Everything posted by satan
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
இது பொய்ப்புகாராக இருக்கலாம், இந்தியாவில் ஒரு நாளைக்கு பெண்களுக்கெதிரான தொண்ணூறு பாலியல் வன்கொடுமை, கொலை நடப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தெரிந்தே இவ்வளவென்றால், தெரியாமல் எவ்வளவோ? சிலது பொய்யாகவும் சோடிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அதற்கான காரணம்; வகைதொகையின்றி நடக்கும் இப்படியான குற்றங்களை சிலர் தமது லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். பொலிஸாரின் அஜாக்கிரதை, அலைக்கழிப்பு இதனால் உண்மையாகவே பாதிக்கப்படுபவர்கள், பாதுகாப்பு தேடுவதில் பாதிப்பு, தாமதம் ஏற்படுகிறது, உயிரையும் இழக்க நேரிடுகிறது.
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
இந்த அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவுகாலமும் தலைவராக இருந்தார் என்பதே உலக அதிசயம். அதனாற்தான் நேற்று நுழைந்த சுமந்திரன் இவ்வளவு சர்வாதிகாரம் செலுத்த முடிந்தது கட்சிக்குள். இனிவருங்காலத்தில் தேர்தல் வந்தால்; மாவையரின் இந்த நகைச்சுவையை மக்கள் மறக்க மாட்டார்கள் யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே! காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம். ஆமா...... சுமந்திரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? ஒருவரும் அதை கூறியதாக தெரியவில்லை, அல்லது நான் தவறவிட்டு விட்டேனோ? பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்திவிட்டு அதன் பின் அதற்காக பாராட்டுப்பெறுபவர்களை அனுரா கவனியாமலா இருந்திருப்பார்? கனடாவில் இருக்கிற தங்கமயிலே, சாணக்கியன் பேசியதை தனது அறையில் இருந்து கவனித்த கோத்தா, பின் அவரை அழைத்து பாராட்டியதாக புளகாங்கிதம் அடைந்தாரே. இவ்வளவுதான் அவர்களது உரை. பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பேசுவார்கள், பாடுபடும் மக்களுக்காகவல்ல. தங்கள் சாணக்கியத்தை காட்டுவதற்கு கிடைத்த அரங்கமே பாராளுமன்றம். இப்போ தங்கள் சொந்த கட்சியையே விமர்ச்சிக்கிறார்கள் பாராளுமன்றில்.
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள், மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.
-
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
முக்கியமான பணி இது, இலகுவானதல்ல, இதனாலேயே நாம் அரிய தலைவன் ரவிராஜை இழந்தோம். சாணக்கியன் செய்யலாம், செய்வாரென் எதிர் பார்த்தேன் ஆனால் செய்ய மாட்டார்.
-
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு
பாடசாலைகளில் இராணுவ முகாம் அமைப்பது ....? உடனடியாக இராணுவத்தில் கைவைக்க மாட்டார் ஏற்கெனவே சந்திரிகா உறுதியளித்துவிட்டு இராணுவம் முறுக அப்படியே திருப்பி போட்டார். ஆகவே இராணுவத்தோடு மெதுவாகவே மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இனவாதத்தை ஊட்டி முறுக்கேற்றபட்டவர்கள் அவர்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு : சிக்கிய ஊழியர்
தெளிவாகத்தானே பிரசுரித்திருக்கிறார்கள்!
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது.
-
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி?
அவர்கள், இத்தனை காலமும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டாலும் கொள்கை ஒன்று, ஆட்கள் மாறி மாறி வெல்லும் கட்சியில் உட்காருவார்கள். இப்போ மட்டும் ஏன் கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள்? அதிகாரம் தங்களது கைவிட்டு போனால், இனிமேல் தங்களுக்கு அரசியல் கிட்டாது என்று தெரிந்து விட்டார்கள் போலும். தமக்குள்ளே மாறி மாறி வைத்திருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எங்கே, தட்டுத்தவறி தமிழருக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து விடுவாரோ, பின் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை என்பதும் கவலையாயிருக்கும்.
