Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣. அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும். ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.
  2. சூனியம் வைக்கும் போது கால் மண்ணில் படவேணும் இல்லை எண்டால் சூனியம் ரிட்டர்ன் ஆகி விடும் என்கிறார் முஸ்லீம் மலையாள மாந்திரீகர் மஞ்சுமெல் பாய் . உ.சா வின் ஆலோசனைப்படி ரெபேல், மிக், மிராஜ் எல்லாத்துக்கும் விங்கில் தேசிக்காய், காஞ்ச மிளகாய் கட்டி தொங்க விடப்பட்டுளதாக ஆய்வாளர் மணி கண்ணை உருட்டி, உருட்டி சொல்லிகிறார். ஆனால்… “வாங்கடா பாகிஸ்தானுக்குள்ள… தேசிக்காய்க்கு எஸ்டிராவா நாமமும் பூசி அனுப்புறோம்” என கொக்கரிக்கிறாராம் பாகிஸ்தான் தளபதி சாவல் ஹமீது.
  3. ஆனால் அதை மீள மீள நாம் உலகிற்கு நியாபக படுத்தி, நடை முறையில் உதாரணங்கள் மூலம் காட்டி கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் - இவர்களுக்கும் வேறு வழியில்லை என அரசுகள் இல்லாவிடினும், ஏனைய நாடுகளில் உள்ள பொது நோக்கர்களாவது சிந்திப்பார்கள். இல்லாமல் தீர்வை எழுத உதவினார் என்பதால் நாம் ஒரு தமிழரையே போட்டோம்- பழி முழுக்க எம்மீது. எல்லோரும் பிக்குகளை மறந்தே போனார்கள். இது மிகவும் உண்மை. அமிருக்கும் நீலனுக்கும் இது அவர்களின் பதவி, அதிகாரம் சம்பந்தபட்ட விடயம். ஆனால் புலிகளுக்கு இது ஒரு இறுதி இலக்கு சம்பந்தபட்ட விடயம். புலிகள் இந்த இனத்தின் நீடித்த சுதந்திர வாழ்வின் மீது சொந்த பிள்ளைகள் மீது பெற்றார் கொள்வது போல கரிசனை கொண்டிருந்தார்கள். அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை. ஆனால்…. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும் கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்
  4. உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.
  5. ஆர் எஸ் எஸ் திராவிடர் கழகம் போல் ஒரு அரசியல் இயக்கம்தான். அது ஒன்றும் அதிகாரிகள் சம்மேளனம் அல்ல. பரவாயில்லை அதிகாரிகள்தான் முடிவு எடுப்பார்கள் என்பதில் இருந்து ஆர் எஸ் எஸ் சும் என உம் விகுதிக்கு முன்னேறி விட்டீர்கள் 🤣. இன்னும் கொஞ்ச காலம்👆 இதை நீங்கள் தொடர்ந்து அப்பியாசம் செய்தால் உங்கள் hallucination இல் இருந்து விடுபட்டு… யாழ்கள உறவுகளின் நக்கல், நைதாண்டிக்கு ஆளாகாமல், மொக்கேனப்படமால் நல்ல கருத்தாக எழுத முடியும். நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.
  6. இப்போ ஒன்றுக்கும் வாய்ப்பில்லை. ஆனால் நீலன் மூலம் ஒரு திட்ட வரைபை இலங்கையை செய்ய வைத்து - அந்த வரைபை விட மேலதிகமாக எமக்கு வேண்டும் என்றோ அல்லது நீலன் சொன்ன முதல் வரைபுதான் எமக்கு வேண்டும் என்றோ கேட்டிருக்கலாம். அப்போ எம்மீது யாரும் பேச்சுவார்த்தையை குழப்பும், வன்முறையை நாடும், அரசியல்வாதிகளை கொல்லும் பயங்கரவாதிகள் என சொன்னால் அது எடுபடுவது குறைவாக இருந்திருக்கும். அப்ப ஒரு தீர்வே இல்லாத ஒரு வெறும் எழுத்துக்குத்தான் அமெரிக்காவின் உயர் பீடத்தில் நண்பர்களை கொண்ட ஒருவரை போட்டுத்தள்ளி - வாங்கி கட்டி கொண்டோமா?
