Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒவ்வொரு தமிழ் போராளியை பலஸ்தீனில் பயிற்றுவிக்க அப்போதே பெருந்தொகை fees அறவிடப்பட்டது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத்தான் இஸ்ரேலில் உள்ள அடிப்படைவாத சயோனிஸ்டுகளும் விரும்பினார்கள். ஈரானின் நலனுக்காக பலஸ்தீனத்தை பலியிடும், இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே அகற்றுவோம் என எக்காளமிடும் ஹாமாஸ்சுடன் பேச வேண்டும், பலஸ்தீனியர்களுக்கு ஒரு சமாந்திரமான நாட்டை கொடுக்க வேண்டும் என பேசும் மிதவாத இஸ்ரேலிய குரல்கள் இனி பல வருடம் எடுபடாது. காசாவை விட்டு இஸ்ரேல் தன்னிச்சையாக வெளியேறியது - அங்கே ஆயுதம் பதுக்க, திட்டமிட, தாக்க ஏதுநிலையை உருவாக்கியது என்பது இப்போ கண்கூடு ஆகியுள்ளது. அதேபோல் உக்ரேன்-ரஸ்யா போரில் நடுநிலை எடுத்த இஸ்ரேல் ரஸ்யா பற்றி நல்ல பாடம் படித்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் உடனடியாக கண்டிக்க, லெவரோவ் பட்டும் படாமல் இருதரப்பும் மோதலை தவிர்க்க வேண்டும் என ஒரு அறிக்கை விட்டு, கிழக்கு ஜெருசலேம் உடன் கூடிய பலஸ்தீனிய தனியரசு அமைய வேண்டும் என கூறியுள்ளார். இது நியாயமான கோரிக்கைதான். ஆனா இந்த நேரத்தில், இஸ்ரேலின் நட்பு சக்தி இப்படி சொல்ல கூடாது. உக்ரேன் போரில் புட்டினை கோவப்படுத்தாமல் நடந்த, முன்னாள் பிரதமரை மொஸ்கோ வரை அனுப்பிய இஸ்ரேலுக்கு நல்ல படிப்பினை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
70,80 களில், அரபாத் இருக்கும் வரை மேற்கு கரையிலும் இருந்த மதச்சார்பற்ற பலஸ்தீன தேசிய விடுதலை அமைப்பும், ஈரானின் போஷணையில் உருவாகிய, காசாவை விட்டு அரபாத்தின் படைகளையே வன்முறையால் அகற்றிய ஹமாசும் ஒன்றல்ல. தான் ஐஎஸ், தலிபானுக்கு சற்றும் குறையாத ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதை நேற்று ஹமாஸ் ஐயம் திரிபற நிறுவியுள்ளது. 70 களின் பலஸ்தீன போராளிகளையும், ஹமாசையும் ஒன்று என கூறுவது, புலிகளையும், ஈ என் டி எல் எவ் வையும் ஒன்று என கூறுவது போன்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அல்லது ஈரான் விரல் சூப்பிகொண்டிருக்கிறதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிகு யாரும் இஸ்ரேல் செய்யாத கொடுமையா எண்டு உங்கட பீத்தல் சருவசட்டியை தூக்கி கொண்டு வரவேண்டாம்….. இஸ்ரேலின் கொடுமைகளை நான் நியாயப்படுத்தவில்லை…ஆனால் பலஸ்தீனர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம்தான். அதே போல்…. 1600 வருடமாக இருக்கும் பலஸ்தீனனுக்கு அந்த மண்ணின் மீது இருக்கும் உரிமையை போலவே 2000 வருடத்துக்கும் மேலாய் அந்த மண்ணில் இருக்கும் யூதனுக்கும் உரிமை உண்டு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதே பெண்ணை ஆடை களைந்து, காலை முறித்து, தலையை பிளந்து கொலை செய்தபின், காசாவின் வீதிகளில் அல்லாஹு அக்பர் கோசத்துடன் காட்சிப்படுத்தும் …. அவர்களின் பெயர் என்ன? ஆ… பலஸ்தீன விடுதலை போராளிகள்…
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீன….அதென்ன அது ஆ…விடுதலை போராளிகள்…. அவர்கள் ஜேர்மனியில் இருந்து, இஸ்ரேல்- காசா எல்லையில் சமாதான சங்கீத நிகழ்வுக்கு போன பெண்ணை - என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் பாருங்கோ…. (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும்) முதலில் அப்பெண் உயிருடன் கடத்தப்படும் வீடியோ👇
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தலைவரே கூட ஒரு ஆரம்பகால பேட்டியில் ஜனநாயக சோசலிச நாடே தன் கொள்கை என சொல்லி இருந்தார். ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கப்பூர் போல ஒரு கட்டுபடுத்தபட்ட முதலாளிதுவ கட்டமைப்பையே முன்னெடுத்தனர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஐயகோ மேற்கின் சதியா! அக்கிரமம்….இந்த அமேரிக்கனே இப்படித்தான் எசமான்…. மற்ற சுட்டிகளை தட்டி பாருங்கள் ஐயா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா நோக்கி நகரும் இஸ்ரேலிய படைகள்👇 இதை போல மேலும் பல வீடியோக்கள், விபரங்களை சுடச், சுட வாசிக்க இன்றே யாழ்கள உறுப்பினராகி, திண்ணை அனுமதியை பெறுங்கள்! https://x.com/TreasChest/status/1710745992436318389?s=20
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆ…ஊ….அப்டீக்கா…இப்டீக்கா….என்று இந்த திரியில் எழுதபட்டுள்ள இத்து போன பழைய குழாயடி சண்டையை விட, இதை பற்றிய அண்மை செய்திகள், வீடியோக்களும் காத்திரமான, இரு தரப்பு நியாயத்தையும் பேசும் நாகரீகமான கருத்தாடலும் யாழ் களத்தின் திண்ணையில் இடம் பெறுகிறது. நீங்கள் யாழின் உறுப்பினர் அல்லாத வெறும் வாசகரா? அரிய சந்தர்ப்பம்!!! இன்றே யாழ்கள உறுப்பினராகி, திண்ணை அனுமதி பெற்று, ஒரு elevated discussion இல் கலந்து கொள்ளுங்கள்!