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
ம்...... அப்படியென்றால்; மற்றவர்கள் இனவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்ல வந்தாரோ என்னவோ?அதில் இணைந்தால்; தானும் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தே அவர்களுக்கு வாக்களித்தாரோ? இதுதான் இவரது ராஜதந்திரம், தூர நோக்கு.
-
இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள் - சிவமோகன் அழைப்பு
யாரின் இருப்பை காக்கப்போகிறீர்கள்? ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைத்தானே பல்லவியாக பாடுகிறீர்கள். நீங்கள் இல்லாமலேயே தீர்வு பெறும் காலம் நெருங்கி விட்டது. அதை தடுக்காமல் தள்ளி நில்லுங்கள். முதலில் அரசியல்வாதிகள் நீங்கள் ஒற்றுமையாக வந்து வாக்கு கேளுங்கள், மக்கள் ஒருமித்து வாக்களிப்பார்கள். இல்லையேல்; உங்களது இருப்பு கேள்விக்குறியாகும். தேர்தலுக்கு முன் ஒன்று, தேர்தலுக்கு பின்னொன்று, தேர்தலின் போதொன்று, தென்னிலங்கையிலொன்று, வடக்கிலொன்று, பாராளுமன்றத்திலொன்று, சர்வதேசத்திலொன்று, பத்திரிகையிலொன்று, பேட்டியிலொன்று என மாறி மாறி திரித்து மக்களை பிரித்து அரசியல் செய்தது இனியும் எடுபடாது. ஒரு கட்சியாக இருந்து, ஒருமித்த கட்சியாக இருந்து, பல கட்சிகளாகி, மக்களுக்கு என்று ஒரு கட்சியுமேயில்லாமல் தள்ளாடுது தேசியம். தேர்தல் வரும்போது ஏக பிரதிநிதிகள் நாங்கள், உங்கள் ஏகோபித்த ஆதரவை தாருங்கள் என்று கெஞ்சுவீர்கள். அதன் பின் நீங்கள் மக்கள் கண்களில் படமாட்டீர்கள், உங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியாது, அவர்களின் கோரிக்கைகளைவிட சிங்களத்தின் கோரிக்கையே உங்களுக்கு முதன்மையானது. இதற்கு மக்கள் வாக்கெதற்கு உங்களுக்கு?
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும்; மாவையிடம் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை
மாவையருக்கு விளங்கிப்போச்சு, அடுத்த தேர்தலில் மண் கவ்வப்போகுது தமிழரசுக்கட்சி என. உடனடியாக தேர்தலும் வருவதால், உடனடியாக முயற்சிக்கிறார். தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுமென அறிவித்தவர்களும் இவர்கள் தான், இப்போ சேர்ந்து போட்டியிடுவோம் என்பவர்களும் இவர்கள் தான். காலம்..... தமிழரை வாழ விடுவதில்லை என முடிவெடுத்து விட்டது. உள்ளுக்குள் இருந்து குடைச்சல் கொடுப்பதென்றே முடிவெடுத்து விட்டார். ம்..... ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர், அதற்கு ஆதரவு வழங்கியோருக்கு எதிராக நடவடிக்கை என அச்சுறுத்தினார் ஒருவர், இவரோ வேறொன்று சொல்கிறார். ஒரு கொள்கையில்லை, ஒரு தலைவனில்லை, ஒன்று சேர்ந்து முடிவெடுப்பதில்லை, மக்கள்மேல் மதிப்பில்லை. மக்களே இவர்களை என்ன செய்வதென்று முடிவெடுப்பார்கள்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அந்த பழரச போத்தல் சின்னத்தில் வாக்கு கேட்டால் தேர்தலில் முன்னிலை வாக்குகள் அவருக்குத்தான். இந, மத வேறுபாடில்லாமல்.
