Everything posted by satan
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
மலைப்பாம்பு, தான் கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அதிலென்ன சந்தேகம்? நல்லாட்சி அமைந்தபோது ஒளிந்திருந்த மஹிந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியது ரணில், தன்னுடைய பதவிக்காலத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்காது பாதுகாத்தது ரணில், அநுர வந்தால்; ரணிலுக்கும் ஆப்பு இருக்கு. இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். யார் வந்தாலும் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டும் உண்மை.
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இதுதான் விஷயம். பணம் இல்லையென்றால் இவருக்கும் வேலை இல்லைத்தானே, கிளம்பிவிட்டார். கிளம்பியவர் குற்றச்சாட்டுடன் கிளம்பியிருக்கிறார். தன் சொந்த உழைப்பில் சேவை செய்பவர் ஏன் இவ்வளவுகாலம் பணம் தீரும் வரை அவர்களோடு ஒட்டியிருந்தார் என்பதையும் விளக்கியிருக்கலாம். அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அவர் குற்றச்சாட்டை முந்திக்கொண்டு வைத்துவிட்டார். நம்புவது யார்?
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இப்போ ஒரு பண்பு வளருகிறது, எல்லா குற்றங்களையும் தாங்களே செய்வது, பின் அங்கு திருட வழியில்லை, என்கிற வங்குரோத்து நிலை வந்தவுடன், இலகுவாக தங்கள் குற்றங்களை மற்றவர் தலையில் கட்டிவிட்டு தாம் ஏதோ நல்ல மனிதர்போல் அறிக்கை விடுவர். அரசுமுதல் சாதாரண மனிதர் வரை தொடர்கிறது.
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
ஜனநாயகம், ஜனநாயகம் என்று தொண்டை கிழிய கத்துவார்கள். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பார்கள். கேட்டால்; நாங்கள் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பர். இவர்களாலேயே பல கட்சிகள் உருவாகி மக்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார்கள். தேர்தல் என்றவுடன், தலைவர்கள், மக்கள் நலன் என்று ஓடோடி வருவார்கள், வாக்குகளை கொள்ளையடித்த கையோடு மக்களை மறந்து, மறைந்து விடுவார்கள். இதுதான் இவர்களின் தலைமைப்பண்பு. மக்களுக்கு என்ன தேவையிருக்கிறது,அவர்களோடு உடனிருக்க வேண்டுமென்பதெல்லாம் அவசியம் என்பதை விட, சிங்களத்துக்கு உடனிருந்து, தோள் கொடுத்து தூக்கி விடுவதே முக்கியம் அவர்களுக்கு.
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இவ்வளவு காலமும் ஒத்தோடினவருக்கு இப்போ சடுதியாக அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்டியளோ .... பொறுத்திருப்போம்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா?
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
இது நான் கேள்விப்பட்டது; ரோகண விஜயவீர உயிரோட இருந்தபோது, தேர்தல் காலத்தில் பிரச்சார மேடையில் முழங்கினாராம், தான் தேர்தலில் வென்றால்; இருபத்துநான்கு மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை தூக்கிலே போடுவேன் என்று. இந்த கட்சியின் கொள்கை இதுவா? வடக்கு கிழக்கை பிரிக்க நீதிமன்றம் சென்றது யார்? இத்தனை கொடுமைகளும் தமிழருக்கு எதிராக நடந்த போது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? ஏன் கேள்வி கேட்கவில்லை? நாளைக்கு இவர்கள் அரசியல் தலைமை ஏற்றால்; தாவித்திரியும் கூட்டமெல்லாம் இங்குதானே தங்கும். இவையெல்லாம் தேர்தல் பேச்சுக்கள், முடிந்தவுடன் தாங்கள் என்ன பேசினோம் என்பதையே மறந்து விடுவார்கள். நாங்கள் யாரையும் நம்பத்தயாரில்லை, இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்டுகேட்டு நம்பி ஏமாந்து விட்டோம், நம்ப வைத்து ஏமாற்றினீர்கள். இனிமேல் இவர்களின் செயல் தான் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், சொன்னதை செயலில் காட்டுங்கள். எம்மை குற்றம் சொல்ல முடியாது, சொன்னதை நிறைவேற்ற தவறியமையே காரணம். யார் வென்றாலும், தமிழரின் மனதை வெல்ல முடியுமா, அவர்களின் காயங்களுக்கு கட்டுப்போட முடியுமா அவர்களால்? அதுதான் நமது கேள்வி. கடந்த காலத்தில் எமக்கு ஆதரவோ, அனுதாபமோ காட்டவில்லையே இவர்.
