goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
Everything posted by goshan_che
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@ போட்டு பெயர் சுட்ட முடியவில்லை நிர்வாகத்தின் மேலான கவனத்துக்கு.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
காவல்துறை விரையுது எண்டு செய்தி வந்தது அதை லிங்கோடு பகிர்ந்தேன். நான் என்ன செய்தியாளரா? காவல்துறை விரையும் முன் அண்ணன் உதய் காலில் விழுந்தால் நான் என்ன செய்ய முடியும். மல-ழை பையா, (இது எழுத்து பிழை அல்ல, உங்கள் கருத்தாடும் பாணியை இட்டு காரணப்பெயர்🤣). நான் கிமுகவோடு சேர்ந்து 200 ரூபாய்க்கு எழுதுவது இருக்கட்டும்…..திரள்நிதி கள்ளவர் உங்களுக்கு 2 ரூபாய் கூட தரமாட்டார். நீங்கள் காசும் கொடுத்து ஆதரவும் கொடுக்க வேணும்🤣. அது சரி எப்ப இந்த திரியில் இருந்து துண்ட காணம், துணிய காணம் தூங்கும் போது money ய காணம் என ஓடப்போறியள்?🤣.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் RANI KARTHIC2 Min Read இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். Published:Today at 2 PMUpdated:Today at 2 PM சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சீமான் அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣. ஆனால் நீதிபதி விடுவாரா? வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா? அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா? அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
எப்படி தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ….14 வருடங்கள் வழக்கை இழுத்தடித்துள்ளார். நல்லதொரு நீதிபதி இப்போ வந்தமையால் வழக்கு துரிதப்படுவதாக தெரிகிறது. மத்திய அரசின் மீதான தண் இன்புளுவன்சை பாவித்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற சீமான் முயல கூடும்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
டிஸ்கி மேற்கு நாடுகளில் கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் தண்டணையில் முடிவது மிக குறைவான சதவீதமே. அப்படி இருக்க - ரோவின் ஏஜெண்டான, மோடிக்கு இஸ்டமான (அவரே சொன்னது) சீமான் அதிமுக, திமுக இரு அரசுகளோடும் டீல் பேசி வழக்கை இரு தடவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயன்றுள்ளார். விஜயலட்சுமிக்கு மனதளம்பல் இருக்கலாம். அதனால் மட்டுமே அவர் சொல்வது பொய் என்றாகாது. தூசண திருமுருகன், பாக்கியராசன் போன்ற புரோக்கர்களிடம் பேசி, அண்ணன் இனியும் உங்களை திருமணம் செய்வார், மாதாந்த ஜீவனாம்சம் தருவார் என்ற பொய்களை நம்பாமல் - வழக்கை தைரியமாக நடத்தி, சட்டப்படி தகுந்த நட்ட ஈட்டை பெற முயல வேண்டும் விஜி அண்ணி. அண்ணன் நீலாங்கரையில் எட்டு கோடிக்கு வீடு கட்டுகிறார். அதில் பாதி பெறுமதியை விஜி அண்ணி கேட்கலாம். இங்கே நான் பலதடவை இதை எழுதிய போதும் தம்பிகள் இதை கடைசிவரை விளங்கிகொள்ளவே இல்லை. அதுசரி சீமான் மேனியாவில் - சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கூட, இருவர் மனமொத்த உறவு என முட்டு கொடுக்க தயாரான ஜெண்டில்மேன்களும், குஞ்சுமோன்களும், இதையயா