Everything posted by satan
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
வணக்கத்துக்குரிய புத்தரை கைது செய்து விட்டார்களாம். வணக்கத்துக்குரியவர், வணக்கத்துக்குரிய இடத்தில இருந்தாற்தான் அது வணக்கத்துக்குரியது. அதைவிட்டு மலம் சலம் கழிக்குமிடம், விவசாயம் செய்யுமிடம் எல்லாம் வைத்து கேலிக்கூத்தாக்கினால் நாய்கூட கழித்துவிட்டுத்தான் செல்லும். இந்தபிக்குகளை உழைத்துச்சாப்பிடச்சொல்லுங்கள். மக்களின் வரிப்பணத்தில் தின்றுவிட்டு முன்னுரிமை கேட்டு சும்மா இருந்து திமிர் பிடிச்சாடுதுகள். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால்; ஒருத்தனும் காவிஉடுத்தி விகாரையில் இருக்க மாட்டான். குடு காரன், காவாலி, காடை எல்லாத்துக்கும் காவியும், இராணுவ சீருடையும் போத்தி தங்களை பாதுகாக்க அரசியல் வாதிகள் வளர்க்கிறார்கள், போஷிக்கிறார்கள். பிக்குகள் விகாரைக்குள் அடங்கி பௌத்த தர்மத்தை போதிக்காத வரை சலுகைகள் இல்லை, அவர்களும் சாதாரண மனிதர்களே என்று அறிவியுங்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், பாலியல் சேட்டை விடுகிறார்கள், சண்டித்தனம் காட்டுகிறார்கள், நாட்டை கொழுத்துகிறார்கள், சாதாரண மக்களை விட கேவலமாக நடந்து மக்களை பிழையான வழியில் வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? சட்ட விலக்கழிப்பு? இதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதனாற்தான் இவர்களுக்கு இந்தகொழுப்பு. குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அது அரசனாக இருந்தாலென்ன, ஆண்டியாக இருந்தாலென்ன, ஆசானாக இருந்தாலென்ன. அப்போதுதான் நாடு சமநிலை பெறும். இதை அனுரா சட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டில் சமாதானம், சமஉரிமை என்பது வெறும் பேச்சுக்கு மட்டுமே. துறவிகளை கண்டால் கையெடுத்து கும்பிட மனம் வர வேண்டும். இதுகளை கண்டால் பயந்து அலறியடித்து ஓட வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மதவாதம், இனவாதம். நாடு அழிந்தும் மாறாத இரும்பு மனமெல்லாம் அன்பை போதிக்கினமாம்! அவர்களை அரசு போஷிக்குதாம்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
மஹிந்தவோ தானே பயங்கரவாதிகளை அழித்தவர் என சிங்களமக்களிடம் பாராட்டு வாங்குகிறார், அர்ச்சுனாவோ நாமலுக்காக வக்காலத்து வாங்குகிறார், தேசியத்தலைவர் தனது கடவுள் என்கிறார், இதை மஹிந்தவின் அரசாங்கத்தில் இவரால் சொல்ல முடிந்திருக்குமா? முடிந்திருந்தால் பயங்கரவாத சட்டத்திலோ, வெள்ளை வானிலோ காணாமல் ஆக்கப்பட்டிருப்பார். தனது நலனிற்காக எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யாரோடும் பேசுபவர்தான் அர்ச்சுனா. மக்களுக்காக இவர் செய்ததை விட, தனது அடாவடியினால் காவற்துறை சென்றதே அதிகம். இவரை நம்பி வாக்களித்த மக்கள்தான் பாவம். இந்த லட்ஷணத்தில ஜனாதிபதி கனவோடு இவர் பின்னால் சுற்றுகிறார் நாமல். இவரோ தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி தானென்கிறார். நாமலும் நம்பி விட்டார் போலும். தங்களின் அரசியற் செல்வாக்கு சரியும்போதெல்லாம் கையிலெடுக்கும் ஆயுதம் பௌத்தம், இனம். இதனாலேயே இவர்கள் அழியப்போகிறார்கள்.
-
புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
இப்ப என்ன சொல்ல வருகிறார் இவர்? புத்தரை கைது செய்யவில்லை என்கிறாரா? புத்தரை கைது செய்ய முடிந்தால் இவர்கள் எதற்கு அவருக்கு இடம் பிடிக்கிறார்கள்? புத்தரை வைத்து, பலி கொடுத்து வயிறு வளக்கும் கூட்டம். ஓஓ, பிக்குகளை கைது செய்யவில்லை என பொருமுகிறாரா? அதுதான் போலீசாரை தாக்கிவிட்டு தாங்களே போய் நீட்டி நிமிர்ந்து கிடக்குதுகள்.
