Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. குறிப்பு “தலைவரை கண்டா வரச்சொல்லுங்க” எனும் இன்னொரு பாடலும் தலைவருக்காக எழுதி வைத்துள்ளேன். இரெண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகா கூடாது என்பதால். அதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளேன். வயதில் மூத்தவர் பாடல் முதலில் வந்துள்ளது. ஆவலோடு காத்திருங்கள்😎. 🙏
  2. முதல் அடியே அவர்களுக்குத்தான் விழும் 🤣.
  3. 🤣 நன்றி பெரிசு இங்கயே அப்படி… அங்க சித்திரகுப்தனுக்கு என்ன குடைச்சலை கொடுக்குதோ? யம ஹிங்கருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடும்னு நினைக்கிறேன்🤣 வெங்காயம், பூண்டு விலை ஏறுதே என கேட்டால் (பிராமணர்) நாம் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை என பதில் கொடுத்த நிதி அமைச்சரிடம் வேறு எதை எதிர்பார்க்கலாம். நீங்கள் பார்தீனியம் என எழுதியதை அவசரத்தில் பார்பனியம் என வாசித்து விட்டேன்🤣.
  4. இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஒத்தையா துணிஞ்சு நின்னு பாதை செஞ்சு தந்தானப்பா கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க *********** ஆட்சியிலும் அமரவில்லை அதிகாரம் சுவைக்கவில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க கோஷான் சே
  5. திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்…. அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்… புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்…. திருட்டை ஒழிக்க முடியாது.
  6. 👆👇 கிட்ட நெருங்கி வாடா…கர்லா கட்ட உடம்புகாரா
  7. யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா (தமிழ் தேசிய) தாய் கொண்டு வந்ததை…. (தம்பிகள்) தாலாட்டி வைத்ததை (பிஜேபி) நோய் கொண்டு போகும் நேரமம்மா….
  8. ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை Published:14th Mar, 2025 at 6:20 PM பரமசிவன் பாத்திமா படம். செய்திகள் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். Updated:14th Mar, 2025 at 6:20 PM ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி உள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் கதை காதலை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. https://www.dinamani.com/amp/story/cinema/cinema-news/2025/Mar/14/paramasivan-fathima-movie-trailer டிஸ்கி #கருடா செளக்கியமா🤣
  9. உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.
  10. சீ…பார்தீனிய விசம் பற்றிய கவிதை அருமை…. பூச்சி மருந்தைக்கூட இனிக்க இனிக்க பருக்குவது எல்லாம் வேற நிலை.
  11. சரி டக்கு டிக்கு டோஸ் எண்டு எதையாவது அடிச்சு விடுவம்🤣
  12. அழைப்புக்கு நன்றி பையா. ஏலவே சொன்னது போல் இதில் அறவே ஈர்ப்பு இல்லை. அடுத்த போட்டியில் சந்திப்போம்.
  13. ஆம் இந்த லிஸ்டில் சேர வேண்டியவர்தான் இவரும். எஸ் ஏ ராஜ்குமார் பிடிக்கும் எண்டால் உங்களுக்கு மரகதமணியும் பிடிக்கும். வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா…அத்தோடு எஸ் பி பி (சிகரம்), ஹரிகரன் (காதல் வேதம் ஆல்பம்) - உண்மையில் புண்ணியம் செய்த காதுகள் நம் காதுகள். எனது இசை ரசனை கொஞ்சம் bipolar நோய் போல🤣… ஒரு நாள் ரஹ்மானை கேட்க எரிச்சலாக இருக்கும் … அன்று பட்டுகோட்டையார், கண்ணதாசன், அப்படியே ஓ ரசிக்கும் சீமானே, பம்பாய் சகோதரிகள், சஞ்சய் சுப்ரமணியம் என ஜூக்பாக்ஸ் ஓடும். மறுநாள் நானும் ரஹ்மானும் மட்டும் ஒரு லோங் டிரைவ், இடையில் ஆங்கில பாடகர்களும் ஏறி கொள்வார்கள். ஹாரிசும் ஓடி வந்து தொத்திகொள்வார். மூன்றாம் நாள் ராஜா, விஜயகாந்த், ராமராஜன், பிரபு நேரே வண்டி கிராமத்துக்கு போய்விடும். வாக்கிங் போகும் போது அனிருத் அநேகம் கூடவே சத்தம் போட்டுகொண்டே வருவார். சில நாட்களில் அதுவே இரைச்சலாக இருக்கும், திரத்தி விடுவேன். சிட் சிறிராமை சேர்த்து கொள்வேன். இப்படி ஒவ்வொருவரும் ஒரு லூப்பில் வந்து கொண்டே இருப்பார்கள். பாலசந்தருக்கே அனந்து இப்படிதான் என்பார்கள். ஆனால் திரைமறைவில். பாரதிராஜா வெளிப்படையாக பாக்யராஜ் போன்றோரின் திரைக்கதை, கதையைத்தான் பாவிதார், டைட்டிலிலும் போட்டார் என நினைக்கிறேன். ஒரு பேட்டியில் வேதம் புதிது கதை கூட யாரோ மதுரையில் அதை நாடகமாக போட்டவரின் கதை என பாக்யராஜ் சொல்லி இருப்பார்.
  14. உண்மைதான். ஏதாவது ஒரு சஞ்சீகையோடு வாரம் இத்தனை பக்கத்தை நிரப்புவேன் என டீலுக்குகாவது போகாமல் சமாளிக்க முடியாது. தமிழில் ghost writers போல் இன்னொருவருக்காக எழுதி உழைக்க மார்கெட் உள்ளதா?
