Everything posted by goshan_che
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
யூகேயிலும் இப்போ சுருதி மாற தொடங்கிவிட்டது. உலக அளவில் 1% க்கும் குறைவாக உலகவெப்பமாதலுக்கு காரணமான நாம் என்ன செய்தாலும் ஒன்றும் ஆகாது. பணத்தை மீள் உருவாக கூடிய சக்திகளில் பாவிப்பதை விட வெள்ளம், அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் விடயங்களில் செலவிட வேண்டும். இப்படியான கதைகள் மெதுவாக வலுபெற்ய்லுகிறன.
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான். ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது. இடம், பொருள், ஏவல்.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
எந்த வித முன் ஆயத்தமும், சரிவருமா, ஏது நிலை என்ன என்ற ஆராய்ச்சியும் செய்யாமல், இந்தியாவின் கருத்து என்ன என அறியாமல், தனி நாட்டு கொள்கையை முன் வைத்து, மக்களை அதன்பால் ஒன்றிணைத்தது. இதன்பால் இளைஞர்களை ஒருங்கிணைத்தது. போகாத ஊருக்கு வழிகாட்டி உசுப்பேத்தியது. இந்தியா அது சரிவராது என உணர்த்திய பின்னும், அதை உணர்ந்த பின்னும், உடனடியாக மக்களிடம் திரும்பி அதை வெளிப்படையாக சொல்லி, தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம், ஏன் கைவிடுகிறோம் என்பதை விளக்கி, அந்த அடிப்படையில் வாங்கிய பா ஊ கதிரைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக கொழும்பிலும், சென்னையிலும் போய் ஒழிந்து கொண்டார். தனிநாட்டு கோரிக்கையே நடைமுறை சாத்தியமில்லை என தெரிந்துகொண்டு, அதை விட சாத்கியமில்லாத ஆயுத போராட்டம் மூலம் அதை அடையும் ஆரம்ப முயற்சிகளை உருவேற்றி, உசுப்பேற்றி வளர்த்தார். மாற்று அரசியல்வாதிகளை துரோகிகள் என பட்டியல் இட்டு, அரசியல் கொலை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அரசியல் கொலைகளை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் ஈற்றில் அவரும் அதற்கே பலியானார். விடுதலை இயக்கங்களை போராளிகளை தன் அரசியல் இலாபத்துக்கான பீரங்கி சக்கைகள் cannon fodder போல் பாவிக்க முனைந்தார். இயகக்க்கள் இடையே சைக்கிள் ஓடினார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அநியாயங்களை அடியோடு மறுத்து வெள்ளை அடித்தார். தன் மனைவி, பிள்ளைகளை அரசியல், போராட்ட-இராணுவ பதவிகளில் போட்டு ஒரு வாரிசு அரசியலை ஆரம்பித்தார். தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார். சம்பந்தர் செய்த நாச அரசியலை போல 10 மடங்கு செய்தவர் அமிர். ஆனால் சுட்டு கொல்லபட வேண்டியவர் அல்ல.
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
எரோபிளேன் எல்லாம் ஓட்டத்தெரியும், ஆனால் கூகிள் மேப் பார்க்க தெரியாதோ🤣
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
இருவரும் நலம் என்பதில் ஆறுதல். ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும். புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
பிகு அமிர்தலிங்கம் இருந்த கட்சி - அதுவே நினைவு தினம் அனுஸ்டிக்கும் நிலைக்கு வந்து விட்டது - ஆகவே அமிரை நினைவு கொள்ள முடியாமல் போய் இருக்கலாம், ஆனால் அவரின் கட்சிக்கு அப்பாலும் 35 ஆண்டுகளாக அமிர் நினைவுகூரப்படுகிறார் என்பதே உண்மை. அமிர் வரலாறின் குப்பை தொட்டிக்கு உரியவர் என்பதே என் நிலைப்பாடும். ஆனால் லைன்சன்ஸ் எடுக்காமல் ஏரோபிளேன் ஓட்டினாலும், உண்மை ஒன்றுதான்🤣.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் ந...யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை நிகழ்வுமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கி...👆இது 2023 இல். 👇 இது 2 நாள் முன்பு Tamilwinஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!...இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36...
