Everything posted by satan
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
இதை முன்பு எங்கோ கேட்டமாதிரி இருக்கே! சரி, வெற்றி பெற பாராட்டுக்கள். பிறகு ஏன் தமிழர் வாக்கு அளிக்க வேண்டுமென்று அச்சுறுத்தல் என்பதுதான் விளங்கவில்லை. அந்த வெற்றியல் பங்குதாரர்களாக இருப்பதில் நமக்கு என்ன நன்மை? கடந்த காலத்திலும் அதை செய்த நம்மை அளித்தீர்களே மறந்து விடுவோமா என்ன?
-
போர்க் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்கும் - அநுரகுமார
ஆமா, இவர் என்ன புதுசா கண்டறிந்து வெளிப்படுத்தப்போறார்? இவ்வளவு காலமாய் நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாதவர், நாட்டின் ஜனாதிபதியாகப்போறாராம். இது எங்களுக்கு தெரியாதாக்கும், இவர் விளக்குகிறார், உடனே நீதிமன்றம் அவர்களை தண்டித்து விடுமாம். நாங்களும் பாத்துக்கொண்டுதானே இருக்கிறோம். சிங்களம் எல்லாமே ஒன்று கூடி ஆலோசித்து, தமிழர் பிரச்சனையை எப்படி கையாண்டு வாக்குகளை பெறுவது, அதற்கு எந்த தரகரை நாடுவது என்று பேசி முடிவெடுத்த பின்னே பேசுவார்த்தைக்கு வருகின்றன. வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தெரியும் யாம் ஒருவரும் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்கிற முடிவோடேயே தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது. எப்படியும் தங்களில் ஒருவருக்குத்தானே தமிழர் வாக்களிக்க வேண்டும் வேறு தெரிவு அவர்களுக்கில்லை ஆகவே எதை வேண்டுமானாலும் கூறுவோம் ஆனால் தீர்வை மட்டும் வாய்தவறியும் பேச மாட்டார்கள். இதுதான் சிங்களம் என்பது புரியாமல் நாங்களும் ஒவ்வொரு தேர்தலுக்கு ஒவ்வொருவரை நம்பி அவர் பின்னால் சுத்துறோம். ஒருவேளை சுமந்திரன் அப்படி சொல்லியிருப்பாரோ, அல்லது இவரின் கற்பனையோ? எங்களுக்கு தெரியாது என்ன நடந்தது என்று, இவர் விளக்குகிறார். அப்படியான நிலையில் நீதிமன்றம் தண்டிக்குமென்று கூறி யார் காதில் பூ சுற்றுகிறார் இவர்? விழுந்து போன இனத்தை கெஞ்சத்தேவையில்லை வெருட்டி பயமுறுத்தி வாக்கு வாங்கலாமென இவர் நினைக்கிறார். இவரது கட்சிதானே நீதிமன்றம் போய் வடக்கு கிழக்கை பிரித்தது?
-
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது!
ஊடுருவி தாக்குதல் நடத்த போனார்களோ? அவர்களை இலகுவில் உக்ரேன் விடுவிக்குமா? போருக்கு பயந்து நுழைந்து தஞ்சம் கோரி இருப்பார்கள்? பொறுத்திருந்து பாப்போம்! ரஷ்யாவுக்காக போராடினால் அந்த துருப்புகளுக்கு என்ன தண்டனை வழங்குவார்களோ அதையே இவர்களுக்கும் வழங்க வேண்டும்.
-
நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
தாங்கள் நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் தாம் தப்பிப்பதற்காக உலகப்போரை சொல்லி அச்சுறுத்துவது, மற்றைய நாடுகளை தாம் ஊடுருவும் போது அதற்கு வேறொரு காரணம் கற்பிப்பது சர்வாதிகாரிகளின்குணம். ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஆரம்பியுங்கள்! எல்லாரும் சேர்ந்தே அழிவோம். அதை செய்ய மாட்டீர்கள், நீங்கள் அபகரிக்க வேண்டியது நினைத்தது நிலுவையில் இருக்கே.
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
எப்போதிலிருந்து இது உங்கள் கலாச்சாரமானது?