  7. தமது இராணுவ தகவல்களை எதிரிக்கு வழங்கும் ஒற்றர்களுக்கு, துணை, ஒட்டு படைகளுக்கு மரண தண்டனை வழங்குவதும்…. ஒரு குறித்த பிரச்சனைக்கு தம்மை விட வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும், ஆயுதம் தரிக்காத, நன்குஅறியப்பட்ட அரசியல் தலைவர்களை கொல்லுவதும் ஒன்றல்ல. தமிழ் ஈழம் வேண்டும் என்பது எப்படி ஒரு நிலைப்பாடோ…அதே போல் தமிழ் ஈழத்துக்கு மாற்றாக பிரியாத இலங்கையுள் ஒரு தீர்வை பெற நாம் தயார் என்பதும் இன்னொரு நிலைப்பாடே. இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்? இதற்கான பதில் மேலே சொல்லப்பட்டுள்து. எதிரியோடு அடிபட சிலர் வேண்டும். எதிரியோடு நட்பாக இருந்து (முஸ்லிம் அமைச்சர்கள் போல்) காரியம் சாதிக்க சிலர் வேண்டும். இதில் நீலன் இரெண்டாம் வகை.
  8. இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை? நேரடியாக அன்றி நீலன் போன்றோர் மூலம் ஏற்படுத்த முனைந்த ஏற்பாட்டை புலிகள் நீலனை போட்டு தள்ளி சிதறடித்ததால் - மேற்கு நாடுகள் தாமே நேரடியாக இறங்கி, புலிகளை மிரட்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். நீலனை போட்டிருக்காவிட்டால் - இப்படியான இக்கட்டு புலிகளுக்கு வராமலே போயிருக்கலாம் அல்லவா? யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பார்கள். அதைபோலத்தான் இந்த லிஸ்டில் இருப்போரும் - இவர்கள் இருந்தால் நசல், ஆனால் போட்டுத்தள்ளினால் அதைவிட பெரிய நசல்.
  9. இதுவே நோக்கம் எனில் - அதை அவர்களை போட்டு தள்ளி நாம் வென்று விடலாம் என நினைப்பது அறிவார்ந்த செயலா? நீலன் இப்படிதான் கபட எண்ணத்தில் செயல்படுகிறார் என சந்தேகித்தால் அவரை அவர் பாணியில் அல்லவா டீல் செய்திருக்க வேண்டும். அவரை போட்டு தள்ளியதால் புலிகள் மேலும் பலம் பெற்றார்களா? அல்லது பலம் பெறுவதுக்கான தடைகள் விலகியதா? இல்லை - மேலும் பலவீனப்பட்டே போனார்கள். இதை நாமும் பயன்படுத்தி - இலங்கை அரசு அமைத்த குழுவே பிரேரித்த முதலாவது நகலை ஏற்க நாம் தயார் ஆனால் அதை கூட பேரினவாதிகள் தரவில்லை என நீலனை கொல்லாமல் பிரச்சாரம் செய்திருக்க முடியாதா?
