Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15598
  • Joined

  • Last visited

  • Days Won

    174

Everything posted by goshan_che

  1. யாழில் பகிரபட்ட படங்களை பார்த்தால்…..🤣
  2. இந்த விசயம் வீட்ட தெரியுமோ?🤣
  3. என்ன கிருபன் ஜி வர வர @Nathamuni ஸ்டைலில் எழுதுகிறீகள்🤣. இல்லை அண்ணை. அவர் பெயர்தான் ஆக்கிமிடிசு. அவர் கத்தி கொண்டு ஓடியது “யுரேக்கா” என்று.
  4. எழுத பஞ்சியில் விக்கியை வெட்டி ஒட்டி உள்ளேன் அண்ணா. ஆனால் சரியான தரவுதான். ஆர்க்கிமிடீசு தத்துவம் எனப்படுவது ஓர் இயற்பியல்விதி. இவ்விதி ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசைஅப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது. இதனைக் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ்.[1] ஆக்கிமிடிசு இந்த தத்துவத்தை அவர் ஒரு குளியல் தொட்டியில் குளிக்கும் போது கண்டறிந்ததாயும், சந்தோசத்தில் “அப்படியே”😮 நகர தெருக்களில் “யூரேகா, யூரேகா” என கத்தியபடி ஓடியதாயும் ஒரு செவிவழி கதையும் உண்டு.
  5. இந்த வாரம்…..இரத்த வாரம்🤣 இந்தியன், நேபாளி எண்டு ஆளாளுக்கு புது புது டிசைனில இறக்கிறாங்கள்☹️.
  6. பகிர்வுக்கு நன்றி அண்ணா. எந்த ஊரில் உள்ளது? பாரிசை தாண்டி ஓடும் போது நேரம் இருந்தால் போய் பார்க்கலாம்.
  7. அண்ணை உதுல பக்கத்தில முகத்தில காயத்தோட நிக்கிறது கோஷான் தானே?
  8. ஐயோ எத்தின தரம் சொல்லுறது, அது அல்லா இல்லை அந்தோணியார்🤣.
  9. இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார். ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை. அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு. ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன். இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன். அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது. ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும். பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.
  10. அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.
  11. விளையாட்டு வீரர் நிலமையும் இதுதானா? எமிரேட்டிகள் வேற்றினத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வழமையாக கிடைக்க கூடிய சலுகைகள் கிடையாது என்றும் வாசித்துள்ளேன்.
  12. நான் ஜப்பான் போனதில்லை. ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் ஜப்பானியர் (5ம் ஆண்டில் படித்த சட்டோ இல்லை🤣). யூகேயை விட மேம்பட்ட வாழ்க்கைதரம், மிக உயர் செலவீனம் என்பார்.
  13. வெளியார் வீடு வாங்கும் இலகு டுபாய் போல் இருக்கும் என்றால் கொழும்பு port city யில் பல மாடிகள் புலம்பெயர் தமிழர்களுடையதாய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்போ கொழும்பில் இருக்கும் top end flats இன் விலையை இது பாதிக்குமோ என்றும் சிலர் பயப்படுகிறார்கள். யு ஏ இ ஐ பிரதிதிதிதுவம் செய்யும் தடகள வீரருக்கும் உண்டு என நினைக்கிறேன். அவர்களின் அனிமேட்டட் வீடியோவை முதல் முறை பார்த்ததும் எனக்கும் இப்படி தோன்றியது.
  14. எல்லாம் சரிவரும். இஞ்ச 3ம் அலை தொடங்கீட்டு எண்டுறாங்கள். 🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣
  15. துபாயின் வீட்டு விலையை லண்டன் வீட்டு விலையோடு ஒப்பிட முடியாது பெருமாள். இஞ்ச மேற்கு லண்டனில் semi detached 3 அறை வீடுகளே 600, 650K எண்டு போகுது. இன்னும் பத்து வருடத்துல எல்லாரும் மில்லியனர்🤣. அதே 600K காசுக்கு அங்க நல்ல லக்சறி பிளட் வாங்கலாம். அதான் அங்கே 3 மில்லியன் என்றால் அதன் தரம் இன்னும் எகிறும் என்ற கருத்தில் சொன்னேன். இது லக்சறி penthouse அதனால் இந்த விலை போலும். @குமாரசாமி அண்ணை, டுபாயில் எனக்கு பிடித்த விசயம் பாலைவன 4x4 சவாரியும், இரவு நேர பாலைவன பார்பிகியூ மற்றும் அரேபிய பெண்களின் பெல்லி டான்ஸ் 😎. ஒரு அனுபவத்திற்கு Burj Khalifa ஹோட்டல் போன்றவற்றில் ஒரு நேரச்சாப்பாடும், உலகில் உயரமான கட்டிடத்தில் ஏறுதல் போன்றவற்றை செய்யலாம். சிறுவர்களுக்கு அபுதாபியில் நிறைய விசயங்கள் இருக்கு. Ferrari World, Warner Bros World, Water World இப்படியாக. யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.