-
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!
ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா? அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்! இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து. உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
தமிழ் மக்களின் வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட கப்பமா, கட்சியை பிரித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனதற்கு கூலியா, தேர்தலின் பின் புதிய கட்சி அமைக்க கொடுக்கப்பட்ட நிதியா இது? அது அபிவிருத்திக்கு தந்த பணம் என்பார்கள் இருவரும்.
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: ரணிலின் வெற்றிக்காகவும் சுமந்திரனை தோற்கடிக்கவும் எடுக்கப்பட்ட ஆயுதமே!
கனடாவிலேயே சுமந்திரனை பேச விட முடியவில்லை இவரால், சும்மா தனிப்பட்ட விசுவாசத்தை காட்டுகிறார் அவர்.
-
மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்
என்ன, திடீரென்று சுருதி மாறுது. நாங்கள் எப்பவெல்லாம் இவர்களுக்கு வாக்கு போடுங்கள் என்று சொன்னோமோ, அவர்களுக்கே மக்கள் வாக்களித்தனர், இந்த முறையும் சஜித்துக்கு வாக்களிக்கச் சொல்கிறோம், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார் இவர். மக்களை செம்மறியாட்டுக்கூட்டங்களாக கருதி கருத்து தெரிவிக்கிறார். மக்கள் தெளிந்து விட்டார்கள். நீங்கள் சொன்னதை நம்பி ஏமாந்த மக்கள், இனியும் ஏமாற தயாரில்லை. தமிழரசுக்கட்சி தலைவர் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தோன்றுகிறார். இவரோ, தான் தமிழரசுக்கட்சி என்கிறார். இவர் மட்டும் ஒரு கட்சியா? ஒருவரின் வயலில் அவரின் விளைச்சலை தான் அறுவடை செய்ய வேண்டுமென துடிக்கிறார். எனக்கென்னவோ, ரணிலும் சஜித்தும் சேர்ந்தே இந்த கரட்டி ஓணானை இயக்குகிறார்களோ என்கிற சந்தேகமாயிருக்கிறது. ஒப்புக்கு சும்மா எல்லோருடனும் பேசினேன், இவர்தான் நமக்கு சாதகமான பதிலளித்தார் என்று புலுடா விடுகிறார்.
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: ரணிலின் வெற்றிக்காகவும் சுமந்திரனை தோற்கடிக்கவும் எடுக்கப்பட்ட ஆயுதமே!
இவருக்கு வாக்குப்போடவும் முடியாது, இவர் நாட்டிலுமில்லை, பிறகு ஏன் இவர் அரற்றுகிறார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வாக்குபோடும்படி மக்களை கேட்டவர் யார்? எதைபெற்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? சுமந்திரனுக்கு அன்று ரணில் வேண்டும், இன்று சஜித் வேண்டும் என்றால், மக்கள் என்ன அவரின் அடிமைகளா? அப்படி சுமந்திரன் என்ன பெரிய ராஜதந்திரி, செயல் வீரனா அவருக்கு எதிராக மற்றைய கட்சிகள் ஒன்று திரள? ஒன்றாக இருந்த கட்சிகளை வெளியேற்றினார், அதற்கான காரணங்களை முதலில் அவர்களுக்கு தெரியப்படுத்தினரா சுமந்திரன்? கட்சிக்குள் இருந்தவர்களை முரண்டு பிடித்து வெளியேற்றியது யார்? இன்று கட்சி நீதிமன்ற படியேறி இருப்பது யாரால்? தங்கள் மேல் பிழையை வைத்துக்கொண்டு, முந்திக்கொண்டு மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது. இவருக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் இருந்தால் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். சுமந்திரன் மக்களோடு இல்லை, அவர்களுக்கு சேவை செய்யவில்லை, இப்போ சிங்களத்தோடு வந்து அவர்களுக்காக வாக்கு கேட்கிறார். மக்கள் ஏன் அவருக்கு செவி மடுக்க வேண்டும்? மக்களுக்கு பணி செய்யாதவர்கள் அவர்களை வாக்கு போடும்படி கேட்க உரிமையில்லை. வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, பகுத்தறிவுமில்லை. உன் நண்பனைப்பற்றி சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. சுமந்திரன், சஜித்துக்கு வாக்கு கேட்கிறார், கனடாக்காரர் ஏதோ சுமந்திரன் தேர்தலில் நிற்பது போலவும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரளுகின்றனர் என்பது போலவும் கதையளக்கிறார். சுமந்திரன் இது வரையில் எதை செய்து சாதித்து விட்டார்? ஏதோ சிங்களத்துக்கு நாம் வாக்குபோடுவதுபோல் ஆளாளுக்கு துள்ளிக்குதிக்கிறார்கள், சிங்களவனே பேசாமல் இருக்கிறான்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
