Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 100% சரியான கருத்து. அதாவது மத நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை. ஆகவே அது அந்த நம்பிக்கைக்குரியவர்களை மட்டும்தான், அதன் எல்லைக்குள் மட்டும்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது. கேம் ஓவர்.
  2. நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣
  3. தீவகமும் நல்லூரும் அயற்கிராமங்கள் இல்லை 🤣. அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள். யாராவது தான் வாழும் கிராமத்தை விட்டு பக்கத்து கிராமத்துக்கு இடம் பெயர்வார்களா? மறுபடியும் பச்சை பொய். இப்படி நான் எழுதவில்லை. ஆதாரம் காட்டவும் அல்லது மன்னிப்பு கேட்கவும். மீண்டும் பச்சை பொய்! நான் இங்கே இவர்கள் இருவரும் 600 வருடத்துக்கு முன் வந்தவர் என எங்கும் எழுதவில்லை. நீங்கள் எதிர்க்கும் தெலுங்கு வம்சாவழியினர் பல விஜய நகர அரசோடு வந்தவர்கள். அதைதான் சொல்லி உள்ளேன். இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள் என எனக்கு தெரியாது. பொய்யே உன் மறுபெயர்தான் விசுகு அண்ணா வா?
  4. ஆதாரத்துடன், சமய நூல்களின் பின் புலத்துடன் விளக்க முடியுமா? நக்கல் இல்லை. உண்மையான கேள்வி.
  5. உண்மையில் இவர்கள் சொல்வதை பார்த்தால் சாமிகளுக்குள்ளும் சாதி, வர்க்க வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன். இலண்டன் ஹைகேட் முருகன் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் வேற்றினதவரின் மாமிச சாப்பாடு கடை இருக்கலாம். ஆனால் நல்லூர் முருகனின் இருந்து 300 மீட்டர் தாண்டியும் மாமிச சாப்பாட்டு கடை இருக்க கூடாது. ஆனால் உலகெங்கும் முருகன் ஒருவர்தானே? அல்லது High class முருகன், low class முருகன் என இரு வேறு தெய்வங்கள் உளரா?
  6. பிகு எனக்கு எந்த ஊர்ரை இட்டும் எந்த கெத்தும் இல்லை. சாதி/மாவட்ட கெத்தை போல ஒன்றுதான் இந்த ஊர் கெத்தும். யாழில் அந்த ஊரான், இந்த ஊரான் என அல்லது ஏதோ ஒருவகையில் தம் ஊரை இணைத்து பெயர் வைப்போரை பார்க்க சிரிப்பாகவே இருக்கும். விசுகு அண்ணா என்னை அவமானபடுத்துவதாக நினைத்து சொல்லிய வார்த்தைப்படி… நான் வந்தான் வரத்தான்களின் ராஜாவாக்கும்🤣. அதனால்தான் இன்றுவரை என் சொந்த ஊர், மாவட்டம் பற்றி எதுவும் சொல்வதில்லை. யாழ் உறுப்பினருக்கும் எனக்கும் இடையான ஒரே பந்தம் நான் ஈழத்தமிழன் என்பது மட்டுமே. அதுவும் கெத்தாக அல்ல. ஒரு அடையாளமாக.
  7. ஒரு சின்ன டெஸ்ட் வைத்து பாருங்கள். இங்கே அதன் ரிசல்டை பதிய வேண்டிய அவசியம் இல்லை. ஊர் அபிமானம் உள்ள ஒரு காரைநகர் ஆளிடம் போய், “யாழ்பாணத்தில் உங்கள் ஊர் காரைதீவுதானே?” என கேட்டுப்பாருங்கள். அவர் கொடுக்கும் எதிர்வினை - உண்மை எது என்பதை உணர்த்தும். பாதி ஜோக், பாதி சீரியசாக ஒரு கேள்வி… உங்களில் ஓடும் சுண்டுகுளி ஜீன் சொத்தையானது என நீங்களே unconscious bias இல் இருப்பது போல் தெரியவில்லையா?