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
இந்த நாட்டுக்கு தமிழ் இளையவர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதை தாம் விரும்புவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார், அதே கையோடு சுமந்திரனை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தார். நேற்று விட்ட அறிக்கையில் தாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலே நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆட்சி நடத்தலாமென்கிறார். அப்போ ..... சிங்களப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த இவரின் சித்தப்பு சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டோடி எங்கோ இருந்துகொண்டு நாட்டை தனிமனிதன் ரணிலிடம் ஒப்படைத்ததேன்? தந்தையார் ஓடி மறைந்ததேன் எனும் கேள்விகளுக்கும் சேர்த்தே விளக்கமளித்தால், வாக்களிக்கும் மக்கள் புரிந்து வாக்களிக்கலாம். இல்லையேல் இவரும் நாட்டை விட்டு ஓடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறலாம் என அறிக்கை விட்டவர்கள், சுமந்திரனை தேடிச்சென்றதன் நோக்கமென்ன? சுமந்திரனின் வாக்கு மட்டும் போதுமா இவர்கள் வெல்வதற்கு? இளையோர் என்கிறார், சம்பந்தராக, அவரின் ஆவியாக சுமந்திரனை கணக்கிட்டு சந்திக்க சென்றாரோ என்னவோ ...... தோற்றம் சம்பந்தர், மற்றவை சுமந்திரன். சம்பந்தரின் காலம் முடியுமட்டும் தமிழரை ஏமாற்றினோம், இனி வருங்காலத்தில் சுமந்திரன் காலம் முடியுமட்டும் ஏமாற்றுவோம், எனது வாழ்நாள், பரம்பரை வரையும் ஏமாற்றுவோம் என நாமல் அறிவிப்பதுபோலுள்ளது. இது தமிழ்த் தலைமைகளை தவிர இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் புரியும்! அதனாலேயே எந்த வேட்பாளர் ஆட்சிக்கு வந்தாலும் நமது பிரச்சனை தீர்ப்பதில்லை, தீர்க்கப்போவதுமில்லை.
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
எமது நெஞ்சங்களில் வாழும் வீரர்களுக்கு நீதிமன்றங்களில் தடை விதித்து என்ன பயன்? ஏற்கெனவே புலிகள் தோன்றுவதற்கான காரணம் எங்கே எழுந்தது என்று கனடா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒன்றும் விடுதலைப்புலிகளை மட்டும் குறிவைத்து நீடிக்கப்பட்ட தடையல்ல, இதைப்புரியாமல் சிங்களம் குதிக்கட்டும், வரவேற்கட்டும் மகிழட்டும். அப்பப்போ கூடும் ஐ. நா. சபை போல இதுவும் ஒரு செயற்பாடு, தமது செயற்திறனை வெளிக்காட்டுவதற்கு எடுக்கப்படும் நிகழ்வு. இப்போ யாரும் புலிகளுக்கு நிதி சேகரிக்க வேண்டிய தேவை இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயற்பாட்டை இந்த நிரலுக்குள் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை. யாருக்கு இதனால் நட்டம் இலாபம் என்பதை விட இலங்கைக்கு பெரும் மகிழ்ச்சி, ஏதோ தான் சரியானதை செய்ததுபோல் அற்ப மகிழ்ச்சி. அவர்கள் பொது மக்களை அழித்தார்கள் என்பதை கனடா சொல்லியும் செய்தும் வருகிறது அது வரவேற்கத்தக்கது. அதனால் எமக்கு ஒரு நட்டமுமில்லை. விடுதலைப்போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வேறுபாடு முன்வைக்கப்படும்போது சிங்களம் தலைகுனிந்து நிற்கும், சர்வதேசத்தால் தடைவிதிக்கும் காலமும் உருவாகும். இதை புரியாமல் ரணில் தீர்வு தருவார் சிங்களத்திடமிருந்துதான் தீர்வு வரும் இந்தியா வாங்கித்தரும் என்று இலவுகாத்த கிளிபோல் ஏமாறாமல், நல்லதை நினைக்கும் நாடுகளோடு கூட்டுச்சேர்ந்தால் மாற்றம் வரும். இந்தியாவுக்கு உற்ற நண்பன் இலங்கை என அப்பப்போ இருவரும் மார்தட்டி மாறி மாறி தழுவிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரின் செயற்பாடுகளும் எப்படிப்பட்டது என்பது சிறுது சிறிதாக உணரப்படுகிறது.
