Everything posted by satan
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதற்கு வழி கேட்கிறீர்கள்?
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
நமக்குள் இருக்கும் தடைக்கற்கள், ஒன்றாக சேர்ந்து ஒரு கொள்கைக்காக போராடாமை, காட்டிக்கொடுப்பது, எதிரியின் கொள்கைக்காக அவர்கள் பெயரில் இயங்குவது, நான், எனக்கு, என்னால்தான், எனக்குக் கீழ்த்தான். இப்படி ஒவ்வொருவரும் இயங்குவதால், எதிரி இலகுவாக நம்மை கூறுபோட்டு எதிரெதிராகவே வைத்து தன் நலத்தை பேணிக்கொள்கிறான். ஒருவேளை பதின்மூன்றை விட கூடுதலான அதிகாரம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என சொல்கிறாரோ என்னவோ......?
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
அவர் தமிழரசுக்கட்சிக்குள் செருகப்பட்டதே, தமிழ்த்தேசியம், தமிழரசு என்கிற கட்சிகளை இல்லாது அழித்து, ஒரு ராச்சியம் என்பதை உருவாக்குவதற்கே. கிட்டத்தட்ட அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். ஆனால், அவரை பணிக்கு நியமித்த எஜமானர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். பாவம்! கூலி முழுவதுமாக பெறமுன் இப்படியாகிவிட்டதே. இப்போ அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள். அடித்து விரட்டினாலும், ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு அங்கேயே சுத்துவார். இனிமேல் சட்டாம்பி வேலைக்கும் யாரும் அமர்த்த மாட்டார்கள், சொல்வது முழுக்க பொய்யும் புழுகும். நச்சுப்பாம்பு.
-
இது நகைச்சுவை தத்துவ கதை.
போகப்போகிறீர்களா?
-
'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்தார் மிலிந்த மொரகொட
அவர் எழுதிய நூலை, சிங்களத்தில் மொழிபெயர்த்து, அவருக்கே அளித்து என்ன சொல்ல வருகிறார்? பெருமை தேட முனைகிறாரா? இப்போ ஒரு பழக்கம், பதவி கிடைத்தவுடன் புத்தகம் எழுதுதல், பதவி விலகியவுடன் புத்தகம் எழுதுதல். சிங்களபுத்தகத்தை இந்திய அமைச்சருக்கு கொடுக்கிறார் இவர், இன்னொருவர், தமிழ் பத்திரிகையை சிங்கள அமைச்சருக்கு கொடுக்கிறார். எல்லாம் பேய்க்கா ட்டு!
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
தான் பதவியில் இருக்கும்பொழுதே நாமலை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்து, இலங்கையை தமது குடும்ப சொத்தாக்க வேண்டும் என கனவு கண்டு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் வீணாகி, குடும்பத்தையே திருடர் பட்டதோடு அரசியலில் இருந்து துரத்தும் காலம் வருமென கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று காலம் நிரூபித்து சென்றுள்ளது. துக்கத்துடனும், அவமானத்துடனும் அரசியலில் இருந்து விடைபெறுங்கள். நீங்கள் இன்னும் நிலைத்திருந்திருப்பீர்கள், எந்த அரசியலை ஒழிக்கிறோம் எனக்கூச்சல் போட்டு பதவியேறினீர்களோ அதே அரசியலை நீங்கள் கையிலெடுத்ததே உங்கள் அரசியல் அஸ்தமனத்திற்கு காரணம். மக்களே, எங்களிடம் பதவியை தந்தார்கள், நாங்கள் வேண்டாம் என்றால், அவர்களே நம்மை துரத்துவார்கள் என்று அன்றொருநாள் உங்களையுமறியாமல் இப்படியாகுமென்றும் தெரியாமல் சொன்னீர்கள். உங்கள் வாய்வார்த்தை பலித்துவிட்டது. யாருக்கும் குறிப்பிட்ட காலமே வழங்கப்படும், அதை சரியாக, நிஞாயமாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை விட்டு தூர விலகி விடும். இதை தெரிந்தவன் அதை பயன்படுத்திக்கொள்வான்.
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
அது அவர்களின் கலாச்சாரம்!
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும்.
