Everything posted by goshan_che
-
முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி
கடற்புலி மாவீரகளுக்கு கடலில், கரையில் அஞ்சலி முன்பும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது மாவீரர் தினம் அன்றே நடைபெறும். ஆனால் இந்த “கரையோர” மாவீரர் என்ற பதமும், தனியாக நவம்பர் 10 இல் நினைவுகூருவதும் விரும்பதாகதும், தவிர்க்கவேண்டியதும். மாவீரர் என்ற ஒற்றைபதமே போதுமானது. கரையோர மாவீரர், வயக்காட்டு மாவீரர், பெருந்தோட்ட மாவீரர், என்ற எதுவும் அவர்களுக்குள் இல்லை. இந்த அடையாள சனியன்களை எல்லாம் அடித்து துரத்திவிட்டு இருந்தால் தமிழன், இறந்தால் மாவீரன் என வாழ்ந்த அவர்களை இப்படி வகைப்படுத்துவது சிறுமை செய்வதாகும்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
தனியே ஈயூ பாராளுமன்றில் உள்ள சீட் எண்ணிக்கையை வைத்து மட்டும் ஜேர்மனிதான் ஈயூ என்பது சரியல்ல. இந்த பாராளுமன்றம் தனியே சட்ட ஆக்க சபை மட்டுமே. அதிகார பலம் European Council (ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அங்கத்தவர், 27), Council of the European Union (அந்த துறைசார் 27 அமைச்சர்களின் கூட்டு) ஆகியவற்றிடமே உள்ளது. இந்த பாராளுமன்றில் கூட அங்கத்தவர் நாடுகள் அடிப்படையில் ஒருமித்து செயல்படுவதில்லை. உதாரணமாக AfD, நேஷனல் புரொண்ட், UKIP, போன்ற அதி வலதுசாரிகள் தம் நாடுகளில் இருந்து வரும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து பயணிக்கா. மாறாக தமக்குள் ஒன்றான ஒரு பிணைப்பை உருவாக்கி extreme right wing block என செயல்படுவார்கள். ஜேர்மனி பொருளாதார பலம் காரணமாக ஈயூவில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. பிரெக்சிற்க்கு முன் இதை பேலன்ஸ் செய்த யூகே யும் இப்போ இல்லை என்பதால், பிரான்ஸ்சுன் ஜேர்மனியோடு சேர்ந்தே 50+ ஆண்டுகளாக பயணிப்பதால் ஜேர்மனியின் கை ஈயுவில் மேலும் ஓங்கி உள்ளதே ஒழிய, பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையால் அல்ல.
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
நன்றி. தகவல் கிடைப்பின் பகிரவும். ஒரு தகவல் உதவி. அங்கே ஊபரில் நம்பி போகலாம்தானே? கெய்ரோவில் இருந்து புறப்பட்டு, சுயசை ferry அல்லது பாலம் மூலம் கடந்து, சுத்தி பார்த்து கொண்டு, ஒரே பகலில் கெய்ரோ திரும்பலாமா? நேரம் போதுமாக இருக்குமா?
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
இந்த திரியை வாசித்த போது இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டாலும், குளோபல் தமிழ் நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையிலேயே கருத்துகள் பரிமாறப்படுவதை கண்டு கொண்டேன். இந்த பெண்மணிக்கு இந்த ஆடவரை முன்னமே தெரிந்துள்ளது, அவரை நம்பி போன இடத்தில் எதோ விபரீதம் நடந்துள்ளது என - செய்தியின் அடிப்படையில்தான் கருத்துகள் வந்துள்ளன. வவுனியாவுக்கு திருமணத்துக்கு போவதாக சொல்லி போன குலதீபா அம்மையாருக்கு சங்குபிட்டியில் என்ன வேலை? என்பது நியாயமான கேள்விதான். ஒன்றில் தவில்காரர் வவுனியா பஸ்சில் இருந்து அவரை தர தர என இழுத்து போயிருக்க வேணும். அப்படி என்றால் அது செய்தியாகி இருக்கும். அல்லது கேரதீவு- பூநகரி இடையே இவராக இறங்கி இருக்க வேண்டும். பிகு எழுதிய பாங்கை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கருத்தின் போக்கு நியாயமானதே.
