Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார். அதற்கு முன்பே மூக்கு சாத்திரம் பார்த்து அவரின் வரவை எதிர்த்து சரி என நான் இப்போதும் எண்ணவில்லை. விஜை, சீமான், சுமன் இன்னும் அரசியலுக்கு வரும் எவரையும் முந்தங்கிய-பக்க சார்பாக எதிர்க்க கூடாது. அதே சமயம் அவர்கள் வழுவும் போது முரட்டு முட்டு கொடுக்கவும் கூடாது.
  2. இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல் விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம். விஜய் முடிவு என்ன? 2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம். விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது. ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣
  3. இதில் நான் இந்திய தயாரிப்புகளை தவிர்ப்பது இட்டு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை. ஆனால் சங்கி, இதில் security, data ரிஸ்க் உள்ளது என்பது உபதேசம்தான். மக்களே, உங்கள் உரையாடல்கள் அனைத்தையும், இதை தரவிறக்குவதன் மூலம் உங்கள் phone இன் ஏனைய security settings இற்கும் ஒரு back door access ஐ இந்திய புலனாய்வுக்கு அமைத்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியாயின் தாரளமாக அரட்டை அடியுங்கள். உபயம் - புலவர் 🤣
  4. இல்லை. உங்கள் தரவழியள் போல் “புறக்கணி சிறிலங்கா” எண்டு போட்டு ஹொலிடே போகும் ஆளில்லை நான். 1987 இல் இருந்து என் வாழ்வில் இந்திய தயாரிப்புகளை தவிர்த்தே வருகிறேன். ஆனால் தவிர்க்க முடியாதவற்றை (எடுத்து காட்டு : உறவினர் மருத்துவம்) தவிர்க்க முடிவதில்லை.
  5. மீண்டும் சொல்கிறேன் - அபத்தமாக கதைக்க கூடாது. வேம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதே ஆர் எஸ் எஸ் வேலைதிட்டத்தை தமிழ் நாட்டில் முன்னெடுக்கவே. இதன் ஒரு அங்கம்தாம் இந்த அரட்டை. அதனால் பிராமணர் என்பதால் அவரை நான் எதிர்க்கவில்லை. வேம்புவை பற்றி - அவரின் முன்னைய பேட்டிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருந்தால் - வேம்பு பிராமணர் என்பதால் மட்டும் அவரை சங்கி என்கிறேன் என்ற அரைவேக்காட்டு புரிதல் ஏற்பட்டிராது.
  6. #முடிந்தளவு அதே சமயம் சங்கிகளது என கண்டால் - படம், பாடல்களையும் எதையும் அடியோடு ஒதுக்கி விடுவேன். புட்டுகுழல் உட்பட 🤣
  7. இது மிக நியாயமான சந்தேகம்👍. அதான் அப்படி கறார் காட்டி இருக்கார் ஜட்ஜ் ஐயா.
  8. இவர் சங்கி என்று எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. அபத்தமாக கதைக்க கூடாது. ஶ்ரீதர் வேம்பு ஒரு பிராமணர் எனவே புறக்கணிக்க வேண்டும் என நான் எழுதினேனா? இல்லை. பிராமணர் எல்லோரும் சங்கிகள் இல்லை, சங்கிகள் எல்லோரும் பிராமணரும் இல்லை. தட்டுமுட்டு சாமான் என் அதிகார எல்லைக்கு அப்பால் பட்டது 🤣. நான் சொல்வது படங்கள், கிரிகெட், வாகனங்கள், விடுமுறை, தொழில்நுட்பம்.
  9. அட… பந்தயம் எண்டது வரேல்ல என சொல்லிவிட்டு போனவர் விசுகு அண்ணா. பந்தயமா எண்டு கேட்ட திரியில் படுத்த பாய்கும் சொல்லாமல்…..எஸ் ஆன அண்ணைக்கு தன்னை சொல்லேல்ல எண்டு கோவமாக்கும்🤣
  10. இந்த அரட்டை அப்பை நான் தவிர்கிறேன் இது வாட்சப்பின் மார்கெட்டின் ஒரு பங்கையாவது பிடிக்க இறக்கப்பட்ட இந்தியாவின் அப். முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு. இதில் தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் எப்படி இருக்கும் ? இந்திய தயாரிப்பு தரம் நாம் அறிந்ததே. நாளைக்கே உங்கள் தகவல் முழுவதும் dark web இல் கூவி, கூவி விற்கப்படும். இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி. தமிழர்கள் நஞ்சை கூட நஞ்சு என தமிழில் பெயர் வைத்தால் முண்டியட்டித்து வாங்கி குடிக்கும் கூட்டம் என்பதை அறிந்தோ என்னமோ அரட்டை என்ற பெயரோடு வருகின்றனர். தூக்கி எறிவோம் அரட்டையை.
