Everything posted by satan
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அவரை மக்கள் தெரிந்தெடுக்கவில்லை, கட்சி தலைவராக கட்சி அங்கத்தினரால் தேர்தெடுக்கவுமில்லை. ஆனால் சகல அதிகாரத்தையும் கைப்பற்றி வைத்திருக்கிறார். அவரை கட்சியிலிருந்து கலைக்க முடியவில்லை, முடியாது யாராலும். இவர் கடந்த காலங்களில் சொன்னவையெல்லாம் மற்றவருக்கன்றி தனக்கல்ல. முளையிலே கிள்ளாது விட்ட பலனை கட்சியும் மக்களும் அனுபவிக்கின்றனர். தமிழ்த் தேசியகட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும் என்று மற்றவருக்கு சவால் விட்டவர், தான் அதை செய்து காடட்டட்டும் பாப்போம்! இதைவிட்டால் அவருக்கு நாதியேது? எல்லாரையும் அரவணைக்கும் மக்களை ஏமாற்றும் மக்களின் உணர்ச்சியை வைத்து பிழைக்கும் கட்சியிது! இதைவிட்டு பெரிய கொம்புக்கு தாவியோர் கொட்டாவி விடுகின்றனரே.
-
நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா? குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர் வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
ம்..... இதற்காகத்தான் இவைகளை ஆராய, ஆணைக்குழுக்கள் அமைத்து சம்பந்தப்பட்டவர்ளை விலக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முயல்கிறார் ஜனாதிபதி. அதற்கிடையில் அவரை வீட்டுக்கனுப்ப முயற்சிக்கிறார்கள் எல்லாத்துறையினரும். இது ஜனாதிபதிக்கு கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல. தேவையற்ற குடைச்சல்களை கொடுத்து திசை மாற்றுகிறார்கள் பிரச்சனையை. அவரோடு இருப்பவர்களே இதற்கு ஒத்துழைப்பார்களா தெரியவில்லை. ஏனெனில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
தேர்தல் கால கூட்டங்களில் ரணில், ஒரு நகைச்சுவை சொல்லி தானே சிரித்தார். சஜித் ஆங்கிலம் பேசினால் வெள்ளைக்காரன் சிரிப்பானாம். நாட்டை ஆளுவது, சிங்கள மக்களை ஏமாற்றி. இதில யார் ஆங்கிலம் பேசினாலென்ன, சிரித்தாலென்ன? அந்த மக்களோடு உண்மையயை பேச முடியவில்லை இவர்களால். அதை எண்ணி வெட்கப்படவேண்டும். இதே போல் ரணில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, தமிழ் மகன் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்விகேட்டபோது அவரது ஆங்கிலத்தை நையாண்டி செய்து நீங்கள் தமிழிலே பேசுங்கள் நான் விளங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி சிரித்தார். அவர் தமிழில் சொன்னபோது, ஏதும் விளங்காமல் தான் சொன்ன நையாண்டியை நினைத்து பேசியவரை பார்க்காமல், சுற்றியிருந்தவரை பார்த்து சிரித்தார். இவருக்கு தன் தந்திரத்தில், மற்றவரை கேலி செய்து மட்டம் தட்டுவதில் அபார நம்பிக்கை, மகிழ்ச்சி எங்கள் கோசானைப்போல. அதுவே கவிழ்த்தும் விட்டது இவரை.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பதினாறு சமையல்காரர் போனதினால், சுவையான சாப்பாட்டை இழந்துவிட்டார், தள்ளாத வயதில் சமையல் செய்ய வேண்டுமே என்கிற கவலை, வாழ்க்கையில் உருப்படியா ஜனாதிபதியாக ஒருபோதும் காலத்தை நிறைவு செய்ய வில்லையே என்கிற கவலை, வீட்டில் சந்தோசமாக நாட்களை கழிக்க சந்ததியில்லையே என்கிற கவலை, வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகப்போகுதே என்கிற கவலை, தமிழ் மக்களின் நிலங்களை முற்றாக அபகரித்து விகாரை, இராணுவமுகாம் ஆக்க முடியவில்லையே என்கிற கவலை, தமிழ் சமூகத்தை துரோகிகளை உருவாக்கி சிதைக்க முடியவில்லையே என்கிற கவலை, இப்படி எத்தனையோ கவலை அவருக்கு. தனக்கு சவாலானவர்களின் கையிலிருந்து நாட்டை பெற்று நிம்மதியாக நாட்டை ஆளலாம் என்று கனவு கண்டவருக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக வந்த பேரிடி! இதுக்கெல்லாம் காரணமான N.N.P யை துரத்த என்னென்ன வழி