  8. புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது என நான் எழுதவில்லை. இப்படியாக புதிதாக வதவர்கள் “வரலாறை, வழமையை சரிவர அறிந்து கொள்ளாமல் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை” என்றே எழுதினேன். உண்மையில் நல்லூரின் வழமை அறியாமல் “எனது சகோதரம், உறவினர் வீட்டில் மச்சம் இல்லை” எனவே அதுதான் நல்லூரில் வழமை என நீங்கள் எழுதியதே நான் அப்படி எழுத காரணமாகியது. நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான். அவரின் வீட்டில் நடப்பதே நல்லூரின் வழமை என அவர் உங்களுக்கு சொல்லி இருப்பார் (நீங்களாக இட்டு கட்டவில்லைதானே). ஆக, இதுதான் ஒரு வந்தான் வரத்தான் நல்லூரின் வழமையை அறியாமல் இருப்பதற்கான சான்று. அவர் புதியவர் என்பதால் அவருக்கு வழமை தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்றே நான் எழுதினேன். உண்மையில் உங்களுக்கும் சகபாடிகளுக்கும் என்னதான் பிரச்சனை🤣. தீவக மக்கள் என எழுதினால்…ஐயோ தீவான் என எழுதுகிறார் என பொய்யாக victim card ஐ பிளே பண்ணுகிறீர்கள். இல்லை என்பதை மேற்கோளோடு நிறுவினாலும்…இல்லை “நீ என்ன எழுதினாலும், நாங்கள் அதை தீவார் என்றே வாசிப்போம், விளங்குவோம்” என எழுதுகிறீர்கள். அதே போல் வந்தான் வரத்தானுக்கு ஊர் வழமை தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை என எழுதினால், வந்தான் வரத்தானால் ஊர் வழமையை தெரிந்து கொள்ளவே முடியாது என எழுதினேன் என இல்லாத இன்னொன்றை சொல்லி மாய்மாலம் போடுகிறீர்கள். சில கறுப்பினத்தவர், முஸ்லிம்கள் - பொலிஸ் காரை நிப்பாட்டின உடனேயே “ஐயோ என்னை இன, மத அடிப்படையில் வஞ்சிக்கிறார்கள்” என race card ஐ பாவிப்பது போல இருக்கிறது இந்த செய்கைகள். பிகு இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.
  9. இனியாவது சரியான நபரிடம் கேட்க பழகுங்கள் அண்ணா 🤣. பதில் - வந்தான் வரத்தானுக்கும், வந்தேறிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. வித்தியாசம் எங்கே வருகிறது என்றால் வந்தான் வரத்தான்/ வத்தேறிகள் வாழலாம், ஆழ முடியாது என கூறும் போது மட்டுமே. நான் நல்லூரில் பிரதேச சபை, மாநகரசபை, சமூக, கோவில் பொறுப்புகளுக்கோ, எம்பி யாகவோ வந்தான் வரத்தான் வரக்கூடாது என சொன்னேனா? இல்லை. இதுதான் வந்தேறி-வெறுப்பரசியல் செய்யும் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். விளக்கம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் தேவைபட்டால் மேலும் என்னையே அணுகவும். கந்தையா அண்ணை எனது வக்கீல் அல்ல 🤣.
  10. ஆனால் சொந்த ஊர் பெயரை யாரோ மானிப்பாய்/கொழும்பு 7 துரை வந்து சொன்னார் என்பதால் ஏன் விட்டு கொடுப்பான். பழைய பெயரின் மீது உண்மையில் ஊர் மக்களுக்கு பற்று இருப்பின் அதை தக்க வைக்க அல்லவா போராடி இருப்பார்கள். ஆகவே, இந்த காரை -தீவை தூக்கி போட்டு விட்டு நகரமாவதில், காரைநகர் வாழ் மக்களுக்கும் விருப்பம் இருந்தது என நினைக்கிறேன். எனது மகனின் பெயர் சுரேன். பக்கத்து ஊரில் இரெண்டு சுரேன் இருப்பதால் நான் என் மகனின் பெயரை ஏன் நரேன் என மாற்ற வேண்டும்? அதே போல் கிழக்கிலங்கை, புத்தள காரைதீவுகள் பூகோளவியல் படி தீவுகளே அல்ல, ஆனாலும் அவை இன்று வரை தம் முன்னோர் பாவித்த பெயரையே பாவிக்கின்றனர். முல்லைதீவும் அப்படித்தான். ஆகவே பாலம் கட்டியதால் பெயர் மாற்றியதை ஒரு தக்க காரணமாக என்னால் கருத முடியவில்லை. அப்படி என்றால் புங்குடுதீவை புங்கைநகர், மண்டைதீவை தலைநகர் என்றா அழைப்பது?
  11. வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் Virakesari.lkவேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் | Virakesari.lkவேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.