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
ம் ..... பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டது என நினைப்பது பூனையின் கற்பனையே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சுகாதார வசதிகளை தடுத்தது, வலிந்து இடம்பெயரச்செய்தது, பாதுகாப்பு இடங்களையும் சுகாதார நிலையங்களையும் உணவு களஞ்சியங்களையும் தாக்கி அழித்தது, மக்களை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து கொன்றது, சரணடைந்த பாலகர் தொடங்கி பெரியவர் வரை கொன்றது, காணாமல் ஆக்கியது, பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைத்தது, மரணப்புதைகுழிகளை சர்வதேச நாடுகள் விசாரணை செய்ய மறுப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்வளவையும் செய்து விட்டு போலிக்கு ஒவ்வொரு காரியாலயம் திறந்தீர்களே இது ஆதாரமில்லையா? வெறித்தனமான வெற்றி விழா கொண்டாடினீர்களே அது ஆதாரமில்லையா? சர்வதேசத்துக்கு உறுதிமொழி கொடுத்து கால அவகாசம் என இழுத்தடிப்பது ஆதரமில்லையா? எங்களுக்கு பண உதவி செய்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று உதவி வேண்டி விகாரைகளை கட்டியெழுப்பி பாதிப்பட்ட மக்களின் இருப்பிடத்தை இல்லாமல் செய்வது ஆதாரமில்லையா? தெருக்களில் நின்று பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் வீரவரலாறுகளை கூவி அந்த மக்களை அச்சுறுத்துவத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்களே அது ஆதாரமில்லையா? சிறையில் அடைத்து வைத்து அப்பாவி இளைஞர்களை கொன்கிறீர்களே அது ஆதாரமல்லையா? வரலாற்று நிலையங்களை அழித்து வரலாற்றை திரிக்கிறீர்களே அது ஆதாரமில்லையா? பருவத்துக்கு பருவம் எதற்காக பொய் அறிக்கைகளை தூக்கிக்கண்டு ஐ. நா. வுக்கு காவடி எடுக்கிறீர்கள்? உங்களோடு உறவு வைப்பதால் கனடாவிற்கு என்ன லாபம்? நீங்கள் உறவு வைத்தாலென்ன,. முறித்தாலென்ன அவர்களுக்கு எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் பாஷையிலே உங்களுக்கு விளங்கும்படியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சமாவது வெக்கம் இருந்தால்; அந்த நாட்டு இறையாண்மையில் தலையிடாமல் மூடிக்கொண்டு இருங்கள். இல்லையேல் உங்கள் வாய் வீரர்களை அழைத்து உங்கள் தேர்தல் வாக்குகளை நிரப்புங்கள். தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி, பின் ஒரு செயல் செய்யும் உங்களது கலாச்சாரம்போல் மற்றவர்களை எடை போடாதீர்கள். இதற்கு மேலும் மல்லுக்கு நிண்டால்; கனடாவைத்தொடர்ந்து எல்லா நாடுகளும் உங்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம். சொந்த குடிமக்களை அகதிகளாக்கி இருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டு அந்த நாட்டில் போய் நின்று ஜனநாயகம், உறவு பற்றி வெட்கமில்லாமல் வகுப்பெடுக்கிறார்கள். இறுதியாக! கனடா தமிழ் மக்கள், அந்த நாட்டுக்கு உண்மை உள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள். தாய் நாடு என்று நம்பிய எம்மை, முதுகில் குத்தி அழகு பார்த்ததுமல்லாமல் நாம் எழுந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, எமது சுதந்திரத்தை அழித்து அதன்மேல் நின்று எம்மண்ணில் தன் நாட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் இந்தியாவுக்கு காவடி எடுத்து என்ன பயன் கண்டனர் நம்மவர்? ஆகவே உண்மையோடு நம் இழப்புகளை உணர்ந்து ஆதரவும் ஆறுதலும் தரும் அந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து மற்றைய நாடுகளும் இந்த முற்சியை எடுக்க அந்தந்த நாட்டிலுள்ளவர்களும் உழைக்க வேண்டும்.