இருக்கென்று தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களும் விடுவதாக இல்லை. ஆம், கஞ்சா வியாபாரிகளும், அடிதடிகளும், கொலை கொள்ளைக்காரரும் சிறைக்கைதிகளும் பாராளுமன்றத்தை தங்கள் தங்கள் தொழிற் கூடங்களாக மாற்றி கதிரைகளாலும் மிளகாய்ப்பொடிகளாலும் தாக்கி தெருச்சண்டை பிடித்ததை வேடிக்கை பார்த்த அனுரா, படித்தவர்களை கொண்டுவந்து கௌரவமாக பாராளுமன்றத்தை நடத்த வெளிக்கிட்டது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது. தங்களது பதவிகளையும் வசதிகளையும் ஊழல்களையும் மறைக்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குடிமகன்களின் கைகளில் நாட்டை ஒப்படைத்ததை நிறைவேற்றவும் இதை தவிர ரணிலுக்கு ஏனையோருக்கும் வேறு வழியில்லை. குறுக்கு வழியில் பதவியை பெற்றுக்கொண்டவர் அது நிலைக்குமென்று எதிர்பார்த்திருக்க, இப்படி நிரந்தரமாக வீட்டில் தன்னை அமர்த்தி விடுவார்களென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் இனி யாரும் அரசியல் வாழ்வை கனவுகாண முடியாது. அவர்களின் வெற்றி இவர்களுக்கு எதிர்கால அரசியல், கடந்தகால ஊழல் பயத்தை கடுப்பை உருவாக்குது. அனுரா அரசு, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்தாலே நாடு தானாக முன்னேறும்.
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
நாட்டில் இப்போது தம்மை மறைத்துக்கொள்ள ஊழல்வாதிகளுக்கு இது அவசியம். இவர்கள் யார் என்று தெரிந்தே மக்கள் இவர்களை நிராகரித்தனர். ஆனால் இவர்களோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. துரும்பை தூணாக்கி அரசியல் லாபம் தேட முனைகிறார்கள். ஆனால் ஆட்சியாளரின் வெளிப்படைத்தன்மை அவர்களை மக்கள் மத்தியில் உயர்த்துகிறது தாங்கள் சரியானவர்களைத்தான் தெரிந்தெடுத்துள்ளோம் என்று. முன்னைய ஆட்சியில் இப்படி கேள்வி கேட்க முடிந்ததா? தவறை ஏற்றுக்கொண்டு பதவி யாரும் விலகினார்களா?
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
- பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.- பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா? மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்!- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மயூரனுக்கு போடிருக்கலாமென மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லிவிட்டு, அர்ச்சுனாவுக்கு போட்டேன் என்று கூறியதற்கே நான் சிரித்தேன். இனி எல்லாத்திரிகளிலும் இது ஓடும். சந்தோசம், வாழ்த்துக்கள்!- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அதற்காகத்தான் சொல்கிறேன், பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு இருக்கட்டுமென்று. அப்போ அனுரா அதை சாட்டாக சொல்லி தப்பிக்க முடியாது. இதைத்தானே நானும் சொன்னேன். அவர் மூன்றில் இரண்டை விட அதிகமாக வென்றிருக்கிறார், நாம் அவரை விமர்ச்சிப்பதால் எதுவும் மாறாது. நல்லதை எதிர்பார்ப்போம் என்று. அதற்குத்தானே வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள் என்னோடு. ஏற்கெனவே மாண்புமிகு ஜனாதிபதி கூறிவிட்டார், தற்போது நாட்டிலுள்ள பெரும்பிரச்சனை பொருளாதாரம். அதற்கு முதல் முக்கியத்துவம், இவற்றையும் செய்வேன் ஆனால் உடனடியாக செய்ய நான் ஒன்றும் மந்திரவாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதற்கு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி நிரூபிக்கப்பட்டாலே தண்டனை வழங்கப்படும். நீதிசெயற்பாடுகளில் தான் தலையிடப்போவதில்லை என்கிறார். இதெல்லாம் ஒரே இரவில் நடக்கக்கூடியதல்ல, அவர் செய்ய முடியாததை வெறும் வாக்குக்காக அன்கொன்றும் இங்கு வேறொன்றும் சொல்லவில்லை. மக்கள் தாமே முன்வந்து அவரை தெரித்தெடுத்துள்ளார்கள். நான் மக்களின் முடிவை மதிக்கிறேன். பல வாசகர்கள் சொல்லிக்காட்டி விட்டார்கள். அவர்களுக்கு சலிப்பேற்படுத்த வேண்டாம். ஐந்துவருடத்தின் பின் கதைக்கிறேன் இதுபற்றி.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