ஏற்றுகொள்ளப்போகிறார்கள்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி Vishnupriya RUpdated: Monday, February 17, 2025, 19:30 [IST] நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் விஜயலட்சுமி. அவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுடைய படத்தில் நடித்திருந்தார். Also Read அப்போது சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது புகாரை அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தார். Red Button-ஐ அழுத்திய Trump....பதறும் White House...அதென்ன Diet Coke? | Oneindia Tamil இந்த நிலையில் தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்பு வந்தது. அப்போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார். Recommended For You அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். You May Also Like காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-asks-seeman-whether-vijayalakshmi-is-the-first-wife-of-him-680875.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்படி அனுபவம் எனக்கு அடிக்கடி நிகழும். 1987 க்கு முன் நான் இந்திய ரசிகன். அப்போ சின்ன பிள்ளை. 1987-2009 வரை இலங்கை ஆதரவு. என்னை சுற்றி அநேகர் இலங்கை எதிர்ப்பு. அதுவும் 1995/96 வரை இலங்கை போகும் இட்மெல்லாம் தோற்கும். என்னை வச்சு செய்வார்கள். 2009 க்கு பின் ஆப்கானிஸ்தான் ஆதரவு. இப்பவும் வச்சு செய்வாகள். ஆனால் வேண்டும் எண்டு செய்வதில்லை. உங்கள் நண்பி ஒவர் சென்சிடிவ் என நினைக்கிறேன். அண்ணை…அடிப்பது பேஸ்போல் மட்டையால்…..🤣 #இப்பவே கண்ணை கட்டுதே🤣
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
யூகேயில் pre registered, delivery mileage காரை இப்படி எடுக்கலாம். இங்கே ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் நம்பர் பிளேட் மாறும். மார்ச் 2024 க்கு பின் வரும் கார் 24 பிளேட்… செப்டெம்பர் 2024 - 74….. மார்ச் 2025 - 25…. செப் 2025 - 75….. ஒவ்வொரு டீலருக்கும் ஒவ்வொரு காலாண்டிலும் குறித்த அளவு கார்களை ரினிஸ்தர் பண்ணியே ஆக வேண்டிய quota ஒன்று உள்ளது. இப்படி ரிஜிஸ்தர் பண்ணிய கார்கள் ஷோரூமில் நிற்கும் போதே 10-15% மதிப்பை இழக்கும். உதாரணமாக இப்போ மார்ச் 1ம் திகதி 25 பிளேட் வரப்போகிறது. இன்று ஷோரூம் போய், 74 பிளேட் கார் ஒன்றை வாங்கினால் அது brand new. அதே காரை மார்ச் 1ம் திகதி வாங்கினால் அது used car. அந்த காரின் மதிப்பு, அது ஷோ ரூமில் நிற்கும் போதே பெப்28/மார்ச் 1 இற்கிடையான 24 மணியில் 10% குறைந்து விடும். இதே காரை மார்ச் 2ம் திகதி வாங்காமல், இன்று பெப் 17 இல் வாங்கினால் - உங்களுக்கு 8% கழிவு கிடைக்கலாம். அதாவது அடுத்த 2 கிழகைக்கு நீங்கள் brand new car ஓடலாம். இதுதான் நீங்கள் சொல்லும் 23,000 - 21,000 புத்தாண்டு விலைக்கழிவு.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
