Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசின் அக்7 நரவேட்டையின் தணிக்கையிடப்படாத வீடியோக்களை பார்வையிட்ட பின் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையாம்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
ஒருவழியாக மரண விசாரண கொலை என தீர்ப்பாகியுள்ளது. இனி கொலைகாரை ஈசியா பிடிச்சிடும் பொலிஸ்🤣.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதில் 400 க்கு மேல் என்பதை விட மனித இழப்பு 150 வரை என்பதே சரியாக படுகிறது. இந்த முகாமில் ஒரு பாரிய ஹமாஸ் நிலக்கீழ் வலையமைப்பு இருக்கிறதாம். இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு கூறி விட்டே தாக்குதல் நடத்தியதாம். நிலக்கீழ் வலையமைப்பு உடைந்து விழ, அத்தோடு மேலே இருந்த மக்கள் குடியிருப்புகளும் வீழ்ந்தனவாம். பிகு வாசித்த, ரேடியோவில் கேட்ட தகவல்களை பகிர்கிறேன். இஸ்ரேலுக்கு வெள்ளை அடிக்கவல்ல.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை முறித்தது பொலிவியா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுடன் தாம் போரில் இறங்கி உள்ளனர் என யேர்மனின் ஹூத்தி கிளர்சியாளர் அறிவிப்பு. ——- யேர்மனில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று ஜோதானில் வீழ்ந்துள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜபாலலியா அகதிமுகாமை இஸ்ரேல் தாக்கி 400 பேருக்கு மேல் பலியாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம். ஒரு காலத்தில் காஸா எகிப்திடமும், மேற்குகரை ஜோர்தானிடமும் இருந்தவையே. ஆனாலும் ஆர்வம் இல்லை.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி ஸ்தாபிக்கபட்டுள்ளது. ஆனால் Party of Islam இன் சாசனம், நிதி பொறிமுறை தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என கூறி தேர்தல்கள் ஆணையம் இதை பதிவு செய்ய மறுத்துள்ளது. அழிவின் ஆரம்பம். எல்லாம் நல்லதுக்கே. நேரடியாக இப்போ பலஸ்தீன் நாட்டை அமைத்தால் - அது இன்னொரு ஈரானாகவே அமையும். இஸ்ரேலுக்கு அது நிரந்தர தலையிடியாக இருக்கும். காஸாவை எகிப்தும், மேற்கு கரையை ஜோர்தானும் சர்வதேச படைகளுடன் பொறுப்பேற்று - அங்கே ஆயுத களைவை நிகழ்த்தி, ஹமாசை, ஈரானை அப்புறப்படுத்தி, அங்கே இஸ்ரேலை ஏற்கும் ஒரு அரசை ஸ்தாபித்த பின், பலஸ்தீனை தனிநாடாக இஸ்ரேலும், இஸ்ரேலை ஒரு நாடாக பஸ்தீனும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால் ஈரான் குழப்பி கொண்டே இருக்கும். இஸ்ரேலும் அதை சாட்டாக பாவித்து நிலத்தை விழுங்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லை, கஸ்டம்தான் ஆனால் ஹமாஸ், ஹிஸ்புலா, ஈரானை வெட்டி ஆடி - சவுதி, ஜோர்தான், எகிப்து அனுசரணையில் ஒரு நியாயமான தீர்வையும் அதற்கு பதிலாக இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தையும் இஸ்ரேல் பெறலாம். பெறவேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈரானின் முக்கிய அதிகார மையங்களில் ஒருவரான குட்ஸ் படைப் பிரிவின் தலைவர் இஸ்மாயில் கயானி, சிரியா போய் இப்போ லெபனான் வந்துள்ளாராம். லெபனானில் ஹிஸ்புலாவின் நசரல்லாவை சந்திக்கிறாராம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிகச்சரியான கூற்று. இஸ்ரேல் உண்மையில் தனது பாதுகாப்பில் அக்கறை இருப்பின் இதை வேறு விதமாய் கையாள வேண்டும். எல்லாம் நல்லதுக்கே. 1. ஹமாஸ் கடத்தி வைத்திருந்த ஒரு பெண் இஸ்ரேல் சிப்பாயை இஸ்ரேல் மீட்டுள்ளது. 2. சவுதி அரேபியாவின் யேர்மன் எல்லையில் ஹூத்தி கிளர்ச்சிகாரர் தாக்கியதில் 4 சவுதி சிப்பாய்கள் பலியாம்.