இதை சுமந்திரனின் அதிபுத்திசாலித்தனம் என்பதா, ராஜதந்திரம் என்பதா? சுமந்திரன் தெற்கில் ஒன்று சொல்வார், வடக்கில் அதற்கு வேறு விளக்கம் கொடுப்பார். கேட்டால்; பத்திரிகைக்காரர் நான் சொன்னதை திரித்து எழுதி விட்டார்கள் என்பார், அல்லது தனது கருத்துக்கு சரியான சொல் சிங்களத்தில் இல்லை, ஆங்கிலத்தில் இல்லை என்று மழுப்புவார். இனி வருங்காலத்தில் சுமந்திரம் எனும் பத்திரிகையில் அவரின் சுத்து மாத்தெல்லாம் சுதந்திரமாய் வெளிவரும். அதை வாசிப்பது சஜித்தாகத்தான் இருக்கும்.
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
ஈஸ்ரர் குண்டு வெடிக்கும்போது நாட்டை விட்டு வெளியேறி, தனது கைகள் சுத்தம் என்று தனது கைகள் சுத்தம் என்று வாதிட்ட மைத்திரி நினைவுக்கு வருகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்த போது, ஜெனீவா கூட்டத்தொடருக்கு போவதாக முடிவெடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு சுரேஷ் இந்தியாவுக்கு போன தருணத்தில் சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தோடு கூடிக்குலாவி, சுரேஷ் இந்தியாவில் இருக்கும்போதே தாம் ஜெனீவாவுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து அறிவித்த வித்தகர்கள். நல்ல வேளை, ஒராள் இப்போது குறையுது அல்லது அவரும் தன் பங்குக்கு அவிழ்த்து விட்டிருப்பார் புளுகு மூட்டையை.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
ஆமா..... ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறுதான் கூவிக்கூவி மக்களின் வாக்கை வாங்கி கொட்டினார், ஏதாவது சொன்னதை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தாரா? இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று என்றாரே, அதுக்கு என்னாயிற்று? ரணில் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் என்றாரே, அது எங்கே போனது? ஏதோ தமிழர் அயல்நாட்டுக்கு வாக்களிப்பதுபோல் துள்ளுகிறார். வாக்கு என்பது அவரவர் உரிமை, அதை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், இவர் யார் அதை தடுப்பது? முதலில் தமிழரசுக்கட்சியை ஒழுங்காக இயங்க விடவேண்டும். இவர் தன்னிச்சினையாக, தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடும்போது இவருக்கெதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று தமிழரசுக்கட்சி இந்தளவுக்கு சிதறுண்டிருக்காது. யோசிக்க தெரியாத ஆள். எழுபத்தைந்து ஆண்டுகளாக சிங்களத்துக்கு வாக்களித்து என்ன கண்டோம்? வாக்கு வாங்கி கதிரை ஏறும்வரை ஒன்று சொல்வார்கள், அதன்பின் வந்தேறு குடிகள், உரிமை ஏதும் கோர முடியாது என்கிறார்கள். சரி... வாக்கு வாங்கி ஏமாற்றியது போதும், இனிமேல் சொன்னதை நிறைவேற்றியபின் வாக்கு வழங்கப்படும் மறு தேர்தலில். எந்த சிங்கள கட்சிக்கு வாக்களித்தாலும் நமக்கு ஏதும் தரப்போவதில்லை என்பது தெரியும், ஆனால் நாம் ஏதோ ஒன்றுக்குத்தான் வாக்களிக்க முடியும் என்பதாலேயே இந்த நாடகம் தொடருது. நாங்கள் ஜனாதிபதியாக வரப்போவதில்லை, ஆனால் இனியும் சிங்களத்துக்கு எங்கள் வாக்கு இல்லை, நாங்களும் ஒரு தேசிய இனம், எங்களுக்கும் உரிமை, வேணவா உண்டு, எமக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை தெளிவு படுத்துவதே இதன் நோக்கம். இது வருங்காலத்திலும் தொடர வேண்டும், இது முதல் நடவடிக்கை!
