Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?
  2. அவர் எத்தனை தடவை ஏமாற்றினார் என்றால்; அது யார் தவறு? ஏமார நாம் தயாராக இருக்கும்போது அவர் ஏமாற்றத்தான் செய்வார். நாம்தான் திருப்பி, முன்பும் ஏமாற்றினாய் இப்போ செய்! நாம் நம்புகிறோம் என்று கேட்.பதில்லையே எமது அப்பிராணித்தனத்தை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் புத்திசாலி. முகவர் அதற்கான வெகுமதியை பெற்று பாராட்டப்பெறுவார். நாங்கள் செம்மறிக்கூட்டம்.
  3. ம்ம், பெண்கள் பொய் முறைபாடளிப்பதுபோல் ஆண்களும் முறைபாடளிக்க முன்வரவேண்டும்!
  4. யார்......இவரா தீர்த்து வைப்பது? வேலிக்கு ஓணான்கள் சாட்சி சொல்கின்றனர். அப்போ இந்த வார்த்தைப்பிரயோகம் தேவையில்லையே?
  5. அவர் வழி, த.....னி...... வழி! அப்படி நடந்துதான் அவருக்குப்பழக்கம். அப்பதான் தான் நினைத்தபடி அறிக்கை விடலாம். ரணிலோட மட்டுமா பேசுறார்? எல்லோருடனுந்தான் பேசுறார். அவரே வர வேண்டாம் என்கிறார். அவர்கள் தான் ஒருவரையும் கூட்டி வராதேங்கோ, "நாங்க உங்களுடன் மட்டுந்தான், பூட்டிய அறைக்குள்ள பேசுவம்." என்று அடம் பிடிக்கின்றனர். ஆனால் பாவம் அவர்.... பேசியது, பேசாதது எல்லாவற்றையும் அறிக்கையாக வெளிப்படுத்தி விடுவார். இது போதாதா?
  6. இவர் அதிரடியாக களம் இறங்கியது தவறு. அங்கே போய் நின்று கொண்டு, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அங்கு நின்ற ஒருவர், உங்களுக்குந்தான் இருக்கிறது என்கிறார். இவர் செய்திருக்க வேண்டியது அந்தக்குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், இப்போ என்ன நடந்தது? திடீரென களத்தில் குதித்து, போர்களமாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வேறு மாதிரி கையாண்டு இருந்தால் குற்றவாளியை சிக்க வைத்திருக்கலாமல்லவா? முன் ஆயத்தம், யோசனை இல்லாமல் இப்படி சுடுகுது மடியைப்பிடி என்று எல்லாவற்றயும் ஒரே நேரத்தில் கையிலெடுத்து இப்படி போட்டுடைக்கலாமா? சாவகச்சேரி நீதிமன்றம் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்காக ஆயராகும் சட்டத்தரணிகளுக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை மீறுவதனாலேயே இவர் இப்படி விமர்சிக்கப்படுகிறார். அதை அவர் கடைபிடித்திருந்திருந்தால் இவருக்குப்பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் அல்லவா கைது செய்யப்பட்டிருப்பார்? இப்போ, எதிரிகள் பலரை ஒன்றாக தனக்கெதிராக இணைத்து விட்டிருக்கிறார். இவர் எங்கு போனாலும் துரத்தப்படுவார், தான் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காதவரை!
  7. வைத்தியர் அர்ஜுனா அரசியலுக்கு இன்னும் தயாரில்லை என்றே கருதுகிறேன்.இப்போ அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பல அரசியல் கழுகுகள் தங்களுக்கு சாதகமாகவும் அவரின் இருப்பை இல்லாமல் செய்யவும் பயன்படுத்தும். அதற்கு முதல் அவர் தனது நேர்மையையும் பொறுமையையும் காத்து மக்கள் அவர்மேல் வைக்கும் மதிப்பு உண்மையானது, அவர் மக்களுக்கு உண்மையாய் இருப்பார் என்பதை காட்டுவதே இப்போதைய அவரது முதற் கடமை. இவர்களைபோன்றவர்களையே சிங்களம் தேடும். காரணம்; மக்கள் மதிப்பு, வாக்கு வங்கியை உயர்த்தும், மிக எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர், எளிதில் ஏமாற்றி எதிலும் சிக்க வைக்கலாம். அவர் செய்தது சரியாகிலும் வரம்பு மீறி செயற்படுவதனால் தனது தொழிலை, மதிப்பை இழந்து சொல்லவந்த உண்மையை நீர்த்துபோகச்செய்து விடுவார் போலுள்ளது. இவர் இப்போ செய்ய வேண்டியது அரசியலல்ல தான் வைத்த குற்றச்சாட்டு உண்மையானது என நிறுவி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும், தன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபித்து அதிலிருந்து வெளிவரவேண்டும், அதற்கு சட்டத்தரணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இப்போ அவர் ஒரே நேரத்தில் பல தோணிகளில் கால் வைத்து சில நாளில் பிரபல்யமடைந்து அரசியல் செய்யும் கனவை விட்டு ஒன்றொன்றாக கவனமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இந்த தேர்தல் காலத்தை அனுபவமாக கூர்ந்து கவனித்து பின்வரும் நாட்களில் இறங்கலாம், இப்போ அரசியல் முடிவை எடுத்தால் பின்வரும் நாட்களில் மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிப்பார்.