  12. இந்து சமயம் என்ன சொல்கிறது? பற்றறானை மட்டும் பற்றி, ஈற்றில் அந்த பற்றையும் அறுத்து முக்தி அடை என்பதை தானே ? அப்படி இருக்க ஆன்மீக இந்து குருவுக்கு, அரசியல், சமூக எண்ணமே வரக்கூடாது. ஏன் எண்டால் இவை எல்லாம் பற்றுகள். உலகியல் விடயங்கள். உள்ளம் பெருங்கோவில்… ஊனுடம்பு ஆலயம்… வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்… தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்… இதுவல்லாவா இந்து துறவி இருக்க வேண்டிய நிலை? ஆனால் இங்கே வேலனுக்கு ஏன் அரசியலில் போராடும் வேட்கை வருகிறது. சிவ தொண்டன் நிலையம் அமைத்த யோகர் எப்போதாவது மத ரீதியாக ஆர்பாட்டம் செய்தாரா? ராமகிருஸ்ண மிசன்களை தந்த விபுலானதர் அரசியலில் கருத்து கூறினாரா? நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்க்க கூடாது. வேலன் போன்றவர்கள் துறவிகள் அல்ல. மாறாக யோகி ஆதிநாத் போல, காவி உடை பூண்ட அரசியல்வாதிகள். இந்த வேலன் என்ற விசசெடி முளை விட தொடங்கும் போதே யாழில் அவரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. வேலனுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஆட்களுக்கு அது கண்ணில் படவில்லை என நினைக்கிறேன். இந்த திரியில் இப்போ வேலனை மதிப்பாக பக்தி பரவசமாக விளிக்கும் சிறி அண்ணா எழுதிய கருத்தை பார்த்து யாரும் மூர்ச்சை ஆகினால் நான் பொறுப்பல்ல 🤣.
  13. அது இப்போ. இதுவே வேலன் தரவழிகள் கையில் அதிகாரம் போனால்…உங்கள் குளியலறை வந்து மணந்து பார்பார்கள் மச்சம் சாப்பிடீர்களா என. வத்தலோ, தொத்தலோ தலைவர் இருக்கும் போது அவரே ஒரு தீர்வை பெற்று, 10 வருடம் அதை நடைமுறைபடுத்தி விட்டே சாக வேண்டும், இல்லை எண்டால் நாறிப்போவோம் என நான் 2009 க்கு முன் நண்பர்களிடம் சொல்வதுண்டு. இப்போ அதுதான் நடக்கிறது.
  14. ஓம்…களத்தில் இருந்து போக முன்னம் தான் கனடாவிற்கு வேலை விடயமாக போவதாக கூறினவர்🤣. அது சரி சோனகத் தெருவில் எப்போ நொதேர்ன் யூனி கிளை திறந்தார்கள்?🤣.
  15. பகிர்வுக்கு நன்றி. 90 கோடியில் கட்டிடமாம், அதை பராமரிக்க மாதம் 10 இலட்சம் செலவாம்😱. புங்குடுதீவில் இருந்து தமிழ் நாட்டில் போய் முகாமில் அல்லல்படும் குடும்பங்களே இல்லை போலும், இருந்திருந்தால் காசை அதில்தானே செலவிட்டிருப்பார்கள். இப்படி கட்டிடம் கட்டி காசை கரியாக்காமல். நிர்வாக குழு ஆண்டு சந்தா 12,000 என்பதும், கொழும்பில்தான் முழு நிர்வாகிகள், கூட்டமும் அங்கேதான் நடக்கிறது என்பது, கோவிலை கொழும்பில் வசிக்கும் புங்குடுதீவை சேர்ந்த வியாபாரிகள் முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்கள் போலத்தெரிகிறது. இந்த கோவில் அதிக பிரசித்தம் இல்லை என நினைக்கிறேன், அத்தோடு பெயரளவிலாவது ஒரு நிர்வாக குழு இருக்கிறது, இதிலேயே இந்தளவு காசு புழங்குது என்றால், பிரசித்தமான, 100% தனியாருக்கு சொந்தமான கம்பெனிகளின் வருமானத்தை நினைக்கவே மலைப்பாக உள்ளது. நாகபூசனி அம்மன் செய்யும் சமூக, சமய பணிகளை பேட்டி கொடுப்பவர் சுட்டி காட்டினார். எனக்கு தெரிய இதே போல் செய்யும் இன்னொரு கோவில் தெல்லிபளை துர்க்கை அம்மன். மிச்சம் எல்லாரும் வறுகுவது மட்டும்தான். குசா அண்ணை சொன்னது போல் ஏனைய மதங்களிலும் இது நிச்சயம் இருக்கிறது. ஆனால் அவர்கள் நிறுவன மயபட்டிருப்பதால் கொள்ளை அடிப்பது கஸ்டம். லோக்கல் பாதிரி களவெடுத்தால் அதை பிஷப்பின் ஆள் செய்யும் வருடாந்த கணக்கு கேட்பில் கண்டு பிடித்து விட வாய்புண்டு. எமது கோவில்களில் நிர்வாக குழு தானே அதி உச்ச பவர். ஆகவே அதில் உள்ளோர் எல்லாரும் பங்கு பிரித்தால், பிடிபடாமல் களவு எடுப்பது ஈசி. நான் நினைக்கிறேன் இப்படியான கோவில்களில் நிர்வாக பொறுப்பில் இருப்போரே மிக பெரும் நாத்திகராக இருப்பார்கள் என. அப்படி என்றால்தான் கடவுள் தண்டிப்பார் என்ற பயம் இல்லாமல் கோவில் சொத்தை ஆட்டையை போட தைரியம் வரும்.
