Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவிற்கான இண்டெர்நெட்டை இஸ்ரேல் முற்றாக துண்டித்த நிலையில், ஐ நா உடபட்ட உதவி அமைபுக்களிற்கு ஸ்டார்லிங் சட்டிலைட் மூலம் இண்டெர்நேட் வழங்க ஈலோன் மஸ்க் முடிவு.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@நன்னிச் சோழன் 👇. இதுதான் லெபனான் டிரெயினிங்கில் சொல்லி கொடுத்துள்ளார்கள் போல இருக்கிறது. ஈபி, ஈரோஸ் ஏன் ஒரு தபால் பெட்டியை கூட ஒழுங்காக தகர்கவில்லை என்பது இப்போ விளங்குது🤣.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
க்ரெட்டு. மேலே குறை “டோரா, பைபிள்” யூதரின் நூல்கள் என எழுதியுள்ளார். இதை நானும் யோசித்தேன். ஆனால் டோராவுக்கும் பைபிளுக்கும் இடையில் ஒரு காற்புள்ளியை அவர் இட்டதால், டோராவை மட்டுமே யூதரின் புனித நூலாக அவர் கூறியுள்ளார் என கருதினேன். கிறிஸ்தவம் பற்றிய உங்கள் கூற்று மிக சரியே. உண்மையில் கிறிஸ்தவத்தை நிறுவியர் கிறீஸ்து அல்ல - போல்தான். சிலர் கிறிஸ்தவத்தை, போலினிசம் எனவும் கூறுவர்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கு கரை நோக்கி இஸ்ரேல் படை நகர்வாம். சண்டையில் செத்ததாக நான் அறியவில்லை. ஆனால் போனவர்களில் ஓரிருவர் அங்கே இறந்தார்கள் எனவும் வேறு சிலர் அப்படியே ஐரோப்பாவுக்கு கிளம்பினார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர்கள் பலஸ்தீன் போனார்களா என்பதே சந்தேகம். இவர்கள் லெபனானில்தான் இறக்கப்பட்டர்கள் எனவும் அங்கே முஸ்லிம்களுடன் இருந்து, கிறிஸ்தவ குழுக்களுக்கு எதிரான போரில் அடிப்படை பயிற்ச்சியை எடுத்தார்கள் என்பதே நான் அறிந்தது. இவர்கள் இலங்கை வந்து கொக்கு கூட சுடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் சக தமிழர்களை சுட்டார்கள்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு மணத்தியாலம் முன்னதாக இஸ்ரேல் நோக்கி கடும் ராக்கெட் தாக்குதலாம். அதில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் தடுக்க முடியவில்லையாம்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் பிரதிநிதிகள் மொஸ்கோ வந்துள்ளனர். ரஸ்ய துணை வெளிவிவகார அமைச்சருடன் பேசுவார்களாம். ஈரான் குழு ஒன்றும் மொஸ்கோவில் நிற்கிறதாம்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த சோடா புட்டி கண்ணாடிய மாட்டி கொண்டு, சிவப்பு அரசியல் பேசிய ஈபி, ஈரோஸ் வகையறாக்கள்தான் முதன் முதலில் ஈழத்தமிழர் நம் நட்பு சக்தி இல்லை என்ற கருத்தை மேற்கில் ஆழ ஊண்ட காரணமானவர்கள். அது மட்டும் இல்லாமல் மேற்குக்கு உவப்பல்லாதா குழுக்களோடு தொடர்புகளை வைத்து, சோசலிச தனி நாட்டை அமைப்போம் என அறை கூவி, முதன் முதலில் இலங்கையின் பால் மேற்கை திருப்பிய புண்ணியவான்களும் இவர்களே. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக கடைசி வரை தமிழர் போராட்டதின் மீது மேற்கு கொண்ட இந்த சந்தேகம் அகலவே இல்லை.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
ஆம் ஆராய்ச்சி பட்டம் சினிமா சம்பந்த பட்ட ஆராய்சியில்தான் எடுத்துள்ளார். தமிழ், ஏனைய சினிமாக்களின் பண்பாட்டியல் வளர்ச்சி என ஆராய்ச்சி தலைப்பை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். ஏனை வெளியீடுகளும் அதிகம் அப்படித்தான், சினிமா சார்ந்தே. அந்திரபோலொஜி எனப்படும் மானிடவியலில், மனித குமுகாயங்களின் பண்பாட்டு வளர்ச்சி பற்றிய துறையில் சினிமாவை சிறப்பு தேர்ச்சியாக கை கொண்டுள்ளார். இந்த துறையில் இவர் வல்லுனராக இருக்க கூடும் என்றே நினைக்கிறேன். இஸ்ரேல்-பலஸ்தீன் விடயத்தில் கூட, விடய அறிவு இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி, இவர் கட்டுரைகள் ஒரு செயற்பாட்டாளர் எழுதுவதை போல, தரவுகளை cherry pick பணனுவதும், தனக்கு உகந்ததை மட்டும் எழுதுவதும், சில இடங்களில் பொய்யாகவே இட்டு