Everything posted by satan
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
இது தேர்தலுக்கு முன், எப்படியும் வென்று விடுவேன் எனும் மிதப்பில் சொன்னது. இது தேர்தலுக்குப்பின் தெளிந்த பின். இருவரும் காலையில் ஒன்று சொல்வார்கள், மாலையில் வேறொன்று சொல்வார்கள். பாப்போம் இருவரின் பேரம் பேசலையும். இருக்கிற மிச்சமும் கலையப்போகுது. இவர்களை விரட்டிய பின்தான் வீட்டை புனரமைக்க முடியும். இல்லையென்றால் வீட்டை அரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அர்ச்சுனாவின் திறமையை இனிமேற்தான் பாராட்ட வேண்டும். அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாகவே கேட்கமுடியும். அரசியல்வாதிகள் கேட்பதேயில்லையே.
-
கொடூரன் பிள்ளையான்.
கவலைப்படாதீர்கள், மஹிந்தா ரணிலுடன் கூட்டுச் சேர்ந்து செய்த அடூழியங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. அவர்கள் இவர்கள்மேல் பழி போடுகிறார்களா, இவர்கள் அவர்கள்மேல் கை நீட்டுகிறார்களா என்பதெல்லாம் இல்லை. எல்லோருமே தண்டிக்கப்படவேண்டும். முன்பெல்லாம் மஹிந்த கூட்டத்தை விசாரணைக்கு அழைத்தால்; மக்கள் புடை சூழ வருவார்கள். இப்போ மக்களே வலைபோட்டு பிடித்து கொடுப்பார்கள். தேர்தலில் தமது விருப்பத்தை மக்கள் காட்டியிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வேன் என்றார், அதை செய்யுங்கள் என்றே மக்கள் ஆணை அளித்துள்ளார்கள். எதற்கும் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதிருக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது? ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ம்.... இவ்வளவுகாலமும், நாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூவி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போகேக்க மானங் காத்த தமிழர். இப்போ மக்கள் ஏமாற்றமடைந்து தமது வெறுப்பை காட்டியதால், தமிழ் இந வெறியர். தமிழ் கட்சிகள் எல்லார் மீதுமே மக்கள் தமது வெறுப்பை காட்டியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, ஏன் சுமந்திரனை மட்டும் வெறுத்து ஒதுக்கினார்கள் என்று வெதும்புகிறார்கள்? அப்படியெனில் சுமந்திரனின் அடாவடிக்கு விழுந்த அடியென ஏற்றுக்கொள்கிறார்களா? தலையிருக்க வால் ஆடியதால் ஏற்பட்ட விளைவே இந்த படுதோல்வி. இந்த ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவ்வளவு கோபம் வந்தால், மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும். வினை விதைத்தவன் வினைதான் அறுக்க முடியும். போன தடவை மாவையர் தோற்றுவிட்டார், மக்கள் தலைவர் மேல் நம்பிக்கையிழந்து விட்டனர், ஆகவே மாவையர் பதவி விலகவேண்டுமென கோசம் போட்டவர் இன்று அதே தோணியில். என்ன ஒரு அதிரடி, எகத்தாளம், யாரையும் மதிப்பதில்லை, எதற்கும் கட்டுப்படுவதில்லை, யாரோடும் ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக ஆடி அடங்கிவிட்டார். இவரை அரவணைப்பதற்கு இப்போ யாரும் இல்லை பதவியில். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு போட சொல்லி மக்களை கோரினார், மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித்துக்கே இவரைவிட கூடுதலான வாக்களித்துள்ளனர். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் இவர் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை, அவர்களே விரும்பி வாக்களித்துள்ளனர். அல்லது அவருக்கு வாக்களிக்க கூறியதால் சுமந்திரனை மக்கள் நிராகரித்துள்ளனர். எது சரியாக இருக்கும்? மக்கள் தாங்களே முடிவெடுத்து சஜித்தை ஆதரித்திருந்தனர் ஜனாதிபதி தேர்தலில். பாராளுமன்றத்தேர்தலில் அனுராவை தேர்தெடுத்துள்ளனர். இதுதான் ஜதார்த்தம்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கோத்தாவுக்கு தமிழர் வாக்களிக்கவில்லை, இவர்களால் தமிழருக்கு நன்மை வரவேண்டும் இல்லையாயினும் தீமை வராதென நினைக்கிறன். யாரின் வற்புறுத்தலுமில்லாமல், கை காட்டலுமில்லாமல், ஆசை வார்த்தை, உறுதிமொழி இல்லாமல் மக்கள் விரும்பி இவரை தெரிந்தெடுத்துள்ளார்கள்.
- தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பந்தயம் ஏதும் கட்டினீர்களோ இவர் பெயரால்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதுசரி.... இந்த வடக்கின் வசந்தம், தென்னிலங்கையில் இரண்டு பிக்குகளை தனது கட்சியின் பெயரால் களமிறக்கியிருந்தாரே, என்னவாச்சு? தான் போக வழியை காணேல்ல மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம், இதில பெருமை வேற!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை சார்! தமிழ் மக்களின் வாக்கை வாங்கி பாராளுமன்றம் போய், முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூவினர். கவனம், பாத்து.... உங்களுக்காக வாதாட என்று உங்களிடம் காசு வாங்கிக்கொண்டு, உங்கள் எதிரிக்காக வக்காலத்து வாங்கப்போறார். ஏற்கெனவே அரசியலில் அவரின் சுத்துமாத்து பிரபல்யம். ஆகவே இவரை ஒருவரும் நாட மாட்டார்கள், எல்லா நஷ்டத்தையும் உங்களிலேயே கறந்து விடுவார். இவரைவிட நேர்மையான அமைதியான வக்கீல்கள் நிறைய உண்டு அவர்களை நாடவும்!
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
இது, அவர்களது சொந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதனை வெளியில் கொண்டுவருவதற்காக இவரின் முன்னைய கொலைகளை கொண்டுவருகிறார். இவர் ஏன் இத்தனை கோடியை இவருக்கு அளித்தார்? தான் தாடியருக்கு ஏதோ ஒரு தொழிலை சொல்லிக்கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்கிறாரே, அது என்ன தொழில்? இவரும் சாதாரணமான ஆள் அல்ல. இப்போ தாடியரால் நொந்து நொடிஞ்சு வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். அங்கயன் தாடியருக்கு தேர்தலில் வெல்வதற்காக உதவியவர் என்றால்; இவர் எப்படிப்பட்டவர்? துஸ்ட்டனுக்கு உதவி புரிந்தால் கடைசியில் அவனாலேயே அழிவது திண்ணம். தாடியர் யாரை வைத்து மற்றவரை அடக்கினாரோ அதே வழியை இவர் எடுத்து விட்டார் போலிருக்கிறது. அடுத்த முறை தாடியரின் இடத்தை இவர் நிரப்பக்கூடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நன்மை செய்திருந்தால்; அந்த மக்கள் இவரை வாழ்த்தியிருப்பர். பாவம் ஏதோ செய்யக்கூடாத தொழிலை செய்து, கூடாத கூட்டத்தோடு கூடி, அழிந்துபோய் நிக்கிறார். இப்போ... தாடியின் அரசியலும் போகப்போகுது, அவரின் சொகுசு வாழ்க்கைக்கு இவர் நஷ்ட ஈடு கொடுத்தார்தான் உண்டு. ஆனால் இவர் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த மனிதனுக்கு வாக்கு போடுற கூட்டம் போட்டுத்தான் ஆகும். இது இவரின் பிரச்சனை. அவர்களின் பிரச்சனை என்னவோ? அவர்களும் பின்னாளில் சொல்லக்கூடும். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம். தாடியர் அரசியலில் வீழ்வது இவராலல்ல. தாடியர் மேல் அனுரா நடவடிக்கை எடுப்பாரெனில், அதில் இவர் பங்குமிருக்கும். புலிகளுக்கு ஐம்பது வீதம் கொடுக்க விரும்பாமல், இப்போ எத்தனை கோடியை இழந்து தவிக்கிறார். நேர்மையாய் சம்பாதித்திருந்தால் யாருக்கும் பயப்படாமல், எதையும் இழக்காமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இத்தனை கோடியை இழந்தவரென்றால், அதற்கு மேல் இவர் சம்பாதிக்க இவர்களின் கூட்டுறவு வேண்டியிருந்திருக்கிறது. இவர் மேல் நஷ்ட ஈடு கேட்டு இன்னும் பலர் வழக்கு போடப்போகிறார்கள். வாங்கிய காணிக்கு கையெழுத்து வாங்காமல் விட்ட புலி இவர், இவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு ஆதாரம் வைத்திருந்திருப்பாரா? எப்படியோ இவரிலும் சம பங்கு தவறுண்டு. அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் இவர் கொடுத்த காசை வட்டியோடு திருப்பிகேக்கலாம், குற்றம் நிரூபணமானால் தாடியர் விண்ணரிடம் கேட்ட நஷ்ட ஈடும், வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பியளிக்கவும் கோரலாம். "மானம் உயிரினும் மேலானது." அதனால்தான், மானம் போனபின் உயிரை என்ன ம** கு என்பர். இவ்வளவு காலமும் மௌனமாக இருந்தவர், இப்போ, கூட்டம் போட்டு பேசுவதிலிருந்து விளங்குதே!
