Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நீங்கள் மேலே சொன்னவை எதையும் இனவாதம் என யாரும் எப்போதும் சொல்வதில்லை. 500, 600 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழும் மக்களை. தமிழில் கல்வி கற்று, தமிழராக தம்மை உணர்பவர்களை சாதியின் அடிப்படையில் தமிழர் இல்லை என்பதுதான் இனத்தூய்மைவாதம். அப்படி இனத்தூய்மைவாதம் பார்த்தேதான் ஆக வேண்டும் என்றால், அப்படி ஒரு கருத்தியலை முன்வைக்கும் மலையாளி சைமன் செபஸ்டியனில் இருந்து ஆரம்பிப்பதே முறை.
  2. தமிழ் நாட்டில் தமிழர் தமிழர் அல்லாதோர் என 300,500 வருடங்கள் முன்பு வந்தோரை பிரித்து பார்க்கும் கலககாரார் யார் என பார்த்தால்… ஒன்றில் மலையாளிகளாக இருப்பார்கள் (சீமான்).… அல்லது தமது போராட்த்தை கூட நடத்தாமல் வெளிநாடு ஓடி வந்து விட்டு, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, தாம் 64 இயக்கமாக பிரிந்து தம் நாட்டை நாசப்படுத்தியது போல் நாசப்படுத்த எண்ணும், புலம்பெயர் ஈழ தமிழராக இருப்பார்கள். சீமான் தமிழர்… நிம்மி தமிழர் என்றால்… ஸடாலினும் தமிழர். ஸடாலின் தெலுங்கர் என்றால்.. சீமான் மலையாளி… நிம்மி…மங்கோலியா🤣
  3. உண்மையிலேயே ஸ்டாலினின் தாய்மொழி அதாவது அவர் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் தெலுங்கு வம்சாவழி என்பது உண்மை ஆனால் அவர் தெலுங்கில் சரளமாக உரையாடுவார் என்பதும், வீட்டில் தெலுங்கு பேசுவார் என்பது இதுவரை நிறுவபடாத விடயங்கள். பேரு பெத்த பேரு ஆனா தாகத்துக்கு நீரு லேது என ஒரு கூட்டத்தில் அவர் அது ஒரு தெலுங்கு பழமொழி என சொல்லியே பேசினார். அதை வைத்து மட்டும் அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என வாதிட முடியாது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும் நான் வீட்டில் தமிழ் பேசினாலும், இப்போ ஆங்கிலேயந்தான். ஆனால் இனவழி ஆங்கிலேயன் அல்ல ethnic-English. ஸ்டாலின் இதன் உல்டா. அவர் இனவழி தெலுங்கன் ஆனால் வாழ்வியலில் தமிழன்.
  4. இணைப்புக்கு நன்றி. கருணாநிதி முள்ளிவாய்க்கால் இறுதி போரை முடிவுக்கு கொண்டுவர “போராடியது” போலத்தான் கச்சதீவு விட்டு கொடுப்பில் நடந்து கொண்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு என நினைக்கிறேன். ஆனால் உண்மையில் இது ஒரு உப்புசப்பில்லாத விடயம்.
  5. 🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣
  6. இதையேதான்…. கருணாநிதி நீல தமிழன் என சொல்லும் 200 ரூபாய் ஊபிசும் சொல்கிறார்கள். நன்றி. வணக்கம்.
  7. 🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார். ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣 ஆதாரம் இருக்கா?
  8. சின்னம் பறி போனது சீமானின் சோம்பேறித்தனத்தால். சீமான் தன் பாலியல் வழக்கில் காட்டும் சுறுசுறுப்பை சின்னத்துக்கு அப்ளிகேசன் போடுவதில் காட்டவில்லை. சீமானுக்கு முன்பே திமுக ஆட்களை வைத்து அப்பிளை பண்ணி சின்னத்தை முடக்கியது. திருமா வழக்கு போட்டு போராடி வென்றார் - சீமான் தன் மீதான வழக்குஎன்றால் டெல்லி வரை பிஜேபி காலை பிடித்தாதவது வென்றிருப்பார். எப்படியோ டெபாசிட் காலி, அது எந்த சின்னத்தில் கேட்டு காலியானால் என்ன, என எண்ணி விட்டு விட்டார். கருணாநிதி சொந்த ஊரில் போய் கேட்டால் அவரையும் தமிழர் எண்டுதான் சொல்லுவினம். கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்த தெலுங்கு வம்சாவழி, ஜெ ஶ்ரீரங்கத்தில் பிறந்த கன்னட பிராமின், எம் ஜி ஆர், கண்டியில் பிறந்த மலையாளி, சீமான் தமிழ்நாட்டில் பிறந்த மலையாளி. அவரின் மனைவி பாதி தெலுங்கு. இனத்தூய்மை பார்த்தால் இவர்கள் எவரும் தமிழர் இல்லை. 👆ஆதாரம் இல்லாதா அவதூறு இது🤣
  9. 🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.
