Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இந்த இணைப்புகளில் எந்தப்படத்தையும் என்னால் பார்க்க முடிவதில்லை. நான் தாமதித்து பார்க்க முயற்சிக்கிறேனோ தெரியவில்லை. ஒருதடவை இங்கே சொல்லியும் பார்த்தேன் யாரும் பதிலிறுக்கவில்லை. ஒருவேளை அந்த இணைப்பின் கால வரையறை குறுகியதாக இருக்கலாமென எண்ணி அவர்கள் இடும் பதிவுகளை மட்டும் வாசித்தறிந்து கொள்வேன்.
  2. தென்பகுதியில் பாதாள போதைக்கும்பல் கொலைச்சம்பவத்தை ஒத்து இங்கு வாள்வெட்டு. விடுதலைப்போரை முறியடித்ததே இவற்றை வளர்க்கத்தான்.
  3. என்ன சோகமிது! இறந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும். தன்னுயிரை பொருட்படுத்தாது பிறர் உயிர் காக்க சென்று உயிர் நீத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  4. இவருக்கெதிரான நீதிமன்ற விசாரணைகளேதும் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதோ? இருக்கலாம்! புத்தர் ரேஞ்சுக்கு மக்களுக்கு ஆசீர் அளித்துக்கொண்டிருந்தாரே, அதற்கிடையில் என்ன வந்தது? பாவம் மக்கள் ஆசீர் வாங்க வைத்தியசாலைக்கு கிளம்பப்போகிறார்கள்!
  5. எந்தச்சந்தர்ப்பத்திலும் தம் தலைவனை மக்கள் மறந்ததில்லை. எந்தக்கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், சலுகைகள் வந்த போதிலும் அவரையும் அவர்தம் சேனையையும் அவர்கள் தந்த பாதுகாப்பையும் அவர்கள் மறுக்கவுமில்லை, விட்டுக்கொடுக்கவுமில்லை. ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று கூவியவர், இன்று மாவீரர் அடியில் மண்டியிட வைத்துள்ளனர் மக்கள். சந்தற்பவாதிகளும் மாவீரரின் தியாகத்தின் முன்னால் அடிபணிந்தேயாகவேண்டும். ஆயிரம் காரணங்கள் கூறி தம்மை நிஞாயப்படுத்தலாம், மாவீரரை புறக்கணிப்போருக்கு தம்மதியில் இடமில்லை என்பதை நிரூபித்து விட்டனர் மக்கள். வாழ்க நம் சேனைத்தலைவரும் அவரது வீரர்களும். நிம்மதியாகத்தூங்குங்கள்!
  6. எனது கருத்துக்களை நீங்கள் வாசிப்பதில்லை என்று பலமுறை இங்கு குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று எனது கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிற்க, கைது விசாரணை, மறியல், விடுதலை என்பது நீதிமன்றம் சார்ந்த விடையம். சில அரசியல் தெரியாத கோமாளிகள் நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதும், நீதிமன்ற உத்தரவுகளை கேலிக்கூத்தாக்குவதும், குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை அறிவித்தவர்களையும், விடுதலை செய்வதும், விசாரணையின்றி தடுத்துவைப்பதும், நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்புவதும், விசாரணைகளை குழப்புவதும், குறிப்புகளை அழிப்பதும் நடந்துள்ளது. அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுர, ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார், நீதிமன்ற விசாரணைகளில் தான் தலையிடப்போவதில்லை என. இதில் தலையிட்டு நீதிமன்றத்தை நாடி, அவர்களுக்காக வாதாடி, விடுதலை பெற்றுக்கொடுப்பது சட்டத்தரணிகளின் பணி. அனுராவிடம் போவதைவிட இவர் போயிருக்க வேண்டிய இடம் நீதிமன்றம். ரணிலுக்காக நீதிமன்றம் போக முடியுமென்றால் ஏன் தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை காணாமல் விட்டார்? ஏன் தேவையில்லாத இடத்தில் முறையிடுகிறார்? தனது அரசியல் பேரம் பேசலுக்காக பாக்கி வைக்கிறாரா? நுகேகொடை பேரணியில் தொடங்கி, எங்கெங்கோ போய், அதனுடன் சம்பந்தப்படாத, தேவையற்ற பிரச்சனைகளை நுழைத்து என்னில் தவறு காண முயற்சிக்கிறீர்கள். இதில் எனது நேரத்தை செலவிட்டு வாசகர்களுக்கும் எரிச்சலை கிளப்ப நான் விரும்பவில்லை. உரையாடலுக்கு நன்றி! ஒவ்வொரு அரசு மாறும்போதும் இந்த துருப்புச்சீட்டை தூக்கிக்கொண்டு ஓடுவதும் கோரிக்கை வைப்பதும் அழைப்பு கேட்ப்பதும் தனது கதிரைக்காகவே. நீதிமன்றம் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலகுவான வழி இருக்கு என்பது சில சட்ட மேதைகளுக்கு தெரிவதில்லை.
