goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Everything posted by goshan_che
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
வாவ் அருமையான செய்தி. உந்த பிரச்சினை முடிய, டெல் அவிவ், சீ செல்ஸ், இலங்கை என ஒரு self transfer டிக்கெட் போட்டு போக வேணும்.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான். அங்கே நாட்டாமை சாத்தப்பன். இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார். அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை. விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார். அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள். ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும். த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார். பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”. நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன். பிதிர்காரியம் செய்வேன். ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன். இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அப்போ அரசியல் எதிரிகள் யார்? இந்த கொள்கைகளை ஏற்று கொண்ட, ஆனால் இப்போ அந்த கட்சிகளின் தற்போதைய தலைமைகள் இந்த கொள்ககளில் இருந்து விலகி போய்விட்ட கட்சிகள். குறிப்பாக திமுக - தமிழ் நாட்டில் அன்றாட ஆட்சியை நாசம் செய்யும் கட்சி. ஆகவே அது அரசியல் எதிரி. திமுக, அதிமுக தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை. அவற்றின் தற்போதைய ஊழல் தலைமைகளோடு அரசியல் முரண். பாஜக philosophical enemy. திமுக political enemy. முன்னையது strategical enemy (மூலோபாய எதிரி) பின்னையது tactical enemy (தந்திரோபாய எதிரி) இப்போ விளங்கி இருக்கும். உங்களுக்கு புரியும் படி சொல்வதானால்… புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள். டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இதை விஜை தனது வி சாலை மாநாட்டிலுல் அதற்கு முன்பும், தெளிவாக சொல்லி விட்டாரே. விஜையின் கொள்கை, ஒன்றிய இந்தியாவுள், தேசிய இனங்கள் குறிப்பாக, திராவிட தேசிய இனங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய இனம் - உச்ச பட்ச மாநில சுயாட்சியுடன் வாழ்வதை தொடர்ந்தும் உறுதி செய்தல். இதனால்தான் அவரின் கொள்கை தலைவராக வேலுநாச்சியாரும், அஞ்சலை அம்மாளும் அமைகிறனர். பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுத்தல் இன்னொரு கொள்கை (வர்ணாசிரமம்) - இதனால்தான் அம்பேத்கரும், பெரியாரும் கொள்கை தலைவர்கள். பொதுவாழ்வில் ஊழல் இன்மை. இதனால் காமராஜர் கொள்கை தலைவர். இந்த மூன்றுந்தான் தவெகவின் அடிப்படை கொள்கைகள். இவை பாஜகவுக்கு அதன் கொள்கைக்கு நேரெதினாவை. எனவே பாஜக கொள்கை எதிரி.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
பொல்லை கொடுத்து அடி வாங்குவது
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
உண்மைதான். சீமான் வழக்கு திரிகளில் பலமுறை எழுதியதுதான். மேற்கு நாட்டு சட்டம் போல அல்ல இந்திய சட்டம். அங்கே திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தால் அது ரேப் ஆக முடியகூடும். மேற்கில் அப்படி அல்ல. இன்னொருவரின் கணவன்/மனைவியோடு தொடர்பில் இருந்தால் மேற்கில் அபராதம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அப்படி வாக்கு வங்கியாக இல்லை. ஒரு 5% வாக்காளருக்கு எமது பிரச்சனை பத்து முக்கிய பிரசனையில், 10 வது பிரச்சனை. அந்த வாக்காளரை கவரவும், நிஜமாகவே சில தலைவர்கள் எம் மீது கொண்ட கரிசனையுமே இப்படி பேச காரணம்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி. இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல. ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது. ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை. ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு. அதை விஜை நிறைவேற்ற கூடும். ஆகவே வரவேற்கிறேன். அவரும் சீமான் போல் பெட்டி… அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன். பிகு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
2. விஜை தந்தை ஜெ வெற்றிக்கு விஜை “அணிலாக” இருந்து உதவினார் என்பதை வைத்து விஜையை யார் வேணாலும் நக்கல் அடிக்கலாம். ஆனால் அதே தேர்தலில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஈழத்தாய் என சொன்ன சீமானுக்கு மட்டும் அந்த அருகதை இல்லை. இவர் மட்டும்தான் ரோ ஏஜெண்ட்
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அண்ணை அவசரத்தில செய்தியை வடிவா வாசிக்கேல்லையோ? முன்னர் கொடுத்த வருமான வரி தண்ட நோட்டீசுக்கு எதிரான விஜை இடைக்கால தடை பெற்றார் - அதன் வாய்தா விசாரணை இன்று. விஜை காங்கிரஸ் கூட்டணி வருமா தெரியாது. ஆனால் ஈழத்தமிழர்களின் ரத்தம் குடித்த கட்சி, இன எதிரிகள் என தன்வாயால் கூறிய காங்கிரஸின் தற்போதைய மாநில தலைவர் செல்வபெருந்தகையுடன் ஒரே மேடையில் பேசி, அண்ணன் தம்பியாக கட்டி குழாவி, அணில் என இருவரும் சக தமிழ் தேசியம் பேசும் விஜை நக்கல் அடித்த தருணம் (இன்று நடந்தது).