ஆக்கப்பொறுத்தவர் ஆறப்பொறுக்கவும் வேண்டும். எழுபத்தைந்து வருடங்களாக பொறுத்து விட்டோம், அடுத்த தேர்தல் வரை பொறுப்பதில் குடியொன்றும் முழுகப்போவதில்லை. எழுபத்தைந்து வருடங்களாக ஊறிப்போன பிரச்சனையை ஒரு இரவில் தீர்க்க முடியாது. அதுவும் அவரது பதவி தொங்கு பாலத்தில் நிக்குது. கரணம் தப்பினால் மரணம். பிறகு இந்தக்கட்சியால் எழுந்திருக்கவே முடியாது. அவரது பதவியை இல்லாமற் செய்வதற்கு நாமல், சரத் வீரசேகர, அவரின் வாயை கிளறி அனுதாப வாக்குகளால் மீண்டும் அரசியலை பிடிக்க துடிக்கின்றனர். மக்கள் இனி இவர்கள்மேல் அனுதாபம் காட்டுவார்களா என்பது சந்தேகம் ஆனால் முயற்சிக்கிறார்கள். தன்னை இஸ்திரப்படுத்துவதற்காகவே சில அதிரடிகளை, அறிவித்தல்களை வெளியிட்டு ஊழல் பேர்வழிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமும், மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த விழைகிறார். அந்தப்பக்கம் அதை சாதகமாக வைத்து அவரை விழுத்தி விழுந்துபோன தம் அரசியலை தூக்கி நிறுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆகவே அவரது கைக்கு முழுமையாக ஆட்சி வரட்டும், இந்த குழப்பக்காரர்களின் அட்டகாசத்தை அடக்கியபின் பின்னரே இவரால் எதுவும் செய்ய முடியும், இவரை குற்றம் சொல்லவும் முடியும். யதார்த்தமாய் யோசிப்போம். அதற்காக நான் அனுராவின் ஆதரவாளர் கிடையாது. நமது அரசியல்வாதிகளின் தில்லு முல்லுகளையே மாற்றியமைக்க எம்மால் முடியவில்லை. விட்டுக்கொடுப்பு என்பது இனிமேல் இல்லை, ஆனால் நாங்கள் கேட்பவற்றை பெறுவதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் என்பதை நிலை நிறுத்துவோம். காலம் அது தன் கடமையை செய்யும். ஒவ்வொருவருக்கும் அவகாசம் கொடுக்கிறது. எம்மோடு அதிகாரங்களை பகிர்ந்து வாழ முடியாவிடில், அவர்களிடமிருந்தும் அதிகாரம் கைமாறும். அரசியல் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்நாளின் முக்காற்பகுதியை, இளமையை, எதிர்கால வாழ்வை சிறைக்குள்ளேயே தொலைத்துவிட்டு நம்பிக்கையிழந்து வாழ்கிறார்கள். தேர்தலில் இவரின் கை ஓங்கினால்; விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேர்தலில் தென் இலங்கையில் களமிறங்கப்போறாராம், பொறுத்திருந்து பாப்போம்! இவற்றை கட்சியில் இருந்து புலிகளுக்கு பயந்து ஓடினதுகள், அங்கே குடும்பம் குட்டி என்று பலுகிப் பெருகி இருக்குதுகள். அவர்களின் வாக்குகளால் வெல்லலாமென நினைக்கிறாரோ என்னவோ? இந்த முறை தேர்தலோடு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வேற தெரிவித்துவிட்டார். இவர்கள் ஒன்றும் சத்தியவான்களோ அரிச்சந்திரன்களோ கிடையாது. சுமந்திரன் சொன்னார், நல்லாட்சி காலத்தில் ஒருவருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன். இப்போ அதைப்பற்றி நினைவு படுத்தி அவரை கேட்டால்; அதற்கு வேறொரு விளக்கம் கொடுத்து, இன்னொருவரை குற்றவாளியாக்குவார். சில வாரங்களுக்கு முன் சொன்னார், இளையோருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்படுமென. இப்போ சொல்கிறார், வடக்கில் நிட்சயம் தானும் சிறீதரனும் போட்டியிடுவதாக. அப்போ; இவர் இளையவரா? இவரின் உறுதிப்பாட்டுக்கு என்ன நடந்தது? உறுதியளித்தவர், தன்னை தியாகம் செய்து முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? வார்த்தை ஒன்று, செயல் வேறொன்று. நான், என்னால், எனக்கு என்பதற்காக எந்த கீழ் நிலைக்கும் இறங்கும் சீவன்கள். இடம் கொடுக்கப்பட்ட ஒட்டகங்கள்! விரட்டுவது கடினம். வெட்கம் இல்லை, சொன்ன வாக்கை நிறைவேற்றும் திராணியில்லை, ஏமாற்றிப்பிழைப்பு.