கட்டுவதும் என நகர்கிறது. முதலாவது கட்டுரையிலேயே இதை சுட்டினேன். இந்த கட்டுரை அதை விட மோசம். சங்கி எதிர்பாளர், திராவிட சிந்தாந்த பிடிப்புள்ளவர் என இருந்த நன்மதிப்பை, இரு கட்டுரைகள் மூலம் சுக்கலாக்கி விட்டார். எந்த எல்லைக்கும் போய் இந்துதுவாவை எதிர்பவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இப்படி பொய் சொல்லி, அவர்கள் ஆதரிப்பவர் எல்லாம் எமது எதிரி என்ற நிலைப்பாடு அறிவார்ந்த நிலை அல்ல. ஒரு academic இற்கு நம்பகதன்மை கன்னிமை மாதிரி. போனால் போனதுதான்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதே போல் இங்கே private eye என ஒரு சஞ்சிகை வரும். இப்படி தமிழில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீன மனங்களை தலைமுறை தலைமுறையாக இறுகிப் போகும்படி ஆக்காதீர்கள். இஸ்ரேலின் அணுகுமுறையை மிதமாக கண்டிக்கிறார் ஒபாமா. https://www.breitbart.com/middle-east/2023/10/23/obama-criticizes-israel-over-gaza-dont-harden-palestinian-attitudes-for-generations/ (இது ஒரு மோசமான அதி தீவிர வலதுசாரி தளம் என்பதை கருத்தில் கொள்க).- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் மீள தொழிலுக்கு திரும்பி கடமையை செய்ய தொடங்கியுள்ளார். நினைத்துபார்க்க முடியாத சோகம், நெஞ்சுரம்.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
இதை வாசித்த போது நானும் இப்படி யோசித்தேன். நல்லவேளையாக இவர்களுக்கு மூக்கு கொஞ்சன் கொழுக்கி போல் வளைந்து இருக்கும், சிறார் கடத்தலில் ஈடுபடுவார்கள், மறைவாகா சாத்தானை வழிபட்டார்கள், போன்றவற்றையும் எழுதாமல் விட்டார்🤣. அல்லது அதை அடுத்த கட்டுரையில் எழுதுவாரோ தெரியாது பார்ப்போம். இவர் யாழை வாசிப்பார் அல்லது இதை வாசிப்பர்கள் இதை அவர் கவனத்துக்கு கொண்டு போவார்கள் என நம்புகிறேன்.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
பேரா குறையின் சிறப்பு தேர்ச்சி எந்த துறையில்? இஸ்ரேல் பலஸ்தீன பிணக்கு? மத்திய கிழக்கு வரலாறு? அரசியல் விஞ்ஞானம்? நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். Rajan Krishnan aka Rajan Kurai Krishnan was awarded with PhD degree in Anthropology by Columbia University, New York in 2009 for his thesis on Tamil Cinema titled “Cultures of Indices: Anthropology of Tamil and Other Cinemas”. He also earned a certificate from Institute of Comparative Literature and Society, Columbia University. Before pursuing his doctoral degree he had participated for two decades in a range of cultural activity in Tamil Nadu including film society movement, theatre and literary criticism. He had also been part of institutionally funded research projects on cinema and masculinity. Apart from academic writing, he regularly publishes, in Tamil, articles on political theory, philosophy, global affairs, climate change and film theory. Since the publication of his research paper in Tamil on Periyar E.V.Ramasamy in 1993, he continues to have a keen research interest in theories of caste. In the period 2009-12, he was a post doctoral research associate in a multi sited project titled “Caste out of Development” in which he studied Christian Dalit situations. Publications Dec 2011 “John Abraham: Cinema and the Idea of the Collective”, Journal of theMoving Image, Vol.10, December 2011. June 2009 “From Songs to Speech”, Seminar, Vol.598, June 2009. Jan 2008 "Imaginary Geographies: The Makings of 'South' in Contemporary Tamil Cinema". In Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry, edited