Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பாவம் மாவை… அந்த தேசிய பட்டியல் சீட்டை கெஞ்சி அழுதும் குடுக்காமா விட்டுட்டாங்கள். ஏக்கத்தோட செத்திருப்பார் போல… கூட்டத்தில சிறிதரனுக்கு அங்கால இருக்கிற வெறும் கதிரையில வந்து குந்தி இருக்கிறார். கந்தையா அண்ணையிட்ட யோகசங்கரியும் கூட்டத்துக்கு போனவரோ எண்டு கேட்க வேணும்.
  2. மிக்க மகிழ்ச்சி. எனது நீண்டநாள் கோரிக்கையான, கனவான Ealam-Tamil Origin Elected Representatives Forum ETOERF உருவாக வேண்டும் .
  3. அண்மை வரை அவுசில் வலதுசாரிகள்தான் முன்லையில் நின்றனர். ஜஸ்டீன் அண்ணாவின் “தம்பு”வின் புண்ணியத்தில் - இடதுசாரி தொழிற்கட்சி அமோக வெற்றி. தம்பு வாழ்க😂
  4. இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கு பல மில்லியன் வாரிசில்லா சொத்து கிடைத்துள்ளது, வங்கி கணக்கு விபரம் அனுப்புங்கள் என்று நைஜீரியாவில் இருந்து வரும் இமெயில் போல் உகண்டாவில் இருந்து வந்தால் உடனே டிலீட் பண்ண கூடாது. உண்மையாகவும் இருக்கலாம்😂.
  5. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  6. புலிகள் மண்மீட்பு நிதி என குடும்பத்துக்கு ஒரு பவுண் வாங்கினார்கள். ஆனால் இப்படி ஆபரணங்களாக அவர்கள் சேர்க்கவில்லை. கொள்ளை அடிக்கவும் இல்லை. பணத்தை தங்க கையிருப்பாக (நாட்டின்/ அமைப்பின் திறைசேரி) சேமித்தால் கூட, உருக்கி தங்க கட்டியாக அல்லவா வைத்திருப்பார்கள். இதென்ன மார்ர்வாடி கடை போல் இருக்கிறது ? தமிழீழ வைப்பகத்தில் மக்கள் வைத்திருந்த நகைகளின் ஒரு தொகுதியை கணக்கு காட்டிவிட்டு, தங்க கட்டிகளாக புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகை தங்கத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.
  7. விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்னதில் பலதில் உடன்பட்டாலும்: இப்போதெல்லாம் இந்த “பல்லினதுவம் ஒரு வரம்” என்பதற்கு ஒரு எல்லை இருப்பதாக நான் கருதுகிறேன். ஓர் அளவுக்கு மேலானாதும், மிக விரைவானதுமான பல்லினகலப்பு, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடும் நிலையை உருவாக்கி விடுகிறதோ? ஜப்பான் - இனத்தூய்மை பேணினாலும் - 2ம் உலகயுத்தம் முன், பின் என இருவேறு பட்ட காலங்களில், இரு வேறு முறைகளில் ஐடியாக்களின் தாயகமாக இருந்து முன்னேறினார்கள். ஆகவே அவர்களின் அண்மைய 30 வருட தேக்கத்தை இதனோடு முடிச்சு போட முடியுமா? கொரியாவும் இப்படி ஒரு நாடுதான். அப்படியா? இது எனக்கு புது செய்தி.