உங்களுக்கு ஒபாமாவின் White House Correspondents Dinner பேச்சு நினைவிருக்கலாம். டிரம்ப்பை விருந்தாளியாக அழைத்து அவர் முன்பே அவரை நக்கல் அடித்து, எல்லோரும் நகைக்கும் படி செய்வார் ஒபாமா. இப்படியான narcissist களை சிரித்து தோற்கடிக்கும் உத்தி பிழைக்க வாய்புண்டு என்பதற்கு டிரம்பின் எழுச்சியே நல்ல உதாரணம். இவர்களின் கோமாளித்தனத்தை பார்த்து சிரிக்கலாம்…ஆனால் அதன் பின்னால் உள்ள நரித்தனத்தையும் கண்டு கொண்டு நடு மண்டையிலேயே போட வேண்டும். இதே போல் இன்னொருவர் சுப்ரமணியசுவாமி. #ஆபத்தான கோமாளிகள்.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
நன்றி எனக்கு மகிந்தவை பிடிக்காது….ஆனால் பெளத்தத்தை பிடிக்கும். சீமானை பிடிக்காது ஆனால் தமிழ் தேசியத்தை பிடிக்கும். தமிழுக்கு ழ அழகு இப்படி நடந்து விசம் பரவுவது தடுக்கப்பட்டது எனில் - எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆனால் சலிப்பு என்னில் அல்ல -15 வருடமா தேங்கி கிடக்கும் சீமானில், அவரின் கோக்குமாக்கு அரசியலில்தான். வெட்கம் இல்லாதவர்களால் மட்டுமே இனியும் சீமானுக்கு முட்டு கொடுக்க முடியும் என்ற நிலையை அவர் உருவாக்கிவிட்டார். கொஞ்சநஞ்சம் சூடு சுரணை உள்ளவர்கள் ஒதுங்கிவிட்டார்கள். தம்பி கிழிச்சுட்டாலும்…. போன பந்தியில் கிழிப்பேன் என வெத்து உதார்…. இந்த பந்தியில் வழமை போல் “ வேலி பாய்ந்து” ஓடுகிறீர்கள்🤣. யாழில் 5 பக்கம் தாண்டிய அத்தனை சீமான் திரியிலும் நீங்கள் இப்படி புறமுதுகிட்டு ஓடுவதும்… பின்னர் ஒழிந்து நிண்டு -1 இடுவதும் கிட்டதட்ட ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டது🤣. சம்போ மஹாதேவா…. சர்வேஸ்வரா….. இந்த அண்டசராசரமே உன் கண்ணசைவில்தானே இயங்குகிறது தேவோ🤣
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
இது நீங்கள் மட்டும் அல்ல, டிரம்ப் வென்றால் என்ற பீடிகையோடு நானும் பலரும் கூறியதும்தான். ஒரு கோட்டுக்குள் வருமோ தெரியாது…ஆனால் ஐரோப்பா ரஸ்யாவின் கட்டுக்குள் வருவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அந்த ஐரோப்பா நீங்கள் நேசிக்கும், உங்களுக்கு தெரிந்த ஐரோப்பாவாக இராது. அது இன்றைய ஜேர்மனியை விட, இன்றைய பெலரூசை ஒத்த ஐரோப்பாவாக இருக்கும். "Be careful what you wish for, lest it come true!" நீங்கள் யாசிப்பதை இட்டு மிக கவனமாக இருங்கள், அவை பலித்து விடக்கூடும்.
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
யாழ் களத்தில் ஏன் பெண்கள் அதிகம் எழுதுவதில்லை? உதாரணம் தந்து கட்டுரை வரைக.
-
புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
கேம் ஓவர். இன்று - செலன்ஸிக்கும், உக்ரேனின் சுய நிர்ணயத்துக்கும். நாளை ஐரோப்பாவின் ரஸ்யாவுக்கு அடங்கா தன்மைக்கு. நாளை மறுநாள் - அமெரிக்காவின் ஒற்றை துருவ தலைமைக்கு, குறிப்பாக ஐரோப்பாவில் அமெரிக்காவின் வகிபாகத்துக்கு.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
நான்கு வருடங்கள் அல்ல….அதன் பின்னும் இது தொடரும். கிட்டதட்ட கோபர்சேவ் தலைமையில் இருந்த ரஸ்யா போலத்தான் இப்ப அமெரிக்கா. டிரம்ப், மஸ்க் பிடியில் குடியரசு கட்டி இருக்கும் வரை இதுதான் நிலை. நாலு வருட முடிவில்…. ஜேர்மனி, பிரான்ஸில் ஒரு புட்டின் ஆதரவு அரசு அமைந்திருக்கும். ஐரோப்பாவில் அமெரிக்காவின் இடத்தை ரஸ்யா பெற்றிருக்கும். யூகே மட்டும் ஈன ஸ்வரத்தில் எதிர்பாட்டு பாடும், எடுபடாது. இதை தடுக்க ஐரோப்பா முன் அதிக தெரிவுகள் ஏதும் இல்லை. யூகே தவிர்ந்த ஏனைய ஐரோப்பா ரஸ்யாவின் சுற்று வட்டத்துள் போவதை தவிர வேறு வழியில்லை. என் வாழ்வில் முதல் முறையாக பிரெக்சிட் நடந்தது நல்லம் என நினைக்கிறேன்.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