நான் எங்கே உங்கள் பெயரை குறிப்பிட்டேன்? ஒருவர் என்றுதானே குறிப்பிட்டேன். இங்கு நீங்கள் மட்டுந்தான் எழுதுகிறீர்கள் என்ற நினைப்போ? எதிலும் அவசரம்! சரி..... தொப்பி உங்களுக்குத்தான் அளவு என்று அடம்பிடித்தால், நான் மறுக்கவா போகிறேன். ஹா ஹா....- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
பொது வேட்பாளர் தேர்தலில் நின்றார் அதுவும் பிழை என்றார்கள், சரி..... ஒருவரும் வேண்டாம். ஆனால் நாட்டுக்கு ஒரு தலைவர் வேண்டும், நீங்கள் நிற்கிறீர்களா? அல்லது ட்ரம்மை அழைப்போமா? நீங்கள் ஜனாதிபதியானால் கூட ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவரமாட்டீர்கள், கொண்டுவரவும் முடியாது. எழுபத்தாறு ஆண்டுகளாய் இனவாதத்தாலும் ஊழலாலும் கைலஞ்சத்தாலும் நிறைந்து ஊதிப்பெருத்து வெளியேற முடியாமல் நாடு தள்ளாடுது. கீழ்மட்ட ஊழியன் முதல் முதல்கட்ட அதிகாரி வரை ஊழல், அதில் அரசியல்வாதிகளே பெருத்த ஊழல் பெருச்சாளிகள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கவே வந்தவர்கள். அண்மையில் வெளிவந்த படம் உங்கள் கண்ணுக்குபடாமல் போயிருக்காது. அந்தப்படம், மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு ஊழியர்களுக்கு பிரியாவிடை அளித்தார் மாத்தையா. அப்போது எடுத்துக்கொண்ட படம் வெளிவந்தது. ஒரு கிராமமே அங்கு நின்றது, அவ்வளவும் அவரது ஊழியராம். மஹிந்த ஒருவரே அரசியல் செய்தார், அவர் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்கு ஒரு கிராமம் பணிபுரியுது. கொழுத்த சம்பளம், ஓசி ஊழியர்கள், வசதி, அதைவிட ஊழல். நாடு எங்கே போகும், ஒருவருக்கே எல்லாவசதியும். இதென்ன அநிஞாயம்? யார் பணம்? அவர்கள் என்ன சும்மாவா, அல்லது சாதாரண தொழிலாளியின் சம்பளமா பெற்றிருப்பார்கள்? இவ்வாறே ஒவ்வொரு அரசியல்வாதி, அரச உத்தியோகத்தர்கள், அரச இலாக்காக்கள், சும்மாஇருந்து மக்களுக்கு அதிகாரம் செலுத்தி லஞ்சம் பெற்று ஊதிப்பெருத்தவர்கள். அண்மையில் அர்ச்சுனா கலகம் விளைவித்தார் என்றொரு செய்தி வந்தது. அவர் அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டார்? யாரும் இதுவரை கேக்காத, கேட்கக்கூடாது என்று நினைக்கிற கேள்விகளை கேட்டார். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விசரனை கலையுங்கோ என்று கோஷமிட்டார்கள். சிறிதரன் ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது அரச உத்தியோகத்தர் எங்களைவிட கல்வி அறிவில் கூடியவர்கள், அவர்களோடு நல்லதொரு இணக்கப்பாட்டுடன் நாம் நடந்தோம். ம்...... கல்வியறிவில் கூடியவர்கள் செயலில் காட்டவேண்டும் தங்கள் திறமையை. இவர் கேள்விகேட்க்காமல் இருந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குத்தெரியும்? மக்கள் என்ன முட்டாள்களா? அரசியல் வாதிகளும் கவனிப்பதில்லை, மக்களும் கேட்கக்கூடாது என்றால்; இவர்கள் என்னத்துக்கு அரச பணத்தை, இல்லை மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்? ஆகவே இந்த தவறுகளை குறைகளை மாற்ற நினைக்கும் அனுராவை இந்த பெருச்சாளிகள் சும்மா விடுமா? சாதாரண ஏழை மக்களை தவிர யாரும் இவர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்ப மாட்டார்கள். எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத எச்சரிக்கை, சவால் இவருக்கு மட்டும் எதற்கு? அவரின் இந்த ஊழலற்ற அரசியலை அவர் கட்சியை சார்ந்தவர்களே விரும்ப மாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யாத, மக்களை