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
கடந்த காலத்தில் மஹிந்தா சம்பந்தரை இப்படி சொல்லி குஷிப்படுத்த முயற்சித்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. நிற்க, இளம் தமிழரொருவர் நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதே தனது விருப்பம் என்று அறிக்கை விட்ட நாமல், இப்போ தாங்கள் ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ஒற்றை ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்கிறார்?
-
சமல், சசீந்திர ரணிலுக்கு ஆதரவு - ராஜபக்ச குடும்பத்துக்குள் விரிசல்
அதிலென்ன சந்தேகம்? சுமந்திரனை சந்தித்து உறுதி மொழியும் வழங்கி விட்டாரே.... ஆனால், ஜனாதிபதியாவாரோ என்பது சந்தேகம். இவரை ஜனாதிபதியாக்க வெளிக்கிட்டு தனது அரசியல் வாழ்வையும் தொலைத்தவர் தந்தையார்.
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
நேரம் பொன்னானது.
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
ஹாஹா ....எதுவும் இல்லாதவர்கள் தான் எல்லாம் இருப்பதாக பாவ்லா காட்டி, மக்களை திசை திருப்புவது. மக்கள் தான் வாக்களிப்பது, இவர்கள் மக்களை கேட்டு அறிக்கை விடுவதுமில்லை, மக்கள் பேரம் பேசச்சொல்லி இவர்களை கேட்பதுமில்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் காலம் கடந்துவிட்டது, இவர்கள் தமக்காக ஒன்று சேராதவரை.
-
நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு
யாருக்கெதிராக? இவர்களுக்கு காவலாக, காரணமில்லாமல் கிறிஸ்தவர்களை குறி வைத்து மறைந்து காத்திருந்திருப்பார். ஆமா AK 47 ஐ எதனால் துடைத்து வைத்திருந்திருப்பார்?
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
பாவம் பலியாகப்போகும் மக்களும் அவர்கள் வாக்குகளும். தமிழ்த்தேசியம் பேசி வாக்கு சேர்ப்பு, செய்வது சிங்களத்துக்கு சேவை. எல்லாவற்றையும் இழந்து உயிரை துச்சமென நினைத்து ஒருவருக்கு பின்னால் லட்சியத்தோடு திரண்ட மக்கள், அவரின் இழப்புக்கு பின்னால் என்ன செய்வதென தெரியாத மக்களுக்கு ஒரு குள்ள நரியை தலைவனாக காண்பித்து ஒரேயடியாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சமூக சீர்கேடுகள் தாராளமாக விதைக்கப்பட்டுவிட்டன. வாழ்ந்து வீழ்ந்த ஒரு இனம், இலகுவாக எதிரியின் இலக்கில் மாட்டப்படுவது நிதர்சனம். இந்த இலக்கில், பலர் வேறுவழியில்லாமல் நிகழ்காலத்தில் சிக்குகின்றனர், சிலர் வேறு வேறு வழியில்லாமல் நடித்திருக்கின்றனர் கடந்த காலங்களில் என்பதே யதார்த்தம்.
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
ம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
என்னடா? எதிர்ப்பு, மாற்று திட்டம், ஏட்டா போட்டியா கிளம்பலையே, திருந்தி விட்டார்களோ என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்! அந்தா... வந்து விட்டார்கள்! நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்தால்; கள்ள வாக்கு போட சந்தர்ப்பம் அளிக்கிறோம். அல்லது அப்படி நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் உண்டா இவரிடம்? முதலில் வாக்குப்போடும் மக்களுக்காக ஒரே நேர்கோட்டில் இவர்களை பயணிக்க பயிற்சி அளியுங்கள் மக்களே! மக்களை வெறும் மந்தைக்கூட்டங்களாக அலைக்கழிக்கிறார்கள்.
-
நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு
இதுதான் இவர்களின் இப்போதைய பணி! தங்கள் எஜமானன் காலில் தமிழரை விழ வைத்து வாக்கு அள்ளும் தேர்தல் தந்திரம். புலிகளை விட்டு எடுத்த அடுத்த தேர்தல் பிரச்சாரம். முன்பு, பாராளுமன்றத்தேர்தலின்போது மட்டக்களப்பில் தூஷண பிக்கர் வந்து இறங்கிய காணொளியை தேடிப்பிடித்து பாருங்கள் விளங்கும். பயமுறுத்தி அடிபணிய வைப்பது. முன்பு இராணுவத்தை வைத்து செய்ததை இப்போ, பிக்குகள்வழியாக செய்கின்றனர். அன்று பயங்கரவாதம் இன்று தொல்பொருள். நாளை யாரோ, காரணம் என்னவோ யாரறிவார்? நானறியேன். தமிழருக்கு எங்கே அடித்தால் வலிக்கும், எதை எடுத்தால் இரண்டுபடும் சமூகம் என்று நன்றாக தெரிந்து, தெரிவித்து வைத்து செய்கிறார்கள்.
