Everything posted by goshan_che
-
2026 இல் உள்ள அரச விடுமுறைகள்
கிட்டதட்ட ஒரு மாதம் வருகிறது😂. நாடு உருப்பட்ட மாதிரித்தான்😂
-
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!
இலண்டனின் ஹைட்பார்க், நியோர்க்கின் சென்ரல் பார்க் போல பேணப்படவேண்டிய இடம் பழைய பூங்கா. சும்மா கையூட்டுக்காக அதை நாசம் பண்ணாமல், வேறு இடத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்க வேண்டும்.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
ஒண்டும் பெரிசா விளக்கமா எழுத தேவையில்லை. அமைப்புகள் அல்லது தனிநபர் டொனேசன், உறுப்புரிமை சந்தா, சிறியளவு அரச மானியம் என்பனதான் பிரிதானிய அரசியல் கட்சிகள் பணம் ஈட்டும் முறை. கவனிக்க : கட்சிகள். கட்சி தலைவர் அல்ல. கட்சி ஆரம்பிக்க முன் சிங்கிள் டீக்கு சிங்கி அடித்த கட்சி தலைவர் எவரும், கட்சியின் திரள்நிதியில் மலைநாட்டில் பாரிய காணி, 6 கோடி நீலங்கரை பங்களா, பஜேரோ, ஆயுதம் ஏந்திய தனியார் (இந்திய புலனாய்வு) பாதுகாப்பு என பிரித்தானியாவில் வாழ்வதில்லை. எடுத்தபடியால்தான் பல வருடமாக சொல்லி வருகிறேன் அவர்களை போல ஒரு திருட்டு கட்சிதான் நாதக என. சீமா மட்டும் அல்ல, தூசண துரை, இடும்பா கார்த்தி என எந்த தொழிலும் எப்போதும் செய்யாமல், குடும்ப செல்வம் எனவும் பெரிதாக இல்லாமல், பலர் கட்சி நிதியில்தான் குடும்பமே நடத்துகிறார்கள். நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் - மக்கள் பணத்தில் நடத்துவார்கள். #சின்ன கருணாநிதி.
-
🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!
இதற்கு பிராயச்சித்தம் நேராக போய் எவராவது ஒரு சீனியர் பிக்குவின் காலில் விழுவதுதான்.
-
2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல்
யாழில் மேலும் ஒரு எம்பி சீட் கிழியுமா?
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
சிறி அங்கிளை பார் சிறி என ஏசினால்… அனுர மாமாவை இனவாதி என தோலுரித்தால்… எனக்கு கண்கள் வியர்த்துவிடும் 😂 பிகு சுமன் ஈழத்தமிழ் அரசியலில் இருந்து தூக்கி வீசப் பட வேண்டிய விசம் என 7/8 வருடம் முன்பே எழுதியாகிற்று. இப்போதும் தேவையான இடங்களில் அவரின் சுயநல, இன விரோத போக்கு சுட்டிகாட்டவே படுகிறது. அதீத அனுரக்காதலில் இருப்பதால் இவை கண்ணில் படுவதில்லை போலும்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இங்கே எவரும் டக்காவுக்கு வெள்ளை அடிக்கவில்லை. அவரின் மீது பாரிய வழக்கு போட அமெரிக்க அதான் அறிக்கைகளே போதும். ஆனால் அனுர சும்மா கண்துடைப்புக்கு துவக்கை காணோம், பென்சிலை காணோம் அழிரப்பரை காணோம் என வழக்கு போடுகிறார். ஆனால் அனுரவை குற்றம் சொன்னால் இங்க பலருக்கு கண் கலங்கி விடும் 😂. அதே போல் வரலாறு முக்கியம். எமக்கு அறளை பேந்து விட்டது என்பதால், 87-90 நாட்டில் இல் ஏனைய இயக்கங்கள் செய்தவற்றை அதே காலப்பகுதியில் இந்தியாவில் பதுங்கி இருந்த டக்கா மீது பொத்தாம் பொதுவாக போட முடியாது. ஈபி எண்டால் என்ன ஈபிடிபி எண்டால் என்ன என்ற இந்த அசண்டை போக்கு, நாம் உண்மையை சொன்னாலும் நம்பாத நிலையை ஏற்படுத்தி விடும். குறிப்பாக 2000 க்கு பின் பிறந்த தமிழர்கள் மத்தியில்.
-
வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்
என்ன திடீர் ஞானோதயம்? இண்டைக்கு பறுவமோ? #அனுர எனக்கொரு போதி மரம்😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இந்த புரட்சி என பெயரில் வைத்து கொண்டு அன்று பிரளி பண்ணிய பல இயக்கங்களில் அந்த கால முதலாம் மட்ட தலைவர்களை எடுத்துப்பார்த்த அனைவரும் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க-சாதி, முதலாளி வர்க்கத்தினரின் மகன்கள்தான்😂. கடைசியில் ஈழமும் இல்லை, புரட்சியும் இல்லை, உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை… எல்லாரும் தத்தம் பங்குக்கு மக்களை மண்டையில் போட்டதுதான் மிச்சம்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
பெரிய அளவில் அல்ல - அறவே சம்பந்தபடவில்லை. புலிகள் ஈபியை தடை செய்து, அடித்த பின் இந்தியா தப்பி, அங்கேயே பத்மனாபாவுடனான முரண் ஆரம்பித்து விட்டது. 1987 அக்டோபரில் புலிகள் இந்திய சண்டை. அதே ஆண்டு நவம்பரில் ஈபிடிபி ஆரம்பம். இந்திய படையோடு சேர்ந்து மக்கள் மீது கொலைவெறி ஆட்டம் ஆடியவர்கள் - ஈபிஆர் எல் எவ், டெலோ, புளொட், திரீ ஸ்டார், ஈ என் டி எல் எப்.