  10. சந்திரிக்காவின் அல்லது ஏனைய சிங்கள தலைவர்களின் நண்பர் என்பதால் மட்டும் ஒருவர் தமிழர்களுக்கான அரசியலை செய்யும் வாய்ப்பை இழப்பதாக இருக்க முடியாது. அப்படிபார்த்தால் புலிகள் சம்பந்தர், குமார் பொன்னம்பலத்தையும் கூட அரசியல் செய்ய விட்டிருக்க கூடாது. நீலன் எப்போது தமிழர் தரப்பு பிரதிநிதியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்? மங்கள முனசிங்க தெரிவுக்குழு என அதற்கு முன்னர் யூ என் பி காலத்தில் இழுபட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், ஆட்சி மாற்றத்தின் பின் உருவான அடுத்த கட்ட நிலையே இந்த நீலன் சம்பந்தபட்ட தீர்வு திட்ட நகல் தயாரிப்பு. இந்த தீர்வு திட்ட நகல் அடிப்படையில் இலங்கை பேசுவது என்றால் கூட - புலிகளுடந்தான் பேசி இருக்க வேண்டும். ஏன் என்றால் பிரச்சனையின் இரெண்டில் ஒரு தரப்பு புலிகள்தான். நீலன் அல்ல. இப்படி நீலன் செய்ததற்கான ஆதாரம் தருவீர்களா? அல்லது ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க பங்களிப்பதே புலிகள் அமைப்பை அவமானப்படுத்துவதற்கு சமன் என்கிறீர்களா? பண்டா-செல்வா ஒப்பந்தம் தமிழர்களுக்கு தருவதாக சொன்ன உரிமைகளை விட, பல மடங்கு காத்திரமான உரிமைகளை நீலன் தயாரித்த திட்டம் இலங்கையின் மாகாண அலகுகளுக்கு வழங்க உத்தேசித்தது. அந்த நிலையில் பண்டா-செல்வாவை மட்டும் தந்தால் போதும் என முடித்திருந்தால் அதுதான் இனத்துரோகம்.
  11. இதில் மறுக்க ஏதும் இல்லை. ஆகவேதான் நான் ஒரே தராசில் நிறுக்கவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நான் சொன்னது இதைத்தான் 👇 அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.
  12. என் பி பி ஈரச்சாக்கை நல்லா ஊறப்போட்டு எடுத்து கொண்டு வாறாங்கள்… இனி ஒரே அமுக்குத்தான்… தலைவர் படத்தை, பெயரை வைத்து என்ன மாதிரி ஏமாற்றலாம்…அதற்கு எப்படி மந்தைகள் போல் சனம் எடுபடும் என்பதை ராமலிங்கம், தமிழக செய்திகளை பார்த்து புரிந்து கொண்டு, இந்த திட்டத்தை வகுத்திருக்க கூடும்🤣. யேசு பிரான் ரோமர்களின் அராஜகத்தை எதிர்த்து அவர்களால் சிலுவையில் அறையப்பட்டவர். ஆனால் அவரின் மறைவுக்கு சில காலம் பின், ரோமர்களே அவரின் போதனைகளை நிறுவன பட்ட மதமாக்கி, ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைமையக்கதை ரோமிற்குள் அமைத்தும் கொண்டனர். ஈழத்தமிழருக்கு காணி, பொலிஸ், சமஸ்டி அதிகாரம் கொடுப்பதை தடுக்கும் என்றால் - எஹலபொல, கெப்பிட்டிபொலாவ போல் பிரபாகரனும் இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவர் என அனுரா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
  13. போன வருடம் போய் பார்த்தேன். இதில் தெரியும் உடைந்த பழைய ஜெட்டி பிளாஸ்திக் தேங்கி ஊத்தையா கிடந்த்தது. ஏனைய இடங்கள் சுத்தம் ஆனால் கடல், மணல் தவிர வேறு ஏதும் இல்லை. ஆமிகாரர் சில காபானாக்கள் போட்டு, ஒரு சின்ன ஐஸ்கிரீம் கடை/கூல் பார் வைத்திருந்தனர்.
  14. பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣. நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை. படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள். அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள். இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.