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அப்படி இவர் என்னத்தை பெரிதாக சாதித்து விட்டார், சாத்தான் வந்து கருத்தெழுதுவதற்கு? எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை. இதோ பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வரப்போகிறது எனக்காத்திருந்தார், வரவில்லை. சவால் விட்டுப்பார்த்தார் பயனில்லை, எச்சரிக்கை செய்தார், மசியவில்லை. நாமலோடு பேச்சுவார்த்தை நடத்தினார், எதுவும் நடைபெறவில்லை. கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து ஒருமாதிரி கதவு திறந்தாயிற்று. உள்நுழைந்தவர்கள் ஏதாவது கதிரை எதிர்பார்ப்பார்கள், ஒரு ஓரத்தில் பார்வையாளராக அனுமதித்தாலும் பரவாயில்லை என்பார்கள். மாகாண தேர்தலை நடத்த வேண்டுமாம், தான் முதலமைச்சர் கதிரையில் அமரவேண்டும். ஏன் ராஜபக்ச காலத்தில் மாகாண தேர்தல் கிரமமாக நடத்தப்பட்டதா? அப்போது இவர் தனது அதிருப்தியை வெளியிட்டாரா? ஏன் வெளியிடவில்லை? அன்று வெளியிட்டிருந்தால் பதவியில்லை, இன்று பதவி கொடுத்திருந்தால் இந்த கோரிக்கை எழுந்திருக்காது. இங்கு இரண்டுபேர் சுமந்திரனுக்காக காவடி எடுக்கிறார்கள் அதிலும் தூக்குக்காவடி! இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.
-
புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
அவசரமாக புத்தரை பலிகொடுத்து விளம்பரம் செய்த அரசியல் செய்யும் பேரணி. பாவம் இவர் தன்வாயாலேயே அகப்பட்டுக்கொண்டார்.
-
தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது - ஜனாதிபதி
அன்பையும் அமைதியையும் போதிக்க வேண்டியவர்கள், நாட்டில் வன்முறையை தூண்டுகிறார்கள், அதற்கு அடிபணிந்தார் ஜனாதிபதி. நாங்கள் மஹிந்தவின் சேனை, அவருக்காக காவி தரித்தவர்கள் என்கிறார் ஒரு பிக்கு. அப்படியானால் அவர் பௌத்த பிக்கு அல்ல, மஹிந்தவின் அடிமை. பாதாள போதைப்பொருள் கடத்துபவனெல்லாம் மஹிந்தவின் பாதுகாப்பு படை, மகா சங்கம். நாட்டில் வன்முறையைத்தூண்டும் பிக்குகளை கைது செய்யுங்கள், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதிகளையும் அரசியல் வாதிகளையும் வெளியில் கொண்டு வாருங்கள், பௌத்த சங்கத்தை தூய்மைப்படுத்துங்கள், சட்டம் யாவருக்கும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றால்; அது பிக்குகளுக்கல்லவா? அதனாற்தான் அவர்கள் எல்லா ஒழுக்கக்கேடுகளிலும் முன்னிற்கிறார்கள். இவர்கள் எதை போதிப்பார்கள்? நீங்கள் வழ வழ என்று பேசிக்கொண்டிருக்கும் போது அரசியலை நம்பி சுகம் கண்டவர்கள் உங்களுக்கு முன் பலம் பெற்றுவிடுவார்கள். முதலில் குற்றவாளிகளை கைது செய்யுங்கள், அம்புகளை கைது செய்து காலத்தை விரையமாக்கும் ஒவ்வொரு வினாடியும் எதிரி தன்னை பாதுகாத்துக்கொண்டு பலமடைகிறான். தங்களை சுற்றி மக்களை அரணாக வைத்திருக்கிறார்கள், தமக்கு வரும் ஆபத்தை மக்களை கொண்டு முறியடிப்பதற்காக.