உங்களுக்கு நான் எழுதுவது அநேகம் புரிவதில்லை போலும் என்பதால் மீண்டும் எழுதுகிறேன். நான் எந்த கட்சிக்கும். திராவிட கட்சிக்கும் ஆதரவு இல்லை. நான் சீமானின் சத்துரு அவ்வளவு மட்டும்தான். ஆகவே திமுக வை யார் என்ன ஏசினாலும் அதில் எனக்கு பூரண உடன்பாடே. எனக்கு பெரியாரின் சில (அனைத்தும் அல்ல) கொள்கைகள் பிடிக்கும். அந்த கொள்கைகள் எப்படி தமிழ் நாட்டை வளப்படுத்தின என்பது தெரியும். சீமான் ஆதாரமில்லாத பாலியல் வக்கிரங்களை கூறும் போது அது பொய் என தெரியும். இவ்வளவுதான் என் அறிவு மட்டம். நீங்கள் மிக அடிப்படையான சீமான் எதிரி = திமுக அனுதாபி என ஒரு பொய் சமன்பாட்டை போட்டு நான் அதுதான் என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். காளியம்மாள் - நான் இப்போதும் சொல்கிறேன். காளியம்மாள், ஒரு தங்க காப்பு. அது சீமான் என்ற வட்டிகடை காரனிடம் இருக்காது நல்ல தலைமையிடம் போய், இன்னும் மேலே வர வேண்டியவர். காலம் இருக்கிறது. சீமானின் நரி புத்தி அவரை துரத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ரஸ்யா-உக்ரேன் போரில் நான் அன்றும் இன்றும் உக்ரேனுக்கும் அதன் தலைவருக்கும்தான் ஆதரவு. உங்கள் அவதூறு பாசையில் சொல்வதானால் சிங்சாங். இதையும் ஈழ தமிழர்களை மேற்கில் இருந்து அந்நியபடுத்தும் சதியை நான் அம்பலபடுத்துபதையும் உங்களால் வேறு படுத்தி பார்க்க கஸ்டமாய் இருப்பது போல் படுகிறது. என்னால் எழுதத்தான் முடியும் பையா, வாசித்து, கிரகித்து, விளங்க வேண்டியது உங்கள் பொறுப்பு. புட்டின் - நான் அவரை மாண்புமிகு என அழைப்பதை தடை செய்யுமாறு எங்கும் கோரவில்லை. ஆனால் அந்த விளிப்பு எவருக்கும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு. அதற்கான என் எதிர் வினை புட்லர் என அழைப்பதும் இதர கிண்டல்களும்தான். ஆனால் நிர்வாகம் அதை தடை செய்த போது, “செத்த பாம்பை அடிப்பது” ஆண்மை அல்ல என்பதால் - நானும் புட்லர் என அழைக்கமாட்டேன் என அறிவித்தேன். நீங்கள் மறுபடியும் என்ன நடந்தது என்பதை சரிவர விளங்கி கொள்ள தவறியுள்ளீர்கள் என்பது என் ஐயம்.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
இந்து பத்திரிகையில் தூக்கி பிடிக்கிறார்கள் எண்டால் அந்த நபரால் சங் பரிவார் நன்மை அடைய விரும்புகிறது என்பதே அர்த்தம்.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
தம்பி நான் ரஸ்யா உக்ரேன் திரிகளில் எழுதியதை மீளவும் போய் எழுத்து கூட்டி வாசிக்கவும். அல்லது உங்கள் தாத்தாவிடம் கேட்டால் விளங்கப்படுத்துவார். அவரும் நானும் இதை பற்றி கனக்க கதைத்துள்ளோம். ரஸ்ய-உக்ரேன் போர் ஆரம்பத்திலேயே நான் பின் வருவதை எழுதி விட்டேன். டிரம்ப் புட்டினின் கைக்கூலி. டிரம்ப், மஸ்க் உடைய சிறுவர் துஸ்பிரயோக வீடியோ ஜெப்ரி எப்ஸ்டைன் மூலமாக புட்டினிடம் உள்ளது. இதை வைத்து புட்டின் தன் சொல்படி டிரம்பை ஆட்டுவார். டிரம்ப் வென்றால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை அதோ கதிதான். ஆகவே இப்போ நடப்பவை எவையும் நான் எதிர்பாராதவை அல்ல. எழுதாதவையும் அல்ல. இது மட்டும் அல்ல Russia is playing for time, யுத்த அரங்கில் டிரம்பின் வெற்றிக்காக காத்து, காலம் கடத்துகிறார்கள் எனவும் எழுதியுள்ளேன். ஆனால் உக்ரேனிய தேசிய இனத்தின் சுயநிர்ணய போருக்கு நான் என்றுமே ஆதரவுதான். அவர்கள் தோற்றாலும் வென்றாலும் என்னை போல் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிள்ளைகள் அவர்கள். ஆகவே அவர்களை ஆதரிப்பது என் கடமை அது தொடரும். சீமானை அடிப்பது அதை இட அவசியமான என் சொந்த இன நலம் சார்ந்த கடமை. என் குடும்பத்தை பாதுகாப்பது, அதற்கு அடுத்து எனக்குள்ள பெரிய கடமை எண்டால் அது சீமானை வெளுப்பதுதான். சீமான் தமிழக முதலவர், இந்திய பிரதமர், உலக ஜனாதிபதி ஆனாலும் அது தொடரும். ஒண்டில் சீமான் அரசியலை விட்டு போகணும் அல்லது நம்மில் ஒருவர் சாகணும்.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
யார் இவர்கள்? மேலே ஓணாண்டி சொன்ன 2009 க்கு முன், பின் புலிகளை விமர்சிக்காமல் ஆதரித்த “தமிழ் தேசிய சிங்கங்கள்”. யார் இந்த தேசம்நெட்? இதே யாழில் 2009 க்கு முன்பும் பின்னும் புலிகளின் எதிரிகள், தமிழின துரோகிகள் என பலராலும் விமர்சிக்கப்பட்டவர்கள். இப்போ சொல்லுங்கள், தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட சாதாரண தமிழ் பொதுமகனாகிய நான் யாரை நம்புவது? யார் கள்ளன், யார் பொலிஸ்? நான் இப்போதான் பொஸ்கோவை பற்றி கேள்விபடுகிறேன். ஆனால் போலிகா ஆதரவு நிலை எடுக்கும் வரை கிருபாகரன் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தது. போலிக்கா டைமில் கிருபா நல்லவர் என எழுதிய விசுகு அண்ணா, இப்போ அவர் பொஸ்கோவை போட்டு கொடுத்தார் எனும் கட்டுரையை பகிர்கிறார். இதில் நான் பொஸ்கோவை நம்புவதா? கிருபாவை நம்புவதா? மாறி மாறி கதைக்கும் விசுகு அண்ணாவை நம்புவதா? இத்தனை ஏன்? ஓணாண்டி தான் யார் என்பதிலேயே பல மாறுபட்ட கதைகளை சொல்கிறார். அவரே ஒரு சின்ன கேபி அல்லது இன்னொரு சேரமானாக இருக்கலாமா? சந்தேக பட முகாந்திரம் இருக்கிறது. ஓட்டைகள் முழுவதும் உங்களில்தான் உள்ளது. பொதுமக்களாகிய எமக்கு எவரை நம்புவது என்ற தெளிவு அறவே இல்லை. ஆனால் யாரை நம்பகூடாது என்பதை விடயங்களை வைத்து உய்தறிய முடிகிறது. கருணாவை, கேபியை, போலிகாவை, சீமானை நம்ப கூடாது என்ற தெளிவு இருக்கிறது.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
ஒரு ஈழத்தமிழ் மனித நேய போராளி கைது செய்யப்பட்டுள்ளார்…. இதை நாம் ஒரு அணியில் நின்று கண்டிக்க வேண்டும். கருத்து எழுதாமல் விட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக நான் கடந்த சில நாட்களாக அதிகம் யாழில் மினகெடுவதில்லை. எனது notification, மற்றும் தமிழக செய்திகளை எட்டி பார்ப்பதோடு சரி. கிரிகெட் கணிப்பை கூட கடைசி நேரத்தில்தான் பதிந்தேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். இந்த திரியில் உங்களை விட சீமானுக்கு காவடி தூக்கும் ஆட்களையும்தான் காணவில்லை. இந்த விடயத்தில் கூட உங்கள் சீமான்-அரிப்பை போக்கி கொள்ளும் விதமாக, மதிலில் முதுகை தேய்ப்பது வெக்கக்டேடானது. தயவு செய்து இப்படியான விடயங்களை உங்களை நல்லவனாக காட்டி கொள்ளும் photo opportunity போல் பாவிக்காதீர்கள்.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
