Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கறிக்கான விளக்கமும் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு மட்டும் அல்ல, இதை போல பல கேள்விகளுக்கு பதில் தரமுடியாத…. அது என்ன….ஆ…..நிறைகுடம் நீங்கள் என்பது யாழ் அறிந்ததுதான்🤣. இனி என்ன எஸ்சாகிவிட்டு நிர்வாகத்தின் மீது பழியை போடவேண்டியதே🤣. பிகு நீங்கள் இங்கே எனக்கான பதிலில் ஜஸ்டின் அண்ணாவை இழுத்து குழுவாதம் ஏற்படாதா என ஏங்குவது புரிகிறது 🤣. வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  2. இதற்குத்தான் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி எழுப்பினேன். பத்துப்பாட்டு, எட்டு தொகை, பதிண்கீழ்கணக்கு….இதில் எந்த இலக்கியதில் “தமிழ்” என்ற சொல் மொழியை அன்றி இனத்தை குறிப்பதாக முதலில் வருகிறது? திராவிடம், தமிழ் என்பது எல்லாமுமே பின்னாநாளில் நாம் பயன்படுத்திய பெயர்கள். சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம் அவர்கள் தம்மை அந்த பெயரால் அழைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அதே formula உதயநிதிக்கு பொருந்தாது🤣.
  3. இப்படி நான் எங்கும் சொன்னதில்லை. ஆனால் பாலா அண்ணை மேல் சொல்லப்படுவது வெறும் ஆதரமற்ற அவதூறு. Speculation. ஆனால் முத்துகுமார் கொலை முதல், சீமான் அவரை மறக்கடிப்பது வரை நான் சந்தர்ப்பசாட்சியங்களை circumstantial evidence அடுக்கியுள்ளேன். மிகவும் தவறான புரிதல். தமிழ் தேசியம் என்பது is an external and internal threat to India இந்தியாவின் இருப்புக்கு உள்ளும், புறமுமான ஆபத்து என்பதே டில்லியின் நிலைப்பாடு. ஆகவே சகல இந்திய மத்திய மாநில ஏஜென்சிகளும் இதில் ஒருங்கிணையும்.
  4. ஆனால் அவர் ethnic Kannadika இல்லை. அதாவது தூய இனவழி கன்னடர் அல்ல.
  5. எப்போ, அந்த காலத்தில் வன்னிக்கு போய் தலைவரோடு சில நிமிடம் கழித்த ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருந்தது. சீமானின் பணி - தமிழ் நாடு திரும்பி பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். Nothing more nothing less.
  6. றோ மிக கடுமையாக சீமானுக்கு இட்ட கட்டளை முத்துகுமாரும், அவர் முன்னெடுத்த தமிழ் தேசியமும் மறைக்கப்பட வேண்டும். இதை மீறினால் முத்துகுமாருக்கு நேர்ந்த நிலைதான் சீமானுக்கும். இதனால்தான் நா.த.க அலுவலகத்தில் முத்துகுமாருக்கு ஒரு படம் கூட இல்லை. மேலே ஒரு வீடியோ இணைத்துள்ளேன் - முத்துகுமாரை பற்றி கேட்டால் அண்ணன் பதறியடித்து, அவர் “அறிமுகம் இல்லாதவர்” என்கிறார்🤣. அறிமுகம் இல்லாதவரைத்தான் “முன்னிலை மாநில ஒருங்கிணைப்பாளர்” ஆக்கினாரா? பிகு முத்துகுமார் கொலை ரோவினால், திமுக அரசுக்கும், சீமானுக்கும் தெரிந்தே நிகழ்தப்பட்டது.
  7. இந்த அடிப்படைத் தெளிவு விஜையிடம் உள்ளது. ஆகவேதான் திராவிடம், தமிழ் தேசியம் இரெண்டையும் அவர் கொள்கைகளாக ஏற்கிறார். ரோ முத்துகுமாரை கொலை செய்து, சீமானை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை சீமானும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தார்.
