Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. தான் சமையற் கட்டுக்கு போகவேண்டி வரும் என நினைத்து குமுறுகிறார் போலுள்ளது. இவரது கணித அறிவை சஜித் ஒருதடவை பாராட்டியிருந்தார். ஜெனிவா கூட்டத்தொடரில், பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றிருந்தன, ஒரு சில நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஆதரித்தன என்று கூறி தம்மை சாதனையாளராக காட்டியபோது, சஜித் இவர்களின் கணிதவியல் அறிவை வியந்து புள்ளிவிபரத்தோடு உரையாற்றியிருந்தார்.
  2. அது வேற கந்தையாவாம். கந்தையர் என்றாலே வில்லங்கம் பிடிச்ச பெயர் போலிருக்கே! பெயரை மாத்துங்கோ.
  3. ஆமா... அந்த ஒற்றை ஆட்சி அமைப்பை தானும் சேர்ந்துதான் வரைந்ததாகவும் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தான் பாராளுமன்றம் போயே ஆகவேண்டுமென்றும் சுமந்திரன் சொந்தம் கொண்டாடுகிறாரே, அது எப்படி? இது நடைமுறைப்படுத்தாவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று சூளுரைத்தாரே. இதைத்தான் ஏக்கய ராச்ஜய என்று விளக்கமளித்தவர். இப்போ அவரும் இந்த அரசை சாடுகிறார் தன்னை அழைத்துப்பேசவில்லை என்கிற கோபத்தில். இவர்களெல்லாம் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தால்; எப்பவோ தீர்த்திருக்கலாம். பிரச்சனையை நீட்டி வைத்து தம்மை வளர்ப்பவர்கள் இவர்கள். எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு, தீர்வை எடுக்க க்கூட்டமைப்பினரே பின்னடித்தனர்,சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு, என்று விமர்சித்தனர். எப்படி அவர்களால் சொல்ல முடிந்தது? அந்த கூற்றை மறுத்து இவர்கள் அறிக்கை விடவுமில்லை, மறுக்கவுமில்லை மாறாக மௌனம் காத்தனர். இப்போது தான் தூக்கத்திலிருந்து எழும்பியதுபோல் குதிக்கிறார்கள்.
  4. இதென்னடா புதுக்கதை? இவ்வளவுநாளும் இவர்கள் மாறி மாறி முட்டுக்கொடுத்து கொண்டாடிய அரசுகள் இனவாதம் அற்றவையோ? அவர்கள்தானே பயங்கரவாதச் சட்டத்தையே உருவாக்கிய சட்ட வல்லுநர்கள். அப்படி இருக்கும்போது இவர்களை மட்டும் விமர்சிப்பதன் மர்மம் என்ன? ஓ...... இவர்களை அழைத்துப்பேசவில்லை, இவர்கள் தேடிப்போனபோதும் அணைக்கவில்லை என்கிற கோபமாய் இருக்குமோ அல்லது இவர்களது வாக்குவங்கிக்கு போட்டியாய் வந்துவிட்டார்கள் என்பதாலா? சிங்களமக்கள் ஊழல் அரசை கலைத்தார்கள், நாம் ஊழல் அரசியல் வாதிகளை அகற்றுவோம்.
  5. இந்த ஒரு உரிமையை வைத்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் குற்றவாளிகள். வெளிநாட்டிலேயே ஒரு ராஜதந்திரி இப்படியென்றால், இலங்கையில் இவர்கள் அனுபவிக்கும் விடுபாட்டுரிமை சொல்லவேண்டியதில்லை. சாதாரண மக்களே எல்லாவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர் தண்டிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பதவியளித்து நாட்டின் மதிப்பை குறைத்துக்கொள்கிறார்கள். வெளிநாடுகள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், வெளிநாடுகளிலேயே இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தம் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி கையாள்வார்கள், போர்க்காலத்தில் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பார்கள் என்பதை நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.