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
ம்.....இவர்கள் நிற்பதைப்பாத்தா, களத்தில் குதிக்க துடிக்கும் மல்யுத்த வீரர்களைப்போல் தெரிகிறது. சுமந்துவின் சிரிப்பை பாத்தா, ஏமாற்ற நான் ரெடி, ஏமாற நீங்கள் ரெடியா என கேட்பதுபோல் உள்ளது. ரென்சன் பார்ட்டிகள் ரென்சன் ஆக வேண்டாம், நேற்றுதான் அறிக்கை விட்டார்.... தானும் ரணிலும் தனிநபர் பிரேணை பற்றி பேசியதாகவும் தமிழர்பிரச்சனைகளை தேர்தலுக்குப்பின் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார்என்றார். அவரின் உறுதிமொழிக்கு என்ன நடந்தது? அவரோ; தான் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று கையை விரித்த கையோடு இவரின் இல்லத்தில் நாமல் சந்திப்பு. இது திடீர் சந்திப்பா அல்லது பேசி வைத்த சந்திப்பா? ஐயா இப்ப பெரிய பிஸி, ஆட்களை தனிமையில் சந்திப்புகளை நடத்துவதில். இவர்களின் பதிலால் விரக்தி, வேதனையுற்ற வேதாளம் மீண்டும் நாளைக்கே அமெரிக்க தூதுவரை இரகசியமாய் சந்திக்க செல்லுமாம்? தமிழர் பிரச்சனை தீர்வில் எல்லா சிங்கள கட்சிகளுமே ஒரே முடிவில் தான் இருக்கின்றன என்பது சுமந்திரனுக்கு தெரியாததேனோ? அப்படி ஒரு மாற்றம் இருந்திருந்தால் இத்தனை அழிவுகளுக்கு பின்னும் மஹிந்தா தருவேன் என்று சர்வதேசத்து அளித்த உறுதி மொழியை தூக்கி கடாசியது ஏன்? பாவம் சுமந்திரன்! ஒரு தடவை, இது நடந்தேறா விட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றாரே, அது என்ன> யாராவது நினைவிருந்தால் அறியத்தாருங்களேன்!
-
மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது - சம்பிக்க
தானும் பங்காளியாக மற்றவருக்கு செய்யும்போது ரசிப்பு, இப்போது தனக்கு வந்ததால் படிப்பினை. "செயின் பிற்பகல் விளையும்." "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்."
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
இவர் குட்டையை கலக்குகிறார், மீன் அள்ளலாமெனும் கனவில். ஆனா புத்திசாலிகளுக்கு தெரியும், தாம் யார் தயவால் (வாக்கால்) பதவியை ஏற்றோம், அவர்களால் ஏன் கைவிடப்பட்டோம் எதனால் பதவியை இழந்தோம். ஆகவே அவரும் அவ்வாறே அழியட்டும் என வாயை கொடுக்காமல் காத்திருப்பார்கள். இருந்தாலும் புலிகளை வைத்து அரசியல் செய்யும் கனவோடு காத்திருப்பவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ராஜ பக்ஸக்களே வெற்றியின் கதாநாயகர்களாக மேடைகளில் வீற்றிருக்கிறார்கள். வெற்றி என்று அறிவித்த அ ந்த தருணத்தை விட இவருக்கு எங்கேயும் இடமில்லை. அந்த வெற்றியே இவருக்கு சிறையை பரிசாக அளித்தது. அதை கூட மறந்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இன்னும் அதே மமதையில் பேசுகிறார். இவர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இவர் வெற்றி விழா மேடைகளில் தோன்றுவார் என்பதையே இதன்மூலம் கூற வருகிறார். ஊதிப்பெருத்த ஊழல் பெருகுமே தவிர குறையாது இவர் வந்தா. ஒருவேளை மஹிந்தா, கோத்தா சிறை செல்ல நேரிடலாம். இவர் வர சாத்தியமே இல்லை.