  16. இங்கே இப்போ 68 ஆனால் 70 ஆகும் என்றே நினைக்கிறேன். நான் ஓய்வூதியம் எல்லாம் எடுப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியே வேலையில் இருந்து நேரா போய் சுடலையில் படுக்க வேண்டியதுதான்🤣. ஆனாலும் தனியார் பென்சனுக்கும் மாதாந்தம் கட்டி வருகிறேன். தப்பி, தவறி 70,75 எண்டு டிக்கெட் கிழிபடாமல் இழுத்தால் - என்ற பயத்தில். கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை, அதனிலும் கொடிது முதுமையில் வறுமை. பிகு ஒளவையார் நல்லா பொற்கிழி வாங்கி சேர்தமையால் அவருக்கு முதுமையில் வறுமை பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்.
  17. இதைத்தான் நான் மேலே சொன்னேன். நல்லூர் ஒன்றும் ஸ்பெசல் அல்ல. கோவில் வெளி வீதி வேறு. கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டர் அப்பால், இருப்பது வேறு. இது கடைசியில் யாழ் மாநகர எல்லைக்குள் மச்சம் அனுமதி இல்லை என்ற அளவில் போய் நிற்கிறது. தாடி வளர்க்காவிட்டால் கசை அடி கொடுக்கும் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். இப்போ விளங்கிறதா? தமிழ் தாலிபான்கள் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது? பாரிஸ்டா விட்டு கொடுத்தது அனைவருக்கும் ஆப்பாக முடியும் என ஜஸ்டின் அண்ணா சொன்னதும் இதைதான். சொந்த உழைப்பில் சாப்பிட பஞ்சி பட்டு சாமியார் ஆனவனை எல்லாம் சமூக/அரசியல் தலைவராக ஏற்று கொண்டால் இதுதான் கெதி🤣. வேலன் சச்சி போன்ற கிருமிகளை வளர விட்டால் கூண்டோடு ஆளுனரிடம் ஒரு நல்ல விலைக்கு வித்து விடுவார்கள்.
  18. பார்வையில்தான் கோளாறு. எழுத்தில் அல்ல. நல்ல கண்வைத்தியரை பார்க்கவும். மிகவும் காரசாரமாக ஆனால் கண்ணியமாக போய் கொண்டிருந்த திரியை நடுநிலை நக்கிகள் என்ற பதபிரயோகம் மூலம் முதலில் நாறடித்தவர் யார் என்பதை மேலே போய் பார்க்கவும். பரிஸ்டா மாதிரி போய் கொண்டிருந்த உரையாடலை, வந்து இரெண்டாம் பதிவிலேயே கள்ளு தவறணை ரேஞ்சுக்கு இறக்கி விட்டீர்கள். வந்த வேலை முடிந்தால் கிளம்ப வேண்டியதுதானே. நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் வந்து இன்னொரு திரியை நாறடிக்கும் வரை நன்றி வணக்கம்.