அண்ணன் மைன்ட்வாய்ஸ்: அவனுக்கு சுவிஸ் பாங்க் கணக்குத்தான் இருக்கு. நான் ஒரு லெட்டர் குடுத்தா சுவிஸ் அரசே வீசா கொடுக்கும் தெரியுமா🤣
-
விகடன் இணையத்தளத்தை மூடிய பாஜக- சீமானின் எதிர்வினை குறித்து சவுக்கு
கருவாயன் காவியம் நாடகம் காட்சி 1 எஜமான் நாக்பூர் நாதன்: நாங்க விகடனை இழுத்து மூடப்போகிறோம். அடிமை 1 (கருவாயன்1): நான் என்ன செய்யணும் எசமான்? நாக்பூர்: அதை எதிர்த்து தொண்டை தண்ணி வத்த கத்தணும். அடிமை 2 (கருவாயன்2) : அப்ப என் வேலை என்ன எசமான்? நாக்பூர்: அவன் கத்துறத பத்தி நீ அதைவிட பெரிசா கத்தணும். (நாக்பூர் மேடையை விட்டு அகலல்). கருவாயன் 1: இவரு ஏன் தன்னை எதிர்த்து பேசுமாறு சொல்லி காசும் கொடுக்கிறார். கருவாயன் 2: அப்பதானேடா நாம் அவருக்கு வேலை செய்யவில்லை என ஊரை நம்பவைக்லலாம். கருவாயன் 1, 2 கூட்டாக: எப்படியோ நமக்கு துட்டு வந்தா போதும். (திரைச்சீலை மூடல்)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த கொட்டில் யுனெஸ்கோ மரபுரிமை சின்னம். அதையா கொழுத்த போகிறீர்கள்🤣.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தல இனிமேல் தமாசா மட்டும்தான் எழுதப்போறேன் எண்டு சொன்னபோதே நினைத்தேன் - இப்படி எதயாச்சும் எழுதிவச்சி கிச்சு கிச்சு மூட்டுவார் எண்டு… இதோ பண்ணிடாப்பல🤣.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போய்ட்டான். #கதறல் தொடரும்🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சாட் ஜிபிடி, ஜெமினி, எம் ஜி ஆர் சகலதையும் தவிடு பொடியாக்க வருகிறது…… வாக்கியம்+திருக்கணிதத்தை குழைத்து, கூடவே சங்கரன்கோவில் ஏட்டு சுவடிகள் சொல்வதையும் கருத்தில் எடுத்து, அண்டசராசரத்தில் உள்ள அத்தனை துகள்களின் அசைவின் அடிப்படையிலும் கணிக்கப்பெற்ற…. ஶ்ரீலஶ்ரீ உடான்ஸ் சாமியார் அவர்களின் கணிப்பு…. கட்டங்களை உருட்டிப்பார்த்தால்…இஸ்டதேவைதை இஸ்மியாக்கி தெற்குப்பார்வை பார்க்கிறார். குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SA ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Eng 😁 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், SA அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், Aus அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் SA அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும். சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? Eng 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? Aus 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shafeen Shah Afridi 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Mohammed Nabi 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? PAK 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND பெரும் கட்டிடங்கள் எல்லாம் ஒரு செங்கல்லில் ஆரம்பித்தவையே. பிகு விளையாட்டு திரியில் அரசியல் வேண்டாம். அடி வேணும் எண்டா அங்கால வாங்கோ, தல்லாம்🤣.