  6. தமிழரசுக்கட்சி, தற்போது புதியதொரு கண்டுபிடிப்பை பிடித்திருக்கிறார்கள். கனடாவில் குளிர் அதிகமானால் சுமந்திரனையும் சம்மந்தனையும் சொன்னார்களாம், ஊரில் யாருக்கும் குழந்தை பிறக்காவிட்டால் அதற்கும் அவர்களையே காரணமாக சொல்வார்களாம். ஏன் கனடாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிள்ளை பிறக்காவிட்டால் ஏன் இவர்களை குற்றம் சொல்லவேண்டும்? அதாவது பிழையை சுட்டிகாட்டி காரணம் கேட்டால்; அவர்களை கேலி செய்து தங்களை மறைத்துக்கொள்வது. மக்களுக்கு தெரியும், எதுக்கு யாரை காரணம் கேட்கவேண்டுமென்று. ஏதோ நகைச்சுவை விடுவது போல் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்கிறார்கள். அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப
  7. இருப்பதே இரண்டு பேர், இவர்களுக்கு பதினாறு சமையல் காரர் எதற்கு? ஹோட்டல் ஏதும் நடத்துகிறாரா தெரியவில்லை? இவரிடமே இத்தனை சமையல் காரர் கேட்க்கிறார் என்றால், இவரது ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பேரை நியமித்திருப்பார்? நாட்டை எப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பது இப்போது புரியுது. அதைவிட இலக்கத்தகடுகள் இல்லாமல், உரிமை பெறாமல் பாவனையில் இருந்த பல வாகனங்கள் அங்கங்கு கைவிடப்பட்டுள்ளன. இதை யாரும் கணக்கெடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. சாதாரண மக்கள் பசியினால் களவெடுத்தால் நீதிமன்றத்துக்கு கொண்டு போகிறார்கள், பாராளுமன்றம் கள்ளர்களால் நிறைந்திருந்திருக்கிறது. இதற்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசியலாளர் என்று தம்மை வேறு அழைக்கிறார்கள். திருட்டுகூட்டம்.
  8. தமிழ் கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு வரக்காரணம் என்னவென்று கூற முடியுமா? நீங்களும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறுகிறீர்கள், உங்கள் செயலற்ற தன்மை விடுவெளியை ஏற்படுத்திற்று, அந்த விடுவெளிக்குள் அவர்கள் புகுந்துள்ளார்கள். இதற்கு யார் காரணம்? எத்தனை ஆண்டுகள் அவகாசம் தந்து உங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து காத்திருந்தார்கள்? உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை.
  9. தமிழ் தலைவர்களையே தேர்தல் வந்தால்தான் மக்கள் காணலாம் அவர்களும் மக்களை காண வருவர்.
  10. ம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேடபாளருக்கு வாக்களிக்க வேண்டாம் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்றார் இப்போ அனுராவுக்கு வாக்களிக்க வேண்டாம் தனக்கு வாக்களியுங்கள் என்கிறார் சந்தர்ப்பவாதி. அனுராவுக்கு தமிழர் வாக்களிக்க கூடாது, அவர் தேர்தலுக்கு முன் இரகசியமாய் சந்திக்கலாம் உடன்படிக்கை செய்யலாம். விசித்திரமான மனிதன்.
  11. அதை செய்யுங்கள் முதல், அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு ஏழைமக்கள் இரத்தம் சிந்தி வரி செலுத்தவேணுமாம். நல்லாய் இருக்கு, ஊழல் செய்து சேகரித்து பதுக்கியது ஒருபுறம், இது வேறு. அவர்களுக்கு சம்பளத்தையும் குறையுங்கள். அப்போதான் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை புரியும். மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியவாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவார்கள், உண்மையான மக்கள் சேவையாளர்கள் உருவாவர். சும்மா வாக்குவங்கிக்காக சொல்லிப்போட்டு தேர்தல் முடிய வாபஸ் பெறக்கூடாது.
  12. இவருக்கு ஏதோ கஸ்ரகாலம் ஆரம்பிக்குது போல கிடக்கு. இவ்வளவு காலமாய் கர்தினால் மல்கம் கேட்டுத்திரிந்தபோது மௌனம் காத்தவர்கள், இப்போ வெளியிடப்போகிறார்களாம். இவர்களை உடனே கைது செய்து இவர்கள் திருடிய அறிக்கையை பிடுங்கி எடுக்கவும்.
