Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?
  2. அவரை கொண்டுவந்து சேர்த்த ஆசான் தோல்வியடைந்த காண்டு, தனக்கு உதவியில்லை பக்கக்கதைக்கு என்கிற ஆதங்கம், ஏதோ அரசியல் சூழ்நிலையால் வென்றுவிட்டார். தலைகால் தெரியாமல் ஆடினால் அடுத்தமுறை இவரும் காணாமல் போக வாய்ப்பிருக்கு. இப்போ கட்சிக்குள் குடைச்சல் கொடுக்க இவரை தவிர வேறொருவருமில்லை சுமந்திரனுக்கு. அவரின் நாட்டாண்மையை இவர் கையில் எடுத்துவிட்டார். இவரும் வியாழேந்திரன் இடத்துக்கு வந்து தொற்றிகொண்டவர்தானே.
  3. இருக்கும் இருக்கும். சில கொள்ளையர் குழுவாகவும் செய்கிறார்கள், ஆகையால் சங்கமமைத்து அதற்கு நேர, இட, அட்டவணை போட்டு செய்வார்கள், பிறகு பங்கு பிரிப்பதில் சண்ட பிடிக்கவும் கூடும், அதன் பின் பிரிந்து சுயமாக தம் தொழிலை தொடர்வர். டக்கிளஸ் கூட ஓய்வுபெற்ற பின் என்று பிடித்தாராமே சம்பளத்திலிருந்து. அரசாங்க உத்தியோகத்தருக்கு தானாகவே ஓய்வூதியத்துக்கென ஒதுக்குகிறார்கள் அவர்கள் சம்பளத்திலிருந்து. அதில இவர் வேற பிடிக்கிறேனென கூறி ஏப்பம் விட்டிட்டார்.
  4. அட, இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும் கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?
  5. உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர். இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும். கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.
  6. பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  7. பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.
  8. ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல் காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.
  9. அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித இருக்குமோ இருவருக்கும்?
  10. ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் மாறியவுடன் தோலுண்ணி போல ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது இதற்காகத்தான். சொல்வது, மக்களுக்கு சேவை செய்வதற்காக என்று. அனுர ஒட்டவே விடேல்லை ஆளை, தொல்லை தொடங்கி விட்டது. அராஜகர்களுக்கு இனிமேல் இறங்குங்காலந்தான்.
  11. முதலில் அரசியல்வாதிகள், பொலிஸாரிடமிருந்தே ஆரம்பியுங்கள் ஊழல் மோசடியை. ஊழல் மோசடியின் ஊற்று இவர்களே.
  12. இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால். வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்?
  13. உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில் தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.
  14. அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்.
  15. அவர் அதற்காகவே பதவியிலிருந்து விலகினார் அல்லது விலக்கி வைக்கப்பட்டார் போலுள்ளது. அவர் தன்னிச்சையாக கத்தினால், விமல் வீரவன்சவோடு புதிய கூட்டணி அமைப்பார். இல்லையேல், மீண்டும் தமிழர் பிரச்சனை கிடப்பில், பத்தோடு பதினொன்று. அனுரா கூறியிருந்தார், தமிழ் மக்கள் தொடர்ந்து அரசுகளால் ஏமாற்றப்படுத்தப்பட்டத்தினாலேயே பொதுவேட்பாளர் என்கிற முடிவை எடுத்தனர் என்று. அந்த ஏமாற்றத்தை தராமல் இருப்பதே அவரின் கருத்துக்கு அழகு. இல்லையேல் ரில்வின் சில்வாவை வைத்து விளையாட வெளிக்கிட்டால் அதன் பயனை அடைவார்.
  16. பயங்கரவாத சட்டம் தமிழருக்கெதிராகவே இயற்றப்பட்டது நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் அது இன்று தமிழருக்கானது அல்ல அப்படியென்றால் மஹிந்தவே இன்றும் தேர்தலில் வென்றிருப்பார் அது கடைசியில் அரகலியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்பட்டது அப்போதுதான் அந்த சட்டத்திற்கு எதிராக எல்லோரும் குரல் எழுப்பினார்கள் எதை வைத்து தம் எதிரிகளை அடக்கியதோ சிங்களம் அதை அனுபவிக்க வேண்டாமோ எத்தனையோ முறை நாங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினோம் அப்போதெல்லாம் அது வீரியம் பெற்றது அதன் தாக்கம் வலி அவர்களுக்கு புரியவில்லை இவர்கள் அதன் வலியை அனுபவிக்கும்போது அதன் தாக்கம் புரியும் அவர்களே குரல் எழுப்புவார்கள் இப்போ நாங்கள் குரல் எழுப்பி அதை தகர்த்துவிட்டால் அவர்களுக்கு அதன் வலி புரியாது தமது வல்லாதிக்கத்தை மீண்டும் நம்மேல் காட்டுவார்கள் எந்த மாற்றமும் நிகழ விடமாட்டார்கள் வீதியிலே இறங்கி தமிழரை அழிப்பார்கள் சும்மாவே கொக்கரிக்கிற சரத் வீர சேகர போன்றோர் அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் எதன் பின்னணியில் வந்தது முதலில் அனுராவை எச்சரிப்பார்கள் எதிர்ப்பார்கள் சவால்விடுவார்கள் பின்னர் வேறுவழியின்றி இணைந்து போக முயற்சிப்பார்கள் இது எனது தனிப்பட்ட நம்பிக்கை இது பிழையாக கூட இருக்கலாம் இறுதியில் தெரியும் முடிவு. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாமே! சொல்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். இனவாதத்தையல்ல, இனவாதத்தை தூண்டும் இனவாதிகளை தடுக்க!