-
இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?
அவர் வந்தது அனுராவை யாரும் அண்டாமல் காக்கா பிடிப்பதற்கே. தமிழர் பற்றிய அக்கறை, கவலை, பயம் அவருக்கு இல்லை. தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாத, மக்களுக்காக வாழ முயலாத, எடுப்பார் கைப்பிள்ளைகளால் இந்தியாவுக்கு நன்மையோ, அச்சுறுத்தலோ இல்லையே. 'வா' என்று ஒரு அறிவித்தல் வராதா காலில் போய் விழாமாட்டோமா என்று காத்திருக்கும் இவர்களோடு கதைத்தால் என்ன, கதையா விட்டால் என்ன? குடியா முழுகப்போகுது இந்தியாவுக்கு? அவர் வந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார் அவரை வரவேற்பதற்கு ஆயத்தங்கள் பண்ண வேண்டாமோ? அவர் இவர்களுடன் வீணாக நேரத்தை செலவிட, இவர்கள் முக்கியமானவர்களுமில்லை, இவர்களின் கோரிக்கை முக்கியமானதுமில்லை, இதை எம்மவர்கள் உணரவுமில்லை, இவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், தேர்தல் மேடையில் பிதற்றுவதற்கு. அவர்கள் தள்ளியிருப்பதே தமிழினத்துக்கு நன்மையளிக்கும். இந்தியாவும் இலங்கையும் பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எழுதுகிறார்கள், நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொட்டுக்க ஊறுகாய்போல உள்ளது. இது இரண்டுதரப்பும் காட்டும் அலட்சியம். ஒருநாள் நிறைவேற்ற துடிப்பார்கள், அப்போ காலம் கடந்துவிடும். ஒப்பந்தமும் காலவரையறை முற்று ஆகி, நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகிவிடும். நானும் இருக்கமாட்டேன், இதைப்பற்றி பேசுபவர்களும் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறன்.
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
ஐயோ....... கவித்துபோட்டானே இந்தியன்! பூகோள அரசியல் இந்திய சீன போட்டியில் தான் சிக்கிகொள்ளப்போவதில்லை என அறிக்கை, இந்திய நிறுவன அதானியின் திட்டத்தை கைவிடுவது என்று அறிக்கை விட்டவரை, வாழ்த்துக்கூறி, வரவழைத்து, அன்பளிப்பு, நன்கொடையென வாரிவழங்கி கவிழ்த்துப்போட்டானே. "நக்குண்டார் நாவிடார்." "முதற் கோணினால், முற்றும் கோணும்." எதிர்பார்ப்பு ஏமாற்றமாகலாம். ஆகவே மக்கள் நிதானம்! குடிக்கக்கொடுத்து வாக்கு வாங்குவது போலாயிற்று.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தரகர்களுக்கும் சகுனிகளுக்கும் கொண்டாட்டம். சிறீதரன், சுமந்திரன் அரசியல் தாதாக்கள்! அவர்கள் விலக மாட்டார்கள், மற்றவர்களை விரட்டுவார்கள். தங்களுக்குள் சந்தர்பத்திற்கேற்ப உடன் படிக்கை செய்து விட்டுக்கொடுத்தும் வாங்கியும் கொள்வார்கள்.
