Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. தேர்தல் திணைக்களமும் திணறப்போகுது, போட்டியிடும் கட்சிகளின் தொகை வாக்களிக்கும் மக்களின் தொகைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என. இதில் யாரும் மக்களுக்காக சேவை செய்ய விரும்பவில்லை, மக்களை ஏமாற்றி தங்களை சிறப்பிக்க, சும்மா இருந்து சுக வாழ்வு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பது. இதற்கு அனுரா ஒரு முடிவு கட்டவேண்டும். ஒரு பதவியை வகிப்பவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதுபோல், இதற்கும் ஒரு வரையறை கொண்டுவந்து இவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்புக்கூறல் செய்ய வைக்க வேண்டும். அதன் பின் தகுதியற்றவன் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கவே மாட்டான்.
  2. தமிழரசு கட்சியை விட்டு விலகி, சிங்களத்திற்கு முட்டுக்கொடுக்கும்போது மஹிந்தரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுவிட்டார் வியாழேந்திரன். அபிவிருத்தி அரசியல் செய்யப்போறேன் என்று சவால் விட்டார், அபிவிருத்தியுமில்லை, அரசியலுமில்லை. தமிழ் கோசம் போட்டு வெல்லலாம் என்று நினைப்பவர்கள் அதை விட்டு விலக மாட்டார்கள், சாதிப்போம் என்று விலகியவர்கள் தொடர்வது மிகக்குறைவு. தேசியத்தை வைத்து வயிறு வளர்த்தவர்கள், புகழ் சேர்த்தவர்கள் இனி வீட்டோடு இருக்க அனுப்பப்படப்போகிறார்கள். பெரும்பான்மை கட்சிகளைவீட்டுக்கு அனுப்ப சிங்களமக்கள் முடிவெடுத்தார்கள், தமிழ் மக்களும் தங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலும் இவர்கள் கோட்டை விட்டால் தங்கள் மேல் தாங்களே மண்ணை அள்ளிக்கொட்டுகிறார்கள். தமிழ் அரசியல் வாதிகளுக்கு கப்பம்கொடுத்து நாட்டை குட்டிசுவராக்குவதை விட்டு, தமிழரின் உரிமையை கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப எந்த முட்டாள் சிங்கள அரசியல், இனவாதிகளுக்கு தெரிவதில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு முட்டாள் செய்வதை, வரும் முட்டாள்களும் தொடர்ந்து நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள், அதில் பெருமை வேறு. தமிழரை அழிப்பதாக கூறி, நமது நாட்டை எமது தலைமையிலேயே அழித்தோமென கொண்டாட்டங்கள் வேறு.
  3. குட்டையை குழப்பி மீன் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு, மீன்கள் குழப்பத்தில் குட்டையை விட்டு வெளியேறி வேறொரு குட்டையையோ, நீர்நிலையையோ தேடஆயத்தமாகி விட்டன என்பது தெரியாமலிருக்கலாம். எந்த சின்னம் எந்த கட்சிக்கு என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத சின்னம், தங்களை ஏமாற்றிய சின்னம், தங்களால் தூக்கி எறியப்படவேண்டிய சின்னம் எது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதிலொரு குழப்பமுமில்லை மக்களுக்கு. இப்போ முளைத்த சின்னத்தால் தமக்கு எதுவும் நடக்காது ஆகவே அந்த சின்னத்தையோ வேட்பாளரையோ பற்றியோ மக்கள் நினைவில் வைத்திருக்கவோ சிந்திக்கவோ மாட்டார்கள். இவர்கள் செய்யும் கூத்து, ஒரே ஒரு சின்னம், அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.
  4. இவையெல்லாம் இனிவருங்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியே? மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் சொகுசு வாழ்க்கை, ஏமாற்று வேலை. இவையெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வருவோருக்கு இத்தனைசலுகைகள் ஏன்? இவர்கள் மக்களின் பணத்தில் சும்மா இருந்து சலுகைகளை அனுபவிக்கிரறார்கள், மக்கள் அனுபவிப்பது துயரம். இவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தி மக்களுக்கு பகிர்ந்தளித்தால்; இப்படி வகை தொகையின்றி போட்டியிடுவோர் குறைந்து, உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்வோர் தோன்றுவர். அல்லது காணாமற் போவர். செய்வாரா அனுரா?