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று. ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.
-
பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது - சரத் வீரசேகர
நாட்டில் சமாதானமே நிலவக்கூடாதென ஒரு சபதம் எடுத்துள்ளார்கள். அதாவது, இனவாதிகள், காடையர், கள்ளர், கொலைகாரர்? உலகத்திலேயே படித்தவர்களை விட இவர்கள் தான் பாராளுமன்றம் போகவேண்டுமென நினைக்கும் முதல் மனிதர் இவர்தான். அதனாலேயே நாடு இந்தளவுக்கு போனது. இன்னும் மூடர் கூட்டம் தான் நாட்டை ஆள வேண்டுமென்கிறார் . அனிஞாயமாக இத்தனைபேர் ஒரு நாட்டின் அழிவுக்காக பாடுபட்டு இந்தக்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவன் ஊனமடைந்திருந்தால் இப்படிப்பேசுவானா?
-
என்னடா சொல்லுறீங்க..?
இவனெல்லாம் ஒரு சட்டத்தரணி? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறான்.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் போலீஸ் நிலையங்களுக்கு போகிறவர்கள் லஞ்சம் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தாலே, அங்கு அவர்களுக்கு வேண்டியது நடக்கும். நீதியின் படி நடப்பவர் லஞ்சம் கொடுக்க முன்வரார், அதுவே தவறு. அதனால் தவறு செய்பவன் லஞ்சத்தை கொடுத்து யோக்கியவானாக திரிவான். மொத்தத்தில் தார்மீகம், ஒழுக்கம், அறிவு அற்ற, ஊழல் பேர்வழிகளே போலீசார். காசு உள்ளவனுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிக்கு மாறாக செயற்படுவார்கள். இது நான் சிறுவயதிலிருந்து பார்த்து அறிந்த அனுபவம்.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சிவிலில் மதுபோதையில் வந்து வாகனத்தை முந்திக்கொள்ள முயற்சித்து விழுந்தவர்கள் போலீஸ்காரரோ? தம்மை மறைக்க அடிதடியில் தொடங்கியிருக்கின்றனர். காயமடைந்த போலீஸ் எப்படி அவர்களை நின்று தாக்கியது? சிவில் உடையில் வந்தவருக்கு என்ன அதிகாரமிருக்கிறது? வடபகுதியில் போலிக்காரரினாலே சமூக சீர்கேடுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன, ஊழல் கைலஞ்சம் தாராளமாக புழங்குமிடமும் இதுதான். இப்போ அனுர இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். கைலஞ்சம் வாங்கா விட்டால் பொலிஸாருக்கு கை அரிக்கும். அதனாலேயே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். போலீசார் தங்கள் மேல் தவறில்லையென்றால், எதற்காக காணொளி எடுத்த கைபேசியை பறித்து சென்றனர்? அதை ஆராய்ந்தால் யாரில் பிழை என்பதை கண்டுகொள்ளலாம். மக்கள் வாக்களித்தும், அவர்களுக்காக அவர் போலீசாருடன் மோதியதில்லை. இப்போ, பதவியில்லை என்கிற அறிவிப்பு அவரை சினமடைய வைத்திருக்கும், அவர் ஏன் வாறார்? பதவி என்றால் ஓடி வந்து பெரிய ஊடக அறிக்கை பறந்திருக்கும்.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இலங்கையில் உள்ள தமிழர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயரால் கருத்திடுபவர் சைவரே. வேறு மதத்தினரால் சைவத்தின் பெயரால் கருத்திட முடியாது, அது ஏற்புடையதுமல்ல. ஆகவே நீங்கள் தாராளமாக சச்சியரிடம் கேளுங்கள். அவரே, இப்போது சைவசமய அலுவல்களை கவனித்து கண்டிக்கிறார், கருத்து வெளியிடுகிறார். நீங்கள், இங்கு சன்னதம் ஆட நிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. மேலாடை இன்றி என்று பண்பாக கூறியிருக்கலாம். இங்கு கருத்தெழுதும் பலரும் பலவித விளக்கம் தந்துள்ளார்கள், அதில் உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் தேடியறியுங்கள். அவர்கள் சொல்லும் பதில் தவறென்றால் உங்களுக்கு பதில் தெரியுமென்று அர்த்தம். இதெல்லாம் சீண்டல்!
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இந்த கேள்வியை சச்சியரிடம் கேட்டீர்களானால், உங்களுக்கு விளங்கும்படி முழுமையான பதில் கிடைக்குமென நம்புகிறேன்.