  8. இது ச்ந்ம்பந்த பட்ட ஒரு சுவாரசியமான விடயம், முன்னர் இதை பற்றி நுணாவிலானுடன் தர்கித்துள்ளேன். முலன்பேர்க் தொன்மன் Muhlenberg Legend என்ற ஒரு கதை உள்ளது. தொன்மம் என்றாலே அது ஆதாரமற்ற கட்டுகதைதானே. இதுவும் அப்படித்தான். அந்த கட்டுக்கதை என்னெவென்றால் - ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் உத்தியோக பூர்வ மொழி ஆங்கிலமா, ஜேர்மனா என அமெரிக்கன் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடந்த போது, சபாநாயகர் பிடரிக் முலன்பேர்க் எனும் ஜேர்மானிய வம்சாவழியினன், ஆங்கிலம் சார்பாக வாக்களித்தார், அதனாலேயே அமெரிக்க ஆங்கில வழி நாடாகியது என்பது. ஆனால் இது உண்மை அல்ல. வெறும் தொன்மம். நடந்தது என்னெவெனில், சில ஜேர்மன் குடியேற்ற வாசி வழிவந்தோர் தமக்கு ஆவணங்கள் ஜேர்மன் மொழியில் தரப்பட வேண்டும் என கோரி, அது சபையில் விவாதிக்க்கப்பட்டு, அப்படி கொடுக்க தேவையில்லை என ஒரு வாக்கில் முடிவு எடுக்கபட்டது. இதில் ஜேர்மன் வழிவந்த மூலன்பேர்க் வாக்களிப்பை புறக்கணித்தார். எவ்வளவு விரைவாக ஜேர்மானிய வழிவந்தோர் ஆங்கிலத்தை கற்றுகொள்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது. இந்த உண்மை சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கட்டுக்கதைதான் நான் மேலே சொன்ன முலன்பேர்க் தொன்மம். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் - இந்தளவு தூரம் ஒரு தொன்மம் உருவாகி இன்றளவும் நம்பபடும் அளவுக்கு, அமெரிகாவில் ஜேர்மானிய மக்களின் வகிபாகம், நெடியது, கனதியானது. ஆங்கில, ஐரிஷ் வம்சாவழிக்கு அடுத்து ஜேர்மன் வகிபாகம் ஆரம்ப அமெரிக்காவில் இருந்தது. பின்நாட்களில் நியுஓலீன்ஸ், கலிபோர்னியா என அமெரிக்கா வாங்கிய நிலங்கள் மூலம் பிரெஞ், ஸ்பானிய இனங்களின் வகிபாகம் அதிகரித்தது. இத்தாலிய வகிபாகம் 1700 களில் ஆரம்பித்தது.
  9. இல்லை. ஜேர்மனியர்களின் அமெரிக்கா நோக்கிய குடிபெயர்வு… முதலாவது ஆங்கிலேய குடியேற்றவாசிகளுடனேயே ஆரம்பித்து விட்டது. ஜேம்ஸ் டவுன் எனும் முதல் குடியேற்றத்தை ஸ்தாபித்தவர்களில் ஒரு ஜேர்மனியரும் இருந்தார். பெரும் எண்ணிக்கையிலான ஜேர்மானிய மக்களின் குடியேற்றம் 1600 களின் பின் அரைப்பாதியில் ஆரம்பித்து விட்டது. முதலாவது ஜேர்மனிய காலனி இந்த காலகட்டத்தில் பென்சில்வேனியாவில் அமைக்கப்படுகிறது. 2020 குடிசன மதிப்பீட்டின் படி ஏறத்தாழ 14% அமேரிக்கர் ஏதோ ஒருவழியில் ஜேர்மன் வம்சாவழியினர். இன்றைக்கு நாம் அமெரிக்கன் விடயங்கள் என அறியும் ஹாம் பேர்கர், ஹாட் டாக், கிறிஸ்மஸ்து மரம், எல்லாமுமே ஜேர்மானிய குடியேற்றவாசிகள் கொண்டு போனவைதான். இரு உலகபோர்களின் பின் மேலும் குடியேற்றம் அதிகரித்தாலும்.. ஐக்கிய அமேரிக்க நாடுகள் என்ற எண்ணக்கரு கருத்தரிக்கும் முன்பே, ஜேர்மானிய மக்கள் அந்த மண்ணில் கணிசமான அளவில் வாழ தொடங்கி விட்டனர்.
  10. உண்மை. எப்படி பிரிதானியா இரெண்டு ஆயிரம் ஆண்டு ஐரோப்பிய இனக்கலவையோ…. அதேபோல் இரு நூறு ஆண்டு ஐரோப்பிய இனக்கலவைதான் அமெரிக்கா. பிகு உலகை கட்டி ஆளும் இனங்கள் பலரும் இப்படி கலப்பினமாக இருப்பது - ஒரு மரபணு கலப்பால் கிடைத்த அனுகூலத்தின் பலன் என்பது என் கருதுகோள். ஜஸ்டின் அண்ணா போன்றோர் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவல்.