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மிக அருமையாக எனக்கு கூட புரியும் படி எழுதியுள்ளீர்கள் நன்றி. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்த போதுதான் ஜூலை 2023 விலை ஏற்றம் நடந்தது. பின்னர் profit taking ஆல் பழையபடி .52க்கு வந்ததாக நான் எண்ணுகிறேன். அதே போல் இந்த வாரமும் 6% கூடி பின் இறங்கி விட்டது (இன்னொரு சாதக தீர்ப்பு). எலோன் மஸ்க் தும்மினாலே ஷிபா ஏறுகிறது. எத்தனை பொசீடிவ் செய்தி வந்தாலும் இது கூடுவதில்லை. கூடினாலும் உடனே இறங்கி விடும். கொஞ்சம் கான்ஸ்பிரசி தியரிதான் - ஆனால் வேணும் எண்டே price suppression செய்கிறார்களோ எனவும் எண்ணுவேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித், 1. தலைவரோ, புலிகளோ ஒரு போதும் சோசலிசவாதிகள் இல்லை. பொருளாதார சார்ப்பை புலிகள் வெளிக்காட்டா விடினும், அவர்கள் முதலாளிதுவ கட்டமைப்பிலேயே நம்பிக்கை கொண்டார்கள் என்பதை அவர்களின் நடைமுறை அரசு கால நடவடிக்கைகள் எடுத்து சொல்கிறன. 2. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாத எல்லாரும் சோசலிஸ்டுக்கள் இல்லை. 3. தலைவர் ஒரு சைவர், திருமதி மதிவதனியும் சைவர், இருந்தது தமிழ்நாடு. அவர்கள் மிக இலகுவாக திருமணம் செய்ய கூடிய வழி ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றுவதுதான் - இதனை வைத்து மட்டும் - தலைவர் முருக பக்தர் என சொல்ல முடியாது. 5. தகப்பன் பக்தர் என்பதால் தனயனும் பக்தர் ஆக இருக்க தேவையில்லை. 4. மேலே சபாரட்ணம் ஆங்கிலத்தில் தந்த Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil என்ற கூற்றுக்கு அவரின் வாழ்வில் எங்கும் ஒரு குண்டு மணியளவு கூட ஆதாரம் இல்லை என்பதே நான் அறிந்தது. அவரின் அருகில் எங்கும், உடலில், பேச்சில் எதிலுமே முருக சின்னங்கள் இருந்ததும் இல்லை. 5. சபாரட்ணம் கூறியதை நீங்கள் கொஞ்சம் ஓவராகவே மொழி பெயர்த்து விட்டீர்கள். சபாரட்ணம் சொன்னதை “பிரபாகரன் ஒரு முருக பக்தர்” என்று அல்லாவா மொழி பெயர்திருக்க வேண்டும்? முருகன் மீது “அளவு கடந்த பக்தி” உடையவர் என கூறுவது, சபாரட்ணம் கூட கூறாத ஒன்றல்லவா? 6. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெகத் காஸ்பர் ர்ஒவ்வொரு முறை நீங்கள் சாவின் விளிம்பில் இருந்தும் மீண்டது, கடவுள் அருளாலா? என கேட்க, ஒரு அர்தபுஸ்டியான சிரிப்போடு “இயற்கை அருளால் என வைத்துகொள்ளுங்கள்” என பதில் கொடுத்துள்ளார். ஒரு முருக பக்தர் என்ன சொல்லி இருப்பார்? ஆமாம் கந்தன் அருளாலேதான் நான் இப்படி தப்பிதேன் என்று அல்லவா. ஜகத் கஸ்பருக்கு கொடுத்த பதிலை விட ஒரு மனிதன் தெளிவாக கடவுள் பற்றிய தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க முடியாது. நான் அவரை அருகில் இருந்து பார்த்தவன் அல்ல. ஆனால் அவர் மிக தெளிவாக பொது வெளியில் புலிகள் இயக்கமும், நடைமுறை அரசும் மதச்சார்பற்றன என்பதை செயலிலும் சொல்லிலும் காட்டி உள்ளார். தன் தனிப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையீனங்கள் பற்றி அதிகம் கதைக்கவில்லை. ஆனால் அரிதாக மேலே சொன்ன பேட்டி போன்றவற்றில் தன் தனிப்பட்ட நிலைப்பாட்டை கோடிகாட்டியே சென்றுள்ளார். அத்துடன் இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றுதான் சொன்னாரே ஒழிய, முருகன் என் வழிகாட்டி என எங்கும் சொன்னதில்லை. 