Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. செய்தி சீமானை பற்றி - ஏன் விஜை பற்றி எழுதுகிறீர்கள்😂. பட படப்பாக உள்ளதா?😂 சொந்த உழைப்பில் சோறு சாப்பிட்டால் - இதுதான் பிரச்சனை. திரள்நிதியில், தரகு காசில் தானும் உண்டு, மனைவி, மகன், மனைவியின் அக்காள் மகன் வரை கொழுத்து பிழைக்கும் ஊழல்-குடும்ப அரசியல்வாதி எண்டால், உழைக்காமல் வாழலாம்.
  2. கறுப்பன் குசும்பன். இப்பவே டெபாசிட் இழப்புக்கு காரணம் செட்டப் பண்ணுகிறார்😂
  3. உறுப்பினர் குடிகாரர் எண்டால் அது சுமன் குரூப்… ஊரையே குடிகாரார் ஆக்கினால் அது பார் சிறி குரூப்….. #தள்ளாடும் தமிழ் தேசியம்
  4. அப்பாடா….ஒரு வழியாக போய் தொலைந்தது. புலிகள் வாவியை கடப்பதை தடுக்க இதை கொணர்ந்து விட்டதாக பேசிகொள்வார்கள்.
  5. இந்த தங்கன் வலிகாமம் எங்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவரின் குடும்பத்தில் எவரையோ புலிகள் போட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் என்பார்கள். சுதுமலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன். கழுத்தில் பெரிய சங்கிலி தொங்கும். இந்தியன் ஆமி விலகிய பின் இந்தியாவுக்கு தப்பி ஓடும் போது படகு மூழ்கி இறந்ததாயும், அப்படி இல்லை என்றும் பேசி கொண்டார்கள். இப்போதும் இருக்கிறாரா? எங்கே எப்படி என அறிய ஆவல். முரண்நகை இங்கே மாணவரை வெளியே எடுக்க முன்னுக்கு நின்ற ரஜினி, சிறிதரனுக்கு பின்னாளில் இந்த சமூகம் கொடுத்த பட்டங்கள். குறிப்பு 87-90 இல் டக்கிளஸ் ஈபியில் இல்லை. பிரிந்து போய் ஈபிடிபி யை ஆரம்பித்துவிட்டார். மாகாண அரசிலும் இவர் பங்கில்லை. அப்போ ஈபியை வழிநடத்தியவர் பின்னாளில் புலிகளால் எம்பி ஆக்கப்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன். 1990 யூனில் இல் புலிகள்-ஆமி சண்டை மீள ஆரம்பித்த பின்னர், பிரேமதாசாவுசடன் உடன்படிக்கைக்கு போய், ஒரு தொகுதி உறுப்பினர்களுடன் கொழும்பு வந்தார்.முதல் முகாம் தெகிவளையில் என நியாபகம். அதே போல் பார்க் ரோட் வீடும். பின்னர் தீவு பகுதிக்கு அனுப்பபட்டனர்.
  6. அண்மையில் நானும் இந்த மதுவல்லாத பியரில் கொஞ்சம் நாட்டம் காட்டுகிறேன். இப்போதைக்கு ஹைனிக்கன் 0%, ஸ்டெல்லா 0% சுவை நன்றாக உள்ளது. ஏனையவை பிடிக்கவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சிலது zero sugar ஆனால் அல்கஹோல் இருக்கும். பார்த்து வாங்காவிட்டால் கற்பு பறிபோய்விடும்😂
  7. இங்க கருத்துக்களை பார்த்தால்… “என்னது பெரியவர் சாகலியா… செத்துடார்ன்னு நம்பி வெட்டியான் கூட சாரயத்தை கடனுக்கு குடிச்சிட்டானே”… எண்ட விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. கவலை வேண்டாம் மகிந்த சாகும் போது அனுர முன்னிலையில் முழு ராசமரியதையுடன் சங்கநாயகர்கள் ஓதித்தான் அனுப்புவார்கள். தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்… மறுபடியும் தர்மமே மண்ணை கவ்வும்😂
  8. டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது
  9. அமைதியாக கழிக்க வேண்டிய கிறிஸ்மஸ் விடுமுறையில் ஒரு கிறிஸ்தவ உறவு இப்படி பதட்டப்படுவதை பார்க்க எனக்கே மனம் கேட்கவில்லை😂. சரி ஒரே ஒரு கேள்வி? புத்தசாசன அமைச்சு ஜனாதிபதி அனுரவுக்கு கீழேதான் வருகிறது. இந்த பிரச்சனையில் இவர்களுக்கு இனவாத எண்ணம் இல்லை எனில், மொட்டு கட்சி காலத்தில், ரணில் காலத்தில் கூட செய்யாத அரச அங்கீகாரம், பதவிநிலைகளை இந்த விகாரைக்கும், தேரருக்கும் ஏன் அனுரா இப்போ கொடுத்தார்? சும்மா இருந்திருக்கலாமே?