  15. நன்றி… இதை கொஞ்சம் free யாகத்தான் விட வேண்டும் போல இருக்கிறது. மாறி கொண்டிருப்பதுதானே கலாச்சாரம். கேப்டன் மகள் படத்தில் வரும் “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” என்ற பாடல் அருவருப்பானது, கெட்ட உள்ளார்த்தம் உடையது என கூறி அதை என்னை வீட்டில் கேட்க விடமாட்டார் என் அப்பா🤣. இது ஒரு சின்ன மேட்டர் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. அதில் என்ன விரசம் என்பது இன்னும் விளங்கவில்லை🤣. இப்ப கொத்தானாரை கேட்டதும் நாமும் பூமர் அங்கிள் போல் ரியாக்ட் பண்ணுகிறோமோ தெரியவில்லை. மேற்கத்தை சமூகம் இதை எல்லாம் தாண்டி வந்தும், இன்னும் ஓடி கொண்டுதானே இருக்கிறது. அடியோ சீரழியவில்லை என்பது நம்பிக்கை தருகிறது. சாளினி ஆரம்பத்தில் அடக்கமாகதான் இருந்தவர். பின்னர் கொமெண்டுக்கு, பதில் சொல்லி கீழ்தரமாக பதில் சொல்லி போடும் வீடியோக்களின் பிரபலத்தை பார்த்து விட்டு மாறினார். கண்ணுக்கு முன்னால் நடந்த சீரழிவு அது. குட்டி மியாவும் பாதி ஈழத்தமிழர்தான்.
  16. ஜாம்பவான் ஊட்டாண்ட போனதும்… தன்னை வைத்து இலவச விளம்பரம் செய்துகொண்டார்கள் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பாதது சிறிலங்கன் ஏர்லைன் பூர்வ ஜென்ம புண்ணியம் 🤣 அந்த சின்ன கட்டுரையில் பல இசைகளை கேட்க்ககூடிய லிங்குகள். உங்களுக்கும் சாருவுக்கும் நன்றி. Cam girls மாதிரி ஜிபே டீடெய்லை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு சாரு இறங்கி விட்டது நெருடலாக உள்ளது. நாங்கள்தான் பிழை விடுகிறோமோ? தெரிந்தது, பாதி தெரிந்தது, தெரியாதது பற்றி எல்லாம் யாழில் இலவசமாக எழுதி🤣.
  17. யாரின் சொந்த பாதுகாப்புக்கு? சீமான் அப்போ வீட்டில் இல்லை. நீதிபதி பம்முறார்.
  18. கடலில் முழு ஆட்சியும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான். கரையில் இருந்து போகும் படகை இலங்கை எல்லையை தாண்டுமா இல்லையா என தமிழக அரசு மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது. திரும்பி வரும் போது படகில் இலங்கை மணக்கிறதா என சோதிக்கவும் முடியாது. படகில் ஜிபிஎஸ் பூட்டி, எல்லை தாண்டும் முதல் எச்சரிக்கலாம். தாண்டினால் தண்டிக்கலாம். ஆனால் இதை கடலில் ஆட்சி அதிகாரம் உள்ள மத்திய கடலோரகாவல் படைதான் செய்ய முடியும். இலங்கை கடலில் நடப்பதை தங்கச்சிமடம் சப் இன்ஸ்பெக்டர் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முடியாது என தெரிந்தும், குறை சொல்ல வேண்டும் என்பதால் வைக்கப்படும் கோரிக்கை.
  19. Royal Philharmonic Orchestra விந்தளத்தின் எதிர்வரும் நிகழ்வுகள் பகுதியில் ஒரு விபரிப்பு இருந்தது. வேறு எதுவும் என் கண்ணில் படவில்லை. ஆராய்ச்சி கட்டுரைகள் போல் இதுவும் கட்டாயம் peer review வுக்கு உட்படுத்தபடும் என நினைக்கிறேன். சுப்புடு மாரி யாராவது எழுதி இருக்க கூடும். கண்ணில் படவில்லை.
  20. உடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது. இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது. பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை. ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது. இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான். இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா. மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம். இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள். குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும். இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார். அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”. சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது. பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு. சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது. தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது. இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன். ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது. தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா? பிகு பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.
  21. ஓம்… ஏசி..ஏசி நானும் அவர் பாட்டோடுதான் வாழ்கிறேன்🤣. தமிழ் திரையிசையை பொறுத்தவரை 75-90 பிறந்தவர்கள் மிக அதிஸ்டசாலிகள். எங்கள் தாலாட்டை ராஜாவும், ரொமான்ஸ்சை ரஹ்மானும் பாடி நின்றார்கள். இவர்கள் இருவரும், தாயகபாடல்களும்தான் எம் வாழ்க்கைக்கே பிண்ணனி இசை. அதிலும் நான் “மேயாத மான்” முதல் “தூத்துகுடி கொத்தனாரு” வரை இசையை ரசிப்பவன் (ஹெட்போன் போட்டு கொண்டு கேட்கவும்🤣🔞). ஆகவே நான் ராஜா வெறுபாளன் அல்ல, சின்னதாயி மகனின் சின்னதனமே எனக்கு பிடிக்காதது. ரஜேந்தர், சங்கர் கணேஷ், சிற்பி இவர்களின் படைப்புகள் அற்புதம். பலர் இதை ராஜா பாட்டு என்றே நினைப்பார்கள். அதே போல் ராஜா, ரஹ்மான் ஏனோ தானோ என போட்ட பாடல்களும் உண்டு.
  22. பீத்தோவன் இல்லை, மொசார்ட் தானாம் 8 வயதில் இதை செய்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.