  15. ஒரு படத்தில் விவேக் புதியவகை இசையில் பாடல் ஒன்றை இசைக்க… வீட்டு பெருசுதான் போய்ட்டு…ஒப்பாரி வைக்கிறார்கள் என நினைத்து மயில்சாமி வாசலில் வந்து நிண்டு சாவு கூத்து ஆடுவார். பெருசு சாகவில்லை என தெரிந்ததும்…விவேக்கிடம்…. “சார் வெட்டியான் வேற சாரயத்தை கடனுக்கு வாங்கி குடிச்சுட்டான், அந்த பணத்தையாவது கொடு சார்” என்பார் மயில்சாமி🤣. அந்த வெட்டியான் போல நானும் இரெண்டு வாரமா காத்து கிடக்கிறேன்😆. சட்டு புட்டுன்னு அடி பட்டு…யார் பெரிய ரவுடி எண்டு காட்ட வேணாமா🤣. 36 மணிநேரத்தில் தாக்குதல் என செய்தி வந்தே நாலு நாள் ஆகி விட்டது😂. ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣. # கரப்பொத்தான் vs கொக்கிரோச்
  16. என்ன அண்ணை மேடை ஏறி பேசும் அரசியல்வாதி போல்.. யுத்தம் முடிந்த பின் என்ன செய்தீர்கள்… குறை சொல்லும் வாய்கள் நிறை சொல்லுமா.. என இறங்கி விட்டீர்கள்? இங்கே ஒரு கட்டுரை நீலன் செய்த “பாதகங்கள்” குறித்து வெளியாகி உள்ளது… அதை பற்றி அலசி கொண்டிருக்கிறோம். புலிகள் போனதுடன் எல்லாமும் போச்சு. இது நம் ல்லோருக்கும் தெரிந்ததுதானே. நீங்களே கூட இந்தியா புலிகள் விடயத்தில் செய்தது அவர்கள் பார்வையில் சரிதான் என எழுதவில்லையா? ஆகவே - புலிகள் செய்த அரசியல் படுகொலைகள், குறிப்பாக இந்தியா, அமேரிக்காவை நேரடியாக சவாலுக்கு உட்படுத்திய கொலைகளை செய்தது சரிதான் என 2025 இல் கூட எழுதும் போது - அதை கேள்விக்கு உள்ளாக்குவது தப்பில்லையே. உதாரணமாக புளொட் மோகனை, ரசாக்கை, இப்படி பலரை போட்டதையா கேள்வி கேட்கிறோம்? இவர்கள் இராணுவ இலக்குகள். பதமநாபா கூட்டாளிகள் கூட இதே லிஸ்டில் சேரலாம். யாழ் மேயர் சரோஜினியை, செஞசோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை போட்டது கூட, ஈழதமிழரை தாண்டி வெளியே தாக்கம் ஏற்படுத்தாதவை. ஆனால் அமிர், ரஜீவ், நீலன், கதிர்காமர் கொலைகள் அப்படியா?
  17. இங்கே சந்திரிகா எப்படி பட்ட ஏமாற்றுகாரி, சிங்களவர் எப்படி எம்மை ஏமாற்றினர், என கட்டுரைகள் இணைத்த, கருத்து எழுதிய நுணா, புலவர் கவனத்துக்கு. இதை நான் மறுக்கவில்லை. ஒரு பள்ளி மாணவனாக சூப்பர் திட்டம் ஒன்றை நீலனும் பீரிசும் முன் வைத்து விட்டார்கள் என குதித்த பல பெருசுகளுக்கு - இதை மிக விரைவில் பெளத்த பீடம் அடித்து நூக்கும் என கூறினேன். அப்படியே நடந்தது. ஆனால் இதை எப்படி சிங்களம் எந்த ஒரு நியாயமான தீர்வையும் எமக்கு தாரது என்பதை காட்டும் உதாரணமாக அல்லவா புலிகள் பாவித்திருக்க வேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்க பங்களித்தார் என்பது மட்டுமே அவரை கொல்லும் அளவுக்கு மோசமான செயலா? குறிப்பாக அதே தீர்வை நாம் மூன்று வருடங்களின் பின் ஏற்புடையது என சொல்லிய போது. நீலன் 1995 இல் இருந்த நிலைப்பாட்டுக்கு நாம் 2003 இல் வந்தோம் எனில், அந்த நிலைப்பாட்டுக்காக, 1999 இல் நீலனை நாம் கொலை செய்தது பிழை என்பதை, 2003 இலாவது ஒத்துகொள்ள வேண்டாமா? அட்லீஸ்ட் 2025 இலாவது? பிகு நீலனின் அப்பா டட்லியோடு போனார், அம்மா இட்லி போட்டார் என்பதெல்லாம் “சேப்பில்லை, சேப்பிலை” - தீர்வு திட்ட தயாரிப்பில் ஈடுபட்டார் என்பதை தவிர நீலன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றசாட்டுகள் என்ன?
