒரு காவிக்கரம் இருப்பதாகவே எனக்கு படுகிறது.
  9. நான் நினைக்கிறேன் அவர் உங்கள் அளவு படிக்கவில்லை என…. சரி அதை விடுவோம் அடுத்தவர் படிப்பை பற்றி நாம் கதைத்தால் பிறகு நம்மை இன்னொருவர் நோண்டினால் கதை கந்தலாகி விடும். இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன? சுமன் தரும் தமிழ் ஈழத்தில் வாழ்வதை விட காலம் பூராவும் அனுரவுக்கு காவடி எடுத்து வாழ்வை முடிப்பது சுகமானது😂
  10. இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன? பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம். பிகு இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?
  11. புலம்பெயர் சில்லறைகள் திமுக மீது செய்த அத்தனை எதிர்வினைகளையும், திருமாவின் இலண்டன் கூட்டத்தில் நடந்த அவமானம், பெரியார் மீதான அவதூறுகள், கஞ்சா கோஸ்டிகள் புத்த வட்டத்தில் செய்த அநாகரீகம்… இப்படி பலதும் நடந்த போது அதை மெளனமாக வேடிக்கை பார்த்தனத் கஜன் போன்றோர்… இதன் பின்பும்… கஜனை ஒரு மனிசனாக மதித்து வரவேற்றது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. வழமை போல்… புலம்பெயர் காவாலிகள் முகத்தில் கரி.
  12. உங்களுக்கும், உங்கள் தலைவர் பொன்னருக்கும் இந்த அரசியல் விளக்கம் வர 16 ஆண்டுகள் தேவைபட்டது என எடுத்து கொள்ளலாமா? 16 வருடமாக, ஓங்கோல் கருணாநிதி, இனத்துரோகி, சுடலை ஸ்டாலின், திருட்டு திமுக என தேவையில்லாத ஆணிகளை எல்லாம் புடுங்கி விட்டு…. இப்போ பேச்சுவார்த்தை என்றால் செல்வபெருந்தகையோடு கூட பேசவேண்டும், எதிரியோடு கூட பேச வேண்டும் என்கிறீர்கள். இதைத்தான் ஐயா 16 வருடமாக சொல்லிவாறோம், இப்ப நித்திரையால எழும்பி வாறியள்😂.
  13. வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு தரவுகளுக்கு பிறழ்விளக்கம் கொடுப்பது அழகல்ல என்பதும்… சுமன் சொன்னார் என்பதால் ஒரு கருத்தை எதிர்ப்பதும் … ஒரே போன்ற விடயங்கள் அல்ல. இதை நீங்களும் அறிந்தபடியால்தான் விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள் 😂.
  14. இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால்தான்… பல மடைமாற்றுகளை செய்து இந்த கொள்கையை தவறு என அடம் பிடிக்கிறார்கள்.
  15. ஓம் தெரியும்…ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தட்டு தடுமாறினாலும்…சிலோன்கார அடையாளம் இருந்தாலும், அடுத்தடுத்த சந்ததிகள் இந்தியரால ஏற்கப்பட்டு விட்டனர். இன்னும் 10,20 வருடத்தில் இந்த வேறுபாடு அறவே அற்றுவிடும். போகும் வழியில் மன்னாரில் ரயிலில் இருந்து இறங்கி வன்னிக்குள் போனர்வர்கள் இன்னொரு சிறிய தொகை. மலையக தோட்டங்களில் தங்கியோரை விட இவ்விரு குழுக்களும் ஒப்பீட்டளவில் மேம்பட்டே உளர். உங்களுக்கு புத்தி கொஞ்சம் மந்தமா? எவ்வளவு விளக்கி சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள்? யாரும் வராமல் இருக்க காரணம் உங்களை போன்றவர்கள் இந்த திரியில் காட்டிய உங்கள் இந்த மையவாத குணத்தின் மீதான பயம், அருவருப்பு. அதை தூக்கி எறிந்து விட்டு சக தமிழராக அவர்களை நடத்துவோம் என்ற நம்பிகை வரும் படி அழையுங்கள். மடைமாற்று
  16. இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
  17. 😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்… அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்… மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள். நாம்? வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம். அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.
  18. ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான். யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர். இப்படி பலர் உளர். இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.
  19. வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல. ஒரு காலத்தில் - புத்தளம் முதல் - நீர்கொழும்பு வரை தமிழர் நிலம். இப்போதும் ரயில் நிலைய பெயர்களை பார்த்தால் விளங்கும். சிங்கள ஏடுகள் கூட தெமல பற்றுவ, தமிழர் பற்று என சொன்ன இடம். இன்று? பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம். இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது. நாளைக்கு இதே நிலைதான் காரதீப வுக்கும் 😂. சுதாகரிச்சு கொண்டு இப்போதே தமிழர் எண்ணிகையை சிந்தாமல், சிதறாமல் எமது தாயகத்தில் சேர்க்க வேண்டும். இல்லை எண்டால் “ஈழத்து புத்தன்” கோவில் அமைவதை தடுக்க முடியாது.
  20. இன்றைய இயற்கை அனர்த்தம் இதை பேறு பொருளாக்கி உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகான தேவை கல்லோயா குடியேற்றத்திட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை, பின்னர் வந்த தொடர் கலவரங்களின் போதே ஏற்பட்டு விட்டது. 1983 இல் சீனியர் தொண்டா ஒவ்வொரு தோட்டமாக போய் வடக்கு போய்விடாதீர்கள் என மக்களை தடுத்தார். அப்போதே மஹோ, கெக்கிராவ என தோட்டங்களை விட்டு வெளியேறி சிங்கள பகுதியில் கூலி வேலை செய்த பலர் வன்னிக்கு வந்தனர். ஆகவே இது 80 ஆண்டுகளாக நடக்காமல் இருக்கின்ற, நடக்க வேண்டிய விடயம். அங்கே வெற்றிடம் ஏற்பட்டால் அதை நாம் ஏன் நிரவ வேண்டும்? அது சிங்களவரின் பாரம்பரிய தாயகம். அங்கே இந்த மக்கள் அடிமைகளாக அதாவது வெறும் வாக்கு, தொழில் செய்யும் இயந்திரங்களாக இருக்காமல் எம்மோடு வந்து விட்டால். அங்கே வேறு தமிழரை கொண்டு நிரவ வேண்டிய தேவை இல்லை.
  21. இத்தனை காலம் இந்தியாவை புறக்கணிப்பதாக சொல்லி விட்டு… எடுத்த எடுப்பில் பிஜேபியை சந்திக்க முடியாது… ஆகவே இப்போதைக்கு பிஜேபி பி டீமை சந்தித்துள்ளார்கள். தமிழ் நாட்டினூடாக அமித்ஷாவை நெருங்க மிக பொருத்தமான ஆள்தான் சீமான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.