🙏.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி. பலர் utility அதிகரிக்கும் போது விலை கூடும் என்கிறார்கள். சர்வதேச பணப் பரிவர்த்தனையில் கணிசமான பங்கை XRP எடுக்கும் பட்சத்தில் - விலை 1,2,5 டாலர் ஆக இருக்க முடியாது என்றே நானும் எண்ணுகிறேன். இதன் அடிப்படையில்தான் $15-20 என்கிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இது எந்தளவு உண்மை. தன் இறை நம்பிக்கை பற்றி தலைவர் கூறியது வீடியோவில் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நாணயத்தை நிறுவனங்கள் வங்கிகள் பலரும் adopt பண்ணினால் $15-20 என நினைக்கிறேன். ஆனால் பாக்யராஜ் காமெடி போல் பலர் 100, 586, 1000 எண்டு அடிச்சு விடுகிறார்கள்🤣. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உண்மைதான். ஏலவே இறங்கி விட்டது. ஓம். பைசரின் வக்சீன் அங்கீகரிக்கபட்ட சமயம் அதன் CEO இப்படி விற்றார். XRP இத்தனை சாதக செய்திக்கும் பின்னும் .50 இல் நிற்பது கடுப்பாக இருப்பினும், விலை artificially suppressed ஆக இருக்க கூடுமோ எனவும் யோசிக்க வைக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP வழக்கில் ஏலவே மூல்குடைபட்ட SEC முந்தைய தீர்ப்பை எதிர்த்து செய்த interlocutory appeal request ஐ சில நிமிடங்களுக்கு முன் நீதிபதி டொரெஸ் நிராகரித்தார். தீர்ப்பின் பின் 10 நிமிடத்தில் 4% வீதமளவில் விலை கூடியுள்ளது. (நிதி ஆலோசனை அல்ல) இதன் அர்த்தம் SEC வழக்கில் அறுதியான தோல்வியை சந்தித்து விட்டது என்பதல்ல. தொடர்ந்தும் appellate courts க்கு நேரடியாக அப்பீலை எடுத்து போகலாம். ஆனால் அப்படி செய்ய ரிப்பிள் நிர்வாகிகள் மீதான வழக்கின் trial முடியும் வரை பொறுக்க வேண்டும்( குறைந்தது ஒரு வருடம்). அல்லது நிர்வாகிகள் மீதான வழக்கை, trial ஐ கைவிட்டு - அப்பீலுக்கு போதல் வேண்டும். எப்படி பார்த்தாலும் SEC க்கு இன்னுமொரு பின்னடைவு ஆனால் (இன்னும்) மரண அடி இல்லை.
- IMG_4034.jpeg
- IMG_4033.jpeg
- IMG_4032.jpeg
- IMG_4031.jpeg
-
தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987
காந்திக்கு பாடம் எடுத்ததால்… அவன் எங்கள் தகப்பன் சுவாமி… இந்தியாவின் அகிம்சா முகத்தை சூரசம்ஹாரம் செய்ததால் ….. அவன் எங்கள் முருகன்….. உடலை தானமாக கொடுத்ததால்… அவன் எங்கள் கர்ணன்….. தண்ணீரும் இன்றி பன்னிரு நாட்கள் படுக்கை எனும் சிலுவையில் தொங்கியாதால்…… அவன் எங்கள் யேசு பிரான்….. ஒரு பாரதம் பார்தீபனின் வில்லாண்மை பற்றிப் பாடியது…. இன்னொரு பாரதம் எங்கள் பார்தீபனின் செயலாண்மை முன் விக்கித்து நின்றது…. ஊரெழுவில் பிறந்தவன்…. அவன் போகும் போது ஊரெழுந்து மரியாதை செய்தது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். வீர வணக்கம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு ரஸ்ய வீரர், கட்டளை தளபதி என்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
தெளிவாகிக் கொண்டிருக்கும் செய்தி கிரைமியாவின் செவஸ்டபோலில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல். தாக்குதலுக்கு உரிமையும் கோரியது.