  10. தேரர் சொன்னத கேட்டனியளே? இது மக்கள் காணியில் உள்ளதாம். நாகவிகாரைக்குரிய காணி, உண்மையான திஸ்ஸ விகாரை இருந்த காணி அருகே உள்ளதாம். தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி.
  11. இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை… ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்… இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது. முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது. ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும். இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது. எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர். ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.
  12. இப்போ இருக்கா தெரியவில்லை. கொவிடுக்கு முன்பு போனேன். ஏசி பஸ் 250௹ அப்போ எடுத்தார்கள் என நியாபகம். விமான நிலையம் - கட்டுநாயக்க பஸ் நிலையம் இலவச பஸ், கட்டுநாயக்க பஸ்நிலையம்-கோட்டே விரைவுபாதையில் ஏசி பஸ் (ரோசா வான்).
  13. உங்களுக்கு புரியவில்லையா? ஒரு காலத்தில் தம்பிள்ளைகளை போராட கொடுத்த சமூகத்தில் இப்போ தையிட்டி விகாரை போராட்டத்துக்கு வெறும் 17 பேர் மட்டுமே போகும் நிலை! இதை ஆதவன் பெரும் போராட்டம் என எழுதலாம்… பொலிசார் பிடித்து சென்றதை சித்திரவதை என நிரோசன் லூசு கூத்தாடலாம்… ஆனால் மக்கள் இதில் அந்நியபட்டு போய் பலகாலம் ஆகிவிட்டது. யாரும் கல் எல்லாம் எடுத்து கொடுக்க தேவையில்லை - விகாரைகளும், சிங்கள மயமாதலும் தவிர்க்கவே முடியாத புள்ளியை தாண்டி நகர்ந்து விட்டதாகவே எனக்கு படுகிறது. இதை இப்போது கூட புத்திசாலித்தனமாக, ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியாமல் சுமன் v ஶ்ரீ v கஜன் எனவும், புலம்பெயர் நாட்டில் மேலும் பல பிரிவுகளாகவும் தமக்குள் அடிபடும் இனத்தை - நையண்டியை தவிர வேறு எந்தவகையில் அணுக எனக்கு தோணவில்லை என்பதே என் எழுத்தின் பின்னால் உள்ள வெம்பாரம்.
  14. Mobitel வட்டிக்கையாளர் எனில் இங்கே டிக்கெட் வாங்கலாம். நான் டயலாக் ஆனால் நண்பர் வாங்குவார். https://www.mobitel.lk/online-ticket-reservation#e-Ticket
  15. தள்ளாடி விழுந்ததெல்லாம் சித்திரவதையில் அடங்காது😂 சித்திரவதை என்ன என்பதையும் இலங்கை படை அதை எப்படி செய்யும் என்பதையும் மன்னிப்பு சபை ஈறாக பல உலக அமைப்புகள் வெளிகொணர்ந்துள்ளன. இந்த தவிசாளர் தனக்கு சுயவெளிச்சம் தேட இப்படி ஆஸ்பத்திரியில் போய் இருந்து அலப்பறை செய்வதால்…. உண்மையான சித்திரவதை சம்பவங்களை கூட அமைப்புகள் கண்டு கொள்ளாமல் விட வாய்ப்புக்கள் அதிகம். போன தலைமுறை அரசியல்வியாதிகள்தாம் “பே விளாத்தியள்” எண்டால் இந்த தலைமுறை “பெரிய விளாத்திகளாக” அல்லவா இருக்கிறார்கள்.
  16. இரெண்டு இடத்திலும் இல்லை. இதை மலையகத்தில் உறுதி செய்ய போராடவேண்டும் என்பது மடைமாற்றும் அல்லது தட்டி கழிக்கும் போக்கு. அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதே அவர்கள் எதிர்கால சந்ததியாவது காணி உரிமையை அடைய சாத்தியமான ஒரே வழி.
  17. மிக பிந்திய செய்தி ஒன்று அனுர தொய் பபா… அவருக்கு மூக்கை பிடித்தால் வாயை திறக்கத்யெரியாது…. பிகு காவடியில்தான் எத்தனை எத்தனை வகைகளடா சாமி😂
  18. இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன். நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன். இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம். இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது. ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது. சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம். சுமன் இதையாவது செய்தார்…. கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே? ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?
  19. தமிழ் வின் இந்த ஆண்டின் சிறுவர் நகைச்சுவை இலக்கிய விருதை தட்டி செல்கிறது😂
  20. உங்கள் கருத்தில் நான் தவறேதும் சொல்லவில்லை. நீங்கள் உட்பட சுமன் பற்றிய பலரின் பார்வைதான் எனதும். ஆங்கிலத்தில் “கழுவிய தண்ணீரோடு, குழந்தையையும் எறிய கூடாது” என்பார்கள். என் நிலைப்பாடும் அதுவே. ஒத்தை சீட்டு ஒப்பிலாமணி தாக்கப்பட்டார்😂
  21. அது…வந்து….அதாகப்பட்டது…நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்….
  22. இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.