  19. அவ்வையே, தமிழ் வாத்தியாரே, நீங்கள் பொருள் விளங்கியது என் பிழை அல்லவே… காரை தீவு தான் நாம் என பெருமிதம் கொள்ளாமல் காரை நகர் என தாமே பெயர் மாற்றி கொண்டதில் நான் ஒரு கூட்டு தாழ்வு மனச்சிக்கலை காண்கிறேன் தமிழ் குரவரே. அதே போல்தான் தீவக மக்கள் என்பதை தீவார் என பொருள் கொண்டதும், சொல் குற்றமோ, பொருற்குற்றமோ அல்ல, மாறாக வியாக்கியான குற்றம் என நயம்பட உரைக்கிறேன். ஊர்புதினத்தில் சுமனை போட்டு வாங்கிய மற்றைய திரியில் இது சொல்லப்பட்டது. சூப்பர். ஏலவே வெளிநாட்டு பண வரவை அரச கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் உட்பட பல ஆப்புகளுக்கு ஆவன செய்த ஆளுனரிடமே இன்னும் ஒரு ஆப்பை தாமாகவே கொண்டு போய் கொடுத்துள்ளார்கள். இந்த இனத்துக்கு, சமஸ்டி, பொலிஸ், காணி உரிமைதான் இல்லாத கேடு.
  20. இலண்டன் சாமியாருக்கு ஜே போட்டு, இப்ப கூனி குறுகி நிற்பவர் யார் என உங்களுக்கும் எனக்கும் தெரியும். அதே நிலை உங்களுக்கும் வரக்கூடாது என நல்லூரில் ஒரு ஒரு ரூபாய் அர்ச்சனை செய்துள்ளேன்🤣.
  21. கஜன் கூட்டிய கூட்டத்தால் வந்த விளைவை ஏதோ தான் வெட்டி, விழுத்தியது போல போஸ்ட் போடும் பார் சிறி. இதுவரை யாரோடும் பேசமாட்டேன் எனா இருந்த கஜன் இப்போ இராஜதந்திரிகளை சந்திப்பதும், பிரதமைரை சந்திப்பதும் நல்லதொரு முன்னேற்றம்.
  22. நானறிய இவருக்கு “தூஷண பிக்கர்” என்ற பட்டத்தை வழங்கியவர் யாழ்கள கருத்தாளர் நாதம்ஸ். பவித்திரா வன்னியாராச்சியை பவித்திரம் அற்ற வார்தைகளால் இவர் அர்ச்சித்த வீடியோ வந்த நேரம் இந்த பெயர் சூட்டல் இடம்பெற்றது.
  23. வந்தார், வரத்தார் என்பது வசைவு சொல் அல்ல. நான் இப்போ வசிக்கும் ஊரில் பத்து தலைமுறைகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரின் சேர்ச் இரும்பு கதவு அவர்களின் முப்பாட்டனின் கொல்லையில் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்து வாய் வழி வரலாறாக 100 வருடங்களுக்கு முன் வந்த கடும் பனி பொழிவு பற்றி தெரிகிறது. அந்த ஊரில் எது வழக்கம், எது புதிதாக வந்த பழக்கம் என தெரிகிறது. நல்ல வேலை அல்லது பள்ளிகூடம் என்பதற்காக இங்கே வந்து குடியேறிய வந்தான் வரத்தானாகிய நான் - இந்த ஊரின் வழமைகள், வரலாறு பற்றி அறியாமல் இருப்பது இயல்பானது. இதில் எந்த வலியும் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வது வெறும் பாசாங்கு. Playing the victim card. ஆதாரம் - யாழ்பாணம் என நான் சொல்லவில்லை. நல்லூரில் இப்போ இருப்பவர்கள் பலர் தீவகத்தில் இருந்து 50 வருடத்தில் குடியேறியோர் என்றே கூறினேன். இது என் வாழ்க்கை அவதானத்தின் பால் எழுந்த கருத்து. நல்லூரை ஓரளவு அறிந்தோருக்கு நான் சொல்வது புரியும். இலங்கை குடிசன மதிப்பீட்டில் கூட இந்த கேள்வி கேட்கப்படாத போது, இதற்கு நீங்கள் கேட்கும் வகையில் ஆதராம் எங்கும் இராது. கடை முதலாளி சுமந்திரனின் ஆள் எண்ட கதையை நம்பி சோல்டர் பேக்கோடு விமானத்தில் இருந்து குதித்தாகிவிட்டது… இனி கால் முறிந்தாலும், கழுதெலும்பே உடைந்தாலும் வலிக்காத மாரி நடிப்பதை தவிர வேறு வழியில்லை. மற்றையவர் கொஞ்சம் மேலால் தண்ணி ஊற்றியதற்கே, சசி வர்ணம் கரைந்து, உள்ளே இருக்கும் சங்கி-வர்ணம் புலப்பட்டு விட்டது. அவரும் Google street view ஆதாரத்துக்கு அவதூறை பதிலாக கக்கி விட்டு ஓடியவர், ஓடியதுதான்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.