  10. கருத்து எழுதாமலே கூட கருத்து பஞ்சம் வரலாம்🤣
  11. இரெண்டு பக்கத்துக்குள்ளாகவே கருத்து வறுமை ஏற்பட்டதும், அதனால் கருதாளர் மீது கருத்து வைக்க ஆரம்பித்துவிட்டதும் ஒரு துன்பியல்.
  12. கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும், இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன. இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர். இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage. இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை. தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது. பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார். அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன். கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை. அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல். இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி. தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும். கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.
  13. அந்த கடல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புகள் இலங்கையும், இந்திய மத்திய அரசும் மட்டுமே. இது சம்பந்தமான ஆவணங்களை பிறிதொரு திரியில் தந்துள்ளேன். நாட்டின் எல்லையை விட்டுகொடுப்பது, சுருக்குவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரம். இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.
  14. அண்ணை - சீமானே தான் சந்தித்ததாக ஒத்துகொள்ளவில்லை. அந்தளவுக்கு இது அரசியலில் மாறான விடயம். இங்கே யாருக்கும் சீமான் மீது கோவம் இல்லை. திருமா மகிந்தவை சந்திப்பார், சீமான் நிம்மியை சந்திப்பார். தமக்கு சுயநலமாக அனுகூலமெனில் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யமனையே சந்திப்பார்கள்.
  15. இந்திய அமலாக்கத்துறை மத்திய அரசில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் சொல்படி, அவர்களின் அரசியல் எதிரிகள் வீட்டை மட்டுமே தட்டும். சீமான் பிஜேபி பி டீம் எனும் போது அவர்கள் ஏன் சீமானை நோண்ட போகிறார்கள். ஊழல் செய்ய அதிகாரம் வேண்டும். சீமானுக்கு அதிகாரம் வாய்க்கவில்லை. ஆனால் கோப்பி தோட்டம், பஜிரோ ஜீப்புகள், நீலாங்கரை பங்களா என சுத்தமாக வருவாய் ஏதும் இல்லாமல் சீமானும் மனைவியிம் பல சொத்துக்களை வாங்கியுள்ளது அவர்கள் கொடுக்கும் பிரமாண பத்திரத்திலேயே உள்ளது. வழசரவாக்க வீடு பிரச்சனை வந்த போது, சீமானுக்கு மணம் ஆகி விட்டிருந்தது. ஆனால் நான் ஏழை வாடகை வீட்டில் இருக்கிறேன் என சீமான் கூறிய வீடியோவை நீங்கள் இங்கே பகிர்ந்தீர்கள். இந்த அரியவகை ஏழைக்கு இப்படி சொல்லி சில வருடங்களில் எப்படி நீலாங்கரையில் 8 கோடி பங்களா சொந்தமாகியது? கடந்த 15 வருடமாக, சீமானோ கயல் அண்ணியோ வேலை, வியாபாரம் ஏதுவும் செய்யவில்லை. அப்போ இந்த பணம் எல்லாம்? திரள்நிதியில் தின்றதா? அல்லது பி டீம் வேலைக்கு பிஜேபி கொடுத்த கூலியா? அப்போ சீமானும் கனிமொழி போல ஒரு திருட்டு அரசியல்வாதி அதாவது நான் அடிக்கடி கூறும் “சின்ன கருணாநிதி” என்பதை ஏற்கிறீர்கள். நன்றி.
  16. அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣. அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா? ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன். அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.
  17. இல்லை அண்ணை. ஒட்டுமொத்த இலங்கையின் ஜிடிபி 99 பில்லியன். தமிழ் நாட்டின் = 420 பில்லியன். இலங்கையின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பினை விட பலமடங்கு குறைவு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பு.
  18. நிச்சயமாக இல்லை. இந்தியா, இலங்கை நாம் வகிக்கும் மேற்கில் கூட கொள்கையை முடிவு செய்வது அதிகாரிகள் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள். உதாரணமாக - திமுக கடந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என ஒரு தேர்தல் அறிக்கை அல்லது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் அந்த கொள்கைகளை நடைமுறை படுத்துகிறார்கள். அதை நடைமுறை படுத்தும் உத்தியை வகுப்பதும், நடைமுறை படுத்துவதும்தான் அதிகார வர்க்கம். மாநில கொள்கையால்தான் சிலது முன்னேற சிலது பிந்தங்கியது. அது திறமையான மாநில கொள்கையை வரித்து கொள்ளாத, ஒழுங்காக அதிகாரிகளை மேற்பார்வையிடாத அந்தத்த மாநில அரசியல் தலைவர்கள் பிழை.