-
வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு
இதை நீங்கள் முன்பிருந்த அரசாங்கங்களிடமும் கேட்டிருக்கலாமே? இன்னும் பாராளுமன்றம் முறையாக இயங்காத நிலையில், தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எதற்காக இவ்வளவு அவசரம் கேள்விக்கு? என்ன நெஞ்சு பதறுது எல்லோருக்கும். ஒவ்வொரு குற்றச்சாட்டு வைத்து அனுராவை கவிழ்க்கிற திட்டம். இவர்களை சேர்க்கிறாருமில்லை, சட்ட நடவடிக்கை என்று வேற பயப்படுத்துகிறார். நீங்கள் துள்ளத்தான் செய்வீர்கள். அப்போ, ரணிலின் வேலைத்திட்டமும் பிழை என்கிறீர்களா? ஏன் அதை ரணிலுக்கு அவரது ஆட்சியின் போது தெரியப்படுத்தவில்லை? அவரோ, கண்ணாடி தண்ணீர்குவழையுடன் மேடையில் உரையாற்றுகிறார். அவரைப்பார்த்தா இந்தக்கேள்வி? தம்மை மறைக்கவும் பாதுகாக்கவும் பொய் பொய்யாய் சொல்லுகிறார்கள்.
-
வவுனியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இசைக்கலைஞர்கள்
அடப்பாவமே! இப்படியா ஏமாறுவது? முறைப்படி விஸா எடுத்து போய் சுற்றிப்பார்த்து வந்திருக்கலாமே, இவ்வளவு காசு கொடுத்துப்போய் வெளிநாட்டில் என்ன செய்ய நினைத்தார்?
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
என்ன.... இன்றைக்கு சதிராடுறதெண்டே நிக்கிறியள் எல்லோரும். அவரவர் தங்கள் கவலையை மறைக்க, மறக்க பல விடயங்களில் கவனத்தை செலுத்துகிறார்கள், நீங்களும் விடுவதாயில்லை.
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
ம்ம்.... பொது வேட்பாளருக்கு வாக்களித்து எமது தீர்வை குழி தோண்டிப்புதைக்கிறார்கள் என்று சவால் விட்டார் சுமந்திரன், இன்று அவரின் நிலை என்ன? வெட்கமில்லாமல் ஏன் ஜனாதிபதியை தனியாக சந்திக்க சென்றார்? பழக்க தோசமாய் இருக்குமோ, தனியாக கதைத்து பதவிகளை எடுப்பது? பாராளுமன்றத்தில் அடித்த கூத்துகளையெல்லாம் அமசடக்கமாய் பாத்துக்கொண்டிருந்து யாரை எங்கே வைப்பது என்று தீர்மானித்திருப்பார்கள் போலும். அவர்களோடு நின்று போட்டோ எடுத்து, வெளியிட்டால் மக்கள் ஏமாந்து அனுராவுடன் நட்பு கொண்டாடுகிறார்கள் என நினைத்து தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நப்பாசை, உங்களுக்கு நாங்கள் பணி செய்ய காத்திருக்கிறோம் எனும் செய்தியை சொல்லவும் போயிருப்பார்கள் போலும். எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. சுமந்திரன், டக்கிளசு எல்லா கட்சிகளையும் விமர்சித்தார்கள், இன்று இவர்கள் தென்பகுதியாலும் விமர்ச்சிக்கப்படுகிறார்கள். தன் சட்டியில் என்ன தீயுது என்று பார்க்காமல், மற்றவர் சட்டியில் என்ன அவியுது என்று பிரலாபித்ததன் பயன் உடனேயே கிடைத்து விட்டது. இனியாவது பொத்திக்கொண்டு இருப்பார்களா இவர்கள்?
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
வராமல் விட்டால் தப்பித்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். என் கேள்விக்கென்ன பதில் என்று தேடிதேடியே கேள்விக்கணை தொடுப்பார். யாழையே கொஞ்ச நாளைக்கு திறவாதீர்கள். இன்னொரு விஷயம் ஆளுக்கு கிடைக்குமட்டும்.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஐயர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? சரி, உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் நாங்கள் கேட்க்கிறோம்.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஐயா! நீங்கள் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, நீங்கள் ஏன் சைவரின் சம்பிரதாயங்களை நோண்டுகிறீர்கள்? ஒரு அறிவுக்கு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தெரிந்ததை சொல்கிறார்கள், அதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லை. கேள்விமேல் கேள்வி. இது அறிவுக்காக எழுப்பப்பட்ட கேள்வியாக தெரியவில்லை. ஏதோ விதண்டா வாதம் புரிகிறது.