  18. ஒரே தராசில் வைக்கவில்லை. ஆனால் முன்பே இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்…. வெள்ளை மாளிகைக்கு செலன்ஸ்கி போகும் முன்பே எழுதினேன்… அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம். இதை செலன்ஸ்கி உணர்ந்து, மிக மோசமான தனிப்பட்ட அவமானத்யும் தாங்கி கொண்டு, நயமாக செயல்படுகிறார் என நான் நினைக்கிறேன்.
  19. நீலன் செத்து சுண்ணாம்பாகிவிட்டார். யாரும் அவருக்கு கரிசனை காட்டி எந்த பயனுமில்லை. இங்கே எழுதுபவர்கள் நோக்கமும் அது அல்ல. அரசியல் படுகொலைகளால் நாம் ஒரு இனமாக 5% நன்மை அடைந்தால். 95 சதவீதம் அடைந்தது தீமை. அதிலும் ரஜீவ், அமிர்தலிங்கம், கதிர்காமர், நீலன் இந்த கொலைகள் எமது இனத்துக்கு தந்த பிரதி கூல பின் விழைவுகள், மிக மோசமானவை. எனவே அதை பற்றிய திரியில் அதை சிலாகிக்கிறோம். கேள்விகளுக்கு பதில் சொன்னால் உண்மையை ஒத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் கூட சிலர் மெளனமாக இருக்கலாம்.
  20. தியாகம் -ஆம். கட்டமைப்பு - ஆம். பலம் - நிச்சயமாக இல்லை. போரில் வேறு ஒரு நாடு புலிகளுக்கு பலமாக பின்னுக்கு வராத வரை - அவர்களுக்கு அவர்கள் உரிமை கோரிய நிலத்தை முழுகையாக கைப்பற்றி, பாதுகாக்கும் பலம் இருக்கவில்லை என்பதே கள யதார்த்தம். மேற்கு நாடுகள் அதிகம் தலையிடாத 2000 க்கு முந்திய காலத்தில், புலிகள் இராணுவ சமநிலைக்கு அருகான ஒரு நிலையை எட்டி இருந்த போது கூட வவுனியா, மன்னார், அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் சகலதும் அரச கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதுவும் கூட தலைவர் இருக்கும் வரை மட்டும்தான். உண்மையில் இலங்கை இறுதி போரை இவ்வளவு கடன்பட்டு நடத்தி இருக்கவே தேவையில்லை. இன்னும் ஒரு 15 வருடம் இவ்வாறு கடத்தி இருந்தால் தலைவருக்கு பின் எல்லாமும் விரைவாக உடைந்து போயிருக்கும். எமது இராணுவ பலம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் ஆயுட்கால உழைப்பு. ஆனால் அவர் இல்லாமல் போனதும் அந்த பலத்துக்கு என்ன நடந்திருக்கும் என்பதை 2009 பின்னான நிக்ழவுகள் காட்டுகிறன. ஆனால் அதே ஆணியைத்தான் அவர்கள் நீலனை சுட்டு மூன்று வருடங்களில் ஒஸ்லோவில் கேட்டார்கள். நீலன் தனக்கு முடிந்த வரையில் முயலட்டும், நாம் எமகு வழியில் உறுதியாக இருப்போம், முயல்வோம் - நாம் வென்றால் தமிழருக்கு பெரு வெற்றி, நீலன் வென்றால் தமிழருக்கு சிறு வெற்றி என்ற அணுகுமுறையை ஏன் எடுக்கவில்லை?
  21. ஒரு முக்கியமான கேள்வி? யாரும் பதில் சொல்ல விழையலாம். ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள். டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள். இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள். இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது. இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர். இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன. நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம். அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை. நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?
