Everything posted by goshan_che
-
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்! Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார். ராமதாஸ் பேட்டி இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல. அதிமுக கூட்டணி அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். கதறிய அன்புமணி ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார். தற்கொலை மிரட்டல் இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும். பாரத் மாதா கி ஜே பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel பிகு அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா. பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.
-
சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
வாழ்த்துக்கள் அஸ்வின். சுவிஸ் உலகின் முன்ணணி கால்பந்தாட்ட நாடு, அங்கே சோபிப்பது சாதாரண விடயமல்ல. விரைவில் தேசிய அணிக்கு விளையாட வாழ்த்துக்கள்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மன்னிகவும் proto என்பதை மேலே Porto என தட்டச்சி விட்டேன்🤣. Auto correct போத்துகீசன் போல கிடக்கு🤣
-
ரப் பாடகர் வேடன்
கோஷான் சொல்றான்; மீம் பாய்ஸ் செய்றான்🤣
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
https://ta.m.wikipedia.org/wiki/திசமகாராமை_தமிழ்_பிராமிச்_சாசனம் https://www.tamilguardian.com/content/tamil-brahmi-inscription-found-tissamaharama https://en.m.wikipedia.org/wiki/Tissamaharama_inscription_No._53
-
ரப் பாடகர் வேடன்
நிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.
-
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்
ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள். மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை. மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம். அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே.
-
ரப் பாடகர் வேடன்
நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣
-
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்
மண்டபத்தில் வேறு கூட்டங்களும் நடைபெறுகிறதா…அல்லது முகாமையாளர் மட்டும் கூடி கூடி கதைப்பது மட்டும்தானா?
-
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!
2020 இல் இருந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த ரயில்கள் ஓடி உள்ளன. பஸ் முதலாளிகளிடம் காசு வாங்கி கொண்டு இப்படி தொட்டு தொட்டு நிப்பாட்ட்ய்கிறார்கள். மீதி ரயில் தடங்கள் எதிலும் இப்படி இல்லை. அனுர ஆட்சியிலும் தொடர்கிறது.
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஓம் உதய்நிதிதான் அந்த சார் என்றும் ஒரு சந்தேகம் ஓடுகிறது. அதே போல் சும்மா பொலிசை மிரட்ட போனில் “சார்” என யாரிடமோ பேசுவது போல் குற்றவாளி பாவனை செய்ததாக மாநில அரசின் கீழ் உள்ள பொலிஸ், மத்திய அரசின் கீழ் உள்ள நீதி துறை எல்லாரும் சாதிக்கிறார்கள். யார் அந்த சார்? மாநில, மத்திய அரசுகள் சேர்ந்து அமுக்க நினைப்பதால் அவர் ஆளுனராக இருக்கவே வாய்புள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனல் உதய் ஆகவும் இருக்கலாம். காதலன் படத்தில் வரும் கார்கர்லால் சத்யணாராயணா எனும் வில்லன் கரெக்டர் - சென்னா ரெட்டியை அவமானபடுத்த ஜெ சொல்லு உருவாக்கப்பட்டதாம்.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
அண்ணாவின் மிக சிறப்பான மாநில சுயாட்சி தத்துவம் பற்றிய ஆங்கில பேச்சுகள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் போதே நிகழ்தப்பட்டன. ப. சி, மற்றும் முரசொலி மாறன் போன்றோரும் ராஜ்யசாபா எம்பிகளாக இருந்துகொண்டேன் அரசியலில் முக்கிய வகிபாகத்தை வகித்தனர். அன்புமணி ஒன்றிய சுகாதாரதுறை அமைசாராக பல எதிர்புகளை தாண்டி சீர்திருத்தங்களை அமல் செய்தபோதும் ராஜசபா எம்பிதான் என நினைக்கிறேன். ஆனால் அநேகர் இதை ஒரு கவுரவபதவிபோலவே நடத்துகிறனர்.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
பிகு மனவருத்தம் ஆனால் இதை பெருசுபடுத்தபோவதில்லை என வைகோ கூறியுள்ளாராம்.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.
-
ரப் பாடகர் வேடன்
புகார் கொடுத்தவர் சு.சா. திமுக ஆட்சியில் இருக்கும் போது வழக்கு போடப்பட்டு, பின் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசியல்தலையீட்டை தவிர்க்க, திமுக போட்ட மனுவின் அடிப்படையில் பங்களூருக்கு மாற்றப்பட்டது வழக்கின் நீதி விசாரணை (trial). ஆனால் நான் சொல்ல வந்தது அது அல்ல. நீதி விசாரணை ஜெ வை குற்றம் தீத்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெவை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை, தண்டனையை உறுதி செய்தது. நான் சொல்வது, எப்படி நாக்பூர் ஆசியினால் சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் போய் தப்பிக்க முடிந்ததோ, அப்படி ஜெயாலும் முடிந்திருக்கும், நாக்பூரின் மிரட்டலுக்கு அடி பணிந்திருந்தால்.
-
ரப் பாடகர் வேடன்
ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி? லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
பிகு அந்த சார் ஆளுனர் ரவி என்றும்… அவரை காப்பாற்ற திமுக, பிஜேபி, நீதிதுறை கூட்டு நாடகம் ஆடுவதாகவும் கூட சொல்லப்படுகிறது. ஆளுனரின் வேந்தர் நியமன பறிப்பு, ரவியின் அண்மைய மெளனம் யோசிக்க வைக்கிறது.
-
ரப் பாடகர் வேடன்
ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை. ஏன்? ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அப்போ அந்த சாரை காப்பாற்ற நீதிமன்றம் வழக்கை விரைந்து முடித்துள்ளதா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட். எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள். நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது. இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன். சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
உனக்கென்ன ஆண்டவா நீ பேசுவ, ராஜ்ஜசபா வேற போக போறே… ஆனால் சிம்பு பட கலக்சன்ல மண்ணவாரி வுட்டியே ஆண்டவா🤣
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
கமலன் ஆள் சுழியன்🤣
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
6 மாதத்தில் தீர்ப்பு!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு. #புரிஞ்சவன் பிஸ்தா எடிட் பண்றதுகுள்ள பதிலும் போட்டாச்சா🤣