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆண்கள் மிக வெளிப்படையாக பாலியல் உணர்வுகளை வெளிபடுத்துவார்களாமே? எனது இங்லிலாந்தில் பிறந்த பஞ்சாபி நண்பி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சியம் அல் ஷைக் போனார். ஆண் நண்பர் அருகில் அமர்ந்திருக்கும் போதே தன்னை அணுகி நம்பர் கேட்டதாகவும், சிலர் ஆண் நண்பரிடமே பேச்சு கொடுத்தாயும் கூட கூறினார். அதே போல் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பாலியல் சீண்டல்களும் அதிகம் என்றார். இவை உண்மைதானா. பிகு அங்கே நிற்கும் போது அருகே ஜோர்டானில் சில இடங்களையும் போய் பார்த்து வாருங்கள். பண்டைய ரோமுக்கு நிகரான பெட்றா நகரம், வாடி ரம் என அழைக்கப்படும் பாலைவன சோலை, ஓட்டமன் சாம்ராஜத்தால் கட்டப்பட்டு, லோரண்ஸ் ஆப் அரேபியா துணையுடன் அரபு கிளர்சியாளர்களால் அழிக்கப்பட்ட ரயில் பாதை, யேசு ஞானஸ்தானம் பெற்ற ஜோர்தான் நதி என இன்னொரு லிஸ்ட் வைத்துள்ளேன்😂.
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
பிகு நாம் இப்போ கைக்கொள்ளும் “இனம்” என்ற ஒற்றை வரைவிலக்கணத்துள் அரேபிய வருகைக்கு முன்னான பண்டைய எகிப்தியர்களை உள்ளடக்க முடியாது என்பதே துறைசார் ஒருமித்த கருத்து. அவர்கள் வட ஆபிரிக்காவுக்குரிய தனித்துவத்துடன், நூபியன், லெவண்ட் மக்கள் மற்றும் பலவகை தோல் நிறங்கள் சேர்ந்த ஒரு இனக்குழு கூட்டே இவர்கள். பின்னாளில் வந்த எகிப்திய அழகி கிளியோபட்றா உண்மையில் கிரேக்கத்தின் மசிடோனியா அடியில் வந்தவர்.
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆக்டோபர் 6 நகரம், கீசா, சுயஸ், கெய்ரோ, அலக்சாண்டிரியா என ஒரு 10 நாள் திட்டம் ஒன்று தயாரித்துள்ளேன். பண்டைய தமிழர் தொடர்பு உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள தந்துதவ முடியுமா?
-
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
உயிரியல், மரபியலில் பெரும் பாய்ச்சலை ஆரம்பித்த, டி என் ஏ யின் டபிள் பீலிக்ஸ் கட்டமைப்பை கண்டுபிடித்த மூவரில் ஒருவர். பிற்காலத்தில் குறிப்பாக 2019 இல் ஈயூஜினிக்ஸ் எனப்படும், இனத்துக்கும் புத்தி கூர்மைக்கும் தொடர்பு உள்ளது எனச்சொல்லும் வகையான கருத்துக்களை சொல்லி, அறிவுசார் சமூகம் இவரை ஒதுக்கிவைத்தது. ஆபிரிக்கர்கள், ஏனையோரை விட புத்தியில் பிந்தங்கியோர் என்பது இவர் நிலைப்பாடு. யாழ்பாணத்தமிழருக்கு மூளையில் ஒரு எக்ஸ்ரா மடிப்பு உள்ளது என நம்பும் நம்மவர்களும் உளர் அன்றோ😂.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா? இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்? மம்தானியின் பேச்சுக்கள், எனக்கே எரிச்சலூட்டுகிறன. பெருநகரங்களுக்கு அப்பாலான அமெரிக்கன் வாக்காளரை இது செம்ம கடுப்பாக்கும், என்பதும், ஜனாதிபதியாக வரமுடியாத இவர் நாடளாவிய ரீதியில் தன் கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்துவார் என்பதும் என் நிலைப்பாடுமே. ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது. குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என புரியவில்லை😂. உங்களின் முதலாவது பதிவிற்கான பதிலிலேயே இதற்கு இவர்கள் மட்டுமே பின்னால் இருப்பார்கள் என்பதல்ல என் வாதம் என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். எந்த கருத்தாளரும் சொல்லாத ஒன்றை சொல்லியதாக, இவர்கள் இருவரும் கருத்தாளர்களுக்கு அறிமுகமானவராக இருக்க கூடும் என, கற்பனையில் கம்பு சுத்துவது ஏன் செம்பா🤦♂️.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒரு நிறுவனத்தின் வரிச்சுமை (tax liability) என்பது இலாபம் ஈட்டப்பட்டதும் உருவாகிவிடும். Tax liability உருவாகிய தருணம் முதல் அந்த tax amount அரசுக்கு சொந்தமான பணம். தனியே இலாபத்தில் எடுக்கும் வரி மட்டும் அல்ல, நட்டத்தில் ஓடும் நிறுவனங்களுக்கு அவை அரசின் சார்பில் வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் VAT உட்பட பல வரிச்சுமைகள் இருக்கும். சரியாக தெரியவில்லை ஆனால் இது எண்ணை சம்பந்தபட்ட வியாபாரம் என்பதால் - fuel duty அல்லது அதுபோல் வேறு ஏதும் வரியும் சேர்ந்தே 250 மில்லியன் வரை இந்த கம்பனிக்கு வரிச்சுமை ஏற்பட்டிருக்கலாம். நமக்கு தெரிந்த ஒரே தரவு திவாலான கம்பெனியின் வரிச்சுமை, அதாவது வரியாக அரசுக்கு கட்ட படவேண்டிய தொகை 250 மில்லியன் அண்ணளவாக. இவ்வாறாக தேங்கும் வரிச்சுமையின் பால்பட்ட வரியை செலுத்த ஒரு கால எல்லை இருக்கும். அந்த கால எல்லைக்குள் நிறுவனம் வங்குரோத்து ஆகிவிட்டால் - அது அரசின் வருவாய்க்கு வரவேண்டிய வரியில் நட்டமே. ஒரு பெட்டிகடை உதாரணம். நான் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வரி உட்பட விற்கிறேன். இதில் 17.50 ரூபாய் VAT என வைப்போம். இதை நான் வாடிக்கையாளரிடம் பொருள் விற்கும் போது அறவிட்டு விடுவேன். அதேபோல் எனது வியாபார வரி 2.50. இந்த 100 ரூபாய் வியாபாரத்தில் என் வரிச்சுமை 20 ரூபாய். இது வரிக்கொள்கையில் இருக்கும் இசைவுகள் relief ற்கு ஏற்ப மேலும் குறைந்து 18 ஆகிறது என வைப்போம். இந்த 18 ரூபாய் வரியை நான் கட்ட எனக்கு ஒரு கால எல்லை இருக்கும். சில சமயம் இந்த எல்லையை திறைசேரி நீட்டிக்கலாம், அல்லது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனில் அரைவாசியாக கூட குறைக்கலாம், ஏன் ரத்து கூட செய்யலாம். ஆனால் வரிச்சுமை, வரிச்சுமைதான். இந்த வரிப்பணத்தை உள்ளபடியே அரசால் தகுந்த நேரத்தில் வசூலிக்க முடிந்தால் அது அரசின் திறை சேரியில் +18 ரூபாய் என முடியும். அந்த 18 ரூபாயில் அரசு நாலு பேருக்கு டொபி வழங்கும் நலத்திட்டத்தை செய்யலாம். இந்த 18 ரூபாயை அரசு வசூலிக்க முன்னர் கம்பெனி திவாலானால் - அரசுக்கு 18 ரூபாய் சுவாகா. இதுதான் நாமம். மேலே ரசோ அண்ணா சொன்ன இந்திய வியாபார, நான் சொன்ன நகை கடை உதாரணங்களில், மாறி மாறி வங்குரோத்து செய்து தனியே வங்கியை மட்டும் சுத்துவதில்லை, இப்படி திறைசேரியையும் சுத்துவார்கள்.
