Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அவருக்கு தெரிந்திருக்கு, தமக்கு இலக்கு வைக்கப்படுமென்று. யாராவது சொல்லிக்குடுக்காமலா விடப்போகிறார்கள்?
  2. தேர்தலுக்கு பயன்படும் போல. ஒட்டுக்கேட்டிருப்பார்களோ?
  3. அவர்களுக்கு வாய் கொஞ்சம் பெரிசெண்டு நினைக்கிறன்.
  4. ரத்தன் ராரா ( Ratan Tata) என்றொரு இந்திய பெரும் செல்வந்தர் போனவாரம் காலமானார், அவரது பொன்மொழி, "உங்களை நோக்கி யாராவது கல் வீசினால் அவற்றை ஏந்தி நினைவாலயங்கள் எழுப்புங்கள்." என்றாராம். நல்ல விமர்சனங்களை ஏற்று, ஆய்வு செய்து உங்களை திருத்திக்கொள்ளுங்கள். பொறாமையால் எழும் தப்பான, பொய்யான விமர்சனங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள், அதற்காக காலத்தை வீணாக்காதீர்கள். எதிரி எமக்கு போடும் முட்டுக்கட்டை, உளவியல் ரீதியாக நம்மை பின்னடையச்செய்யும் ஒரு உத்தி இது.
  5. ஹிஹி.... உப்பிடி பலமுறை நழுவியிருக்கிறார், நழுவும்போது தேவையற்ற ஒரு கம்பு செருகி, தான், நடுவு நிலையாளன் என்பது போல சாதிப்பார். முன்னைய திரிகளை அலசிப்பார்த்தால் தெரியும். தானே செருகிய கம்பை, யாரோ செருகினார்கள் என்று தனக்கு ஒவ்வாதவரை கற்பனை செய்து தி(தீ)ட்டுவார்.
  6. பதவி ஆசை தலைதூக்காமல், ஒருவரிடம் அதிகாரம் குவியாமல், மற்றவரை குற்றம் சாட்டி தங்களை மறைத்துக்கொள்ளாமல் எல்லோரையும் சமமாக மதித்து அவரவர்க்குரிய மரியாதையையும் பதவிகளையும் பகிர்ந்தளித்து கொள்கைகளை மதித்து உட்பட்டு மக்கள் நலனை கருத்திற்கொண்டு கூடி ஆலோசித்து ஒருமித்து முடிவுகளை எடுத்து காரியமாற்றினால்; இந்த கட்சி எல்லோரையும் இணைத்து வீறுநடை போடும். அதற்காக குள்ள நரிகளையும் குழப்பிகளையும் குடைச்சல் காரரையும் தூரவே வையுங்கள்.
  7. ஒருதடவை, பொதுமக்கள் சுமந்திரன் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது சுமந்திரன் பேசும்வரை. அதன் பின், ஒரு பொதுமகன் எழும்பி சுமந்திரனிடம் கேள்வி கேட்டார் பாருங்கள், வந்ததே வந்தது சுமந்திரனுக்கு கெட்ட கோபம்., உடனே, "இங்கே இருப்பதென்றால்; வாயை மூடிக்கொண்டு இருக்கவும், இல்லையேல்; வெளியேற்றப்படுவீர்கள்." என்று எச்சரித்தார். இராணுவமோ புலனாய்வோ என்னவோ ஒன்று இதற்காகத்தான் இவர் பின்னால் திரிகிறதோ என்னவோ? "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."
  8. தமக்கு போட்டியானவர்களை தொடர்ந்து ஓரங்கட்டிக்கொள்வது. கேட்டால்; பதவியாசையில் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று தங்கள் அநாகரிக பாஷையில் விமர்சிப்பது. தாங்கள் தொடர்ந்து இருப்பது மட்டும் ஞானி குடில்,. உண்மையை சொல்பவர்களை இழிவு படுத்துவது, கேள்வி கேட்பவர்களை விரட்டுவது. தம்மை மறைத்து முந்திக்கொண்டு மற்றவரை குற்றவாளியாக்குவது. கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள், உடன் அங்கத்தவரின் உரிமைகளை மறுக்கிற சர்வாதிகாரிகள் எப்படி மக்களைப்பற்றி சிந்திப்பார்கள் என நாம் எதிர்பாக்கலாம்?
  9. சுட்டுப்போட்டாலும் நம்ம அரசியவாதிகளுக்கு அது எட்டாப்பொருத்தம். அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருந்தால்; வடக்கில் இவ்வளவு கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லையே. நாளைக்கு சீனன் போட்டியிட்டாலும்வியப்பில்லை. அபிவிருத்தியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது மக்களுக்கானதல்ல. அதனாலேயே மக்களிடம் வரும்போது சிலருக்கு சிங்கள புலனாய்வு பாதுகாப்பளிக்கிறது. தேவைப்படுகிறது.