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அவசர அவசரமாக பிக்குகளை சந்திக்கிறார் நாமல். எங்கே, வைத்த நெருப்பு புகையோடு அணைந்து விடப்போகிறதோ, அதை முளாசி எரியப்பண்ண எதை ஊற்றவேண்டுமென ஆலோசிக்கிறார். சஜித் புத்தரை வெளியேற்றியது தவறென்றார், இப்போ அவரை அரியணையில் ஏற்றி வைத்தாயிற்று, அப்பவும் குற்றம் சுமத்துகிறார். தூஷண பிக்கர் சொல்லுறார், தாங்கள் மகிந்தாவுக்காக காவி தரித்தவர்களாம். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மக்கள் போய் அவரின் காலைத்தொட்டு வணங்குகிறார்கள். எவ்வளவு அபத்தம்? அடாத்தாக புத்தரை நிறுவிப்போட்டு, பிரித் ஓது துகள். பற்றி எரிய வேண்டும் என்று ஓதுதுகளா? அனுரா, இதில் விட்டுக்கொடுத்தால் அவர்கள் பிக்குகளை வைத்து கலவரம் செய்வார்கள், அனுரா எல்லாவற்றிலும் அடிபணிந்து போயே தீரவேண்டும். முதலிலேயே சரியான நடவடிக்கை எடுத்தால், பின் இப்படியான சொறிச் சேட்டை செய்யத்தயங்குவார்கள். இவர் செய்திருக்க வேண்டியது; புத்தரை வைத்து, நெருப்பு வைத்தவர்களை கைது செய்து, பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவர்களை விகாரைக்குள் அடங்கியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வீட்டுக்கனுப்ப வேண்டும். இவர்களுக்கு ஒரு கொள்கையில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒழுக்கமில்லை, தலைமை இல்லை, கேள்வியில்லை, பொறுப்பு இல்லை, அன்பு கருணையில்லை. துறவிகள் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி, நாட்டை எரித்து, வயிறு வளக்குதுகள்.வெட்கமில்லாமல், மஹிந்தவுக்காக காவி உடுத்தினோம் என்று பகிரங்கமாக ஒரு பிக்கு சொல்லுது, இதுகளை பின்பற்ற ஒரு கூட்டம். அனுரா பிக்குகளின் காலில் விழுந்து அவர்களுக்குப் பின்னாலுள்ள தோத்துப்போன அரசியல் வாதிகளிடம் சரணடைந்து விட்டார். இனிமேல் இவர் சாதிப்பது கஸ்ரம். உடனேயே பிக்குகளை கைது செய்திருந்தால் மற்றவர்கள் பின்வாங்கியிருப்பர்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்கு அச்சாணி பூட்டியாயிற்று. இதை பிடுங்கினால்; இவர்களது எதிர்ப்பு பூதாகரமாக மாறும். இதற்கு அடிபணிந்தால் எல்லா அடாவடியும் இந்த முறையிலேயே அரங்கேறும். இதற்கு செய்ய வேண்டியது; மக்களுக்கு விழிப்புணர்வு, விசேடமாக புத்தரை வைத்து அரசியல் நடத்தும், வயிறு விளக்கும் பிக்குகளுக்கு மத அறிவை போதிப்பது. அன்பை போதிக்கும் பௌத்தம் அடாவடியை வளர்க்கிறது. அதை எதிர்பார்த்து தூபமிட்டது யார்? அடுத்தவன் காணியில், தேவையற்ற இடத்தில், காரணமில்லாமல் சிலை வைப்பது, விகாரை எழுப்புவதுதான் சஜித்தின் நல்லிணக்கமா? அதை கேட்டால் நல்லிணக்கம் கெடுகிறது கேட்காவிட்டால் நாடுமுழுவதும் விகாரை எழுப்புவது, பின் இது சிங்கள பௌத்தநாடு என வரலாறு திரிப்பது. அது சரி சாணக்கியன் அண்மையில் ஒரு கதை எழுதினாரே, அதற்கு என்ன நடந்தது? இதே சஜித்துக்கு செம்பு தூக்கிய சுமந்திரன் இப்போ அருண் ஹேமச்சந்திரா பதவி விலகவேண்டுமென கூவி தன்னை மறைக்க பாக்கிறாரா? அல்லது சஜித் சொன்னவை சரியென்கிறாரா? இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கூவுகின்றனரே, எங்கே தன் சட்டத்திறமையை நிரூபித்து அந்த புத்தரை வெளியேற்றட்டும் பாப்போம்! ம், இன்று