Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.
  2. சரி பிழைக்கு அப்பால் - விசேட இராணுவ நடவைடிக்கையை அமெரிக்கா 2 மணி 30 நிமிடத்தில் முடித்துள்ளது. ரஸ்யா உக்ரேனில் ஐந்து வருடமாக வைச்சு தாளிப்பதை போல அல்லாமல்😂. அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂
  3. அண்ணை துளி துளியாய் பகுதியில் ஆரம்பித்துள்ளேன்.
  4. இதை எனக்குத்தான் எழுதி உள்ளீர்களா? யாழில் இதெற்கென ஒரு திரியே திறந்து, காணி, பொலிஸ் அதிகாரத்தை எப்படியாவது, சம்ஸ்டியோ, குமஸ்டியோ என்ன பெயரிலாவது பெற வேண்டும் என நான் எழுதிய திரியில் நீங்களும் கருத்து எழுதினீர்களே? இது மட்டும்மல்ல இன்னும் பல திரிகளிலும் குடியேற்றம் பற்றியும் காணி அதிகாரம் பற்றியும் எழுதி உள்ளேன். கொசு பனம் பழ சீசனில் வரும். அதிக பாதிப்பை தராது. ஆனால் இந்த கெட்ட நுளம்புகள் அப்படி அல்ல, கொடிய நோய்களை (ஆனுர ஆதரவு) மக்களிடையே பரப்பும். இந்த நுளம்புகளை கண்ட இடத்தில் அடித்து விட வேண்டும்.
  5. நீ நடத்து தல. உக்ரேனை புட்டின் ஆக்கிரமிக்கமுடியும்…. வெனிசுலாவுக்குள் பூந்து அதிபரையே தம்பர் அபேஸ் பண்ண முடியும் எண்டால்… நீ மட்டும் என்ன தக்காளி தொக்கா தல? தைய்வான் மட்டும் இல்ல தல, இந்த அவுஸ்ரேலியா, நியூசிலாந்த கூட நீ சீனாவோட இணைச்சுகலாம்…தப்பே இல்லை. பிகு இதெல்லாத்தையும் பார்த்துட்டு நம்ம ஜி அகண்ட பாரத் ந்னு இன்னொரு வாட்டி கிளம்பி, மூணு ரபேலை காவு கொடுக்காத வரை ஓக்கேதான்😂
  6. ஆனால் அவர் பேசிய பேச்சில் அமெரிக்காவை ஏசியுள்ளார். நடிப்போ தெரியாது. ஹெலியை கட்டி இழுத்து வந்தாச்சாம்.
  7. பார் சிறி தன்ர குட்டு வெளிக்காது கவி பண்ண அரசுடன் இசைந்து போகிறார் போலுள்ளது.
  8. இன்னொரு புஸ்வாண வழக்கை போட்டிருக்கிறது அனுர அரசு. அனுர ஆட்சி அல்லவா…அடுத்த்தது அதுதான் நீங்கள் களைக்காமல் ஆடுங்கள் காவடியை😂.
  9. நான் எண்ணையை பற்றி எதுவும் எழுதவில்லையே வசி? நீங்கள் அமரிக்கா வெனிசுலேவை பிடிக்க சொல்லும் பொய் சாட்டை நம்ப மறுப்பதையும் (நானும் நம்பவில்லை) நிலவில் கால் பதித்ததை நம்ப மறுப்பதையும் ஒரே தட்டில் வைத்ததைதான் நான் சுட்டினேன். ஓ…. இப்போதான் உக்ரேனின் கிழக்கில் இருக்கும் அரிய உலக தாதுக்கள் பற்றி நினைக்கிறீர்கள் போல உள்ளது. ரஸ்யா உக்ரேனில் செய்வதும், அமெரிக்கா வெனிசுலாவில் செய்வதும் பச்சை வள கொள்ளையே…. இதில் ஒன்றிக்கு ஆயிரம் சப்பை கட்டு கட்டி, தன் நாட்டின் வளத்தை காக்க போராடும் செலன்ஸ்கி மீதே போருக்கான பழியை தூக்கி போட்டு எழுதியவர்கள்… இப்போ அமரிக்காவை விமர்சிக்க எந்த அருகதையும் அற்றோர் என்பது என் தாழ்மையான கருத்து. ரஸ்யா செய்தால் தக்காளி சட்னி, அமெரிக்கா செய்தால் ரத்தம் என இருக்க முடியாது.