-
குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என கூறும் பிக்கு
இவனைப்பாத்தால்; பிக்கு மாதிரி தெரியவில்லையே. விகாரையில் சமைப்பவனாக இருப்பானோ? அவனது உடையும், தலையும், இருக்கும் விதமும் சுத்த குடிகாரன் வலுச்சண்டைக்கு வந்தவன் போல் தெரிகிறானே. இவனை விகாரையில் எந்த பணியோ அதோடு நிறுத்திக்கொள்ள செய்ய வேண்டும். இதெல்லாம் முன்னைய அரசுகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் அரங்கேறியவை, இதில் கைவைத்தால் அனுராவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கும். இந்த கலாச்சாரத்தை மாற்றா விடில் இவரும் நாட்டை மேற்கொண்டு செல்ல முடியாது. நாடு முழுவதும், எல்லாத்துறையிலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அடாவடி, கொலை, கொள்ளை மலிந்து விட்டது. இதை உடனடியாக மாற்றுவது கடினம். அதோடு அவர்களும் இந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்களே. இதற்கு கால அவகாசம் தேவை. முதல் இதன் பிதாக்களை சிக்க வைத்து, தண்டிக்கப்பட்டால் மாத்திரமே படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரலாம், எடுத்தவுடன் அடிமட்டத்தில் கைவைத்தால்; பாரிய பிரச்சனை வரும். முதலில் நாடு வீழ்ந்ததற்கான காரணம், அதற்கு முன்னிருந்த நிலை, நாடு முன்னேற ஏற்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள், மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதென்ன, அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும், தவறும் பட்ஷத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன என்பதை தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும், சட்டமாக இயற்றப்படவேண்டும். அதன் பின் நடவடிக்கை எடுக்கும் போது தானாகவே ஒரு பயம், கடமை ஏற்பட வாய்ப்புள்ளது. இது இரண்டொரு நாளில் மாற்றப்படக்கூடியதல்ல, எழுபத்தாறு வருடங்களாக வேரோடி, நாடுபூராவும் விருட்ஷமாகி விட்டது. மெதுவாக வேர்களை வலுவிழக்கச் செய்தே மரத்தில் கைவைக்கவேண்டும். ஒரு கட்டத்தில் அனுராவே களைத்து வளரட்டும் எனவிடக்கூடும். இவரது ஆயுள் பூராவும் காணாது மாற்றத்தை ஏற்படுத்த. இவர் இதய சுத்தியுடன் செயற்பட்டால் இவரது காலத்தில் மாற்றத்தை காணலாம். உலகம் அழிவை நோக்கி போகும்போது எல்லாம் காலங்கடந்த்தே.
-
பாவ மன்னிப்பு பெற்ற சிறீதரன்.. சுமந்திரனின் திடீர் மாற்றம் | இரா மயூதரன்
இனி வருங்காலத்தில், அரசியல் சலுகைகள் வரப்பிரசாதங்கள் முன்போல் இருக்குமா என்பது சந்தேகம். அதை இழப்பதற்கு, அதிலிருந்து திளைத்தவர்கள் விரும்பவும் மாட்டார்கள். ஆனால் ஒரு இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்பவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை வெளிப்படுத்தி சம்பளம் பெறும் நிலை வரவேண்டும். சும்மா கதிரையில் இருந்து வார்த்தையாலம் காட்டி முன்னுரிமைகளையும் பதவிகளையும் பெறுவது தடுக்கப்பட வேண்டும். தென்னிலங்கையில் எப்படி முன்னுரிமை பெற்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு புதிய கட்சிக்கு வாக்களித்து புது மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ, அதே போன்று தமிழ் மக்களும் பழையவர்களை வீட்டுக்கு அனுப்பி புதியவர்களை வரவேற்க வேண்டும். இவர்கள் சாதித்தது என்ன? அவர்கள் அனுப்பப்பட வேண்டியவர்களே! இல்லையேல் வரும் புதியவர்களுக்கு இதே கலாச்சாரத்தை எதிர்பார்த்து அதற்காகவே வேலையற்று வெறும் வாக்கில் வாழ்பவர்களாக இருப்பார்கள். இந்த தடவை உனக்கு சந்தர்ப்பம் அளிக்கிறோம், உன் திறமையை காட்டு, இல்லையேல் வீட்டுக்கு அனுப்பப்படுவாய் என்கிற செய்தியை மக்கள் அறிவிக்க வேண்டும். சர்வதேச தரகர், நம் தலைவர்களை கையாண்டு நமது நாட்டை சீரழிப்பதை தடுக்க வேண்டுமானால்; எல்லா குடிமக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அப்போது சர்வதேசத்துக்கு இங்கு மூக்கு நுழைக்க வேண்டிய தேவையில்லை. இதை அனுரா செய்தால்; மிகச்சிறந்த தலைவராக, நாட்டை முன்னேற்றுபவராக மாறுவார். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக இருப்பார். ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம். இந்த கூத்தாடிகளை விரட்ட வேண்டுமானால்; நாம் ஒன்றுபட வேண்டும். நாம் ஒன்றும் நிஞாயமற்றதை கேட்கவில்லை, எமது உரிமையைத்தான் கேட்கிறோம். அதை செய்யாமல், நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்கிற விதண்டாவாதம் செய்யக்கூடாது. எப்போது, ஏன், நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோமென்பதை உணர்ந்து செயற்படவேணும். ஆரம்பம் வெறும் அதிரடிகளால், வெடி கொழுத்திவிட்டு மக்கள் நம்மை ஆதரிக்கிறார்கள் என சுகபோகத்தையும் சர்வாதிகாரத்தையும் கையிலெடுத்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது!