  7. அதுசரி, ஏன் மூஞ்சூரொன்று இப்ப குறுக்கால ஓடுது? மஹிந்தவின் காலத்தில், அநிஞாயத்திற்கு அவர்களுக்கு முட்டுக்கொடுத்து நிஞாயப்படுத்தியவர், இப்போ ஏன் மாற்றிப்பேசுகிறார்? எல்லோருக்கும் திடீரென்று அனுரா மேல் பாசம் வந்திட்டுது! இவர் கூறும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே.
  8. ஆனந்த சுதாகரனை அனுரா கைது செய்யவில்லை. கைதிகள் விடுதலை என்று ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் ஓடித்திருக்கிறவர் அவரின் விடுதலைக்காக என்ன செய்தார்? சும்மா கோரிக்கை வைத்துகொண்டுபோய் கதிரை கண்டவுடன் அமரக்கூடாது, தனது சட்ட வல்லமையையும் காட்ட வேண்டும் அப்படி ஒரு திறமை அவரிடம் இருந்தால். ரணிலுக்காக வழக்காடுவார் கருத்து சொல்லுவார் ஆனால் தனது கதிரைக்கு மட்டும் இவற்றை தூக்கிக்கொண்டு போவார்.
  9. நாங்கள் சஜித்தின் இனத்துவேஷத்தைப்பற்றி, இரட்டை வேடத்தைப்பற்றி இங்கு கதைக்கிறோம். கடந்துபோன பஸ்சுக்காக காத்திருக்கவில்லை. அனுராவை ஒரு இனவாதியாக காட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் இனவாதத்தை, மதவாதத்தை விட்டு வெளியேறினால், அதைவைத்து பிழைக்கும் கூட்டத்திற்கு வாழ வழியில்லை. அதனால் எப்படியாவது அதை வளர்த்து, ஊதிப்பெருப்பிக்க முயற்சிக்கிறார்கள். தேவையற்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களுக்கு சென்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.
  10. தாங்கள் வைத்த நெருப்பு மூண்டு எரியவில்லையே என்கிற ஏமாற்றம் சஜித்துக்கு. அதனால் அதை மீண்டும் மீண்டும் ஊதுகிறார். இனவாதத்தை தூண்ட பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாம். யார் அவசரமாக சிலையை நிறுவியது? யாருமே இனவாதம் பேசவுமில்லை, தூண்டவுமில்லை. தாங்களே இனவாதத்தை தூண்ட செய்துவிட்டு, அது தூண்டவில்லை என்பதற்காக சஜித் பேசிப்பேசி தூண்டுகிறார். புத்தரை அந்த இடத்திலிருந்து எடுத்தது பிழையென்கிறார், வைத்தபின்னும் பிழையென்கிறார். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க்கிறார். நினைத்தது நடக்கவில்லையேயென்கிற பொருமல். இன்னொன்றும் சொல்கிறார், பௌத்தத்துக்கு முன்னுரிமையாம், அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் சம உரிமையாம். அப்படியெனில் பௌத்தத்துக்கு எப்படி முன்னுரிமை? இவர்களெல்லாம் ஜனாதிபதியானால் நாடு எங்கே போகும்? தமது திறமை தெரியாமல் ஜனாதிபதிகனவு. எல்லோரின் கனவிலும் மண்ணள்ளி வைக்கப்போகிறார் அனுரா, ஜனாதிபதி முறை ஒழிப்பு!
