Everything posted by goshan_che
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஐயா பெரியவரே, எந்த தர்க்கமும் தோற்கும் போது, நீ என்ன செய்தாய். என்ன செய்கிறாய், என்ன செய்வாய் என மடை மாற்றுவது உங்கள் வழமையான உத்திதான். நான் இங்கே மனோ, சுமந்திரன் என்ற மனிதர்களை பற்றியோ, அல்லது அவர்கள் சொன்ன விடயத்தை நடைமுறை படுத்த என்னிடம் திட்டம் உள்ளது என்றோ - அல்லது அதை தலைமை ஏற்று யார் செய்ய கூடும் என்பது எனக்கு தெரியும் என்றோ எங்கும் எழுதவில்லை. அவர்கள் சொன்ன கருத்து, கொள்கை அளவில் - சரியானது, தேவையானது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை. அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்… முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்… அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம். 2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—- 2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது. தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம். வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்… #இன்ன யாவிலும் புண்ணியம் கோடி புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂. அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.
-
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!
பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பசப்பு வார்த்தை பேச நான் என்ன அருச்சுனாவா 😂. பதில்கள் கீழே முடியாது மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம். இங்கே நாம் தோட்ட மக்களை மட்டுமே அலசுகிறோம். அவர்கள் நில உரிமை அற்றவர்கள். அதாவது அவர்கள் இருக்கும் பகுதிகள் அநேகம் உள்ளூராட்சி சபை அன்றி தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருவன. இது அவர்களை சம பிரஜைகளாக வாழ விடாமல் தடுக்க அமைக்கப்பட்ட திட்டமிட்ட பொறிமுறை. அவர்களுக்கு தொழிலுடன் குடியிருப்பும் இணைக்கப்படுகிறது. எனவே இந்த முறையில் இருந்து வெளி வந்தால், இரெண்டும் போய்விடும். கிராமமங்களுள் அவர்களை நடமாடவே சிங்களவர் அடிக்கடி கெடுபிடி செய்வார்கள். அருகில் உள்ள கிராமங்களில் குடி அமர்த்த, அல்லது இவர்களுக்கு ஒரு கிராமத்தை அமைக்க முனையின் பிக்குகள் தலைமையில் கிராமமே சேர்ந்து எதிர்க்கும். ஆகவே இருக்கும் ஒரே தெரிவு லைன் வீடு, 1000 ரூபாய் சம்பளம் என இவர்களை சந்ததி சந்ததியாக கட்டிப்போட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்களை மலையகத்தில் சிங்களவருக்கு நிகரான சம பிரசைகள் ஆக்குவது. தமிழ் ஈழம் எடுப்பதை விட கடினமானது. பலநூற்றாண்டு காலமாக தொர, சாமி என அடிமைபட்டு போன மக்கள் கூட்டம். இன்றும் அதிகாரத்தின் மீது “பெரியவன்” மீது அதீத பயம் இருக்கிறது. தவிர தொழிற்சங்கங்கள், ஈரோஸ், ஈபி, ஜேவிபி எல்லாரும் இவர்களை பயன்படுத்தினரே ஒழிய, அரசியல் ஓர்மத்தை வளர்க்கவில்லை. எந்தளவுக்கு என்றால் மின்னல் ரங்கா போல ஒரு மரம்தாவியை தமது எம்பியாக்குள் அளவுக்கு அரசியல்படுத்த படாத மக்கள். இவர்களின் அரசியல் அனைத்தும், நவீன கங்காணிகளாக இருக்கும் சில குடும்பங்களால் கட்டுப்படுத்தபசுகிறது. எனவே அவர்கள் போராட வாய்ப்பில்லை. எவரும் இல்லை. வாக்குகளுக்காக சில சலுகைகளை பெற்று கொடுப்பார்கள். இவர்கள் தோட்டத்தை விட்டு நாட்டு மக்கள் ஆகி விட்டால் தமது வாக்கு வங்கி, மிராசுத்தனம் பாதிக்கப்படும் என்பதால் இவர்களை இப்படியே வைத்திருக்கவே இவர்களின் அரசியல் தலைமைகளும் விரும்புகிறன.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து. என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார். அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணை, நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான். அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது. எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை. இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு. இணைந்திருங்கள்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இஙளவுக்கு செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம். எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான். ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை. வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂 டிரெம்ப் இருக்கும் வரை புட்டினுக்கு வெற்றி மேல் வெற்றிதான். ஈயூ, யூகே, துணையுடன் - அதிக இழப்பு இல்லாமல் டிரம்பின் பதவிகாலத்தை எப்படி கடத்துவது என்பது மட்டுமே இப்போதைக்கு செலன்ஸ்கியின் குறி என நான் எண்ணுகிறேன். பிகு அமெரிக்கன் அரசிடம் இருக்கும் எப்ஸ்டீன் பைலில் டிரம்ப் பற்றிய போட்டோ தான் உள்ளது…. புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ… ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ… ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே…. இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்… சக தமிழனை… அவன் சுய விருப்பில்…. எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்… யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான். ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது. சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂. இந்த மனோநிலை வினோதம் அல்ல… விசம்…விசம்…விசம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. வாசகருக்கு, இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு. பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு. ஆதாரம் இதோ. இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம். வெக்கட்கேடு! https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
மேலே சொல்லப்பட்டுள்ள “மேற்கு” என்ற ஒற்றை பதமே காலாவதியான ஒண்டு. நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது. அண்மையில் வந்த அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய ஆவணம் - தற்போதைய ஐரோப்பாவை கடுமையாக சாடி ராஸ்யாவை அரவணைக்கிறது. ரஸ்யாவும் அதை வரவேற்கிறது. டிரம்ப் புட்டின் கைப்பாவை இதன் அடிப்படையில் இப்போ அமரிக்கா+ரஸ்யா சேர்ந்து உக்ரேனை விழுங்க முனைகிறனர். ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது. யூகேயும் அதேதான். இதுதான் இப்போ உலக ஒழுங்கு. இன்னும் பழைய மேற்கு கிழக்கு பதங்களை பாவிப்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முன்னரே சொன்னதுதான். உங்கள் சிந்தனை தெளிவு பிரமிக்கத்தக்கது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓம் தெரியும். ஆக நீங்கள் சொல்வது? புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர். சரியாக புரிந்துள்ளேந்தானே? தாங்காளும் போய் இருக்காயினம்🤦♂️ ஆதாரம் எங்கே?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம். இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு அருமையான கருத்தை……. சுமன் சொன்னார் என்பாதால் மட்டுமே எதிர்க்கும் அளவுக்கு….. சுமன்லவர்ஸுக்கு காதல் ஜுரம் முற்றி விட்டது என்பதை இந்த திரி காட்டி நிற்கிறது. போற போக்கில் சுமன் நாளைக்கு கருணா துரோகி எண்டு சொன்னால், இல்லை அவர் சொக்கதங்கம் எண்டு எழுதும் அளவுக்கு காதல் முற்றி விடும் போல உள்ளது.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதற்குமேல் எழுத எதுவும் இல்லை🙏.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும். அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது. நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂 பலர் மாவீரர். இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள். இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை. அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
எதிரி எனிலும் give credit where it’s due. அண்மையில் பிரித்தானிய கோவிட் பொது விசாரணையின் முதல் அறிக்கை வந்துள்ளது. அதில் மோடன் பொரிஸ் ஜோன்சன் செய்திருக்க வேண்டிய, செய்யதவறிய கொவிட் கால நடவடிக்கைகள் என பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் பலதை கோத்தா அரசு செய்தது என்பதே உண்மை. அதன் பின் நாடு வங்குரோத்தானது பல காரணங்களால் அதில் முதன்மையானது அதற்கு பலவருடம் முன்பாகவே நடந்த ஊழல், கொள்ளை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகம் சிங்களவர்களது தாயகம். அதில் குடியேற்றப்பட்டவகள் எமது மலையக உறவுகள். எந்த மலையக கிராமத்திலும் அவர்களை குடியேற சிங்களவர்கள் அனுமதிப்பதில்லை. லைன் ஒற்றை அறைக்குள் பல சந்ததிகள் குடும்பம் நடத்த வேண்டிய கலாச்சார கேடான நிலை. மலை சரிவுகளில் லைன்கள். 1000 ரூபாய் வேதனம். வெளிநாடுகாள் சொல்லும் modern slavery தான் மலையகத்தில் நடப்பது. அந்த நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நாம் அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை கொடுத்த படி, வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியாதா? முடியும். உங்கள் ஊருக்கே வருகிறேன், உங்கள் வீடு உள்ள பகுதியில் கூட ஒரு வீட்டில் ஆள் இருந்து கொண்டு, பக்கதில் இருக்கும் 4 வெளிநாட்டாரின் வீட்டை ஆள் இல்லாமல் பாதுகாக்கும் நிலை இல்லையா? ஊர்காவற்துறை, கரம்பன் போனால் நிலமை இன்னும் மோசம். வெற்று காணிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டி வைக்க முடியாது. உண்ணா சொத்து மண்ணா போகும். அதை இனத்தின் நலனுக்காவது பாவிக்கலாம். அளப்பவன் பெயர்தான் அரசியல்வாதி. ஆனால் நான் இங்கே அதன் பின்னால் உள்ள கருத்தின் அவசியத்தைதான் வலியுறுத்துகிறேன். ஆகவேதான் …”சும்மா” என்ற பீடிகை. ஓம். இதை நிழலியும் சொல்லி உள்ளார். ஆனால் அப்போதும், இப்போதும் யாழ்பாண “பொன்னம்பலங்கள்” இதை எதிர்க்கவே செய்தார்கள்.