-
பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து பலமான தரப்பாக போட்டியிடுவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆராய்வு?
ஓஓ..... போன பஸ்ஸுக்கு கைகாட்டுகிறார்கள்! அப்படிப்பட்டவர்கள் தான். வருகிற பஸ்ஸில் ஏறவும் மாட்டார்கள், ஏறுகிறவர்களையும் இழுத்து விழுத்திகொண்டே இருப்பார்கள், போன பின், பஸ்ஸை நிறுத்தினோம் அதற்கிடையில் பஸ் போய் விட்டது என்று உச்சுக்கொட்டுவர்.
-
இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர: முன்னாள் தமிழ் எம்.பி
ஒவ்வொருவரும், நான் ஜனாதிபதியோடு முன்பே கதைத்தேன், படித்தேன், விளையாடினேன் என்று முண்டியடித்துக்கொண்டு வருவதைப்பார்த்தால் தெரியவில்லையா? ஆனால் சேர்ந்து பணியாற்றுவோம் என்றவரின் சத்தத்தை காணவில்லை. ஊரிலே தான் இருக்கிறாரா? யார் ஜனாதிபதியானாலும் முன்னுக்கு தெரிபவர்களை இந்த முறை காணமுடியவில்லையே. சஜித் வந்திருந்தால்; அரியம் பாராளுமன்ற வீதியாலேயே போகமுடியாமல் செய்த்திருப்பார்கள். நாங்கள் சிங்களத்துக்கு போட்டு அனுராவை சமாளிக்கவில்லை, எங்களது தேவையென்ன, எதற்கு முயற்சிக்கிறோம் என்று கோடிட்டு காட்டியிருக்கிறோம். அதனால எங்களை பாருங்கள் நாங்களும் உங்களோடு கதைத்தோம் என சமாளிக்க வேண்டியதில்லை. எங்கள் செயல் எமது தேவையை கொண்டு சேர்த்திருக்கிறது, செய்ய வேண்டியதை கவனத்தில் எடுக்க வேண்டியது அவர்கள்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
காரணம்? ம் ...... வெளியில சொல்லாதீங்கோ, பலபேர் உங்கள் கூட்டணியில் சேர்வார்கள், நீங்களும் சேர்ந்து போட்டியிடலாம் தேர்தலில், வாக்குகள் எண்ணவே கஸ்ரப்பட்டு உங்களை வெற்றியாளராக்கி அறிவிப்பர்.
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
காரணங்கள் வெவ்வேறு இருக்க, இவரொருவர் தான் சொல்லித்தான் நடந்ததென்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தெரியும் இவரின் விலாசம் எங்கே என்று.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
குடிப்பிரியர்கள் வாக்குப்போட மாட்டார்கள், அது சரியா? போதை என்று வந்தால்; அரசியல் வாதிகள், காவற்துறை, இராணுவம் எல்லாம் சேர்ந்து அனுராவை மேலே கொண்டு போகப்போகிறார்கள்.
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
இந்த அரசு நிலைத்தால், அது நடக்கக்கூடியதல்ல. ஒவ்வொருவன் உண்ணும் உணவுக்கும் கஸ்ரப்பட்டே உண்ணவேண்டும். ஆதலால் இந்த அரசை நிலைக்க விடமாட்டார்கள், சும்மா இருந்து வயிறு வளர்த்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள். விசேடமாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, உழைப்பே முக்கியமாக கருதப்படும். இந்தியாவின் நிலையை சீனா முழுமையாக எடுக்கும். இந்த அரசில் இவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியதாயினும் அவசரம் எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிடும். நாட்டை சுரண்டியதுகள் சும்மா இராதுகள். இனவாதம், ஊழல் கருவிலேயே ஊறி விருட்ஷமாய் நிக்கிறது. அதை அதன் பாட்டில் போய் மெதுமெதுவாகவே களைய வேண்டும். எனக்கென்னவோ நேர்மையான தேர்தலை நடத்த, மாற்றங்களை ஏற்படுத்த போய் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விடுவாரோ என தோன்றுகிறது. சிறியர் விசுக்கிற விசையை பாத்தா ஒருவரும் தாங்க மாட்டார்கள். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பி ஓட முடியாதே. அரசியல் வாதிகளின் பெஞ்சன் எல்லாம் இனி குறைக்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவையை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு வரையறை செய்தால்; நாடு முன்னேறும், மக்களின் நிலை புரியும் இவர்களுக்கு. மக்களின் பணத்தில் இவர்கள் சொகுசு வாழ்க்கை, மக்கள் அடிமை வாழ்வு. ஐயோ! களத்தில் கலவரம் வெடிக்கப்போகுது, நான் ஓட்டம்.