  11. பாவம் சஜித்தும் நாமலும். அவர்கள் நினைத்திருப்பார்கள் அனுரா படையை அனுப்பி தங்கள் பேரணியை தடுக்கும் போராட்டம் வரும் அதனை தங்களுக்கு சாதகமாகலாமென நினைத்திருப்பார்கள் மாறாக அனுரா அவர்களது பேரணிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து தடங்கல் இல்லாமல் செல்ல வழி அமைத்துக்கொடுத்து போராட்டங்களால் தான் அடிபணியப்போவதில்லை அவர்கள் பாதையில் தான் செல்லப்போவதில்லை என்பதை நிரூபித்து அவர்களை வெட்கமடையச்செய்திருக்கிறார் ராஜபக்ச திருடர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பாதாள போதைக்கும்பல், ஊழல் பெருச்சாளிகள் கொலை கொள்ளைக்காரர் இவர்களை பணயம் வைத்து மக்களை திரட்டி தம்மை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஓடிகளைக்குமாடும் இவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும். மக்களைக்கூட்டுவதற்காக சஜித் தனது பச்சை இனத்துவேசத்தை வெளிக்காட்டி, தன்னை தமிழ் மக்களுக்கு இனங் காட்டியுள்ளாரே தவிர அவர் நினைத்தது நிறைவேறவில்லை, எதுவும் சாதிக்கவில்லை. உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன் என்கிற கதையாய் சஜித்தின் நிலைமை. தேர்தல் காலத்தில் இவர் எப்படி தமிழரிடம் வாக்குக்கேட்பார்? இவருக்கு தமிழ் மக்களின் வாக்கே அதிகமாக விழுவது, அதையும் இழந்து தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார். இவருக்கு வாக்குபோடும்படி கேட்ட சுமந்திரன், அரிய நேந்திரனை விலக்கி வைத்த சுமந்திரன் இதற்கு பொறுப்பேற்று, மக்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக தமிழரசுக்கட்சியிலிருந்து விலக வேண்டும். ஏனையோர் இவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்!
  12. இங்கு எங்கே மனிதநேயம் தெரிகிறது? விலங்கு நேயத்தை ரசிக்கிறார்களா, வியக்கிறார்களா மனிதர்கள் என்று தெரியவில்லை. மனிதர்கள் நேயத்தை காட்டியிருந்தால், விலங்கேன் இறங்கி போராடுது.
  13. தொடர்ந்து வாசித்து வருகிறேன் எதிரும் புதிருமாக எழுதுகிறீர்கள்!
  14. மஹிந்த பீடத்தின் தலைவர் என்றால் இப்படித்தான் இருக்கும். நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடிகட்டிப்பறக்கிறது அவரது பெயர். போதாதற்கு அவர் விழுந்தால், காவி கழன்று விழுந்து விடுமோ என்று இத்தனை காவலர்கள் பாதுகாப்பு வேலியை பிடித்தவண்ணம். அவரோ நிறை தண்ணியில்.