  5. எல்லா சிங்கள தலைமைகளும் கதிரையேறியவுடன், தம்மை புகழவும் சாமரை வீசவும் தாம் காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடிக்கவும் இவருக்கு முதலாக அழைப்பு விடுவது வழக்கம். ஆனால் இந்த தலைவர் இவரை அழைக்கவுமில்லை, இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கவுமில்லை, தேர்தலில் இவர் வெல்லக்கூடிய வாய்ப்புமில்லை. தொடங்கிவிட்டார், கடிதம் எழுதி, தான் தான் செய்வித்தேன் என்று கூவ. அவர் ஒரு தந்திரம், இவர் ஒரு தந்திரம். அனுரா தான் செய்ய விரும்புவதை தன் கட்சி சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கமையசெய்வாரேயொழிய இவர் சொன்னார் என்றோ அல்லது தனி நபர் சொன்னார் என்றோ செய்யப்போவதில்லை. இவர்களின் தில்லுமுல்லுகளையும் வேஷங்களையும் அறியாதவரா அவர்? இவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணம். இவர் சொன்னாற்த் தானே யாரும் கேட்ப்பதற்கு. இவருக்கு எதையும் கேட்க தகுதியுமில்லை தராதரமுமில்லை தேவையுமில்லை. அதற்காக அவர்களோடு அவர்கள் இணைக்கவுமில்லை. இவர் சிங்களத்துக்கு சேவகம் செய்ய பணிக்கப்பட்டவர், மக்களுக்காகவல்ல. சொல்லப்போனால் கோமாளி எல்லா துறையிலும் தலையை காட்டி, தான் ஏதோ பிரபல்யமானவர்போல் காட்டிக்கொள்வார். அண்மையில் நான் அனுராவின் ஆள் என்று தெருவில் நின்று, என்ன நடந்தது என்று கூட தெரியாமல் கூவினார் ஒருவர், அவரை நினையுங்கள், அவர்தான் இவர். அவர் தெருவில், இவர் மேடைகளில் அழையாமலே கூட்டத்துக்குள் புகுந்து படம் காட்டுவார் வாக்குறுதிகள் அள்ளி விடுவார் அந்த வாக்குறுதிகள் நிலுவையில் இருக்க வேறொரு துறைக்குள் மூக்கை நீட்டுவார்
  6. இதுகளெல்லாம் விமர்சிக்குமளவுக்கு இருக்கிறது தமிழ் கட்சிகள். அன்று தலைவருக்கு வாய்த்த விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் போல தமிழரசுக்கட்சிக்கு வந்து வாய்த்த ஒன்றால் அந்த துரோகி இவர்களை பார்த்து சிரிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்திற்கு தமிழ் போராட்டத்தையும், தமிழ் உணர்வையும் வைத்து பிழைக்கும் கூட்டம். இந்த விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியல் செய்ய என்ன லாயக்கு? போராட்டத்தை விற்று அரசியல் செய்யுது. அதற்குள் விமர்சனம் வேறு.
  7. சரி, அவர்களெல்லாம் பிழையானவர்கள் தாங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டியதுதானே? உண்மையை சொல்கிறவர்கள் தவறானவர்கள், தவறு செய்கிறவர்கள்தான் சரியானவர்கள். தேர்தல் முடிவுகள் எல்லோரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும், அப்போ உங்கள் கருத்தை எழுதி சரி பிழையை விளக்குங்கள்.