  10. உக்ரேனின் மீது ரஸ்யா செய்த அடாவடிக்கும்…. இதற்கும் கிஞ்சித்தும் வித்தியாசமில்லை. என்ன….நாளைக்கு சீனா தய்வானை சுற்றி மூண்டு “போதை படகை” அனுப்பி போட்டு - இறங்கி அடிப்பான் - கேட்டால் அதே நியாயம்😂. அமெரிக்கா சதாமிற்கு பின் என்ன என திட்டமிடாமல் பாக்தாத்தில் இறங்கி சில்லவல்ல பட்டதை விட மோசமாக இங்கே மூக்குடைய கூடும். வெனிஸ்சுவேலாவின் செவேஸ் ஆதரவாளர்கள் மிக பலமானவர்கள். அத்துடன் எதிரணி நோபல் பரிசு வென்ற மரியாவையும் டிரம்ப் புறக்கணித்து பேசியுள்ளார். மதுரோவின் deputy ஐ டிரம்ப் விரும்புவதாக பேச்சில் தெரிந்தத்து. ஆனால் டிரம்பின் பின் டீவியில் தோன்றிய அந்த பெண்மணியோ, அமெரிக்கவை போட்டு வாங்கி விட்டு, இன்னும் மதுரோவோ ஜனாதிபதி என கூறுகிறார். தம்பர் நல்லா ஆப்பு இழுத்து விட்டார் என நினைக்கிறேன். ஐயோ அதையே கேக்கிறியள்😂. தம்பர் போரை விரும்பாத உத்தமர் என புகழ்ந்த அண்ணைக்கெல்லாம்… வெரி டெலிகேட் பொசிசன்.
  11. உலகம் கோளவடிவானது என்பதிலும் உங்களுக்கு டவுட் ஏதும் உள்ளதா?😂
  12. அவர்களைத்தான் யாழில் அனுர காவடிகள் என்போம். அதென்ன சிங்களம்? அனுர எண்டு சொல்ல வாய் வருதுகுதில்லையோ? இங்கே இருந்த 100 வருட போத்துகேய ஆட்சி, 100 வருட டச்சு ஆட்சி எங்கே காணோம்? இன்னொரு திரியில் சொன்னேன்… தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி. குறைந்தபட்சம் பிரிவேனா பள்ளிகூடமாவது வரும். என்னமாரி? மலையக மக்களை கூப்பிட்டு இருத்துவோமா? நத்தங் அபி ஒக்கமலா பெளத்த சிங்க-லே வெலா, நாதாயோ வாகே ஒக்கட்டம ஜீவத் வெமுத?
  13. தகவலுக்கு நன்றி. அப்போ நிஷான் இரெண்டாவது. சென்ரல், சென் ஜோன்ஸ் எண்டு யாழின் இரு பெரிய பாடசாலைகளும் வடக்கின் பெரும் போரை இதிலும் ஆரம்பித்து விட்டனர் 😂. இன்னொரு கொசுறு - சேர்மாரை முதல் பெயராலும் Sir Ian, Sir Alan எனவும், லோர்ட் மாரை கடைசி பெயராலும் Lord Prescott அழைப்பார்கள். சில நிலவுடமைவாதிகள் எந்த பெயராலும் அன்றி அவர்களின் நிலத்தின் பெயராலேயே அழைக்கப்படுவர் உதாரணம்: Northumberland என்பது இடத்தையும் அதேசமயம் Duke ஐயும் குறிக்கும். உண்மையில் பிரித்தானியாவில் வாழ்ந்து, படித்து வேலை செய்யும் நம்மவருக்கு கூட இவை பற்றி போதிய புரிதல் இல்லை என்பது நான் கண்ட உண்மை. இந்த பட்டங்கள் அநேகம் அரசியல் அதிகாரம் அறவே அற்றவை. ஒரு அங்கீகாரம் என்பது மட்டுமே. இந்த பட்டங்களில் உண்மையில் கொஞ்சம் அரசியல் அதிகாரம் உள்ளது என்றால் அது Lord/Lady மட்டுமே. முன்னர் பிரபுக்கள் சபையில் hereditary peers எனப்படும் வம்சாவழி வந்த பிறப்புரிமயால் பிரபு ஆனவர்கள் கனக்க. 97 லேபர் ஆட்சியில் ஆரம்பித்து, இந்த ஆட்சியில் - கிட்டதட்ட இதை வழக்கொழித்து விட்டார்கள். இருப்பவர்கள் இறக்க, இனி வரும் காலங்களில் தனியே நியமன உறுபினர்கள்தான் பிரபுக்கள் சபையில் இருப்பார்கள். அவர்கள் கட்சி சார்ந்தோ, அல்லது cross bench peers எனப்படும் கட்சி சாராமலோ இருக்கலாம். இலங்கையில் உள்ள தேசிய பட்டியலை ஒத்த ஒரு விடயம்தான் இங்கே பிரபுக்கள் சபை. பின்கதவு எண்டும் சொல்லலாம். பிரிடிஷ் பாராளுமன்ற வளாகத்தில் - பக்கிங்காம் அரண்மனையில் இருந்து போனால், முதல் கதவு House of Commons இன் கேட். பின் கதவுதான் பிரபுகள் சபையின் கேட் 😂.