  15. சுமந்திரன், ஒவ்வொரு ஜனாதிபதியையும் சந்தித்து தன்னை முதன்மைப்படுத்துவதற்கு இந்தகாரணங்களை கையாளுகிறார். அவர் முண்டு கொடுத்த ஜானாதிபதிகளின் காலத்திலும் இந்தப்பிரச்சனையையே காவிக்கொண்டு திரிந்தார். ஏன் அதற்கு தீர்வை காண அவரால் முடியவில்லை? அன்றே அதை தீர்க்க முடியாதவர் இன்று அனுராவை சந்தித்து தீர்த்துவிடவா போகிறார்? இந்தப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. அது தீர்க்கப்படாது என்று அவரே உறுதி செய்ததை, காவிக்கொண்டு ஒரு வருடமாக அனுராவை சந்திக்க மெத்த பிரயத்தனப்பட்டு, இப்போதான் மெல்ல உள் நுழைந்திருக்கிறார், பாப்போம் கதிரை கிடைக்குமா அல்லது வெளிவருவரா என்று? அதற்குள் எதற்கு ஆரவாரம்?
  16. தப்பிச்சான் சாத்தான். இதைவிட விரிவாக யாராலும் விசாரித்தறிய முடியாது. அதுதானே. "கூரை மீதேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." தன்ர நாட்டில படிச்சு பட்டம் பெற முடியாதவரெல்லாம், வெளிநாட்டில படிச்சு பட்டம் பெற்று நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள். இந்தக்குடும்பத்தால நாடே நாறுது. இதுக்குள்ள பிக்குகள் காவடி தூக்குதுகள் இவர்களுக்கு.
  17. சிங்களவன் மோடையன் என்று நம்ம தலைவர்களும் நினைத்து நம்பி ஏமாந்து எல்லாவற்றையும் அவனிடமே பறிகொடுத்து, இன்று அவனை வெல்ல முடியாமல் தவிக்கிறோம். நினைப்பு வேறு நிஜம் வேறு சிறியர்.
  18. இது நிகழ வேண்டுமென எதிர்பார்த்தே இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. இப்போ, அதன் சூத்திர தாரிகள் கைது செய்யப்படலாமென அறிந்தவுடன், தமிழ் முஸ்லீம் மக்களுடன் எங்களுக்கு பிரச்சனையில்லை, போலீசாரே தம்முடன் மோதியதாக இதனுடன் சம்பந்தப்பட்ட பிக்கு அறிக்கை விடுகிறார்.
  19. சில நாடுகளில் இல்லாத புலிகளுக்கு தடை அறிவிக்கிறார்கள். இப்போ, கனடாத்தூதுவருக்கு கஸ்ர காலம். பக்கத்துவீட்டு சகுனிக்கு வயிறு எரியப்போகிறதே. தான் செய்ய மறுத்ததை, இல்லாமற் செய்ததை கனடா செய்து விட்டது என்கிற கடுப்பு அதற்கு.
  20. சாத்தானுக்கு இப்போ அட்டமத்தில சனியனாம். நீங்கள் பயப்படாமல் விசாரித்து பெறுபேற்றை கையோடேயே கொண்டுவாருங்கள். அனுரா தாராளமாக வாங்கிப்பார்ப்பார். அவர் அறியாத விடயமா நாடுமுழுவதும் பேசப்படுகிறது. ஆனால் நாமலோ அவர் சார்ந்தவர்களோ மறுப்புத்தெரிவிக்கவில்லை. அப்போ, விஷயம் உண்மைதான். அந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் உள்நாட்டிலேயே படிக்காமல், யாரோ இவருக்காக பரீட்சை எழுத, இது தாஜுதீனை போட்டுத்தள்ள ஓடித்திரிந்ததும், பாதாள போதைப்பொருள் கடத்தற்காரரிடம் கப்பம் பெற்று சொத்து சேர்த்ததும் தான் செய்த வேலை. ஒரு சட்டத்தரணிக்கு இப்படியான வேலைகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியாதா? அதெல்லாம் தெரியாத இவர், தன்பெயரில் உள்ள சொத்து எனக்காட்டி விட்டு பின், அது மனைவியின் சொத்து என்கிறார். மனைவியின் சொத்து என்றால் ஏன் தன் பெயரில் காட்டினார்?