  10. நீங்கள் விரட்டினாலும் அவருக்கு இருக்கவே இருக்கிறது வீடு, ஓடிப்போய் பாதுகாப்பாக ஒழிப்பதற்கு.
  11. வியாழேந்திரனின் கட்சி, "ஜனநாயக தேசிய முன்னணி." இப்போ பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ தெரியவில்லை. எல்லோரும் ஒரே வட்டத்துக்குள் சுற்றுகிறார்கள். ஜனநாயக தேசிய கூட்டணி, ஜ. தே. முன்னணி. ஐக்கியம், ஜனநாயகம், தேசியம், சுதந்திரம் என்று மாற்றி மாற்றி மக்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். இப்போ, மக்கள் கட்சியை பார்த்து வாக்களிப்பதில்லை, ஒன்று செயற்பாடுகளை தேடுகிறார்கள், அப்படி ஒருவரும் இல்லை. ஆகவே ஏதோ ஒன்றுக்கு கடமைக்காக வாக்களிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் வாக்களித்து, போராடி, களைத்துவிட்டார்கள். இழப்பும் ஏமாற்றமும் தோல்வியும் வறுமையும் விரக்தியும் மிஞ்சியுள்ளது. தமிழ், மக்கள் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களுக்குள் தலைமைக்காக அடிபடுகிறார்களேயொழிய அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவுமில்லை நம்பிக்கையாய் இருக்கவுமில்லை. மக்களுக்கு அந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
  12. ஐயா.... குற்றச்சாட்டு உண்மையாயிருக்கிற பட்ஷத்தில் தானே போலீசில் முறைப்பாடு செய்யலாம். சரி.... முறைப்பாடு செய்யவில்லை, எப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிலும் தமிழ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படாத அந்த உயர் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட்டது? அதை அவர் என்ன முறையில், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்? அதே புலம்பெயர்ந்தோரிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய் பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அது முடிகிறது? புலம் பெயர்ந்தோர் சில ஆட்களுக்கு பணம் அனுப்பி கொலை செய்ய திட்டம் போட்டார்கள் என்றால்; எப்படி பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அந்த கொலைகாரர் யார்? இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகளில் வந்தன. பின் ஏன் அவருக்கு இன்னும் பாதுகாப்பு? அன்றைய சிங்களஅரசு தெரிவித்தது, தங்களுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்து இருப்பதாக. அப்போ அவர் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுத்தார் என்பது உண்மை, வாக்களித்த மக்களுக்கு அவர் செய்வது துரோகம் என உணர்ந்த அரசு அவருக்கு பாதுகாப்பளித்தது. மற்றப்படி அவர் தமிழ் இனத்துக்கு, தனக்கு வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்? ஒரு வீரன், ஒரு துரோகி இவர்களுக்கு உயரச்சுறுத்தல் இருப்பது வழமை. இவர்தான் மேடைகளில் தன்னை துரோகி என்று மக்கள் சொல்வார்கள் நான் அதற்கு அஞ்சசப்போவதில்லை என அடிக்கடி சவால் விடுகிறாரே. ஈஸ்ரர் குண்டு வெடிக்கமுன் எத்தனை உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுத்தகவல்கள் வந்தும் தடுக்க தவறிய புலனாய்வு, சுமந்திரனுக்கு விஷேச புலனாய்வு பாதுகாப்பு வழங்கியதாம். முஸ்லீம் தீவிர வாதிகள் போலீசாரை கொலை செய்து பறித்த ஆயுதங்களை, முன்னாள் போராளிகள் செய்தார்கள் என கைது செய்த புலனாய்வு, சுமந்திரனுக்கு புலம்பெயர்ந்தோரால் உயிராபத்து என துல்லியமாக கண்டுபிடித்து உயர் பாதுகாப்பு வழங்கியதாம். சொல்பவர் சொன்னாலும் கேட்ப்பவருக்கு மதி இருக்க வேணும், இருக்கு.
  13. ஐயோ...... பயமுறுத்துகிறியள். மஹிந்த, இப்படியொரு பதாகை வைத்தார் பாருங்கோ.... கண்ணூறு பட்ட மாதிரி அதோடு முடிவாகிப்போனது அவரது அரசியல் கனவு.
  14. ஆயிரத்தில் ஒருவன்! இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.
  15. "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.
  16. வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.