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இதில் எனக்கு உடன் பாடில்லை. ஈழதமிழரிடம் திரள்நிதி எடுத்து, தலைவர் மாவீரரை வைத்து கல்லா கட்டும் சீமானின் அரசியலும்… தனது நிலை, இடம், பொருள், காலம், ஏவல் அறிந்து, ஈழ தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜை சொல்வதும் ஒன்றல்ல. வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், நெடுமாறன், வீரமணி போல (பல விமர்சனங்கள் இருந்தாலும்) ஈழதமிழர் பற்றி உண்மையான கரிசனை கொண்ட பல அரசியல்வாதிகள் முன்பே சொன்னவைதான் இவை. ஒரு தமிழக அரசியல்வாதி ஈழதமிழருக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது வரவேற்க பட வேண்டியது, அனைவரையும் ஒரே சட்டியில் போட்டு நாமே வறுக்க கூடாது. 200 INR கிடைக்கும். ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இது சம்பந்தமான திரியில் அலசி, அண்ணனை கிழித்து காயப்போட்டிருக்கு…நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும். சீமான் விஜையை முன்பே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பது உண்மை. ஆனால் ஸ்டாலின், சீமான் சந்திப்புக்கு பிந்தான் மிக கீழ்தரமாக விமர்சிக்கிறார். #வாங்கின காசுக்கு அதிகமாவே கூவிறாண்டா கொய்யால மொமெண்ட் சீமாம் சபரீசனை சந்தித்தார் என செய்தி போட்டது யுடியூப் ஊடகம் அல்ல. தமிழகத்தின் முண்ணனி நிறுவனமான விகடன். இது பொய்யானால் - சபரீசன், சீமான் இருவருக்கும் அது பெரிய அவதூறு. ஆனால் இரு கள்ளரும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் கள்ள மெளனம் காப்பது - விடயம் உண்மை என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கு. அண்ணி விடயத்தில் பாஜக வக்கீலை பிடித்து உச்ச நீதிமன்றை வளைத்த சீமான் - விகடன் மீது வழக்கு போட முடியாது என்பது நொண்டிசாட்டு.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அவர்களுக்கும் டி ஆர் பி க்கு விஜைதான் தேவைபடுகிறார் போலும் 🤣. யார் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர் விடயம் எப்போதும் தமிழக தேர்தல் அரசியலில் ஒரு non issue தான். 83, 2009 இல் கூட அப்படித்தான். ஆனுர ஆட்சியில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் பலருக்கு கூட இது ஒரு non issue ஆகிவிட்ட நிலையில், புலம்பெயர் திரள் நிதிக்கு ஆசைபடுபவர்கள் மட்டும்தான் புலிகள், தலைவர் என கூவி கூவி வித்து கல்லா கட்டுவார்கள். படத்துக்கு 250 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வரும் விஜைக்கு திரள்நிதி-யாசகத்தில் ஆர்வம் இல்லாதிருப்பது வியப்பல்ல.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣). முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
மொழிபெயர்ப்பு விஜையை தமிழ் நாட்டில் அரசியல் செய்ய வேண்டாம் என சொல்லவும் 🤣. பிகு விஜையும் ஒரு சராசரி அரசியல்வாதியே. தமிழ் நாட்டில் மீன் வள கொள்ளையர் = அப்பாவி மீனவர்கள் என்ற மாபெரும் விம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதை சர்வகட்சி கூட்டத்தில் ஏற்று கொண்டாலே ஒழிய, தனி ஒரு கட்சி இப்படி சொல்வது அரசியல் தற்கொலைக்கு சமனானது. விஜை அரசியல் தற்கொலை செய்யவில்லை, எனவே அவர் எமக்கு ஆதரவாக எழும்பும் சிறு குரல் கூட வேண்டாம் என சொல்லும் நிலையிலா நாம் இருக்கிறோம்?