  13. வாங்கோ, வாங்கோ, சொல்லுங்கோ புதினத்தை. நீங்கள் காணாமல் போன அப்பவே நினைத்தேன் தேர்தல் வேலையாய்த்தான் மினைக்கெடுக்கிறியள் என்று. கண்டது சந்தோசம் இனி களம் கலகலப்பாயிடும்.
  14. சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே? என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.
  15. இதற்குத்தான் சொன்னேன், மக்களுக்கு சேவை செய்பவர் மக்களின் ஆணை பெற்று தைரியமாக பாராளுமன்றம் போய் பகிரங்கமாக பேச வேண்டும். அது என்ன செய்வது, பழக்கதோஷம் விடவில்லையே? கடத்தல்காரர், கொள்ளைக்காரர், என்று சிலரை விமர்சித்தார், அவர்கள் கௌரவமாக இருக்கிறார்கள். இவரோ, வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு தாழ்ந்து விட்டார். தான் தான் அவர்களின் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர் ஆகிறேன், எனக்கு பிரதம மந்திரி பதவியை ஏற்க அழைப்பு வருமென காத்திருக்க, இப்படியொரு அவமான செய்தியை எப்படி தாங்கப்போகிறார்? பொய்யும் புழுகும் கன நாளைக்கு நிலைக்காது. எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய் என்பார்கள், உடனேயே பலித்துவிட்டது.
  16. நீங்கள் தான் எல்லாம், யானொன்றும் அறியேன் பராபரமே!
  17. கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.
  18. ஏன் கதிர்காமரும் நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என்று புதுப்புரளியை கிளப்புகிறீர்கள்? அப்படியானால்; சுமந்திரனுக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று புலுடா விட வேண்டிய அவசியமில்லையே?
  19. அப்போ.... அவர்களின் பணியை இவர் தொடர்கிறார் என்று சொல்கிறீர்கள்? ஒத்துகொண்டமைக்கு நன்றி! கவனம், பாதுகாப்பு கொடுப்பவர்களே போட்டுத்தள்ளிவிட்டு, புலம்பெயர்ந்தோர் செய்தார்கள் என்று சொல்வார்கள். அதற்குத்தானே புலனாய்வு பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று கேட்டால், மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து விட்டது என்றும் மாற்றுவார்கள்.
  20. அனுரா, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை சொல்லியிருந்தார், அதை சொல்லியிருந்தார் ஆகவே அவர் அதை நிறைவேற்றுவார், என்னை பிரதமமந்திரி பதவி ஏற்க அழைத்தார் அப்போது என்று இன்று அனுரா வென்றபின் கதை விடுகிறார், தன்னை பிரதமந்திரி பதவிக்கு அழைக்கக்கூடும் என்று எதிர் பார்த்திருக்கும் இவர், ஏன் சஜித் ஆதரவு எடுத்தார்? அன்று, சஜித்துக்கு வாக்களிக்கும்படி கூறிய இவர் இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனம் என்கிறார். அப்போ ஏன் அந்த பொது வேட்பாளர் அழுத்தத்தை இவர் விமர்சித்தார்? இரண்டாயிரமாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த திட்டத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்தாததன் காரணம் என்ன? பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்த காலம் முதல் இதுதான் வரலாறு. செய்வோம் என்பார்கள், செய்ய மாட்டார்கள். நாங்கள் யாரையும் நம்புவது கிடையாது என்கிறார். நல்லாட்சி தேர்தலுக்கு முன் சந்திரிக்கா எழுத்துமூலம் செய்வோம் உடன்படிக்கை என்று கேட்ட போது, நாங்கள் உங்களை நம்புகிறோம், எழுத்தெல்லாம் வேண்டாம் என்று கூறினேன் என்றார் இவர். சரி.... மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்தை தான் அறிவிப்பதே தவிர, தான் முடிவும் எடுப்பதில்லை, நான் எங்கேயோ இருந்தேன் என்கிறார். சரி.... அவர்கள் எடுத்த