  21. ம் ....வணக்கத்துக்குரிய புத்தரை கண்ட கண்ட இடமெல்லாம் நிறுவுவது பத்தி எரியாவிட்டால் தாமே வைத்த சிலையை உடைத்தெறிவது நாட்டில் ஒரு கலவரம் வேண்டுமென்றால் புத்தர் இப்படியான வேலையில் முன் நிற்பார். புத்தருக்கு பிக்குகளாற்தான் ஆபத்து, அவமரியாதை. இவர்தான் பிரச்சனையின் கதாநாயகன். தூஷண பிக்கர் தாங்கள் மஹிந்தவுக்காக காவி தரித்ததாகவும், மஹிந்த பீடத்தை சார்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். அப்படி ஒரு பீடம் இருக்கிறதா? இதுகள் உண்மையான பிக்குகள் தானா என்பதை ஜனாதிபதி ஆராய்ந்து, அந்தப்பிக்கை கைது செய்து விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பிக்குகள் ஏவல், அடிமை வேலை செய்வதும், பிக்குகளுக்குப்பின்னால் அரசியல்வாதிகள் ஒளிந்து கொள்வதும் நிறுத்தப்படவேண்டும். பிக்குகள் விகாரையில் இருந்து தர்மத்தை போதிக்க வேண்டுமேயொழிய அதர்மத்தை வளர்க்க இடமளிக்க கூடாது. அவர்களுக்கு ஒழுக்கத்தை, பொறுப்பை கற்பியுங்கள். அவர்கள் பணி என்ன என்பதை வரையறுங்கள். தகுதியற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். சும்மா இருந்து சாப்பிடுவதை தடுத்து நிறுத்துங்கள். சும்மா இருந்து சாப்பிட்டால் இப்படித்தான் எதையாவது செய்யத்தோன்றும் இதுகளுக்கு. இரந்து உண்ண விடுங்கள். அதைத்தான் புத்தரும் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தபிக்குகளின் அட்டகாசம் பெருகிக்கொண்டே போகிறது. அதற்காக சட்டங்களை ஏற்படுத்தவில்லை, தடுத்து நிறுத்தவில்லை. இதை செய்ய முடியாதவர்கள் வேறு எதை சாதிக்கப்போகிறார்கள்? பிக்குகளை அடக்கினால் அரசியல் வாதிகள் அடங்குவார்கள். நாடு அமைதியடையும்.
  22. இதைச்சொன்னது யார்? கோசானா? ஆச்சரியமாக இருக்கிறது. சுமந்திரனை விட திறமைசாலி வேறு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி அடிக்கடி யாரோ கேட்பார்கள் அதனால் ஒரு சந்தேகம். பல்கலைக்கழக மாணவர் சந்திப்பில் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டவர் சுமந்திரன், ஐம்பது வீதமல்ல எண்பது வீத தமிழரின் உரிமைகள் பறிபோய்விட்டது என்றார். தெரிந்தும் வாக்கு கேட்க்கிறார், பேசுகிறேன் என்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்திற்குள் ஏக்கிய ராஜ்ய சட்டமூல அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகிவிடுவேன் என்று வீராப்பு பேசியவர், இப்போ பதவியும் இழந்து தனக்கென ஒரு பதவியை உருவாக்கி நிர்வகித்துக்கொண்டு அரசியல் தீர்வு கேட்க்கிறார் என்றால் பாருங்கோவன் அவரது விடா முயற்சியை! இதைவிட அவருக்கு வேறு தெரிவோ, உழைப்போ இல்லை சுமந்திரனுக்கு . இதையே முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் செய்திருந்தால், சுமந்திரனின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்திருக்கும்? தமிழரசுக்கட்சியை விட்டு இவர் வெளியேறவில்லை, ஆனால் மக்கள் நிராகரித்து விட்டனர் இவரை. வேறொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் பாப்போம்? இவர் முன்னையவருக்கு சவால் விட்டபடியினால் அந்த சவாலை தானே ஏற்று நிறைவேற்றி காட்டட்டும் பாப்போம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.