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
- அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
பாராட்டுக்கள். இது சம்பந்தமாக வரும் சகல சட்ட, சட்டத்துக்கு புறம்பான எதிர்வினையையும், சட்ட பூர்வமாக எதிர்கொள்ள இப்போதே தயார் நிலையில் இருக்க வேண்டும்.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
ஈரோடு கிழக்கில் இரு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் கூட டெபாசிட்டை தக்க வைக்க முடியாமல் நாதக அவமானத்தோல்வி அடைந்தபோது… அதை வெற்றி என்றும், வாக்குவீத உயர்வு, 2ம் பெரிய கட்சி எனவும் நீங்களும் இன்னும் பலரும் கஞ்சா கப்ஸா கதைகளை அவிட்டு விட்டீர்கள் அல்லவா? அந்த திரியில், 2026 இல் சீமான் தனித்து நின்று 15% பெறமாட்டார் என பந்தையம் கட்ட அழைத்தேன். அத்தனை சீமானியர்களும் கூண்டோடு எஸ் (நீங்களும்)…. சீமானின் மீது விமர்சன பார்வை உள்ளவரான வாத்தியார் அண்ணா மட்டும் பந்தயம் கட்டினார்.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
சீமானை தோற்கடிக்க ஆள் வேற இறக்கவேணும் என நினைக்கிறியள் பாருங்கோ அண்ணை…. இதனால்தான் உங்கள் தமிழக அரசியல் புரிதலை யாழ்களமே கொண்டாடுகிறது.- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
மிக சரியான பதில். இப்போ…. இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். கஜனோ, விக்கியோ, லுச்சா டொக்டரோ, மாம்பழமோ இப்படி சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். 16 வருடமாக ஏன் ஒரே இடத்தில் நின்று சுத்துகிறோம் என்பதற்கான விடை இதுவே.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
இருவரும் தனியாக நிற்கப்போவகாகவே தெரிகிறது. பார்ப்போம்… சொதப்புவது யார்… சாதிப்பது யார் என… (2026 சீமான் வாக்கு வங்கி பற்றிய என் சவாலை ஏற்ற ஒரே மானஸ்தன் வாத்தியார் அண்ணா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது 🤣).- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஆதாரம்… என்ன ஆதாரம் வேண்டும்… தமிழ் தேசிய முகமூடியை போட்டு கொண்டு அப்படியே ஆர் எஸ் எஸ் கொள்கைகளை முன் தள்ளியமைக்கான எத்தனையோ ஆதாரங்கள் யாழில் கொட்டி கிடக்கிறன. நான் சீமானை பற்றி இதுவரை எழுதியதை எல்லாம் மீள படித்துபார்க்கவும். ஆதாரம் போதியளவு கிடைக்கும் 🤣.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர் Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST] சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர். தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார். மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tvk-members-slam-seeman-and-udhayanidhi-stalin-during-protest-720179.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
ம்ம்ம்… கேள்விக்கு பதில் இல்லை … அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது. கேள்வி மீண்டும் ஒரு தரம்- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஏனைய கட்சிகள் பிஜேபியுடன் வைத்தத்து, வைப்பது அருவருக்கத்தக்க சந்தர்பவாத, கூட்டு. சீமான் ஆடுவது கூலிக்கு மாரடிப்பு. இரெண்டும் கண்டிக்கப்படவேண்டியன ஆனால் ஒன்றல்ல.- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அப்போ இதை செய்தது புலிகள். இப்போ என் கேள்வியின் அர்த்தம் என்ன என்றால். நாம் செம்மணியை கையில் எடுப்பின் அவர்கள் இப்படி சிலதை எடுப்பார்கள். இதை செய்வார்கள் என நான் செம்மணி விவகாரம் சூடு பிடிக்கும் முன்பே ஊகித்தேன். கேள்வி - நாம் இதை எப்படி கையாளப்போகிறோம்? இந்த முழுப் பூசணியை சோற்றில் மறைத்து விடலாம் என்றா நினைக்கிறீர்கள்?- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அப்படி எண்டால் இவர்களை கொண்டது யார்? இலங்கை அரசா? அல்லது ஜிகாத் குழுவா? அல்லது ஈபிடிபி போன்ற ஒட்டு குழுவா? கருணா, பிள்ளையான் குழுவாக இருக்க வாய்ப்பில்லை, இது நடந்த போது அவர்கள் புலிகளில் இருந்தார்கள்.- லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
பிகு இங்கே நானும் எபோத வும் 1950, 80 களில் விளையாடிய இரு அப்துல்காதர்களை குழப்பி கொண்டுள்ளோம். ஆனால் 1958 பாகிஸ்தான் அணி, 1994 இங்கிலாந்து அணியை விட சிறந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை. 1958 கால, காதர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தெ ஆ தவிர ஏனைய அப்போதைய டெஸ்ட் அணிகள் சகலதையும் வென்றுளது. அங்கஸ் பிரேசர் ஓப்ப்னிங் போலராக இருந்த 1994 அணி, அடிவாங்காத இடமே இல்லை🤣.- லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
நீங்கள் சொல்லும் அப்துல் காதிர் எம் சி ஜி யில் சுழட்டிய போது (அலன் போர்டர் அவுட் இப்போ ரிவியூவில் அவுட் இல்லை என்றாகி இருக்கும்). எனது நினைவு முர்றிலும் பிழை 🤣. https://youtu.be/CbOy9J8i1sk?si=94oc6hHCh1v0lJlV- லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
இவரை எனக்கு நியாபகம் இருக்கிறது. முடியை பக்கவாட்டில் சீவி இருப்பார். அடிக்கடி தட்டி விட்டு கொள்வார். இடதுகை லெக்ஸ்பின் என நினைக்கிறேன்.- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இந்தியாவில் மட்டும் 9% பேர் வீகன். அதாவது அண்ணளவாக 150 மில்லியன் மக்கள். அருமை. இந்த அடிப்படை அரசியல் அறிவு அவருக்கு இல்லாமல் இல்லை. இதேபோல் தன் சொந்த வாக்காளரில் கணிசமானோரை கொல்டி என திட்டி விட்டு வாக்கு அரசியலில் வெல்லவது கடினம் என்பதும் அவர் அறிந்ததே. ஆனால் நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல. அவர் வெறும் தரகர். விவசாயி சின்னம் அவருக்கு மிக பொருத்தமானது. தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா. - அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.