  19. கேரளா 15 ஆயிரம் சதுர மைல். த.நா 50 ஆயிரம் சதுர மைல். வறுமை கோட்டு தகவலில் கேரளாவுக்கு அருகில் இலட்சதீவு, புதுச்சேரி, கோவா நிக்கும். தமிழ் நாட்டை அதை ஒத்த பெரிய மாநிலங்களோடுதான் ஒப்பிட வேண்டும். அதே போல் கேரளாவிலும் திறமான மாநில ஆட்சியாளர் அமைந்தனர் என்பதால், தமிழ் நாட்டில் அமையவில்லை என கூற முடியாது.
  20. இந்தியா முழுக்க இருப்பது Indian Administrative Service எனப்படும் நிர்வாக சேவைதான். இதற்குள் ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பிரிப்பு இருக்கும். உதாரணமாக IAS - Tamil Nadu Cadre. இதில் தமிழ்நாட்டவர்கள், தமிழ் நாட்டில் பணி செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் தேசிய சேவைக்கு அழைக்கப்படலாம். ஆனால் IAS அதிகாரிகளின் தரம் இந்தியா முழுவதும் ஒன்றேதான். பீஹாருக்கும், தமிழ் நாட்டுக்கும் வித்தியாசம் அரசியல் தலைமைத்துவம். நிர்வாக சேவை அதிகாரிகள் கொள்கை முடிவை எடுப்பதில்லை. அவர்கள் ஆலோசனை சொல்வார்கள், அரசியல்வாதிகள் எடுத்த முடிவை அமல்படுத்துவார்கள். தமிழ்நாடு, கேரளா, மஹராஸ்டிரா முன்னேற, பீஹார் பிந்தங்க காரணம் நிர்வாக சேவையின் தரம் அல்ல, மாநில ஆட்டியாளரின் தரம். தமிழ் நாட்டு பொருளாதர வளர்ச்சியில் ஈழதமிழன் சீலை, நகை, சினிமா மூலம் கொடுத்த இலாபம், மிக, மிக, மிக சொற்பமானது. எங்களுக்குத்தான் இது பெரிய காசு, தமிழ் நாட்டு பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் - தூசு. நாம் வாழும் நாடுகளில் மது, சிகரெட், சூது, மூலம் அரசுகள் ஈட்டும் வருமான சதவீதம் இதை விட கூட இருக்கும் என. நினைக்கிறேன். டாஸ்மார்க்குக்கு நான் ஆதரவில்லை. ஆனால் புத்தர் முதலமைச்சர், யேசு நிதியமைச்சர் அல்லாத நாடு/மாநிலம் ஒன்றில் இது பெரிய சதவீதமாக எனக்கு படவில்லை.
  21. தமிழ் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் 2.2% சதவீதம். பீஹாரில் 34#. குஜராதில் 12%. அண்ணளவாக. ஆந்திரா, தெலுங்கானா 6%. கர்நாடகா 7.5. பல வட இந்திய மாநிலங்கள் 27,22, 15 க்கு மேல். https://en.m.wikipedia.org/wiki/Poverty_in_India
  22. கேரளா தவிர் ஏனைய இந்திய மாநில கிராமங்களுக்கு போனால் தமிழ் நாட்டின் வளர்ச்சி புரியும். ஆனால் மீனை, மண்ணை தவிர, நிலக்கரி, தாதுக்கள், எண்ணை என சகல வளத்தையும் அகழும் அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு.
  23. தேர்தலில் வேட்பாளரின் மனைவி சொத்தும் விபரமும் தாக்கல் செய்யப்படும். போன தேர்தலில் கயல் அண்ணி சார்பில் தாக்கல் ஆன பத்திரத்தில் இந்த சொத்து இல்லை. சாதா சட்ட கல்லூரி மாணவர் காளிமுத்து, பெரிய வக்கீல் இல்லை. உழைத்த சொத்து எல்லாம் தமிழக அரசியலில் உழைத்த திருட்டு சொத்து. மாமனாரின் சொத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சீமானின் இஸ்டம். ஆனால் அதுவே திருட்டு சொத்து. அண்ணன் மானஸ்தன் இப்படி செய்யலாமா? தமிழ் நாட்டு அரசியல்வாதி யாரும் சுத்தம் இல்லை என நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். இப்ப சீமான் சொக்கதங்கம், சொக்கதங்கம் ஜுவல்லரி என எழுதுகிறீர்கள். பிகு போனதேர்தல் - அதற்கு முந்திய தேர்தல் இடையில் இதே போல் சீமான், மனைவி பெயரில் ஒரு மலை வாசஸ்தலத்தில் கோப்பி தோட்டம் பதிவாகி இருந்தது.
  24. பூவ…பூ எண்டும் சொல்லலாம்…புய்ப்பம் எண்டும் சொல்லலாம்…நீங்க சொல்றமாரியும் சொல்லலாம் அண்ணே🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.