  11. இதேபோல் அப்போ யூகே, ஈயூ உறுப்பினர் என்பதால் - அயர்லாந்து சிட்டிசனான கார்னி - ஈயூ freedom of movement அடிப்படையிலும் யூகேயில் வாழ, வேலை செய்ய இயன்றிருக்கும்.
  12. உண்மையில் இவர் எல்லோரினதும் தாய் வீடு - இத்தாலியின் ரோம், ஸ்கெண்டிநேவியன் நோர்ஸ், ஜேர்மனியின் சக்சனியும், பிரான்ஸின் நோர்மண்டியும் எண்டும் சொல்லலாம். ஒரு காலத்தில் செல்டிக் அல்லது கெல்டிக் எனப்படும் குழுவே பிரிதானிய+ஐரிஷ் தீவுகளில் இருந்தது. இவர்களின் கடைசி அரசி பூடீக்கா. இவர்களை ரோம சாம்ராஜ்ய படை வெற்றி கொண்டு, அதேபோல் வட பகுதிகளை வைகிங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி, ரோம் விலக, சக்சனியில் இருந்து வந்தோர் ஆண்டு, அதன்பின் நோமன் படை எடுத்து வந்து ஆங்கிலோ சக்சனை வீழ்த்தி - இப்படியாக, ரோமன், வைகிங், ஜேர்மன், பிரெஞ் + உள்ளூர் செல்டிக் எல்லாம் கலந்த கலவைதான் நாம் அறியும் ஆங்கில இனம். ஓரளவு கலப்பு இல்லாதவர்கள் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்கள். அதிலும் பின்னாளில் ஆங்கிலேய கலப்பு உண்டு.
  13. ஆனால் கார்னி பிரித்தானிய பிரஜை ஆகியது இந்த வழியில் அல்ல. அவர் முன்பு கனேடி சிட்டிசனாக இருக்கும் போதே பாட்டன்/பாட்டி வழியில் ஐரிஸ் சிட்டிசன். Common Travel Area விதிகளின் படி பிரிதானியா, ஐரிஷ் பிரசைகள் அவரவர் நாட்டில் எந்த தடையும் இன்றி வாழலாம், தொழில் செய்யலாம். ஆகவே கார்னி கவர்னாகிய போது ஏலவே ஒரு ஐரிஸ் சிட்டிசனாக அவருக்கு யூகேயில் வாழ, வேலை செய்ய முழு சுதந்திரம் இருந்தது. அதன் மூலம் 5 வருடத்தை பூர்த்தி செய்து - விண்ணப்பித்து, பிரித்தானிய பிரசை ஆகினார்.
  14. ஒரு பிரிட்டிஷ் பிரஜை, அல்லது பிரித்தானியவில் வதிவிட உரிமை உள்ள ஒருவரின் வாழ்க்கை துணையையை இங்கே வாழ கூப்பிடலாம், அதற்கு சில விதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து கூப்பிடலாம். இப்படி வரும் ஒருவர் இதன் மூலமாக பிரிட்டிஷ் பிரஜை ஆக ஆட்டோமெடிக்காக ஆக முடியாது. சட்டபூர்வமாக பிரிதானியாவில் 5 வருடம் வாழ்தல், அதில் கடைசி வருடம் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இங்கே வாழ்தல், ஆங்கில சோதனை, பிரித்தானியா பற்றிய சோதனை, மேலும் சில நியமங்களை பூர்த்தி செய்து, நேச்சுரலைசேசன் எனும் முறை மூலம் பிரிதானிய பிரசை ஆக மாற விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்னப்பத்தை அரசு ஏற்பதும் விடுவதும் அவர்கள் இஸ்டம். ஏற்று கொண்டால் அதன்பின் அந்த நபருக்கு பிரித்தானிய பிரசை சான்றிதழ் கொடுக்கப்படும்.