- திண்ணை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிரியாவில் நவா நகரில் உள்ள 112வது இயந்திரமயமாக்கபட்ட படையணியின் தலைமையகம் இஸ்ரேல் விமானங்களால் தாக்கப்பட்டதாகவும் சேதம் ஏற்பட்டதாயும் சிரிய அரச ஊடகம் தெரிவிக்கிறதாம். துருக்கி-பலஸ்தீன் நட்புறவு வைத்தியசாலையை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவுக்கு போகும் நிவாரணத்தை தடுப்பது போர்குற்றம் என கருதப்படலாம் என சர்வதேச குற்றவியல் நீதி மன்றின் தலைமை வழக்கு தொடுனர் கூறியுள்ளார் (போரின் 3ம் நாளிலேயே யாழில் கூறப்பட்டதுதான்).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமேரிக்க மரைன் படையணி ஒன்று கிழக்கு மத்தியதரை கடல் பகுதியில் சேவையில் ஈடுபட உத்தரவாம். ஈரான் சார்பு யேர்மனின் ஹூத்தி குழுவாக இருக்கலாமாம். அவர்களிடம் இந்த ஏவுகணை இருக்க வாய்ப்பில்லை. ஈரான் கொடுக்காமல். —————— அமெரிக்காவிடம் பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பை வழங்குமாறு ஜோர்தான் அவசரக்கோரிக்கையாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிகவும் உறுதிப்படுத்த படாத செய்தி செங்கடலில் வைத்து ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடை மறிக்கப்பட்டது. செங்கடல் என்றால் ஈரானில் இருந்து வர வாய்பில்லை. கடலில் இருந்து ஏவும் வல்லமை ஈரானுக்கு உள்ளதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
டாஜிகிஸ்தானில் பற்றி எரியும் யூத கலாச்சார நிலையம். 80 களுக்கு பிறகு ஈழத்தமிழர் புழக்கத்தில் வந்த இரு சொற்கள் - ஒன்று டயஸ்போரா (Diaspora -புலம் பெயர்ந்தவர்கள்). மற்றையது ப்போகிரம் (pogrom - இனக்கலவரம்). குறைந்தது இரெண்டு ஆயிரம் ஆண்டுகளாக இவை யூத இனத்துக்கு பழக்கப்பட்ட சொற்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்யபடைகளை தாக்கும் டாஜிகிஸ்தான் போராட்டக்காரார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விமானநிலையத்தை கட்டுப்பாட்டில் எடுத்த ரஸ்ய அதிரடிப்படைகள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்ய பொலீஸ் வாகனத்தை தாக்கும் டாஜிகிஸ்தான் கும்பல். உள்ளே பொலிஸ் பாதுகாப்பில் ஒரு யூதர் இருப்பதாக நம்பபடுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உக்ரேன் பிணக்கில் நடுநிலை எடுத்து, கொஞ்சம் அம்பூலன்சை மட்டும் அனுப்பிய இஸ்ரேலுக்கு ரஸ்யா நல்ல தகடு கொடுத்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு உஸ்பெக் நபரை யூதர் என்ற சந்தேகத்தில் பாஸ்போர்ட்டை பிடித்து வைத்து கொண்டு விசாரிக்கும் கும்பல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசு (மாநிலம்) களில் ஒன்று டாஜிஸ்தான். அங்கே விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து விமானம் வந்த சமயம் - மதவாத கும்பல் கூட்டமாக சென்று விமான நிலையத்துள் புகுந்து அட்டகாசம் பண்ணியுள்ளது. யூதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி. அதேபோல் ஹோட்டல்களிலும் புகுந்து அறை அறையாக “யூத வேட்டை” நிகழ்தியுள்ளனர். டிஸ்கி இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது என்றோ ஒரு நாள் அதை போஷிப்பவர்களை திரும்பி தாக்கும். மேற்கு இந்த பாடத்தை படித்த பின்னும் கூட, ரஸ்யா பாம்புக்கு பால் வார்த்தே ஆவோம் என அடம்பிடிக்கிறது. நேற்றுத்தான் ஹமாசை மொஸ்கோ கூப்புட்டு பேசினார்கள் - இதோ கையோடு நன்றிகடனை செலுத்தி விட்டார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம். பெரும் போர் வருவது அமரிக்கா சீனா இருவரின் கையில் மட்டும்தான் தங்கியுள்ளது. ரஸ்யா, ஏனைய நேட்டோ நாடுகள், ஈரான், இந்தியா எல்லாம் பிராந்திய யுத்தத்தைத்தான் ஏற்படுத்தும் வலுவுள்ளன.