சந்திக்காத அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு சலுகைகள் எதற்கு? அனுராவின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால்; யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள், உண்மையான சேவைசெய்பவர்கள் இனங்காணப்படுவார்கள். யாரும் அரச உத்தியோகத்தில் இணையமுன் யோசிப்பார்கள். பாருங்கள்... அனுராவை கலைக்க எங்கும் வேலைநிறுத்தம், அடாவடி, குழப்பம், புத்த சிலை என்று கிளம்பி அவருக்கு குடைச்சல் கொடுத்து அவரை ஓட ஓட விரட்டவே முனைவார்கள். ஏனென்றால் உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர் யாருமில்லை. இப்போ, நான் விக்கியரை நினைத்துப்பார்க்கிறேன். இதுவே அவருக்கும் நடந்தது. உண்மையான எவருக்கும் இதுதான் நடக்கும். ஒரு கட்சியில்; அதிகாரப்போட்டி, யாரும் தனக்குமேல் வரக்கூடாது என்று திட்டம் போட்டு, ஆசை காட்டி, கூட்டம் சேர்த்து குழப்புகிறார்கள் கட்சிக்குள் இடையில் வந்தவர்கள். அனுராவை சும்மாவா விடுவார்கள் சந்ததி சந்ததியாய் சுரண்டியவர்கள்? அதைவிட அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை வேறு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு, லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்துற வரை நாட்டில் சட்டங்கள் இறுக்கப்படவேண்டும், சாதாரண மக்களும் சில கஸ்ரங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நாடுகள் இவைகளை கடந்தே மீண்டு வந்திருக்கின்றன. கோசானுக்கே, அனுரா மீது இவ்வளவு கடுப்பேறி சன்னதம் ஆடுறாரென்றால்; இதுவரை இனவாதத்தை தூண்டி கொள்ளையடித்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? மாண்புமிகு ஜனாதிபதி, ஆணைக்குள்ழுக்களை அமைத்து கோழி அமத்தினமாதிரி ஊழல் பெருச்சாளிகளை அமுக்க வேண்டும்!- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அப்போ யாரைத்தான் தூக்கிப்பிடிப்பது என்று சொல்லித்தான் தொலைக்கிறது. மஹிந்தா? ரணில்? மைத்திரி? கோத்தா? சந்திரிகா? அந்தப்பிரதேச மக்களின் பிரதிநிதி சாணக்கியன் . சாணக்கியனை கேளுங்கள் என்றால்; அனுராவை கேட்கவேணுமென்கிறீர்கள். சரி... அனுராவை கேட்ப்போமென்றால் அதற்கும் வலிக்கிறது. இந்த வியாதிக்கு களத்தில் மருந்தில்லை சாமி ஆளை விடுங்கோ!- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில், மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர்.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை, கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும்.- இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
ஏன், இந்தப்பிரச்சனை இந்த அரசாங்கத்தில் மாத்திரமா நடக்கிறது? உள்ளூரிலேயே அரிசி களஞ்சியங்களில் கூட இப்படி பாவனைக்குதவாத அரிசிகள் அழிக்கப்பட்டனவே. உள்ளூரில் சந்தைகளில் கூட புழுக்கத்தரிக்காய்கள் வருகின்றனவே, வாங்காமலா போகிறோம்? முதலில் மற்றைய நாடுகளை சோற்றுக்காக எதிர்பார்த்திருப்பதை மாற்றவேண்டும், நீண்டகால பொறிமுறைகளை வகுக்கவேண்டும், மாரி காலத்திற்கு முன் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து விநியோகிக்கும் உத்திகளை கையாள வேண்டும். தனியார் பதுக்கல், வியாபாரிகள் வெற்றிகரமாக இவற்றை செய்கின்றனவே. உள்ளூர் உற்பத்தியை பெருக்க வேண்டும், எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் இந்தப்பிரச்சனை தொடரவே செய்யும். விவசாய காணிகளில் இராணுவ முகாமும் விகாரைகளும் கட்டினா அது அபிவிருத்தியை மக்களின் தொழில் புரியும் விருப்பை பாதிக்கும்.- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்? - பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.