பதினெட்டாந்திக்காதி, இன்னும் மூன்று நாள் இருக்கிறது, தமக்கு சார்பாக மக்களை திரட்டி பேரணியை நடத்துவதற்கு. அதற்கு, கேவலம் மதத்தை பயன்படுத்துவதும், பிக்குகள் அடாவடி செய்வதும் உண்மையான மதமா? எனக்கென்னவோ இதற்குப்பின்னால் சஜித் இருப்பதுபோல் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவு வரும்வரை புத்தர் சிலை நிறுவுவதை நிறுத்தியிருக்கலாம், அதற்காக அடாவடிக்கு அடிபணிந்து எல்லாவற்றுக்கும் அடிபணியும் தோத்துப்போன அரசியலே நடைபெற வாய்ப்புள்ளது. அடாவடிகள் இதே அடாவடியை, தந்திரத்தை பாவித்து தமது காரியத்தை நிறைவேற்றுவார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பொறுமையின் சிகரமே சுவியர்தானே!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அட, அவரையா வாத்தியார் என குறிப்பிடுகிறார் சுவியர்? இது தெரியாமல் நான் வேறு யாரையோ தேடுகிறேன். சும்மா பகிடிக்கு சுவியர். இவ்வளவு எழுதுகிறீர்கள், இடையில் வந்து, மரியாதைக்காகவாவது ஏதாவது கருத்து சொன்னால் குறைந்தா போவார் அந்த வாத்தியார்? இவருந்தான் தேடுகிறார்.
-
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
நாமல், ரொம்ப பொறுப்போடும் அவசியத்தோடுந்தான் பேசுறார். அதற்குமுதல் தங்கள் குடும்ப ஆட்சியின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதையும் ஆராய்ந்து விளக்கமளிக்க வேண்டும். இதில் எது உண்மை? இதெல்லாம் இவர்கள் சொல்லும் காரணங்கள், ஆனால் இவர்கள் வேண்டுமென்றே தொலைத்த அரசியலை திரும்பப் பெற அலைகிறார்கள், கூடுகிறார்கள், விளக்கம் அளிக்கிறார்கள். இந்த காரணங்கள் முன்னைய ஆட்சிகளிலும் இருந்தனவே, அப்போது ஏன் இவர்கள் பேசவில்லை, கூடிக்கதைக்கவில்லை?? அப்போதும் இப்போதும் பதவி முக்கியம் இவர்களுக்கு. ஆண்டிகள் கூடி மடம் கட்ட முயற்சிக்கிறார்கள். சாவு வீட்டில் அரசியல் கதைக்கிறார்கள், அழைப்பு விடுகிறார்கள், ஏற்கிறார்கள். எங்கும் எப்போதும் எதிலும் இவர்கள் செய்வது அரசியல்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??
-
அச்சமின்றி மாவீரர்களை நினைவுகூரமுடியும் : NPP அமைப்பாளர் தெரிவிப்பு
அதை குழப்புவதற்கும் ஆட்கள் உண்டு!
-
தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!
இந்த சகுனிக்கு, குற்ற உணர்வு தலைக்கேறி பயத்தில் அப்பப்போ புலிகள் என்று உளறுது. இலங்கை அரசு, தாய்லாந்து, நேபாள் போன்ற இடங்களில் போய் போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தற்காரரை கைது செய்யும்பொழுது, இது இங்கே புதுக்கதை எழுதுது. இந்தியாவில் புலிகள் போதைப்பொருள் வர்த்தகம் செய்கிறார்களாம். புலிகளே இல்லை அழித்துவிட்டோம் என்கிறது இலங்கை. இந்தியாவில் வர்த்தக பரிமாற்றம் நடந்தால் அது யாரின் தவறு? அதை தடுக்க வேண்டியது யாரின் கடமை?
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
இது, புலிச்சாயமா பாதாள போதைக்கடத்தல் சாயமா?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதென்ன, பாட்டுக்கு பாட்டு போட்டியா நடக்குதிங்க? சுவியர் தனிராகமிசைக்கிறார் நின்று!