  14. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
  15. இராமநாதன், முத்துகுமாரசாமி, வைத்திலிங்கம் துரைசாமி, ஓலிவர் குணதிலக, ஜோன் கொத்தலாவல என பல இலங்கையர் முன்பும் இந்த மரியாதையை பெற்றுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன். ஆனால் இது நிஷான் போல பலருக்கு சரியான தகமைக்கு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு கொன்சேவேடிவ் கட்சிக்கு டொனேசன் கொடுத்தமைக்காக கூட வழங்கபட்டுள்ளது. நல்ல காலம் சுபாஸ்கரன் இல்லாமல் நிஷான் இந்த விருதை முதலாவதாக பெற்று கொண்டார்😂. King/Queen, Duke, Earl, Prince/Princes, Marquess, Viscount, Baron, Lord/Lady, Sir/Dame, இதற்கு கீழே - Commander of the British Empire (CBE), Officer of the British Empire (OBE), Member of the BE (MBE), மற்றும் British Empire Medal (BEM) என்பன வரும். இதுதான் மேலோட்டமாக பிரிதானியாவில் சமூக தரவரிசை. இதில் சாதாரணமானவர்கள் (commoners ) சேர், லோர்ட் வரைக்கும்தான் போக முடியும். மிகுதி பட்டங்கள், நிலவுடமை+பரம்பரையாக வருவன. ஒவ்வொரு பிரதமந்திரி விலகும் போது அவர் ஆட்களை இப்பதவிகளுக்கு நியமிக்கலாம். கள்ளன் பொரிஸ் தனக்கு காரியதரிசியாக வேலை செய்த எதையும் சாதிக்காத 30 வயதும் ஆகாத ஒரு இளம்பெண்ணை Lady யாக நியமித்தார். அதே போல் புத்தாண்டில் அரசும், அரச குடும்பமும் ஒரு தொகை பேரை நியமிப்பார்கள். இதில் சமூகத்தில் பல நல்லது செய்தோர், வேலையில், விளையாட்டில் சாதித்தோர் நியமிக்கபடுவார்கள். என்னுடைய ஒரு நெருங்கிய வெள்ள இன நண்பிக்கு, பெண்கள் கிரிகெட்டை ஊக்குவித்தமைக்காக MBE கிடைத்தது. ஆனால் அரசு விரும்பினால் எப்போதும் எவரையும் நியமிக்கலாம். சரி…நான் என்ன எண்டு நினைகிறியள்? VPBE - வெட்டி பயல் ஒவ் த பிரிடிஷ் எம்பயர்😂. இந்த knights க்குள்ளும் பல ஓடர் இருக்கு. Order of the Garter இல் அரசர், முன்னாள் பிரதமர்கள் அந்த ரேஞ்சில் உள்ளவர்கள் மட்டுமே.
  16. அமெரிக்காவில் புதிதாக மாநிலம் ஏதையாவது சேர்த்துள்ளார்களா? இது என்ன சொல்? பிகு கட்டையில போக, அது Ferries State University யாம் 😂. ஃபெறீஸ் என்றாவது எழுதி இருக்கலாம்😂.
  17. முன்னோடி - இந்த பெயர் சரிவருமா? முன்னோடி - யாழ் மாவட்டத்துக்கான அடிப்படை சுகாதார வசதி திட்டம். முன்னோடி என்றால் Trail Blazers - இந்த செய்தியை கண்டதும் இப்படி ஒன்றை முன்னெடுக்கும் யாழ் களம் ஒரு முன்னொடி - 6000 வருடமாக வாழும் ஒரு இனத்தில், வான்படைக்கு கேணல் சங்கர் ஒரு முன்னோடி.
  18. யாழ்கள போட்டிக்கு கேள்விகொத்து ரெடியோ? பிகு எனக்கு மாட்டு கொத்துக்கு அடுத்து பிடித்தது உங்கள் தமிழக தேர்தல் கேள்வி கொத்துத்தான்😂
  19. அப்பாவி பிற மொழி பேசும் அடித்தட்டு மக்களில் ஒருவர் வேடிக்கை என்ற பெயரில் கடுமையாக தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதான காரணம் தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமான் தரவழி நச்சு பேர்வழிகள் இனத்தூய்மைவாதம் பேசிய போது… அதை வேடிக்கை பார்த்த, பார்த்து கொண்டிருக்கிற அதிமுக, திமுக அரசுகள்தான்.
  20. கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.
  21. ஆமோதிக்கிறேன். துளி துளியாய் பகுதியில் புதிய திரி தீறக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.