  11. ஆனால் அந்த மண் குதிரைக்கு பயந்து நீங்கள் பந்தயத்துக்கு வரவில்லை என்பது எனக்கும் தெரியும் என நான் சொல்ல மாட்டேன்🤣. பிகு பந்தையம் சீமான் 15% க்கு மேல் எடுக்க மாட்டார் என்பது என நினைக்கிறேன் (எத்தனை சதவீதம் என்பது மறந்து போய்விட்டது, ஆனால் இரெட்டை இலக்கம்). அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கால எல்லை முடிந்து விட்டது. நானா…. வாத்தியார் அண்ணாவா… 🤣🤣🤣 ரோமபுரி கிளேடியேட்டர்ஸ் போல, யாழ்கள கிளேடியேட்டர்ஸ் இருவரில் யார் சிங்கத்து இரையாக போகிறார் என்பதே இப்போ கேள்வி🤣.
  12. சீமான் பற்றி விளங்க நினைப்பவன் யாழில் எழுதிய முதல் பாசிடிவ் கருத்து இது என நினைக்கிறேன் 🤣. யாழின் சீமானியர்களுக்கு இது ஒரு #ஸ்வீட் எடு, #கொண்டாடு தருணம்🤣. பிகு வி. நி யே போற்றும் அளவுக்கு சபரீசன் பெட்டி சீமானை மாற்றி உள்ளது🤣
  13. ஒரு பூப்புனித(?) நீராட்டில் முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் போது, அழைத்தவர்கள் கூட இப்படி ஒரு படத்தை வேண்டி கேட்டு எடுத்திருக்கலாம். ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை இனத்தின் வைரி என சொல்லிப்போட்டு, ஒண்டவீட்ட அண்ணன் செத்ததை, தேர்தலில் வென்றதை எல்லாம் சாக்கு சொல்லி போய் சந்திப்பது போல அல்ல இது. அல்லது ஏ1 அக்யூஸ்டை சிறையில் இருந்து வந்ததும் சந்தித்துவிட்டு, பின்கதவால் ஓடியது போலவும் அல்ல இது. ஒரு நீதியரசர் தனிப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ஒரு முதல்வர் வந்தால் முகத்தையா திருப்ப முடியும். இதை வைத்தே இவர் திமுக அனுதாபி என கூற முடியாது.
  14. நான் மேலே சொன்னது ஜோக் அண்ணை. விஜை வாழ்வில் ஏழரை, அஷ்டம, அஷ்டமாத்து எல்லாம் ஒண்டா வந்து கும்மி அடிப்பது மட்டும் இல்லாமல், குசினி வரை போய் குடும்பமே நடத்துவது பார்க்க புரிகிறது🤣. பிகு நான் கேட்ட சீமான் 2026 வாக்கு சதவீத பந்தயத்துக்கு ஒத்து கொண்டிருக்கலாம் என இப்ப தோணணுமே?🤣
  15. ஒரு சினிமாகாரனின் மனசு இன்னொரு சினிமாகாரனுகுத்தான் தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.
  16. புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம். விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣. ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை. காரணம் கட்டுக்கடங்காத கூட்டம். அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல. பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை. ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே. திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.
  17. என்னது? வருகிறார்களா? வந்து ஆராய்ந்து, பேட்டியும் கொடுத்து விட்டு போய் இரெண்டு நாள் ஆகிறது. வாட் ப்ரோ…இட்ஸ் வெரி ராங் ப்ரோ… உங்களின் கருத்தில் இருந்த பொருளுக்கான பதிலை ரசோ அண்ணா தந்துள்ளார். நாலு பேர் சீரியசாக பேசி கொண்டிருக்கும் நடுவீட்டில் யாராவது அதை தூக்கி கொண்டு வந்து போடுவார்களா, இல்லைத்தானே😂
  18. கருணா இயக்கத்தை விட்டு விலகிய பின்னும்…. சுப முத்துகுமார் கொலைக்கு சற்று முன் சீமானுக்கு ஏற்பட்டதை போன்றதுமான… ஒரு இக்கட்டு விஜைக்கு ஏற்பட்டுள்ளது என்கிறீர்கள். வாய்ப்புகள் உள்ளது.
  19. அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும். வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார். ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.
  20. இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது. இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை. விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன். விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை. சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே. தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.
  21. எந்த உண்மை? கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா? அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்… அந்த உண்மைதான் என்ன?
  22. நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன். சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார். சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும். எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை. அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது. இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும். இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.