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
அவருக்கு என்ன நடந்தது? சரியாக துப்பு விளக்கினேன் போலுள்ளது, அங்கால ஒருவர் முந்திக்கொண்டு துள்ளுறார். எனது அவதானிப்பு உண்மையாய் இருக்குமோ?
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
உங்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர். அவருக்காக ஒருதடவை சிறப்புச்சான்றிதழ் அளித்தவர் நீங்கள்.
-
13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி சலிக்கவில்லையோ இவர்களுக்கு? கடந்த காலங்கள், அது நடைபெறாதென நிரூபித்துள்ளன, சட்டத்தாலும் தமிழர் தாயகத்தை பிரித்தாயிற்று. இப்போ, அங்கிருக்கும் முஸ்லீம், நமது இனத்துரோகிகளும் இணைய விடமாட்டோம் என போராடுகிறார்கள். இவர்கள் இந்த துண்டை தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள் உறவை வளர்க்க, வாழ்த்துசொல்லவென. நான் சொல்லுறது போல சொல்லுறன், நீ மறுக்கிற மாதிரி மறு, இரண்டு பக்கமும் நான் குளிர் காய்கிறேன்.
-
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகளின் முடக்க நிலை நீடிப்பு
இந்த வெறிக்குட்டி, தான் வெறியில் விழுந்தெழும்பி காலை உடைத்துப்போட்டு, அவுஸ்ரேலிய உல்லாச விடுதியில் பெற்ற தண்டப்பணத்தை மீள செலுத்துமாறும் சேர்த்து உத்தரவிடுங்கள் நீதிபதியவர்களே!
-
'இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம்', இரண்டு வாரங்களை அனுரகுமார சிறப்பாக பயன்படுத்தியுள்ளார், "சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும்" - எரிக்சொல்ஹெய்ம்
இவையெல்லாம் தமிழ் இனத்துக்கு அபசகுனமாச்சே! மாறாக முட்டுக்கடைகளையே உருவாக்கும். அது சரி, இந்த ஓணான் இன்னும் ஏன் மூக்கை நீட்டுது?
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
நீங்கள் எவ்வளவுதான் அடிச்சுக்கேட்டாலும், சிறியர் ஜேர்மனியிற்தான் இருக்கிறார் என்கிற உண்மையை உங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று சொல்லுவேன். போதுமா சிறியர்?
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
கடந்த காலத்தை விடுங்கள், இவரின் எதிர்கால வாழ்க்கை மறுபடியும் இப்படி எழுதப்படுமானால் வாழ்த்தப்படக்கூடியது. எங்கள் வலி, தாகம் யாரும் சொல்லாமலே அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். அப்போது அரசு எதை செய்திருக்க வேண்டுமென போராடினாரோ, அதை அவர் மக்களுக்கு செய்து நிரூபிக்க வேண்டும் தாங்கள் செய்த போராட்டம் நிஞாயமானதென.
-
யாழில் காணி விற்பனையாளரிடம் ஒரு கோடி ரூபாய் பணம், கைப்பேசி, கடவுச்சீட்டு கொள்ளை - மூவருக்கு விளக்கமறியல்
நிஞாயமான கேள்வி! பறிகொடுத்தவர் வெளிநாட்டுக்காரர், பெரிய பணத்தொகை, இவர்களும் ஒருவகை திருடரே. இனிமேல் கண்டு கொள்வர். இல்லையென்றால், வேலையிழப்பு கைலஞ்சம் பெற்றமையில் உள்ளே போக நேரிடும். அநுர சொன்னதை செயலில் காட்டினால்,
-
சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி
மக்கள் சொல்லட்டும்!
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
இழந்தவை மட்டுமல்ல, இவன் மட்டுமல்ல, இவன் போன்றவர்கள் அரசியலில், போராட்டத்தில் எப்போதும் நமது இனத்துக்கு ஒரு தடைக்கல். கோழைகள்! வீர வசனம் பேசி தம்மை உயர்த்துவது.
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
இது அவரது சொந்தக்குணம், மாற்ற முடியாது. மாற்றிப்போடுவது, நழுவுவது, அடாவடி பண்ணுவது. "உன் நண்பனைப்பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு. அது சரி சிறியர்..... நான் ஒருவரை கனநாளாக தேடுகிறேன், தகவலேதும் இல்லை. தேர்தல் வேலைக்காக போய்விட்டாரோ? அல்லது இரட்டை வேடம் வேண்டாமென களைந்து விட்டாரோ?