-
ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
இந்த மனிதன் ஒரு ஒழுக்கமுள்ள பிக்குவாக இருப்பதைவிட; அடிதடி, மிரட்டல், மோசடி, நீதிமன்ற விசாரணை, சிறை என்று ஓய்வில்லாமல் அலைகிறாரே! இவருக்கு இன்னும் எதற்கு காவி? போதைப்பொருள் விநியோகமும் செய்வார் போலிருக்கே! மத அறிவை போதிப்பதற்கு பதிலாக இனவாத, மதவாத வெறியை ஊட்டியதன் விளைவாக இருக்குமோ?
-
ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய புள்ளி.
ஆமா.... இவர்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு மக்கள் கடந்த காலத்தில் கேள்வி கேட்காமல் வாக்களித்தார்கள். காரணம், மக்கள் தமது மண்ணை, தேசத்தை நேசிக்கிறார்கள், அதன் பெயரில் போட்டியிட்ட பச்சோந்திகளை, தலைவர்கள் என நம்பி வாக்களித்தார்கள். ஆனால் தமிழரசு, தமிழ்த்தேசியம் எனும் குதிரையில் ஏறி சவாரி செய்தார்கள். இன்றும் அதேபோல் தொடர்ந்து சவாரி செய்யலாமென சுமந்திரன் கனவு காண்கிறார். அன்று, விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு இவர் ஒரு சவால் விட்டார். முடிந்தால், தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு வெளியேறி இன்னொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார், விக்கினேஸ்வரன் வென்று காட்டினர். இவர்கள் வாக்குறுதி கொடுத்து யாருக்கு வாக்களிக்கும்படி கேட்டார்களோ, அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்தினார்கள். அதிகாரம் பெற்றவர்களும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, வாக்கு வாங்கி கொடுத்தவர்களும் சொன்ன வாக்கை பெற்றுக்கொடுக்கவுமில்லை, அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரவுமில்லை, மக்களிடம் கேட்டு சஜித்துக்கு இவர் உத்தரவாதம் வழங்கவோ அல்லது மக்கள் இவருக்குத் தான் வாக்களிப்போம் என்று சுமந்திரனுக்கு சொல்லவுமில்லை. தமிழரசு கட்சிக்கு வாக்களித்த மக்களோடுசுமந்திரன் உடன்இருந்தாரா? அவர்களின் தேவை என்னவென்று கேட்டாரா? அவர்களுக்காக உழைத்தாரா? அவர்களது இழப்பில் பங்கு கொண்டு தேற்றினாரா? அல்லது விடுதலைக்காக உறவுகளை இழந்தாரா? போரட்ட மண்ணில் வாழ்ந்தாரா? இவர் எங்கோ இருந்து கொண்டு போடும் உத்தரவுகளுக்கு மக்கள் ஏன் அடிபணிய வேண்டும்? தமிழசுக்கட்சியே கேள்விக்குறியாக சேடம் இழுக்குது. இவரை நம்பி அந்தக் கட்சி இனிமேல் இல்லை என்பதை வெகு விரைவில் இவர் உணரும்போது இவரை விட்டு சிங்களம் வெகு தூரம் போய் விடும். மக்களை ஏமாற்றி, தான் சுகம் அனுபவித்ததை இனியும் தொடர முடியாது. இவர் அடித்தொண்டையால் கத்தட்டும், வெருட்டட்டும், சவால் விடட்டும், சபிக்கட்டும், ஏதும் ஆகப்போவதில்லை. யாரும் இவரை கேட்கவோ, தடுக்கவோ போவதில்லை. தமிழ்த்தேசியத்தை உடைத்தார், தமிழரசுக்கட்சியை இரண்டாக்கினார், இதற்காகவே களமிறக்கப்பட்டவர் இவர். அது கைகூடாமலேயே இவரது அரசியல் அஸ்தமனமாகப்போகிறது, இருந்த இடமும் தெரியாமல் போகப்போகிறார். தமிழ்த்தேசியம், தமிழரசு என்று இருந்ததனாலேயே இவருக்கு அரசியல் செய்ய ஒரு களம், காலம் கிடைத்தது. அதை இல்லாமல் செய்வதோடு அவரது அரசியலும் மறைந்து விடும். முன்பு யாரோ களத்தில் ஆரூடம் சொன்னார்கள்; சுமந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டால், வெற்றி பெறுவார் என்று. முடிந்தால் வெற்றி பெற்றுக்காட்டட்டும். இல்லையென்றால் இனி வருங்காலத்தில் டக்கிலசோடு கூட்டுசேரலாம். அவரும், வரும் தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பும் முன்பொரு தடவை வெளியாகியது. இருவரும் சேர்ந்து தொடர, இயங்க பொருத்தமாக இருக்கும்.