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
வடக்கின் முதலமைச்சர் சுமந்திரன், கிழக்கின் முதலமைச்சர் சாணக்கியன். இது அவர்களின் கனவு. அதற்காக சில போலி அறிக்கைகள், சந்திப்புகள் தயாராகி இருக்கிறது. மக்கள் இன்னும் மூடர்கள் என்கிற மிதப்பு இவர்களுக்கு. தமிழரசுகட்சியென்றாலே; ஏமாற்றுக்கட்சி, மக்களை உசுப்பேத்தும் கட்சி என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். வேறு தெரிவில்லாமலே அனுரா அரசை ஆதரிக்கிறார்கள் மக்கள். இத்தனை கட்சிகளை உள்ளிழுத்து விட்டவர்களே தமிழரசுக்கட்சிதான். பின் மக்களை குறை கூறுவார்கள். மக்களுக்கு கடமை செய்யாதவர்களுக்கு உரிமை இல்லை. எதுவும் செய்யாமல் கதிரையில் தொடர்ந்து இருக்க நினைப்பது சுத்த சுயநலம்.
-
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ
அவரது அனுபவம். வளர்த்து விட்டவர்கள் இப்போ நழுவப்பார்க்கிறார்கள். இவர்களது ஆட்சிக்காலத்திலும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை எல்லாம் நடந்தனவே. அப்போ இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்கள் தவறை மறைக்க மற்றவர்களை குறை கூறுவது இவர்களது வழமை. இவர்களது நீண்ட ஆட்சியின் வளர்ச்சியே இவையெல்லாம். அரசாங்கத்தின் அனுசரணையோடு நடப்பதென்றால், அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்? சிறையில் அடைத்து விசாரணை செய்ய வேண்டும் அரசாங்கம்? பாதாள உலக போதைக்கடத்தற்காரர் தங்களை பாதுகாத்துக்கொள்ள, தொழில் போட்டி காரணமாக கொலை செய்கிறார்கள். இவர் ஏன் பதறுகிறார்? தன்னையும் போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்றா?? கைது செய்யபோகிறார்களென்றா???
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அன்று, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்; கிழக்கின் நிலைமைதான் வடக்கிலும் நிகழ்ந்திருக்கும். கோவில்களில் மீன் சந்தையும், கருவூலங்களில் மாட்டிறைச்சிக்கடையும் அமைந்து, பல முஸ்லீம் கிராமங்கள் தோன்றி, பலர் முஸ்லிம்களாக மாறியிருப்பர். அப்போ பெரிய சந்தோசம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள், மீண்டும் மன்னிப்பு கோரி மீள குடியேற அழைத்தார்கள். இவர்கள் அப்படியா? பிச்சைக்காரனின் புண்போல அப்பப்போ பிரிச்சுக்காட்டி, வெவ்வேறு புனைகதைகளை புனைந்து, எந்தக்காலத்திலும் நல்லிணக்கம் ஏற்படாமல் பாத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதே அவர்கள் தம் இருப்பையும் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இப்போ அதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது என்றே நான் நினைக்கிறன். சரி, புலிகள் இல்லாத காலத்தில் ஏன் இவற்றை ஆண்டுதோறும் புதுப்புதுக் கதைகள் புனைகிறார்கள்? அவர்கள் உயிரோடு இல்லாதபடியால் தாம் நினைத்தபடி கதை எழுதலாமென்றா? "உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்."
-
விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!
இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும். பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா? சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்
சாதாரணமாக உணவு நிலையங்கள் விடுதிகள் வியாபார நிலையங்கள் ஆகியவையே இப்படியான சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுகின்ற வழமை இது அசாதாரணம் ஆகவே அந்த நிலையத்தை சார்ந்த தொழிலாளர்களே இந்த முறைப்பாட்டை செய்திருக்க வேண்டும் எப்படியாகிலும் தவறு எங்கே நடந்தாலும் தவறுதான்.
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்
???
-
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இதை நம்புகிறீர்களா கோஷான் அவர்களே? அடுத்த ஆண்டு இதோடு வேறொரு கதை சோடித்துக்கொண்டு வருவார்கள். ஏதோ தாம்தான் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர் எதிலும் பாதிக்கப்படவில்லை என்றொரு அனுதாபத்தை தேடுவதும், தமிழரை குற்றவாளிகளாக்குவதுமே அவர்களின் எண்ணம். அவர்களை அன்று வெளியேற்றாமல் விட்டிருந்தால்; கிழக்கை விட பலமடங்கு அழிவு வடக்கில் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தம்மை பெரிது படுத்துவதற்கு, தமது குற்றங்களை மறைப்பதற்கு இப்படியான கூக்குரல்கள் உதவுமென எண்ணுகிறார்கள். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழர் ஒதுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆகவே தமிழரை தாக்குவதால் தம்மை யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு அவர்களுக்கு.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்? அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.