  8. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதால், தாம் வெற்றியடையப்போவதில்லை என்பதுடன் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என பயப்படுகிறார்கள் இளையவர்கள். முக்கிய காரணம் சுமந்திரன் என்பதை சுட்டிக்காட்டாமல் ஒருசிலரின் செயற்பாடு என்கிறார்கள். சாள்ஸ் நிர்மலநாதன் தான் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தாலும், சுமந்திரன் தானும் அத்தகைய முடிவை எடுக்க வேண்டும், அதை தவிர்ப்பதற்காக அவரை கைக்குள் போட்டுக்கொண்டார். என்னை கட்சி வற்புறுத்தியது, மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்று புலுடா விட முடியாதென்பதால், சூட்ச்சுமகாக இவர்களை அணைத்துக்கொண்டார் சுமந்திரன். இப்போ, அவர்களுக்கே அவமானமாக இருப்பதால், மீண்டும் நழுவிவிட்டார் சாள்ஸ். மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதெல்லாம் பொய். சுமந்திரன் என்று சொல்ல வாய் வரவில்லை. சிறீதரனும் விலகா விட்டால் வருத்தப்படுவார். சுமந்திரனை தனியே விடவும், அப்போதான் அவரின் திறமை, மக்கள் அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படும். கும்பலில கோவிந்தா என்று கூவி விட்டு, நான் தான் பொருத்தமானவர் என்று சொந்தம் கொண்டாடுவார்.
  9. நாடு பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, தமிழரை அழிக்கவேண்டும், வாழ விடக்கூடாது என்று செயற்பட்டால், கூத்தாடிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
  10. தனக்கு எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்பதால் ஒரு பத்திரிகையிடம் முழு விடயத்தையும் ஒப்புவித்ததாக சொல்கிறார். லசந்த விக்கிரம துங்கவை விட்டு வைக்காதவர்கள் இப்பவே அந்த பத்திரிகைக்காரரை தேடி குறி வைப்பார்கள். இவரும் அந்த பயங்கர கூட்டத்தில் இயங்கியவர். உண்மையை கண்டறிந்து தண்டிக்கிறவராக இருந்தால் இவருக்கு பாதுகாப்பளிப்பது அனுரவின் கடமை. தட்டிக்கழிப்பாரா, அல்லது செய்து நிரூபிப்பாரா தான் சொன்னதை?
  11. செத்த மாட்டிலிருந்து உண்ணி கழருவதுபோல் ஒவ்வொருவராக தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரம் சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மட்டுமே தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடுவார்கள் போலுள்ளதே. அப்படியானால்; இவர்களுக்கு வாக்களிப்பது யார்? அவரவர் குடும்பத்தினர். உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போலுள்ளதே. அடித்து விரட்டினாலும் போக மாட்டார்கள், மக்கள் இவர்களை விட்டு விலகினால் போய்த்தான் ஆகவேண்டும். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் போய்விட்டது தமிழரசுக்கட்சியின் நிலைமை.
  12. மூழ்கிற கப்பலில் பயணம் செய்ய யார் முன்வருவார்? தப்பிக்கவே வழி தேடுவர். அதையே தவராசா செய்திருக்கிறார். சிறீதரன் நேர்மையற்றவர், சுமந்திரனுக்கு எதிராக செயற்படவேண்டிய நிலை வரும்போதெல்லாம் நழுவி விடுவார். கடந்த ஒரு தேர்தலின் போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், ஆகவே தலைவரை மாற்ற வேண்டுமென சுமந்திரன் கொடி தூக்கியபோது, அதை ஏற்க சிறீதரன் தயாராக இருந்தார். சட்டம் தெரிந்த ஒருவர் தமிழரசுக்கட்சிக்குள் இருப்பதை சுமந்திரன் விரும்புவதில்லை, அவர்களை கண்டால் பயப்படுகிறார். தலைவர்களுக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்கவோ, தட்டிக்கேட்கவோ பயம். அவரை தலைக்குமேல் ஏற்றி வைத்து முன்னுரிமை கொடுத்தார்கள், பின்னாளில் அவரை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. சுக்கான் இழந்த படகுபோல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். முதலில் கேள்வி கேட்கக்கூடியவர்களை, சம்பந்தனை கைக்குள் போட்டு ஒவ்வொருவராக வெளியேற்றினார், பின் வளர்த்த மாடு மார்பிலே பாய்ந்தமாதிரி சம்பந்தனுக்கு எதிராகவே கிளம்பினார். அவர் வந்தவேலை ஓரளவு முடிந்து விட்டது, அவர் வந்த பாதையில் வெற்றியோடு திரும்புவார். ஆனால் இவர் சொற்கேட்டவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? சுமந்திரன் வந்து எதை சாதித்தார்? வீட்டை உடைத்து குட்டிச்சுவராக்கினார். சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் போன்றோரை அப்பப்போ பகைப்பதும் சேர்ப்பதுமாக அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறார்.