-
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
இது, இவருடைய ராஜதந்திரம்! முன்னொரு காலத்தில், ஒரு அணி வடக்கில் திரண்ட போது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் போகவும் மாட்டோம் என்றவர், பின்னாளில் அணி என்றால்; முன்னுக்கு போய் நிற்பார். இப்போ பொது வேடட்பாளர்என்றவுடன் கரிச்சுகொட்டுறார். பாருங்கள் பின்னாளில் எப்படி மாறுவாரென்று. காலம் அப்படி! ரணிலுக்கு, மற்றையவருக்கு வாக்கு போட்டவர்களை சாடவில்லை, இவருக்கு சாட்டையடி விழுகுது, தனக்கு எதிரானதாக சித்திரிக்கிறார். அரியத்தாரோ யாரையும் சாடவில்லை, தான் செய்ய வேண்டியதை செய்தேன் என்பது போலுள்ளார். மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்து பாயுமாம், வெழுத்தோடும் நீர் அனைத்தையும் அழித்தோடுமாம்.
-
மாமியாரின் அன்புப் பரிசு.
அட, நீங்களுமா? அதை கந்தையருக்கு விளக்கமாக சொல்லுங்கோ. பாவம் அவர்! நம்பி காரியத்தில் இறங்கப்போறார். உங்களுக்குள்ளும் இப்படியொரு பேயிருக்கா?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்!
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நிச்சயமாக, சுமந்திரன் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தனர், வாக்களிக்காமல் விட்டனர் என்பதெல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றும் செயல் மட்டுமல்ல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கூட. சரி, சும் சொல்லித்தான் சஜித்துக்கு போட்டார்கள், அரியத்துக்கு போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், யார் சொல்லி ரணிலுக்கு போட்டார்கள் ? பியதாசாவுக்கு போட்டார்கள்? பியதாசாவுக்கு போட தெரிந்தவர்களுக்கு இவர்கள் கைகாட்டியவர்களுக்கு போடத்தெரியவில்லையா? அது அவரவர் விருப்பம். ஒன்று, வெறுப்பு, ஏமாற்றம், யார் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது சும்மா போட்டுவிடுவோம் என்கிற மனநிலை. ஏன், ஒருவர் வாக்குசீட்டை கிழித்துப்போட்டார், அதை செய்யச்சொல்லி யார் சொன்னது? சரி... இவர் கைகாட்டின வேட்பாளர் வென்றாரா? எல்லோரும் அவருக்கு வாக்கு போட்டிருந்தால், அனுராவுடன் எந்த மூஞ்சியோடு போய் பேசுவார். அவர் ஒரு வெற்றியாளரை இனங்காண முடியாதவர் மூன்று பேரிடமும் பேசினாராம் ஆனால் சஜித்தை தெரிவு செய்ய முடிவு செய்தாராம். காரணத்தை ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை? மக்களிடம் வாக்கு கேட்பவர் அதற்கான காரணத்தை விளக்காதது ஏன் ?