  8. இவர் தனது அரசியல் பிரவேச விளம்பரத்திற்காக அதிரடி காட்டுவதாக சம்பந்தப்பட்ட வைத்தியர் குற்றம் சுமத்தியிருந்தார். தான் அறிவித்துப்போட்டு வந்ததாக இவர் தெரிவித்திருந்தார். என்ன இருந்தாலும் குட்டையை குழப்பி சம்பந்தப்பட்டவர்கள் பழிவாங்கும் நிலைமை ஏற்படப்போகிறது இவரது அவசரபுத்தியால். ஏற்கெனவே சாதாரண மக்கள் இவர்களது தெனாவெட்டால் துயரம் அனுபவித்து இவரால் ஒரு விடிவு வருமென எதிர்பார்த்தார்கள் அது வெறும் நாடகமாக மாறி சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றியை கொடுக்கப்போகிறது. இவர் கொஞ்சம் நிதானித்து சட்ட ஆலோசனையுடன் காரியத்தை தொடங்கியிருக்கலாம் அல்லது வெளியிலிருந்து உதவி செய்பவர்களின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாம். சிங்கள அதிகாரியின் பலத்தை நம்பி பெயரை கெடுத்துக்கொண்டதுதான். "பணிசெய் பலனை எதிர்பாராதே" என்று தன்னால் முடிந்ததை முயன்றிருக்கலாம் சும்மா அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் நம்பி அவசரப்பட்டுவிட்டார்.
  9. பிக்குகளை குஷிப்படுத்த ஆசிவேண்டி நூல் கட்டும் கலாச்சாரம் இங்கேயுமா?
  10. தேவையேற்பட்டால் தேடி வந்து கும்பிடுவார்கள்,தேவை முடிந்தவுடன் தூண்டி விட்டு தேடித் தேடி இடிப்பார்கள். உவர்களின் கைங்கரியம் தெரியாதா நமக்கு?
  11. அப்பப்போ வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சில தனிப்பட்ட காணொளிகள் மூலமும் வெளிவந்தன அப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ சமூக ஆர்வலர்களோ நடவடிக்கை எடுத்திருந்தால், தட்டிக்கேட்டிருந்தால் இவ்வளவுதூரம் போயிருக்காது. முன்னர் வன்னிப்பிரதேச சுகாதார ஊழியர் ஒருவர் இதை வெளிக்கொணர்ந்தபோது அவரது தலைமையக்கத்தோடு தொடர்பு கொண்டு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார்கள். இவர்கள் சரியாக நடந்திருந்தால், அவர் வெளிப்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காதே. அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், யார் இந்தக்குறைகளை வெளிப்படுத்த முன்வருவர்? தரங்கெட்டவர்கள், நேர்மையாளரை துரத்துவார்கள் அல்லது அவர்களை சுயமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு திறமை இல்லை அல்லது மக்களுக்கு சேவை செய்யாமல் கள்ள உடம்பு வளர்த்து சம்பளம் வாங்க வேண்டும். இதுவும் ஒரு களவுதான். பலவகை இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் இவர்களுடன் சண்டை இடாமல் பொறுமையாக, தாமதமாகவேனும் பயன் பெற நினைத்து பேசாமல் இருந்திருக்கலாம், கதைத்தால் இப்போ நடப்பதுபோல் தங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் இதனால் அவசர நோயாளர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்து பொறுத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எந்த மனிதனும் நிரந்தரமாக, சுகதேகியாக, அதிகாரத்தோடு, அதே பதவியில் வாழப்போவதில்லையென்கிற உண்மை புரிந்தால் இப்படியெல்லாம் ஆடமாட்டார்கள். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் பேசும் பேச்சு; பரதேசி, நீ, டேய், உன்ர பதிவுகளை நீதிமன்றம் ஏற்குமா? அப்போ நீதிமன்றம் ஏற்காதென்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்று பொருளா? நீதிமன்றத்தில் அதற்கும் இடமிருக்கு என்பது பேசியவருக்கு தெரியாதுபோல் உள்ளது. ஒருவர் தன் பாதுகாப்புக்காக கொலை செய்யலாம் என்றால், ஏன் குரல் பதிவு செய்ய முடியாது? ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தால் இறந்தவரின் தொலைபேசியை போலீசார் சோதனையிடுவதன் காரணம் என்ன?