  13. ஹிஹி...... கரட்டி ஓணானுந்தான் நிறம் மாறுது, அது ஏன்? இவர் ஏமாறுகிறாரா, அநுர ஏமாற்றப்படுகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும். மது அனுமதிப்பத்திர பெயர் கேட்டு அனுராவை தேடி ஓடினார், நினைத்தது நடக்கவில்லை, சிறீதரனையும் சாள்ஸ் நிர்மலநாதனையும் கூட்டுச் சேர்த்தார், சிறீதரன் நழுவுவார் போலுள்ளது. எல்லோருக்கும் தெரியும் சுமந்திரனின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதென. அதனால எல்லோரும் அவரை விட்டு விலக தயாராகின்றனர். உந்த நாடகம், வெருட்டல் எல்லாம் இனியும் எடுபடாது.
  14. எலும்புக்கு கூடுகள் என்று சொல்லாமல், ஆயுதங்கள் என்று சொல்லி தோண்டி, காணாமல் போனோரை கண்டுபிடிக்கப்போயினம்!
  15. இந்தியா, அமெரிக்கா அடுத்து? சீனா, ஜப்பான், கொரியா, தென் ஆபிரிக்கா தொடரும் உறவுப் பட்டியலும் உதவித்தொகையும்.
  16. இந்தியாவுக்கு சொல்லுகிறாரோ? இந்துசமுத்திரத்தின் வல்லரசு தான் என அண்ணர் நினைப்பில், இவர் மண்ணை அள்ளி போடுறாரே. நாடுகளை பக்கசார்பில்லாமல் நடத்த முடியுமென்றால், நாட்டுமக்களையும் சரி சமமாக நடத்த முடியுமே. எதற்கும், இந்தியாவை கொஞ்சம் தள்ளியே வைத்தால், நாடும் மக்களும் அமைதியாக இருக்க வாய்ப்புள்ளது. பாவம் ஜெய்சங்கர்! முதலாம் ஆளாக ஓடிவந்து நன்கொடை, அது, இது என்று ஐஸ் வைத்தவர், மூஞ்சியில கரியை பூசுறாரே.
  17. முன்பொருநாள், நீங்கள் ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு, அது என் மனதில் வந்து எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு.
  18. அதற்கு வழிவிட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும் இது கரெக்ட்! சிலருக்கு, தமிழ் வாசித்து கிரகிப்பதில் சிக்கலுள்ளது போலும். வினோ, தான் தேர்தலில் போட்டியிடாமைக்கு காரணத்தை தெளிவாக விளக்கியிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து, புதியவர்களுக்கு இடமளிப்பதற்காக போட்டியிடாமல் தவிர்ப்பதற்காக.. தான் சேர்த்த பணம் வாகனம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே. சம்பந்தப்பட்டவர்கள் தமக்கு சார்ந்தவர்கள், அதற்காகவே போட்டியிடுகின்றனர் என்று சொல்ல வருகின்றனரா?
  19. அட..... இவ்வளவுதானா? நான் பயந்தே போய்விட்டேன்!
  20. ஆகவே, மற்றவர்களும் கோடிக்கணக்கில் பணம், கணக்கில்லா வாகனங்கள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் இடம் விடுங்கப்பா, அப்பதான், சும்மா இருந்து சாப்பிடலாம் வயோதிபத்தில். மொத்தத்தில், பணம் வாகனம் பார்க்க. மக்கள் தலையில் அரசியல்! மக்கள் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. இந்த வாதமும் நல்லாய்த்தானே இருக்கு.