அப்படியென்றால் அவர்கள் அதை அறிவதற்கு தகுதியற்றவர்களா? இந்த வாதம் ஒரு மக்களின் பிரதிநிதிக்கு ஏற்றதா? சர்வாதிகாரம் போல் தெரியவில்லையா? நம்புவதா இல்லையா என்பது மக்களின் பொறுப்பு. விளக்க வேண்டியது இவரின் கடமை. கேள்வி கேட்பது வாக்களிக்கும் மக்களின் உரிமை. நம்ப மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? அப்படியானால் உங்களுக்கே தெரியும் தகுந்த காரணமில்லை, அல்லது அந்தகாரணம் மக்களுக்கானதல்ல என்பது. காரணம் சொல்லாமல் கைகாட்டி வாக்கு போட்டு களைத்ததால் தான் மக்கள் தங்கள் முடிவை தாங்களே எடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர்களை குற்றம் சொல்வதும் சாபமிடுவதும் கேலி பண்ணுவதும் முறையல்ல. நான் ஜனாதிபதியாவேன் என்று அரியம் நினைக்கவில்லை மக்களும் நினைத்துப்போடவில்லை அது நடக்கிற காரியமுமில்லை. நாங்கள் இவர்களுக்கு வாக்களித்துக்கொண்டேயிருக்கிறோம், ஆனால் இவர்கள் எங்களை அந்நியராக நடத்துகின்றனர், நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கின்றனர், இவர்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? எங்களது இந்த முடிவுக்கு காரணம் என்பதை கேளுங்கள்! என்கிற தோற்றப்பாடே, இந்த பொது வேடபாளர். எந்த காரணத்தை வைத்து இது முன்னிறுத்தப்பட்டதோ அதை அனுரா தெளிவாக பத்திரிகை பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். எங்களது கோரிக்கை போக வேண்டிய இடத்துக்கு போயிருக்கிறது. சர்வதேசம் ஒன்று கூறுமாம், சிங்களம் ஒன்று கூறுமாம். ம்..... நாங்கள் அடித்து விரட்டப்படும்போது இவர்கள் என்ன செய்தார்கள், சொன்னார்கள்? அவர்கள் எதை செய்தாலென்ன, சொன்னாளென அனுபவிப்பது நாமல்லவா? எனது புண்ணுக்கு நான் தான் மருந்து தேட வேண்டும். அவர் வந்த வேலை தமிழ் தேசியத்தை சிதைப்பது. ஆ அது இன்னும் மூச்சிழுக்கிறது என்பதே அவரது ஆதங்கம். இனிமேல், மக்கள் மத்தியில் தன் வார்த்தை எடுபடாது, அதை வைத்து பிழைக்க முடியாது, தான் எடுத்த பணி நிறைவுறாமல் பாதியிலே தேங்கி நிக்கிறதே என்கிற ஏமாற்றம். அவரை பணியிலமர்த்திய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, அகற்றப்பட்டுவிட்டதே என்கிற கவலை இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வைக்கிறது. இவர் சொல்லித்தான் மக்கள் வாக்குப்போட்டனர் என்கிற காரணம் அடுத்த தேர்தலில் நிரூபணமாகும். அதுவரை பொறுத்திருங்கள்.
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
இருவருக்கும் நல்ல ஆப்பு! ஏறச்சொன்னால்; எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால்; முடவனுக்கு கோபம். இப்போ யாருக்கும் எதுவும் சொல்லத்தேவையில்லை, யாருக்கும் கோவம் வராது.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவரது கடைசி சாதனை, தேர்தலில் மகளுக்காக தனது கடைசி வாக்கை செலுத்திய பின்னரே மூச்சை நிறுத்திக்கொண்டார். இறுதிவரை அரசியல். அவரது காலத்தில் இனப்பிரச்சினையை அருமையாக தீர்த்திருக்கலாம் இந அபிமானம் விடவில்லை. மஹிந்தா தீர்த்திருக்கலாம் சுயநலம் விடவில்லை. இனத்தை வைத்து பிழைத்து நாட்டை அழித்து தொடரவும் செய்தார்கள்.