by Selvaraj Velayutham. London: Routledge, 2008. Jul 2007 Rajini’s Sivaji: Screen and Sovereign, Economic and Political Weekly, Vol. XLII, Nos 27 & 28, Jul.14(2007), pp.2861-3. Jan 2007 "The Oddities of Tamilnadu” (Review of Vasanthi's Cut Outs, Caste and Cine Stars), Biblio Vol.XII, Nos1&2, Jan.1(2007), pp.36-37. Jul 2006 The Brahmin and the Citizen: Shankar’s Anniyan, Economic and Political Weekly, Vol. XLI, Nos 27 and 28, Jul (2006) (Co-authored with M.S.S.Pandian), pp.3055-3060. Jun 2006 More Stars than Ever, Economic and Political Weekly, Vol.XLI, Nos 24, Jun.17(2006), pp.2414-5. 2006 "Touching Untouchability? Dalit Situations and Theoretical Horizons." In Home and the World: South Asia in Transition, edited by Helen Fazio (et.al). New Castle: Cambridge Scholars Press,2006, pp.365-378. Oct 2002 Work, Caste and Competing Masculinities: Notes from a Tamil Village, Economic and Political Weekly, Oct 26 (2002) (Co-authored with S. Anandhi and J. Jeyaranjan), pp.4397-4406. Tamil (Select list of publications; with translated titles) Books Jan 2010 Muthaleettiyamum Manuda Azhivum (Capitalism and Human Extinction), Pulam, Chennai. Jan 2012 Kathanayakanin Maranam (Death of the Hero), Kayal Kavin Pathippagam, Chennai. Essays Aug 2007 Rajini en'ra chamooka moolathanam, (Rajini as Social Capital) India Today, Special issue on Rajnikanth, Aug 2007, pp.120-1. Oct 1997 “Adiththaddu makka'l varalaa'rum, ilakkiyap payitsika'lum” (“Subalternity and Litarary Modernism” ), Vilimbu Nilai Aaivugal, Nirappirigai, Kumbakonam 1997. Jun 1993 Yaanayin uruvamum, vekujana chinimaavin parimaa'nangka'lum (The Uncertain Contours of Popular Cinema), Aaiyvu, Vol.5,1993. Apr 1993 Periyaariyam: Thaththuvaththai varaiya'ruththalum vivaathamum – oru aayvukkaana munvaraivuka’l (The Ideas of Periyar: a few Hypotheses towards Discerning his Philosophy), Nirappirigai, Vol.6, 1993. https://aud.ac.in/faculty/dr-rajan-krishnan இதை சொல்லுவது பேரா குறையை, குறை மதிப்பீடு செய்ய அல்ல. அவர் இந்துறை சார் வல்லுனர் அல்ல என்பதை சொல்லவே. மேலும் துறை வல்லமைக்கு அப்பால் - இந்த விடயத்தில் இவர் அரசியல் முனைப்போடு உண்மைக்கு புறம்பாக பக்கசார்பாகவே எழுதுகிறார்.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
மலையக தமிழருக்கு திரும்பி வரும் உரிமை இல்லை என்பதை இந்தியா தன் சுய நல நோக்கில் மறுத்தது. ஆனால் தலிபான் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஆப்கானிய இந்துகள், சீக்கியருக்கு இந்த உரிமையை கொடுக்கிறது. இத்தனைக்கும் இந்த இந்துக்களும், சீக்கியரும் பலர் இன்றைய இந்தியாவின் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் போனவர் அல்ல. இஸ்லாம் பரவமுன்னர் அங்கே இருந்தோர். ஆண்டார்கள் என்பதும் உண்மை. யூகம்🤣…அப்பட்டமான இன வன்மம் இது. மேலே அவரே யூதர் அங்கே வாழ்ந்தார் என்கிறார். பின்னர் அவரே அவர்கள் அங்கிருந்து போனது யூகம் என்கிறார். #குறை….. ஐரோப்பாவில் பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன. அவை சொல்லி நிற்பது யூதர்கள் ஐரோப்பாவில் வந்தேறிகள் என்பதையே.- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