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நீதி கிடைப்பதைவிட வைத்தியர் அர்ஜுனாவுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து அவரை இந்த களத்தில் இருந்து அகற்றி விட்டால், தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என சந்திப்புகளை நடத்துவோரும் முறைப்பாடளித்து அவர் குரல்வளையை நசுக்க துடிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே அதிகம். மக்களைப்பற்றியோ அவர்கள் தேவைகள் கவலைகள் இழப்புகள் பற்றியோ சிந்திப்பவர் எவருமில்லை, சிந்திப்பவர் யாரும் பேசக்கூடாது. இத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் முயன்று சேவையாற்றும் நல்ல வைத்தியர்களுக்கு எனது வாழ்த்துக்குள். என்ன செய்வது? ஒரு முசுறு கடிக்க கூண்டோடு அழிப்பது இயற்கையாகி விட்டது. அதனால் உங்களைப்பற்றி யாரும் கதைக்கப்போவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த அசமந்தம் இன்று நேற்றல்ல புலிகளின் காலத்திலும் அவர்களுக்கு தெரியாமல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஒரே இரவில் இரண்டு தாய்மார் அதுவும் பலகாலம் தவமிருந்து இனிமேல் கருத்தரிக்க சாத்தியமில்லை எனும் தருவாயில் நடந்த சோகம். அங்கே இருந்த பொறுப்பான தாதி வைத்தியரின் அறிக்கையை சரியாக வாசிக்காமல் அந்த தாயையும் வருத்தி நடந்த துன்பியல். ஆனா அதன் பின்னும் அந்த தாதி அவர்களின் வலியை புரிந்து கொள்ளாமல் வைத்திய சாலை ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உங்கள் இறந்த குழந்தையை புதைத்து விடுங்கள் என்று அவர்கள் மனதையும் கொன்றார். சம்பந்தப்பட்டவர்கள் ஏழைகள், இடம் பெயர்ந்த நிலை, கையறுநிலையில், எத்தனையோ கனவு ஆசையோடு வந்தவர்கள் மௌனமாக கண்ணீரோடுவைத்தியசாலையை விட்டு வெறுங்கையோடு கிளம்பினார்கள். "மக்கள் பணியே மகேசன் பணியாகும்."
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
ம்... உப்பிடி பெருமை பேசிப்பேசியே நாட்டை சுரண்டி குட்டிச்சுவராக்கி இப்போ அரசியலையும் இழந்து புலம்பித் திரிகிறார்கள். இவருக்கும் அவர்களுக்குமிடையில் நடந்த போட்டியில் எங்கள் குருட்டு வழிகாட்டிகள் காட்டிய வழியில் இவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்போ; அவர்களின் ஆயுதத்தை கையில் எடுத்து, தானே அழியப்போகிறார். இவரை அப்பவே சிங்களமக்கள் மத்தியில் செல்லாக்காசாக்கி விட்டார்கள், கூட இருந்தவர்களே கைவிட்டு ஓடினார்கள். மனிசன் இன்னும் அதை வைத்து வென்று விடலாமென நினைக்கிறார். தலைப்புண்ணுக்கு காலைகாட்டுகிறார். மக்கள் புலிகளை மறந்து வயிற்றைப்பற்றி, அடுத்த வேளை பற்றி யோசிக்கிறார்கள். இவர் இன்னும் புலிக்கனவில் இருந்து மீளவில்லை.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நாட்டை அழிக்க ஒரு நரியை தெரிந்தெடுத்து அதன் கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டால் போதும், பல நரிகளுக்கு கொண்டாட்டந்தான் இனி தங்கள் காட்டில் தான் மழை என்று. அந்த நரியை அதிகாரத்திற்கு கொண்டுவர பல நரிகள் முயற்சிக்கின்றன.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அப்போ; சுமந்திரன் புலம்பித்திரிவது அவரது புலம்பலா ? பிரச்சனைக்கான தீர்வு நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார். இப்போ; வேறொன்று கூறுகிறார். ஒருவேளை கனவு கண்டாரோ?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?