  8. சிங்களவர் பார்வை நான் அறிந்த வரையில் சிங்களத்தில், தமிழர் = திரவிட. ஆங்கிலத்தில் interchangeable என்பார்கள். தமிழில் ஒத்த சொல் எனலாம். இன்றும் அதேதான் நிலமை. தெமள, தெமிலோ என்பன சற்றே மரியாதை குறைந்த விளிப்புக்களாயும், திரவிட என்பது அதே மக்களை மரியாதையா விழிப்பதாகவுமே அமைக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை - திரவிட சங்விதானய அல்லது திரவிட ஜாதிக சங்விதானய என்றே இன்றும் அழைப்பர். ஆனால் உண்மை இப்படி இல்லை என நாம் அறிவோம். தமிழகத்திலோ, ஈழத்திலோ நம்மை யாரும் நீங்கள் யார்? என கேட்டால் நாம் திராவிடர் என நாம் சொல்வதில்லை. தமிழர் என்றே சொல்வோம். முன்பும் கூட குமாரசாமியை சிங்களவர் திராவிட என அடையாளப்பசுத்தினாலும் நாம் தமிழர் என்றே அடையாளப்படுத்தி உள்ளோம். இதை குடிசன மதிப்பீடுகளில் காணலாம். இது வழமையானதே. உதாரணமாக - ஆங்கிலேயர்கள் அநேகர் - ஆங்கிலோ-சக்சன் (ஜேர்மன்) + நோர்மன் (பிரெஞ்) வழி வந்தவர்கள். ஆனால் அவர்கள் இனம் என்ன என கேட்டால் - ஆங்கிலேயர் என்பதே பதிலாக வரும். அதே போல ஐரிஷ், ஸ்கொட்டிஷ், வேல்ஸ் காரர் செல்டிக், அல்லது கெல்டிக். ஆனால் கேட்பின், மூன்று தனி இனப்பெயர்களான ஸ்கொடிஷ், ஐரிஷ், வெல்ஷ். இதே போல ஒரு பகுப்பே திராவிடம் என்பது. ஒரே வித்தியாசம். கெல்டிக் அடையாளத்தை அவர்கள் ஏற்பது போல் அன்றி, நாம் திராவிடம் என்பதே தொல் தமிழ்தான் என்கிறோம். இது உண்மையும் கூட. துளு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் அனைத்துமே தமிழின் குழந்தைகள்தான். ஆகவே திராவிடம் என்பதன் பொருள் தொல்தமிழ் என்பதே என் நிலைப்பாடு. ————— அரசியல் மொழிவழி மாநில பிரிவுக்கு முன்னர் அகண்ட மெட்டிராஸ் பிரசெடென்சியில் “தமிழ் தேசியத்தை” அரசியலாக முன்னெடுத்தால் அது மக்களின் 1/3 காண அரசியலாக சுருங்கி இருக்கும். எனவேதான் திராவிட அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு திக ஒரு அரசியல்கட்சியும் அல்ல. பெரியார் வாக்கு அரசியல் செய்யவும் இல்லை. ஆனால் அவர் முன்னெடுத்த கொள்கைகள் திராவிட கொள்கைகள் என ஆகிவிட்டன. ஆகவே கட்சிகளில் இருக்கும் “திராவிடம்” கொள்கையை குறிப்பதே. கம்யூனிசம், சோசலிசம், ….இப்படி.
  9. இந்திய ஒருமைபாட்டுக்கு கட்டுபட்டு, இந்திய கொடியை ஏந்தி, இந்திய தேர்தல்களில் பங்கு பற்றிய கட்சி ஒன்றின் தலைவராக தலைவர் பிரபாகரன் இருந்தாலும் ஒரு ஹைகோர்ட்டையும் பிடுங்க முடியாது. மேலே நானும், ரசோ அண்ணாவும் சொன்னது போல் - இந்தியன், சாதி இந்த இரு உணர்வுகளும் தமிழ் நாட்டில் மிக ஆழமானவை. இதை மீறி எந்த தலைவரும், அவர்களே விரும்பினாலும் மக்களை தமிழ் தேசியத்துக்கு, அதுவும் ஈழத்தில் நடக்கும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக திரட்ட முடியாது. அன்றும், இன்றும், என்றும் இதுதான் தமிழக களயதார்தம். நன்றி தம்பி