  15. கார்னி பிரிட்டிஷ் அரச வம்சம் என அவிட்டு விட்டவர் நீங்கள். இன்னொரு உறவு ஆதாரம் கேட்க - நம்பினால் நம்புங்கள் என பதில் எழுதியவர் நீங்கள். பின்னர் அவர் registration மூலம், honorary citizenship மூலம் பிரிட்டிஷ் ஆகி இருக்கலாம் என ஒரு ஊகத்தை அவிழ்த்து விட்டீர்கள். நான் அவர் எப்படி கவர்னர் ஆகி சில வரிடங்களின் பின், ஏனையோரை போல பிரிட்டிஷ் பிரஜை ஆகினார் என்ற ஆதாரத்தை பகிர்ந்த பின்னும் … அவர் மனைவி பிரிட்டிஷ், ஆக்ஸ்போர்ட் என ஏதேதோ எழுதுகிறீர்கள். அவர் மனைவி பிறப்பால் பிரிட்டிஷ் எண்டால் போல அவர் ஆட்டோமேடிக்கா பிரிட்டிஷ் ஆக முடியாது. மேய்வது முழுக்க நுனிப்புல் - இதற்குள் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்ற முறைப்பாடு வேறு 😀.
  16. கார்னி என்ன 2018 இல் பபாவா… ரெஜிஸ்டிரேசன் மூலம் பிரித்தானிய பிரஜை ஆக😂😂😂. இப்போதுதான் ரெஜிஸ்டிரேசன் என்பது சிறுவருக்கு என ஓடி விழித்துள்ளீர்கள். எனக்கு அதற்கு பதில் எழுதும் போதே தெரியும். ஆகவேதான் அதை கஞ்சா கப்ஸா கதை என அடையாளம் காட்டினேன். அதே போலத்தான் honorary citizenship கதையும். சும்மா ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது பின் மற்றையொருக்கு பாடம் எடுக்க முனைவது. நான் மேலே தந்த இணைப்பில் மிக தெளிவாக ஐந்து வருடத்தை சட்டபூர்வமாக பூர்த்தி செய்து (நேசுரல்சைசேசன்) மூலம் அவர் பிரிதானிய பிரஜை ஆகினார் என்பது சொல்லபடுகிறது. இல்லை…. இளையராஜ திரி யை போய் வாசிக்கவும். நிழலி பல விடயங்களை ஆணித்தரமாக எடுத்து சொன்ன போது…அதை ஏற்று கொண்டதோடு…என் நிலைப்பாட்டையும் தளர்த்தி கொண்டேன். இப்படி பல திரிகளில் - விடயம் தெரியாத போது நான் கேட்டறிந்த பல உதாரணங்கள் உண்டு. ஆனால் உங்களை போல் அரைகுறை அறிவு+குறை ஆங்கில புரிதல்+ சதிகோட்பாட்டு மனநிலை என ஒரு வினோத கலவையினால் விடயங்களை தலை கீழாக விளங்கி கொண்டு அதையே சரி என வந்தாடினால் - நிச்சயம் அதற்குரிய (அவ) மரியாதையை கொடுப்பேன். இந்த திரியில் நீங்கள் எழுதியது 90% இப்படி சம்பந்தமே இல்லாத துணுக்குகள்தான்.
  17. சீச்சீ அப்படி அல்ல.. இதெல்லாம் சூட்சுமான விடயம். இதை புரிய ஒரு உணர்திறன் அவசியம் கிட்டதட்ட emperor’s clothes போல… அம்மணமாக நின்று கொண்டு…அருமையான உடை உடுத்துள்ளேன் பாருங்கள் என்பார்…. வாவ் அந்த பொத்தான் ரொம்ப அழகாக இருக்கிறது என நீங்கள் சொல்லத்தான் வேணும்😀. இல்லை என்றால் நீங்கள் தியரிபடி கதைக்கிறீர்கள், அல்லது பொத்தாம் பொதுவாக மேலோட்டமாக எழுதுகிறீர்கள்😂. 40,000 ஆண்டுக்கு முன் துறைமுகம் கட்டிய ஆள்… நாம்தான் மூளை கருகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  18. சில மாதங்களின் பின் சும்: நாம் யாழ் மண்ணில் கால்வைக்க விட மாட்டோம் என சொன்னதை செய்துகாட்டியுள்ளோம். எமக்கு பயந்து அனுர சப்பாத்து போட்டுத்தான் யாழ் மண்ணில் இறங்க கூடியதாக இருந்தது. அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது.