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
தலைவா…..வா! தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா… பிகு கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
எப்ப ஊருக்கு கிளம்புறியள்? மானஸ்தனனுக்கு இன்னொரு இனத்தின் ஊரில் என்ன மினக்கெடு?😂
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
பெயர் வச்ச ஆள் மட்டும் என் கைல சிக்கினான்😂
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
என்னது துட்டன் காமனா 😂 நல்லவேளை டுடு கெமுனு வை துஸ்ட காமினி என்றது போல் இவரை துஸ்ட காமன் எண்டு எழுதவில்லை 😂. அட பாவியளா அது டு டன் காமென்.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
அப்படி என்ன பேசினாராம்? சில யாழ் கள உறுப்பினர் முன்பு எழுதியது போல் புல் இங்கிலிசோ?😂
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
ஓம். கற்பூரப்புத்தி 😂. நாங்கள் சவோயில் பயந்து பயந்து லைனில் நிற்க, நீங்க “நான் அடல்டுடா” என அசால்டாக டிக்கெட் வாங்கி பார்த்த படம். பின்னாளில் டிவிடியில் பார்த்த போதுதான் இலங்கை சென்சாரின் துரோகம் புரிந்தது. இதே போல் 2000அளவில் இந்திய படங்கள் எல்லாம் கதாநாயகியை சைக்கிள் கூட ஓடாத கன்னி என விபரித்து கொண்டிருக்க, Monsoon Wedding என்று ஒரு படத்தை எடுத்த்தார். Dude க்கு எல்லாம் முன்னோடி.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
தாய் தந்தை இருவருமே பஞ்சாபி என நினைக்கிறேன். தாய் நிச்சயம் பஞ்சாபி. முதலில் வேறு ஒருவரை மணம்முடித்து, ரத்தாகி, பின்னர் படப்பிடிப்புக்கு உகண்டா போன நேரம் இரெண்டாவதாக இவரின் தந்தையை மணமுடித்தார். தாய் இந்துதான்.
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
கூட்டில் இருக்கும் புனுகுபூனைகளும், காப்பி விளம்பரமும். வெறும் £2.50 தான். அதானே பாத்தன் நானாவது உதுக்கு போய் இருபது பவுண்ட் கொடுப்பதாவது.
- IMG_6516.jpeg
- IMG_6515.jpeg
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
நாமிருவரும் ஒரே இடம்தான் போயுள்ளோம் என நினைக்கிறேன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒவ்வொருவருக்கும் அவர் அவர் புரிதல் மட்டம் பற்றி ஒரு சுய மதிப்பீடு இருக்கும் என்பதை நானும் ஒத்து கொள்கிறேனுங்க 😂. அதேபோல் எந்த விடயத்தையும் அடிப்படையை விளங்கி கொண்டால், அது மேலும் சிக்கல் நிலையை அடையும் போதும், back to basics போய் சிக்கலானதையும் புரிய முடியும். இங்கே இரு களவுகளுக்கு ஒப்புவமை கொடுக்கப்பட்டதே ஒழிய இரெண்டும் ஒன்றே என யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். மிக அடிப்படையான நிலையில் 2008 இல் வங்கிகள் திவாலானது, லிங்கன்சேர் சுத்தீகரிப்பு நிறுவனம் திவாலானது இரெண்டுமே too big to fail என்பதை வைத்து ஆடிய சூதாட்டத்தின் பலனே. இதை புரிந்து கொள்ள வெறும் பெட்டிகடை அறிவே போதும், London School of Economics பட்டம் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து. 👆இது மட்டும்தான் நான் எழுதியதும் 😂. இதை விட குற்றவாளிகளில், வலுகுறைந்த குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்பட வலுவான குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இவரின் தாயார் ஒரு அருமையான திரைப்பட இயக்குனர். நானா பட்டேகர் நடித்த சலாம் பாம்பே எனும் திரைப்படம்தான் அவரின் முதலாவது திரைப்படம். என் அபிமான முதல் 10 படங்களுக்குள் வரும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மேலே சொன்னது போல இதில் முழு பங்கும் ஒத்தை வீடு வாங்கிய நபர்கள் மீது என்பதல்ல என்வாதம். தனி நபர்கள் தம் வருவாயை பொய்யாக காட்டி, அல்லது வீட்டு விலை எப்போதும் கூடி கொண்டே போகும் என நம்பி அகல கால்வைத்தார்கள், அதே போலவே மத்திய, சிறு, பெரு நிறுவனங்களும். வங்கி கொமிசனுக்காக இத்தோடு ஒத்து ஓடியது. கடைசியில் நம்பிக்கை கெட்டு போக, எல்லாரும் ஒரே நேரத்தில் குப்பிற விழ, அரசுக்கு காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தான் மேலே சொன்னேன் - இது privatizing profit socializing risk. 2008 இல் வங்கிகள் செய்ததும், இப்போ சஞ்சீவ் ஆரணி செய்ததும் இதையேதான். இலாபம் வந்தால் தனி நபர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு. உண்மையில் இப்படி அரசு விழ விடாது என்ற அளவு பெரிய யாவரங்களை எடுத்து நடத்துவது ஒரு பலசரக்கு கடையோடு ஒப்பிடுகையில் மிக குறைந்த ரிஸ்க்.