  10. இங்கேதான் முத்துகுமார் பிரதானமாகிறார்… சீமானை போல அன்றி பல.ம் வருடங்கள் வன்னியில் இருந்தவர் முத்துகுமார். அவரது படங்களை பார்தாலே தெரியும் அவர் எப்படி பட்ட பயிற்சிகளால் வெளிவந்துள்ளார் என. ராஜ்குமார் கடத்தல், பொலிஸ் மீது தாக்குதல் என பலதை செய்த நிஜப்போராளி. நாம்தமிழரை உண்மையான தமிழ் தேசிய அமைப்பாக கட்டி அமைக்க, கொள்கை தவறாது இருக்க, சீமான் மீது ஒரு கட்டுப்பாட்டை வைக்க - நியமிக்கப்பட்டவர் தான் முத்துகுமார். முத்துகுமார் யார் என்பதை தெரிந்து கொண்டு - அவர் மூலம் பெரும் ஆபத்து வரும் என்பதை கண்டு கொண்டு, றோ அவரை போட்டுத்தள்ளியது. எஞ்சிய சீமான் வெறும் வாய்வீரர் - தலைவரை 87 இல் மிரட்டியதை போல் மிரட்ட, சரண்டர் ஆகி விட்டார். முத்துகுமார் சாவின் பின் சீமானும், அவர் வழி நாம் தமிழரும் முழுக்க முழுக்க றோவின் வழிகாட்டலியேயே நடக்கிறன. றோவின் தலைமை அமித்ஷா. ஆகவே இப்போ அவர் சொல்படி. ஆனால் சீமான் தொடர்வது தமிழ் தேசியமே அல்ல. அது வெறும் போலி தமிழ் தேசிய கூச்சல். இது பிஜேபிக்கு வழி சமைத்து கொடுக்கும் வரை இதை ரோ அனுமதிக்கும். என்றைக்கு இதில் இருந்து உண்மையான ஒரு தமிழ் தேசிய தலைவர் வந்தாலும் - ஒன்றில் சீமானை போல் அவரையும் வாங்க பார்க்கும், இல்லை எண்டால் முத்துகுமார் போல போட்டுத்தள்ளும்.
  11. ஆனால் இவையும் மட்டுப்பட்ட நிலையில்தான் உள்ளது…எப்படி தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர் வரவு ஒரு பிரச்சனையோ அப்படித்தான் அங்கும். ஆனால் இந்த தேசியங்கள் “பிரிந்து போக கூடியன” என டெல்லி நம்பவில்லை, ஆகவே இவற்றை tolerate பண்ணுகிறது, கூட்டு அரசியலும் செய்கிறது. ஆனால் தமிழ் தேசியம் அப்படி அல்ல - ஈழத்துக்கு முதல் தனி நாட்டு கோரிக்கை எழுந்தது தமிழ்நாட்டில்தான். அதன் பின் முழுவீச்சாக ஈழப்போர்கள். ஆகவே தமிழ் தேசியத்தை பாக்குநீரிணியின் இரு மருங்கிலும் - இந்தியாவின் எதிரி என பார்க்கிறது டெல்லி. இந்த நிலையில் உண்மையான தமிழ்தேசியதை ஒரு போதும் டெல்லி அனுமதிக்காது. இது ஏற்றுகொள்ள கூடியதே.
  12. வங்கத்தில் இந்தியா தலையிட ஒரே காரணம் - அது பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் தனது ஒரு எல்லையில் இருந்து பாகிஸ்தானை கிளப்பலாம் என்பதாலேயே. இலங்கை பாகிஸ்தான் இல்லை. ஆகவே யார் எப்படி தமிழ் நாட்டில் முக்கினாலும் இந்திய நலன் கருதியே முடிவு எடுக்கப்படும். 1987 இல் எம் ஜி ஆர், கருணாநிதி இருவரும் எதிர்த்த போதும் இலங்கைக்கு படைகளை அனுப்பினார் ரஜீவ். தான்னால் முடியவில்லை என புலிகளிடம் கைவிரித்தார் எம்ஜிஆர்.
  13. பிழை. மொழி வழி மாநில பிரிப்புக்கு முன், அகண்ட மெட்ராஸ் பிரசிடென்சியில் 5 இனங்களும் இணைந்து இருந்த போது தென்னிந்தியர் எல்லாருக்கும் பொதுவாக உருவானதா “திராவிட நாடு” கோரிக்கை. “திராவிடர் கழகம்”, “திராவிட கொள்கை” எல்லாமுமே. திக வின் முன்னோடி ஜஸ்டிஸ் பார்ட்டி. மொழிவழி மாநில பிரிப்பின் பின், தமிழ் நாட்டிற்கு தமிழர்தான் ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும் - இதை பெரியாரே வலியுறுத்தியுள்ளார்.
  14. எனக்கும் சொல்லி தரமுடியுமா? இப்படி இணைப்பது யாழின் சேவர் சுமையை குறைக்கும் என நினைக்கிறேன்.
  15. சாத்திரி ஒரு நாவலாசிரியர். சுமே அன்ரியும் எழுதுவா. இன்னும் ஓரிருவர் உளர் என நினைக்கிறேன்.