  19. எப்படி ப்ரோ? 1987-89 காலப்பகுதியில் மக்கள் அச்சமின்றி வாழ மண்டையன் குழு என்ற தர்மஸ்தாபனத்தை உருவாக்கி உழைத்தீர்களே, அப்படி ஏதும் செய்யும் உத்தேசமா ப்ரோ😀.
  20. பின்ன என்ன செய்பது… எல்லா தர்க்கமும் உடைந்து போனா…சம்பந்தமே இல்லாமல் பத்தி பத்தியாக நான்சென்சை எழுதி தப்பிக்கும் திறமை எம்மிடம் இல்லையே😀.
  21. அரைகுறை புரிதல், அரைகா போத்தல் ஆங்கில புலமையோடு - கோமாளிதனம் பண்ணும் நீங்களே கருத்து எழுதும் போது, நான் ஏன் தள்ளி நிற்க வேண்டும்😀.
  22. நிச்சயம் யோகசங்கரி இல்லை. அவர் 90 இலேயே இறந்து விட்டார். விக்கியின் சான்றுப்படி, வீரசிங்கம் என்ற பருத்திதுறையை சேர்ந்த பிரின்சிப்பலுக்கு 6 ஆண் பிள்ளைகள். அனைவர் பெயரும், அவர்களின் ஆண் பிள்ளைகளின் பெயரும் சங்கரி என முடியும். 6 பேரில் மூத்தவர் இராஜ சங்கரி, ஈபியால் கொல்லப்பட்டுள்ளார். 1988 இல் இன்னொரு ஆனந்தசங்கரியின் சகோதரரான ஞான சங்கரியும், 1990 இல் ஞானசங்கரியின் மகனான யோகசங்கரியும் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். வீரசிங்கம் பிரின்சிப்பலுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பிறந்த ஆண்கள் அனைவரின் பெயரும் சங்கரி என முடிவதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முறைப்படி மார்க்கானி 5 வருடம் பூர்த்தி செய்த பின் naturalization மூலம் பிரிதானிய பிரஜை ஆனவர் என ஆதராம் மூலம் நிறுவியவன் நான். Registration, honorary citizenship என எங்கோ கேள்விபட்டதை எல்லாம் வாயில் வந்த கோலத்தில் எழுதியவர் நீங்கள். யார் பொத்தாம் பொதுவில் எழுதுபவர் என்பதும், ஆதாரபூர்வமாக தான் எழுதியதை பிழை என இன்னொருவர் நிறுவியதும், அது தியரி நான் சொல்வது நடைமுறை என சடைபவர் யார் என்பதும் களம் அறியும்.
  23. இண்டைக்கு பாவம் பார்த்து இன்னொரு 😀 கொஞ்சம் பொறுங்கோ… மகாவம்சம் மாரி இப்பதான் கார்னி வம்சம் கதை எழுதி கொண்டிருக்கிறம். அதுக்கே கற்பனை கையிருப்பு தீர்ந்து விடும் போல உள்ளது. இதை எழுதி முடித்த பின், கற்பனை மிச்சம் இருந்தால் - சோழ வம்சகதையோடு, சங்கரிக்கு எத்தனை சகோதரம் என்பதையும் எழுதுவோம்.
  24. அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்). அல்பேர்ட்டா, வான்கூவர் (மேற்கு), ரொடெண்டோ (கிழக்கு) இடையே இருக்கும் மத்திய கனடா மாநிலம், தெற்கு எல்லை அமேரிக்கா. அண்ணேய் உங்களுக்கு பேய் பிசாசு சகவாசம் இருக்கோ😂. யோகசங்கரியை ஜூன் 1990 இல் சென்னையில் வைத்து நாபாவோடு இன்னும் பலரோடு புலிகள் போட்டுதள்ளி விட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.