  17. வடக்கின் வசந்தத்தின் வேட்டி நாளுக்குநாள் உரியப்படுகிறது. வேலைவாய்ப்பு என்று கூறி அவர்களின் சம்பளங்களை வாங்கி உறிஞ்சியதும், ஜமீன்தார் வாழ்க்கை வாழ்ந்ததும் இப்போ வெளிவருகிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டு, அறிவில்லாத பண்பில்லாதவர்களை வேலைக்கமர்த்தி சீர்கேடுகளை உருவாக்கி மக்களை அலைக்கழித்தவர்கள் இவரால் நியமனம் பெற்றவர்களே. இவர்களெல்லாம் பணியில் இருந்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும்! லஞ்சம் கொடுத்தவன் வாங்கவே செய்வான். இதுகள் சேவை செய்யுதுகளாம் மக்களுக்கு. இவர் திரட்டிய பணமெல்லாம் பறிமுதல் செய்து ஓட விடவேண்டும், செய்த கொலைகளுக்கு விசாரணை செய்து ஆயுள் முழுவதும் உள்ளே களி தின்ன விடவேண்டும். ஆனால் இவர் செய்த கொலைகள் இவரை சும்மா விடுமா? அதுசரி, யாரிடமோ நஷ்ட்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போகிறேன் என்றாரே, போட்டாரோ? போடமாட்டார். இவர் முதலில் இறங்கினால், இவருக்கெதிராக பல கொலை கொள்ளை வழக்குகள் பதிவாகும்.
  18. நீங்கள் உப்பிடி சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொல்லியே விட்டீர்கள். அதனாற்தான் பயந்தோ என்னவோ களத்தில் சிங்களம் கதைத்து திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் திறமைசாலிகள் என்று நினைப்பர், யாரென்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். இதைத்தான் ரணிலாரும் லண்டன் போய் நம்மவருக்கு சொல்லி, தானே சிரித்து அசடு வழிந்தார். அதுதான் நான் சொல்லுறது என்னெண்டால் முகநூல் முகநூல். நான் சொல்லுறது விளங்குதோ என்னோ?
  19. நாட்டில் வீழ்ச்சி கண்டு கொண்டிருந்த பொருளாதாரத்தை தாங்கி உயர்த்தியது குடிமகன்களே, அவர்களை இப்படி தவிக்க விடலாமா? மீண்டும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
  20. இங்கு சம்பந்தப்பட்ட இருவருமே சமூகத்தில் அதிகூடிய பொறுப்புள்ளவர்கள், மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். உண்மையில் வைத்தியர் சத்திய மூர்த்தி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, பிழையாக இருந்தாலும். அவரின் வீட்டுக்கு போயும் கதைக்க முடியாது. ஆகவே அவருக்கு உரிய முறையில் அழைத்து விசாரித்திருக்கலாம். உண்மையில் போலீஸார்கூட செய்யும் அக்கிரமங்களை யாராவது தட்டிக்கேட்டால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுகிறார்கள், அதையும் சட்டம் சரியென ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவருக்கும் பஞ்சாயத்து தீர்ப்பதிலேயே ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விடும். இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புண்டு. தமது பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களும், இந்த தொண்டர் சேவையாளர்களுமே பாதிக்கப்படுவர் இவர்களின் பொறுப்பற்ற செயலால்.
  21. ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!
  22. நன்றி கோசான் இணைப்பிற்கு! நமது மக்களின் மனோநிலை இவ்வளவு சீக்கிரம் மாறுகிறது என்பதற்கு இது உதாரணம். அதேபோல் நாமளும் செய்திகளை மாற்றுகிறோம்.
  23. எதையும் ஆராய்ந்து அறியத்தெரியாத முட்டாள்களை இப்படித்தான் பலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதில், இவர் தலைவனாம் முதலில் அந்தப்பாதிரியாரை கைது செய்ய வேண்டும்.
  24. அதல்ல இவர்களின் பிரச்சனை, சிங்களத்தோடு சேர்ந்து தமிழருக்கு ஆப்பு செருகினதும், அவர்களோடு வரிஞ்சு கட்டிக்கொண்டு நின்று, எதையும் பெறவிடாது தட்டிப்பறித்ததும், இப்போ வயிற்றை கலக்குது. எங்கே தாம் செய்தது தமக்கெதிராக மாறிவிடுமோ என்பதுதான் அவர்களது கவலை. சகல துறைகளிலும் திறனும் அறிவும் கொண்டவர்கள் நாட்டை நேசிப்பவர்களென்றால் அமைச்சரவையில் இல்லையாயினும் பங்களிக்கலாம், எதற்கு அமைச்சரவை வேண்டும்? ம்.... புலிகளை அழிப்பதற்கு அரசாங்கம் கேளாமலேயே தாம் உதவியதாக சொல்லி, வசதிகளை அனுபவித்தும், சிங்களம் விட்ட மிச்சத்தை கூட, இருந்து பொறுக்கியும் வளர்ந்தவர்கள். தமிழருக்கெதிராக சேர்ந்தியங்குவதும், பின்னர் எங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழரோடு சன்னதமாடுவதும் இவர்கள் பிழைப்பாய் போச்சு. ரில்வின் தனக்கு பதவி வேண்டாம் என்று விலகிவிட்டார், அவருக்கு வேறொரு பதவி இருக்கு, அது நேரம் வரும்போது வெளிப்படும். அவரிடம் ஏன் போனார்கள் இவர்கள்? ஒருவேளை, அவரது பொறுப்பு தெரிந்துதான் போனார்களோ அல்லது அவரே அழைத்தாரோ இவர்களை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.