  16. திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இம்முறை தமிழ்நாடு பொலிசுக்கு வழங்கலாம்.
  17. தலையிடாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் சீமான் வந்து…. தன் சுய நலனுக்காக எம்மை தலையிட வைத்து விட்டார். இனி தலையிடாமல் இருந்தால் … நாம் எல்லோரும் நா த க சார்பானவர்கள் என ஏனையோர் கருதுவர். இப்போதே கருதுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்போ தலைவரும், புலிகளும், ஈழத்தமிழரும் வெறுக்கப்படுவதுபோல், 2009 க்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை, 91 இல் கூட. ஆகவே இனி தலையிடாமை என்பது எமக்கு ஒரு தெரிவல்ல. கறந்தபால் மடி ஏறாது.
  18. @பாலபத்ர ஓணாண்டி, நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை. ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா? 1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது. காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை. இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள். தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முடிந்தால் விளக்கம் தரவும். இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை. 2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது. இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை. ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும். யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.
  19. பார் லைசன்ஸ் எடுத்து குடுத்தா மட்டும் போதாது… கஸ்டமர் வாற மாதிரி சூழலையும் அமைக்க வேண்டும்.
  20. எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், எம் பி ஆனபின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தேன். உங்களை போலவே ஏமாற்றம் மட்டுமே மிச்சம். இப்போ இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு இவர தூக்கியடிக்கப்பட அந்த இடத்துக்கு வினைதிறனானவர் வரவேண்டும் என்பதே.
  21. அப்போ கொடுக்கப்பட்டது சரிதான். அதன் பின்னால் நடந்தவை மோசமானவை. ராபின்கள் மேலும் இஸ்ரேலில் வந்திருந்தால், ஹமாசை பலஸ்தீனர் ஒதுக்கி இருந்தால் வரலாறு மாறி இருக்கலாம். ஒபாமாவுக்கு கொடுத்ததுதான் கேலிகூத்து.
  22. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்…. கண்ட கண்ட… எங்கண்ணை கேக்குறானுங்க🤣
  23. வேறை ஒண்டும் இல்லை, 1. ஆள் உள்ள வந்ததே - பழையபடி யாழில் குழு மோதலை தூண்டி விடலாம் என்ற நப்பாசையில். அவரின் கெட்டகாலம் பலருக்கு இப்போ அதில் நாட்டமில்லை. அது மட்டும் அல்லாமல், பல விடயங்களில் (உக்ரேன், பலஸ்தீன், போலிக்கா) குழு எல்லாம் மாறி மாறி உடைஞ்சு இப்போ எல்லாரும் எல்லா குழுவிலும் மெம்பேர்ஸ்🤣. இது தற்செயலாக நடந்த நல்லவிடயம். ஆகவே ஆளின் பப்பு வேகவில்லை. 2. வரும் போது நிர்வாகம் நடுநிலை இல்லை என கூறி கொண்டு வந்தவர், இப்ப நிர்வாகத்கிடம் வினயமாக கோரிக்கை வைக்கிறாராம்🤣. நடுநிலை இல்லாத களத்தில் மானஸ்தர்கள் மினக்கெடமாட்டார்கள் 🤣. 3. பிறகு நான் போலி ஐடியில் வாறேன் என ஒரு லுச்சா கதை. அதுவும் பிசு பிசுத்து போச்சு. பிறகு என்னை பற்றி ஒரே ஒப்பாரி🤣. 4. இடைக்கிடை திரிக்கு சம்பந்தமே இல்லாமல் ஆட்டு ஸ்டோரி, லூட்டன் இமி கிரேசன் ஸ்டோரி என இணைத்து, திரியை அரட்டை திரியாக்கி தளத்தை மலினப்படுத்தும் முயற்சி. அதையும் எவரும் கண்டுக்கவில்லை. எல்லோரும் திரியில் விடயத்தில் பிசி. 5.நான் தமிழக அரசியலில் கருத்து சொல்வதை 2003 டிசம்பரில் விட்டு விட்டேன் என சொல்லி விட்டு, வந்த பின் கருத்து எழுதிய ஒரே திரி இந்த திரிதான். அதிலும் பல அரசியல் கருத்துகள் 🤣. 6. இப்போ ஆத்தா கொடுமையில நிர்வாகத்துகே அட்வைஸ் - செவ்வாழை காமெடிதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.