முடிவை இவர் ஏன் அறிவிக்க வேண்டும்? தான் பேச்சாளராம்! அந்தப்பதவி எப்போவோ காலாவதியாகிவிட்டது, இன்னும் ஏன் அதை கட்டிப்பிடித்து உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்? மது பான அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடும்படி கேட்டோடினது சிறீதரனை தேர்தலில் போட்டியிடாமல் அகற்றுவதற்கே. அவரை அகற்றியிருந்தால்; சுமந்திரனின் அரசியல் கனவு அதோடு கலைந்திருக்கும். ஆனால் தப்பித்து விக்கினேஸ்வரன் மாட்டினார். ஆனால் அவர் தன் தவறை ஏற்றுக்கொண்டார், யாரையும் குற்றம் சாட்டவில்லை, கதையை திசை திருப்பவில்லை. அவர் தான் கொடுத்த வாக்கின்படி இளைஞருக்கு தேர்தலில் இடம் விட்டு விலகிக்கொண்டார். சுமந்திரன் சொல்வதுபோல் அவர் சாராய அனுமதி பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டதால் விலகினார் என்று வைத்தாலும், அவர் தனது தவறுக்கு பொறுப்பேற்று விலகியது நேர்மைத்தனமே ஒழிய கோழைத்தனமல்ல. இன்று ஒரு பத்திரிகைக்கு சுமந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாமென தான் கூறியதாகவும், அவர் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்டதாகவும், அதற்கு சி .வி .கே. சிவஞானம் தேர்தல் காலத்தில் அப்படி செய்தால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று சொன்னதால் தான் கட்டுப்பட்டதாக. அப்போ; தேர்தலுக்காக முடிவை மாற்றிக்கொண்டார், தோற்றுவிடுவோம் என்கிற பயம். இவர் கட்சியின் தீர்மானத்தை மதித்து நடந்தவரா மற்றவர்களை அகற்ற? நேற்று இதே கேள்வியை கேட்ட போது அதாவது தனக்கெதிராக பலபேர் செயற்படுவதாக சிறீதரன் கூறியிருக்கிறாரே, அவர் யாரை குறிப்பிடுகிறார்? உங்களையா எனக்கேட்டபோது, எனக்கு தெரியாது, அவரைத்தான் கேட்கவேண்டும், நான் தான் அவரை தலைவர் பதவியை ஏற்கும்படி வற்புறுத்தினேன் என்றார். இன்று இப்படி சொல்கிறார். நாக்கில் சுத்தமில்லை. எந்தப்பக்கமும் கதைப்பார். அனுரா, தான் செய்ய விரும்புவதை செய்வார். யாரும் சொல்லி அவர் செய்யப்போவதில்லை. ஆனால் அதற்கு தான் உரிமை கொண்டாட வலியப்போய் முட்டுக்கொடுக்கிறார்.
  21. ஐயா ..... தேர்தலில் போட்டியிடுபவர்கள், முதலில் தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை குற்றம் சுமத்துவதற்காக நாமே வலிந்து அதற்குள் அகப்படலாமா? அவர்கள் சும்மாவே கைது செய்யும் கூட்டம் என்பதற்காக நம்மை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக வலியப்போய் பொறியில் தலையை மாட்டலாமா? உங்களையுந்தான் நிராகரிக்க போகிறார்கள், நீங்களும் போட்டியிடாமல் தள்ளி நில்லுங்கள், பகிஸ்கரியுங்கள். இருப்பவன் சரியாய் இருந்தால் சிரைப்பவன் சரியாக செயற்படுவான். நீங்கள் சரியாக செயற்படவில்லை உங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு. எங்களைத்தவிர வேறு யாருக்கும் வாக்குபோடக்கூடாது என கட்டளையிட நீங்கள் யார்? உங்களால் சாதிக்க முடியாவிடில் விலகுங்கள். மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே போய்விட்டது, தேர்தலுக்கொரு கட்சியில் போட்டியிடுகிறீர்கள். ஒரே கட்சியாக ஒரே கொள்கையாக வாருங்கள், சொல்வதை செயலில் காட்டுங்கள், நீங்கள் சொல்லவே தேவையில்லை மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென. தமிழ் தேசியம் எனும் மாயையை வைத்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அலைக்கழிக்காதீர்கள் உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக.