-
வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்
தையிட்டி விகாரை ராஜபக்ச காலத்தில் அமைந்தது என முரட்டு முட்டு கொடுத்த காவடியார் எங்கே? அந்த திரியிலும் தலை கறுப்பை காணோம்😂
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
செய்தி சீமானை பற்றி - ஏன் விஜை பற்றி எழுதுகிறீர்கள்😂. பட படப்பாக உள்ளதா?😂 சொந்த உழைப்பில் சோறு சாப்பிட்டால் - இதுதான் பிரச்சனை. திரள்நிதியில், தரகு காசில் தானும் உண்டு, மனைவி, மகன், மனைவியின் அக்காள் மகன் வரை கொழுத்து பிழைக்கும் ஊழல்-குடும்ப அரசியல்வாதி எண்டால், உழைக்காமல் வாழலாம்.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
கறுப்பன் குசும்பன். இப்பவே டெபாசிட் இழப்புக்கு காரணம் செட்டப் பண்ணுகிறார்😂
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
உறுப்பினர் குடிகாரர் எண்டால் அது சுமன் குரூப்… ஊரையே குடிகாரார் ஆக்கினால் அது பார் சிறி குரூப்….. #தள்ளாடும் தமிழ் தேசியம்
-
மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது!
அப்பாடா….ஒரு வழியாக போய் தொலைந்தது. புலிகள் வாவியை கடப்பதை தடுக்க இதை கொணர்ந்து விட்டதாக பேசிகொள்வார்கள்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இந்த தங்கன் வலிகாமம் எங்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவரின் குடும்பத்தில் எவரையோ புலிகள் போட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் என்பார்கள். சுதுமலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன். கழுத்தில் பெரிய சங்கிலி தொங்கும். இந்தியன் ஆமி விலகிய பின் இந்தியாவுக்கு தப்பி ஓடும் போது படகு மூழ்கி இறந்ததாயும், அப்படி இல்லை என்றும் பேசி கொண்டார்கள். இப்போதும் இருக்கிறாரா? எங்கே எப்படி என அறிய ஆவல். முரண்நகை இங்கே மாணவரை வெளியே எடுக்க முன்னுக்கு நின்ற ரஜினி, சிறிதரனுக்கு பின்னாளில் இந்த சமூகம் கொடுத்த பட்டங்கள். குறிப்பு 87-90 இல் டக்கிளஸ் ஈபியில் இல்லை. பிரிந்து போய் ஈபிடிபி யை ஆரம்பித்துவிட்டார். மாகாண அரசிலும் இவர் பங்கில்லை. அப்போ ஈபியை வழிநடத்தியவர் பின்னாளில் புலிகளால் எம்பி ஆக்கப்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன். 1990 யூனில் இல் புலிகள்-ஆமி சண்டை மீள ஆரம்பித்த பின்னர், பிரேமதாசாவுசடன் உடன்படிக்கைக்கு போய், ஒரு தொகுதி உறுப்பினர்களுடன் கொழும்பு வந்தார்.முதல் முகாம் தெகிவளையில் என நியாபகம். அதே போல் பார்க் ரோட் வீடும். பின்னர் தீவு பகுதிக்கு அனுப்பபட்டனர்.
-
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?
அண்மையில் நானும் இந்த மதுவல்லாத பியரில் கொஞ்சம் நாட்டம் காட்டுகிறேன். இப்போதைக்கு ஹைனிக்கன் 0%, ஸ்டெல்லா 0% சுவை நன்றாக உள்ளது. ஏனையவை பிடிக்கவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சிலது zero sugar ஆனால் அல்கஹோல் இருக்கும். பார்த்து வாங்காவிட்டால் கற்பு பறிபோய்விடும்😂
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இங்க கருத்துக்களை பார்த்தால்… “என்னது பெரியவர் சாகலியா… செத்துடார்ன்னு நம்பி வெட்டியான் கூட சாரயத்தை கடனுக்கு குடிச்சிட்டானே”… எண்ட விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. கவலை வேண்டாம் மகிந்த சாகும் போது அனுர முன்னிலையில் முழு ராசமரியதையுடன் சங்கநாயகர்கள் ஓதித்தான் அனுப்புவார்கள். தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்… மறுபடியும் தர்மமே மண்ணை கவ்வும்😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
அமைதியாக கழிக்க வேண்டிய கிறிஸ்மஸ் விடுமுறையில் ஒரு கிறிஸ்தவ உறவு இப்படி பதட்டப்படுவதை பார்க்க எனக்கே மனம் கேட்கவில்லை😂. சரி ஒரே ஒரு கேள்வி? புத்தசாசன அமைச்சு ஜனாதிபதி அனுரவுக்கு கீழேதான் வருகிறது. இந்த பிரச்சனையில் இவர்களுக்கு இனவாத எண்ணம் இல்லை எனில், மொட்டு கட்சி காலத்தில், ரணில் காலத்தில் கூட செய்யாத அரச அங்கீகாரம், பதவிநிலைகளை இந்த விகாரைக்கும், தேரருக்கும் ஏன் அனுரா இப்போ கொடுத்தார்? சும்மா இருந்திருக்கலாமே?
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
என்ன இது? கருணாநிதியின் முரசொலி கேள்வி பதில் போல் உள்ளது 😂
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தேரர் சொன்னத கேட்டனியளே? இது மக்கள் காணியில் உள்ளதாம். நாகவிகாரைக்குரிய காணி, உண்மையான திஸ்ஸ விகாரை இருந்த காணி அருகே உள்ளதாம். தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி.
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
கண்ணீர் அஞ்சலி.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
நியமாய் ஐய்யே😂
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை… ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்… இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது. முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது. ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும். இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது. எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர். ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.