  17. செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்
  18. சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
  19. வாசிப்பதில்லை ஆனால் பதில் எழுதுகிறீர்கள் அது எப்படி? நான் லைக்குகளை எதிர்பார்த்தோ, விமர்சனங்களுக்கு பயந்தோ எழுதுவதில்லை. தமிழரசுக்கட்சியில் எந்த வேட்பாளருக்கும் இல்லாத உயிரச்சுறுத்தல், பாதுகாப்பு சுமந்திரனுக்கு மட்டும் ஏன்? எதற்காக? அப்படியென்றால்; அவர் சிங்களத்தோடு இணைந்து வேலை செய்கிறார் என்பது நிதர்சனம். அப்படி புலம்பெயர்ந்தோரால் அவருக்கு ஆபத்து என்றால்; அவர் எப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறார், பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார்? சுமந்திரனின் சுத்துமாத்துகளை மக்கள் விமர்சிக்கிறார்களேயொழிய அவரது மதத்தையல்ல, அவர் மற்றைய மதத்தினரோடேயே கட்சியில் இருக்கிறார், மற்றைய மதத்தினரின் வாக்குகளை கேட்கிறார், மற்றவர்களின் பதவிகளை கையகப்படுத்துகிறார், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுகிறார், முடிவுகளை எடுக்கிறார், நியமனங்களை செய்கிறார், அப்படியிருக்க பொருத்தமில்லாத காரணத்தை நீங்கள் வைத்தீர்கள் அதற்கான பதில்களையே நான் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை அலட்டல் என்று நினைத்தால்; கடந்து போங்கள். அதை விட்டு தேவையற்ற அநாகரிக வார்த்தைகளை தவிருங்கள். இங்கு ஒரு அநாகரிக வழமையுண்டு. தங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாதவரை, உண்மையை எடுத்துச்சொல்பவரை கருத்தால் கையாளத்தெரியாவிட்டால்; அவர்களை இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது. இது அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனம். மழை மேகங்களால் சூரியனை மறைக்கமுடியாது!
  20. தனக்கு சொந்தமான காணிகளை விற்று காருக்கு பெற்றோல், ஊழியருக்கு சம்பளம் இப்படி பல செய்கிறாவாம். காணிகளை வாங்க ஒரு காலம், விற்க ஒரு காலம், வீர வசனம் பேச ஒருகாலம், அனுதாபம் தேட ஒருகாலம். இதுதான் வாழ்க்கை. ஏழை விழுந்தால் தனது சொந்த முயற்சியால் சீக்கிரம் எழுந்து விடுவான். அவர்களுக்கு சிலர் இரங்குவர். அரசியல்வாதி விழுந்தால் யாரும் தூக்கிவிடவர மாட்டார்கள். விலகியே செல்வர். உதாரணம்; இவர், மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா இப்படி நீளும் வரிசை.
  21. ஏன் அவரை லஞ்ச தடுப்புக்காவலர் கைது செய்யவில்லை? இவர் லஞ்சம் வாங்காவிட்டால், வேறொருவர் வாங்குவர். இவரிடம் இருந்து வந்தவர் தானே மஹிந்த. அவரிடம் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? இவர் ஊழல் மோசடிக்காரரை தண்டிக்காது விட்டால் லஞ்சத்தைஅனுமதித்தார் என்பதுதானே அர்த்தம். நாடு வங்குரோத்தில்த்தான் இயங்குது என்பதை யாரும் இவருக்கு இன்னும் தெரிவிக்கவில்லைப்போலும்.
  22. வீட்டில், சேடன், வேதாளம் எல்லாம் புகுந்து விட்டது, இனி என்ன மாற்றம் செய்யப்போகிறீர்கள்? முதலில் அவற்றை வீட்டை விட்டு விரட்டுங்கள். முடியாவிடில் வீட்டை இடியுங்கள்.
  23. அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே துணிந்து சாட்சியமளித்துள்ளார்.
  24. அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? மக்களின் வரிப்பணம், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று சர்வதேசம் வழங்கிய நிதி, கழட்டியும் இடித்தும் கொண்டு போனவை எல்லாவற்றையும் திரும்ப கொண்டுவந்து படம் காட்டுகிறார்கள். இதுதான் எதிரியின் தந்திரம்!
  25. கிணறு வெட்ட பூதம் கிழம்பியதுபோல், தங்களையுமறியாமல், மதத்தை அனுதாபத்திற்கு இழுத்து, விழும் சொற்ப வாக்குகளையும் இழக்க வாய்ப்பளிக்கிறார்கள் அதி புத்திசாலிகள்! செயலற்ற வாய் வீரரின் கருவியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.