  22. முடிந்தால்; தமிழ்தேசியக்கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று சவால் விட்டு விக்கினேஸ்வரனை விரட்டியது யார்? அவர் பதவி விலகவேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது யார்? அவர் சாராயக்கடைக்கு அனுமதி பெற்ற போது ரணிலுக்கு பின்னால சுற்றிய தனிமையில் பேசிய இவர் ஏன் அதை தடுக்கவில்லை? சிறீதரனை பதவியை ஏற்கச்சொல்ல இவர் யார்? கட்சியின் தலைவரா இவர்? அப்போ ஏன் தமிழரசுக்கட்சி நீதிமன்றத்திற்கு போனது? இவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தால் வீடு அமைதியாக இருந்திருக்கும். எல்லோரையும் விரட்டி விட்டு தான் ஆட்சி செய்கிறார். வடக்கின் வசந்தம், தனது சிபாரிசில் எடுத்த திட்டம், ஆரம்பிக்கப்பட்ட திட்டம், என்று சொல்லிக்கொண்டு போனார். இவரோ, நான் அரசியல் திட்ட வரைபை செய்தவன், ஆகவே நான் பாராளுமன்றம் போக வேண்டுமாம். திட்ட வரைபை செய்தேன் என்று இவர் சொல்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லவில்லை. அதோடு முன்னைய அரசாங்கம் செய்ததோ இல்லையோ அதற்கு அனுரா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதை தமது கட்சியுடன் பேசி ஏனைய சிங்கள கட்சிகளும் அனுமதித்தால் மாத்திரமே நடைபெறும். இவர் அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமும் ஒட்டியிருந்த அரசாங்கங்களால் செய்விக்க முடியவில்லை, இனி அனுராவை கொண்டு செய்விக்கப்போறாராம். அதற்கு இவர் பாராளுமன்றம் போக வேண்டுமே? அப்படித்தான் போனாலும் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. முயல் பிடிக்கிறதின் மூஞ்சியை பாத்தாலே புரியுமாம். இவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது, வலிந்து சிரிக்க முயற்சிக்கிறார், அத்தனை வஞ்சகம். "அகத்தின் அழகு முகத்திற் தெரியுது."
  23. தும்புத்தடியாலேயே பாடம் புகட்டுவர்! மக்களின் உணர்வு, உயிர் மூச்சு என்னவென்பது என்று தேர்தலில் நிற்கும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவர்களை கவர்வதற்கு, ஏமாற்றுவதற்கு, குழப்புவதற்கு இவ்வாறு பெயர்களை மாறி, மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த உணர்வுக்கு உயிர் கொடுக்க மக்கள் இழந்தவை அநேகம், இழப்பின் வலி, துரோகத்தின் வடு அவர்களை வாட்டி வதைக்கிறது. தாங்கள் தன்னிறைவுடன் உழைத்து வாழும்போது, அதை அடைந்துவிடவேண்டும் என அனைத்தையும் கைவிட்டனர். இன்று இழப்பதற்கு அவர்களிடம் ஏதுமில்லை, ஏதிலிகளாய் நிற்கின்றனர். இந்த நிலையை வைத்து அவர்களை அடக்கிவிட்டதாக எதிரியோடு நம் தலைமைகளும் நினைக்கின்றன. இனி தேசியம் உணர்வோடு மட்டுந்தான், நமது அன்றாட வாழ்வே சுமையாகிப்போய்விட்டது. ஆகவே மக்கள் தனித்து, தன்னைப்பற்றி தனது சூழலைப்பற்றி சிந்திக்க தொடக்கி விட்டார்கள். இனி தும்புத்தடியல்ல, வீடல்ல எவராலும் மக்களின் தோல்வியை ஈடுகட்ட முடியாது. அப்படி யாராவது நினைத்தால்; தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கின்றனர், கனவு காண்கின்றனர் என்றே கொள்ளலாம்.
  24. "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை. இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.