இதென்ன பித்தலாட்டம் சனாதன யூதர்கள்🤣. இவர்களின் பெயர் பழமைவாத யூதர்கள் (ஆர்தடொக்ஸ்). இவர்கள் இஸ்ரேலை எதிர்க்கும் காரணம் மேலே பேரா குறை பசப்புவதுபோல் பலஸ்தீனரின் நியாயத்தை ஆதரித்து அல்ல. மாறாக இவர்கள் நம்பிக்கை படி - இறை செயலால் மட்டுமே இஸ்ரேல் அமையும். அதை மனிதர்கள் முயன்று செய்தால் அது தெய்வ குற்றம். கூடவே, நாடற்றோராய் ஆக்கப்பட்ட யூதர், இறைவன் நாட்டை மீள அமைத்து தரும் வரை, அவர்களை ஆளும் நாட்டுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் (பலஸ்தீன்). இந்த நம்பிக்கையால்தான் இவர்கள் இஸ்ரேலை எதிர்க்கிறார்கள். மறுபடியும் அப்பட்டமான வரலாற்று திரிபு. அப்போ பலஸ்தீன் என அறியப்பட்ட British Protectorate ஐ, அரபு நாடு, யூத நாடு என இரு நாடுகளாக அமைக்க வேண்டும் என்பது ஐநா சபை முடிவு (தீர்மானம் 181).- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
பெயருக்கு ஏற்ற பேராசிரியர் ராஜன் குறை. இவர் ஒரு சங்கி எதிர்ப்பாளர். சங்கிகள் ஆதரிக்கிறார்கள் என்பதாலேயே யூதர்களின் இருப்பை, சுய நிர்ணயத்தை, நில உரிமையை மறுத்து, முடிந்தளவு அவர்கள் வரலாற்றை மறைத்து கட்டுரை வரைகிறார். உண்மை என்னவெனில் யூதர் முற்று முழுதாக அந்த மண்ணை விட்டு ஒரு போதும் நீங்கவில்லை. அங்கே மட்டும் அல்ல, யேர்மன் தொட்டு, சிரியா, துருக்கிவரை அரபுலகம் எங்கும் அவர்கள் வாழ்ந்தார்கள் (தனியே ஐரோப்பாவில் அல்ல). இஸ்ரேல் உருவாக்கத்தின் பின் எழுந்த வெறுப்புணர்வு அவர்களை இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரட்டியது. புராணத்தை மட்டுமே இஸ்ரேல் வரலாறாக கொண்டுள்ளது என்பது அப்பட்டமான பொய். அப்பட்டமான பொய். இஸ்ரேல் ஒரு யூத மத அரசு என எங்கும் குறிப்பிடப்படவில்லை. யூத இனவழி தேசிய அரசு அது. எப்படி ஆங்கிலேயருக்கு இங்கிலாந்து, லத்வியருக்கு லத்வியாவோ, அப்படி யூத இன நாடு இஸ்ரேல். பேரா குறைக்கு Islamic republic of Iran, Islamic republic of Pakistan எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் இனவழி தேசியமாக கட்டி எழுப்பபட்டுள்ள இஸ்ரேலை மதவழி நாடு (theocracy) என பொய்யுரைக்கிறார்.- பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
நான் இதை என் மீது கறள் வைத்து சம்பந்தமே இல்லாமல் பகிடியாய் எழுதியதுக்கு கூட சிவப்பு புள்ளி இடும் ஆட்களுக்கு திருப்பி பாவிக்கலாம் என நினைக்கிறேன்🤣. பிகு இதுவும் பகிடிதான். அந்தளவு தரம் குறைவதில்லை. நன்னி மேலே சொன்னது உங்களுக்கல்ல.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரெண்டாம் செய்தி ஓரளவு உறுதிபடுத்த படுகிறது. ஈராக், சிரியாவில் கடந்த வாரம் தாக்குதலால் 24 அமெரிக்க சிப்பாய்கள் காயம் என அமெரிக்கா அறிவிப்பு.- திண்ணை
கழிவறையை நல்ல சுத்தமாய் வைத்திருந்தால் கதவை திறந்தே வைக்கலாம் என்கிறது நிர்வாகம்.- பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
உங்களுக்கு தெரியும் தான “கோர்த்து விடுவதில் கோசான் வல்லவர்” என்பது யாழ்கள மூதோர் வாக்கு🤣. யார் பச்சை குத்தியது என தெரியாது என்பதை பயன்படுத்தி, சும்மா கருமாந்திர கருத்துக்கு எல்லாம் பச்சை குத்தி, அதை எழுதியோரை பப்பாவில் ஏற்றி விட்டால் என்ன? என்ற ஒரு குறுக்கு புத்தி மனதில் ஓடியது🤣. ரொம்ப டெம்டிங்கா இருந்தும் செய்யவில்லை. நல்லவேளை செய்யவில்லை. இப்ப செக் பண்ணி பார்த்துட்டு முழு களமும் என் மேல் கொலை வெறியாகி இருக்கும்🤣. மோரல் ஒவ் த ஸ்டோரி யாழ் நிர்வாகத்தை நம்பி எதுவும் செய்யப்படாது🤣- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவ்விரு உறுதிப்படுத்த படாத தகவல்களும் - வதந்திகளாக இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை காண்க.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இனித்தான் உக்கிரம் பெறும் என நான் நினைக்கிறேன். இந்தியா, ரஸ்யா போன்ற இனவழி தேசிய இனங்களின் முதுகில் கட்டப்பட்டுள்ள சாம்ராஜ்யங்களும் உடையும் காலம் வரும். அப்போ இன்னும் பல நாடுகள் உருவாகும். - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.