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இவ்வளவு விளங்கப்படுத்தியும் விளங்காதவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காது, அவர்களின் தமிழ் கிரகிப்பு அவ்வளவுதான். தந்தையர் மேல் இவ்வளவு கோபமா? ஏன் இப்படி திணிக்கிறார்கள்?
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
ம் .... யானை பாத்த குருடரின் கதையாயிற்று! யாரோ செய்த தவறுக்கு கந்தையரை தண்டிக்க வேண்டுமாம். சிரிப்பு குறி போட பயமாக இருக்கிறது.
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
தேர்தல் என்று வந்து விட்டால், தமிழருக்கு எதிராக வீராவேசமாக கத்தி கூட்டம் நடத்துவார்கள், அப்போதும் அவர்களுக்கே வாக்களித்தோம். இப்போ நயவஞ்சகமாக ஏதும் தராமலேயே வாக்கு போடும்படி வற்புறுத்துகிறார்கள், அப்பவும் அடிமைகள் சிங்களத்துக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன கண்டோம்? கூண்டோடு அழித்துவிட்டு வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்கிறார்கள். தமிழரின் வாக்குகளை வீணாக, எந்த நிபந்தனையுமில்லாமல், இனாமாக வாங்கிக்கொடுத்து அவர்களின் உணர்வுகளையும் நிலங்களையும் பறிகொடுத்து பலவீனமாக்கியதே தமிழரசுக்கட்சிதான். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்பதை இல்லாதொழிக்கவே சுமந்திரன் புகுத்தப்பட்டார். இந்ததேர்தலோடு அவரும் அவரது அரசியலும் இல்லாமல் போகவேண்டும். பொது வேட்ப்பாளர் தோற்றாலென்ன வென்றாலென்ன எதுவும் நமக்கு குறையப்போவதில்லை, ஆனால் இனிமேல் எங்களை வைத்து தேர்தலில் வெற்றியடையும் ஏமாற்றும் தந்திரம் நிறுத்தப்படும். அதோடு சிங்கள மக்கள் எதிர் காலத்தில் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து வாக்களிக்க முடியுமென்றால், அவர்கள் ஏன் நமக்கு அளிக்கக் கூடாது? குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன் எனும் நிலை மாறவேண்டும்.
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
மதில்மேல் இருக்கிற இந்தப்பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியவில்லையே? அனுரா கூறிய கருத்துக்கு இவர் விளக்கம் கொடுக்க எப்படி முடிந்தது? மொத்தத்தில் எல்லா கட்சிகளும் இனவாத பிரச்சனையில் ஒரே கொள்கை, அதில் இவர் பங்குதாரர் அவ்வளவே. ரணில் உறுதியளித்தார் என்கிறார், ரணிலோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்றவுடன் நாமல் இவர் வீட்டுக் கதவை தட்டினார். அப்புறம் சஜித் என்கிறார், இப்போ அனுராவுக்கு வக்காலத்து? மக்கள் எந்தப்பக்கம் என்று தெரியாமலேயே கொப்புக்கு கொப்பு தாவித்திரியிறார்.