  21. இது, தமிழ் இனத்துக்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநிஞாயாயங்களுக்கும் பொருந்தும். அதைத்தான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறீர்கள் என நினைக்கிறன். அதை தீர்த்து வைக்கவேண்டியது ஜனாதிபதியாகிய உங்களின் கடமை!
  22. அந்தக்கொள்கையின் விளக்கம் தேர்தல் முடிய தரப்படும். பாராளுமன்ற கதிரையா? தூக்குக் கயிறா என்று பின்னர் தெரியும். கடந்த காலம் போல் தொண்டை கிழிய கத்தி, தங்கள் மொழி ஆற்றலை காட்டி இனி வருங்காலத்தில் பதவி, சுகபோகம் அனுபவிக்க முடியாது.
  23. நீங்கள் எப்படி குட்டினாலும் எங்களுக்கு வலிக்காது, நாங்கள் குனிந்து வாழத்தயார்!
  24. ஒன்று, நம்மையும் இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக அதிகாரத்தை பகிர்ந்து சமமாக வாழ முன்வரவேண்டும். இல்லையேல், நம்மை பிரிந்து வாழ அனுமதிக்கவேண்டும். ஒரு ராச்சியம் என்றால்; ஏன் மதத்தில், கல்வியில், தொழிலில், நீதி நிலைநாட்டுவதில் பாகுபாடு? அதனாற்தானே பிரச்சனை தோன்றியது. எடுத்தவுடன் யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. நீதி கோரி அஹிம்ஸை வழியில் போராடியவர்களின் கோரிக்கைக்கு எப்படி பதில் வழங்கப்பட்டது? தாமுண்டு தம்பாடுண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நின்ற நம்மவர்களை எரித்தும் அழித்தும் அடித்தும் உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று விரட்டியது யார்? பின் எங்கள் பிரதேசத்தில் வந்து, அங்கிருந்தும் அழிவுகளை ஏற்படுத்தி ஏதிலிகளாக்கியது யார்? சரி, போர் முடிந்தது, நம் நிலங்களையும் ஆலயங்களையும் நமது இருப்பையும் பறிப்பது யார்? இவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், பின் இரண்டாம் பட்ஷமாக நடத்துவது ஏன்? சிங்களத்துக்கு, தமிழர் இந்த மண்ணில் தங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள், அதையும் நம்மவர் சிலர் நிஞாயம் என்றே வாதாடுகிறார்கள். ஆளுங்கட்சி ஒரு தீர்வை வைக்கும், எதிர்க்கட்சி அதை எதிர்க்கும், அடுத்த தேர்தலில் தான் வைத்த தீர்வை எதிர்கட்சியாக இருந்து எதிர்க்கும். ஆக மொத்தத்தில் தமிழருக்கு எதுவும் கொடுப்பதில்லை, அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். அதனாலேயே நம் நாடு வங்குரோத்து அடைந்திருக்கு. அவர்கள் மாறாவிட்டால் நாடு முன்னேறப்போவதில்லை. நாடு எந்த நிலைக்கு போனாலும் பரவாயில்லை, ஆனால் தமிழருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அனுராவல்ல, எவர் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராமல் நாடு அணுவளவும் முன்னேறாது! உண்மையான புத்திசாலி நாட்டை முன்னேற்ற விரும்பினால் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பார். அதன் பின், பொருளாதாரம் விரட்டப்பட்ட மக்களால் கட்டியெழுப்பப்படும். இல்லையேல் சர்வதேச கூத்தாடிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாட்டின் வளங்களை இழந்து தலையாட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதை செய்ய தவறும் பட்ஷத்தில் அனுராவும் விரட்டப்படுவார், ஒருவேளை சர்வாதிகார ஆட்சி வரலாம். சிங்களமக்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்க தொடங்குவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.