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
👇 கிட்டதட்ட 15 வருடமாக சீமான் சொன்ன அதே விடயங்களை சொல்லி, அதனால் விஜைக்கு வாக்கு போடுவேன் என்கிறார் இந்த பெண். ஆனால் சீமான் மீது சாமன்ய மக்களுக்கு இந்த நம்பிக்கை வரவில்லை. இதற்கு சீமானின் குழப்ப, உள்ளடி, அநாகரீக, வெறுப்புவாத (மறைமுக சாதிய) அரசியல் பெரிய காரணி என்றாலும், உள்ளுணர்விலேயே அவர் ஒரு நம்பதகாதவர் என்பதை மக்கள் கண்டு கொண்டார்களோ என நான் எண்ணுகிறேன். https://youtube.com/shorts/0kurU1alclU?si=84CF_4ADbB3LiTRo
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣 பத்தோடு பதின்றோகவேனும் முக்கிய சந்தர்பங்களில் குரல் கொடுத்துள்ளார். போராட்ங்களிலும் கலந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று நேற்றைய நாகை உரையில் நான் அவதானித்த விடயம். ஏனையை பிரச்சனைகளை பற்றி விஜை பேசிய போது எழுந்த மக்களின் சத்தம், ஈழத்தமிழர் பற்றி சொன்ன போது அதே அளவில் வரவில்லை. இதுதான் எப்போதும் தமிழ் நாட்டின் மனநிலை. 2009 இலும் கூட. ஆகவே ஒரு அடையாள ஆதரவை மீறி வேறு எதை எதிர்பார்தாலும் அது எம் மடமையே.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
ஜெ - தமிழ் நாட்டு முதல்வர்களிலேயே “அதிசயம்” என்றால் அது ஜெ தான். அண்ணாவிற்கு பின் நாவலரை தள்ளிவிட்டு கருணாநிதி வந்ததை விட, எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் முதல்வரானதை விட… அவர் சாகும் போது, எம் ஜி ஆரால் கட்டம் கட்டப்பட்டு அரசியல் அநாதையாக கிடந்த ஜெ கட்சியை கைப்பற்றி எதிர் கட்சி தலைவி ஆனதும், 91 இல் முதல்வரானதும் பெரியதொரு அதிசயம் (miracle). ஏன் ஜானகி ஒதுங்கி போனார்? ஜெயின் மக்கள் ஆதரவு. அரசியலில் மிக சொற்ப அனுபவமே இருந்த ஜெ யை வெல்ல வைத்த ஒரே சக்தி அவருக்கு தானாக கூடிய மக்கள் கூட்டமும் அது வாக்காக மாறியதும் மட்டுமே. “கருணாநிதி ஒரு தீய சக்தி”, “ஊழல் குடும்ப ஆட்சி”, “சொன்னர்களே செய்தார்களா”, “நான் கேட்கிறேன் நீங்கள் செய்வீர்களா” - விஜையின் வியூகம் பல இடங்களில் எம்ஜிஆரை விட ஜெயை பின்பற்றுவதாகவே எனக்கு படுகிறது. எம்ஜிஆரை விட ஜெ யுடந்தான் விஜையின் அரசியல் வரவை ஒப்பிடுவது பொருத்தமானது என்பது என் பார்வை. அவருக்கு கூட்டம் வாக்காக மாறியது. இவருக்கு?
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
நீங்கள் தமிழ் நாட்டவர் போலவே ஆகிவிட்ட ஒருவர் கட்டாயம் இந்த வித்தியாசம் உணர்திருப்பீர்கள். பொதுவாக, ஒருவன்-ஒருத்தி கான்செப்டுக்கு ஈழத்தமிழர் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழக தமிழர் கொடுப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு. அடிதட்டு, மத்திய, மேல் தட்டு என ஆண்கள் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் இருப்பது அங்கே அப்படி ஒன்றும் அரிதான செயல் அல்ல (ஈழ, புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிடும் போது). ஆனால் அதே இடத்தில் ஒரு பெண் கண்ணை கசக்கினால், சம்பந்தபட்ட ஆணுக்கு அன்று ஆரம்பிக்கும் ஏழரை. அது செபஸ்டியன் சைமனாக இருந்தால் என்னா மாதம்பட்டி ரங்கராஜாக இருந்தால் என்ன. திரிஷா அல்லது சங்கீதா பொதுவெளியில் வந்து புகார் சொல்லாதவரை விஜை ஓக்கே. நான் அறிந்த மட்டில் அப்படி இருவரும் விஜை மீதான வெறுப்பில் இல்லை என்பதே. ஆனால் இதை எப்படியாவது கிண்டி விட ஒரு below the belt அடிக்கு திமுக தயாராவதாக பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
எப்போதும் சொல்லி கொண்டிருக்க நான் “சுமந்திரன் லவ்வர்ஸ்” நோயால் பீடிக்கப்படவில்லை 🤣