  22. சுருக்கமாக, ரணிலிடம் புலிகள் “நம்பி” சமாதானபேச்சுவார்த்தையை (சந்திரிக்கா முப்படை தளபதியாக இருக்கும் போதே) ஆரம்பித்தது சரி என்றால், அதே சந்திரிக்கா - 1995 இல் சமாதான புறாவாக நம்பப்பட்ட சமயத்தில் அவருடன் சேர்ந்து ஏதோ ஒரு வழியில் தமிழருக்கு ஒரு கெளரவமான தீர்வை பெற்று விடலாம் என நீலன் முயன்றிருப்பின் - அது தவறாக, மரண தண்டனைக்குரிய குற்றமாக இருக்க முடியாது. ஒரே வித்தியாசம் புலிகளுக்கு நோர்வே உத்தரவாதம் இருந்தது (அல்லது அவ்வாறு இருப்பதாக புலிகள் நம்பினர்). ஆனால் இதே போல் ஒரு உத்தரவாதம் நீலனுக்கு உலகின் அப்போதைய ஒரே சுப்பர் பவரிடம் இருந்தும் கிடைத்திருக்கலாம். நீலனை சுப்பர் பவர் ஏமாற்றி விடும் எனவே அதை தடுக்க அவரை கொன்றோம் என்பது உங்கள் வாதம் எனில். புலிகளை நோர்வேயும் ஏமாற்றியது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
  23. நீலன் கொல்லப்பட்ட சமயம், புலிகள், ஜெயசிக்குறு எதிர்சமர், ஓயாத அலைகள் இரெண்டு, முல்லைதீவு, கிளிநொச்சி தலைமையக கைப்பற்றல்லல் என அவர்களின் மிக பலமான புள்ளிக்கு அருகில் இருந்தார்கள். ஜூலை 99 இல் நீலன் கொல்லப்பட, நவம்பர் 99 இல் ஆனயிறவை மீட்டு, முகமாலை வரை எல்லையை நகர்த்திய ஓயாத அலைகள் மூன்று ஆரம்பித்தது. ஆகவே நீலன் கொல்லப்பட்ட போது கூட புலிகள் மிக பலமான நிலையிலேயே இருந்தனர். பொருளாதார தடை - ரணிலுடன் பேச தொடங்கும் முன்பும் அதே பொருளாதார தடை இருந்தது. இராணுவமும், பாதுகாப்பு அமைச்சும் அப்போதும் சந்திரிகாவிடமே இருந்தது என நினைக்கிறேன்.
  24. உங்கள் கற்பனையில் உருவாகும் கஞ்சா கப்ஸா கதைகளுக்கு பெயர் சொந்தமாக சிந்திப்பதல்ல 🤣. நீங்கள் கற்பனையாக ஒன்றை உங்கள் மனதில் தோன்றும் hallucination இல் கண்டு கொண்டு, நிஜ ஆதாரங்களை எதிர்த்து உங்கள் கற்பனைதான் உண்மை என வாதிடுபவர் என்பதை யாழ் களம் அறியும். (முன்னர் இரு ஐடிகளில் இதையே செய்து, திரும்ப உள்ளே வரமுடியாதளவு மொக்கேனப்பட்ட பின் இப்போ இது உங்கள் 3வது ஐடி). நான் அப்படி அல்ல சொல்வதை ஆதாரம் சகிதம் நிறுவுபவன். அது இணையமோ இல்லை புத்தகங்களின் பதிவேற்றலோ - நான் கொடுக்கும் ஆதாரம் நம்பகமான இடத்தில் இருந்து வரும். உங்களை போல் ஒரு இம்மியளவு ஆதாரம் கூட கொடாமல் “நம்பினால் நம்புங்கள்” என எழுதுபவர் எல்லாம் ஆதாரத்தை கண்டதும் - இது இணைய ஆதாரம் என்று ஓடுவதை தவிர வேறு வழியில்லாதவர்கள். எந்த அதிகாரியும் அல்ல, சாதிவாரி கணெக்கெடுப்பு என்ற கொள்கை முடிவு (மாற்றம்), ஆர் எஸ் எஸ் எனும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்பில் உள்ள அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டு, அதன் தேர்தல் அரசியல் முகமான பிஜேபியால் அரச கொள்கையாக வரித்து கொள்ளபட்டுள்ளது. இங்கே முழுக்க முழுக்க கொள்கை முடிவை எடுத்தவர்கள் அரசியல்வாதிகள். இதில் எந்த அதிகாரிக்கும் சம்பந்தமில்லை. இதில் நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கியதுதான் மிச்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.