  12. இது சுமந்திரனின் வழமையான செயற்பாடுதான். சிங்களத்துக்கு வாக்கு போடாவிட்டால் நாம் ஒன்றும் தீர்வு காணமுடியாது என்று பயமுறுத்துவது, அப்படி காலம் காலமாய் போட்டு என்னத்தை கண்டோம்? அது சரிவரவில்லையோ .... இதோ! தேர்தல் முடிந்த கையோடு தீர்வு, நான் தனிநபர் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன் என்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் பாக்கி என்றார், பின்னர் ரணில் ஏமாற்றி விட்டார் என புலம்பினார். ரணிலோ தற்காலிக ஜானாதிபதியானவுடன், சுதந்திர தினத்துக்குமுன் தீர்வு என்று வேறு சொன்னார், எதுவும் நடக்கவில்லை. உறுதியளிக்கும்போது தெரியாதா அவருக்கு இது எவ்வளவு அசாத்தியம் என்று? அப்போ பொழுது போக்குக்கு சொன்னாரா? உதெல்லாம் தேர்தற் பேச்சு, தேர்தல் முடிந்தால் போச்சு. அவசரமாக தேர்தல் தீர்வு பொதி தயார்! அவர்களிடம் தமிழருக்கான தீர்வு ஏதும் இருந்திருந்தால் ஏன் இவ்வளவுகாலமாக இழுத்தடிக்கிறார்கள்? இன்னும் ஏன் நமது நிலத்துக்குள் ஊடுருவுகிறார்கள்? தடை ஏற்படுத்துகிறார்கள்? திருப்பித்தரவேண்டாம், இருக்கிறதையே அச்சுறுத்தி பிடுங்குகிறார்கள். சிங்களத்தை நாடிபிடித்துப்பார்க்க சுமந்திரனுக்கு அனுபவமில்லை அல்லது சுயநலம் விடவில்லை. மக்களோடு மக்களின் பிரச்சனையில் பிரசன்னமாகாதவர், அவர்களின் பிரச்சனை என்னவென்று தெரியுமா? சிங்களத்தோடு சேர்ந்து வாழ்வது அவரது இனிய அனுபவத்தில் நமது பிரச்சனை தெரிய வாய்ப்பேயில்லையே. கோத்தபாய தப்பி ஓடும்வரை அரகலியாவை ரசித்தவர் பதவிக்கு வந்தவுடன் அதை எவ்வாறு சிதைத்து தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து தனது காரியத்தை நிறைவேற்றினார். ஆனால் பேரின வாதிகள் தமிழருக்கெதிராக முழக்கமிடும்போது ஏன் அமைதியாக இருந்தார்? அவரால் செய்ய முடியாததல்ல, செய்ய மாட்டார்கள். ஆசை காட்டி தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வார்கள் இந்தப்பிரச்சனை. இல்லாவிடில் அவர்களால் அரசியல் செய்ய முடியாத அனாதையாகி விடுவார்கள். பார்க்கவில்லையா நாமல்த் தம்பி சொன்னதை? தமிழரோடு அதிகாரங்களை பகிரவிரும்பாமல், இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் அடைந்து நிராதரவாய் நிற்கும்போது மன்னிப்பு கேட்க்காதவர், அதிகாரங்களை பகிர முன்வராதவர், ஏன் வெற்றிவிழாக்களில் பெருமிதமாக தோன்றியவர், இவ்வளவு காலமும் இல்லாமல் தேர்தல் வரும்போது, ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ வருவதை விரும்புகிறாராம். அதை ஏன் இவ்வளவு காலமும் அறிவிக்கவில்லை? இது நடக்கக்கூடிய காரியமா? ஒருவேளை சிங்களமக்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க தொடங்கிவிட்டால்; என்கிற சந்தேகம் வர ஆரம்பித்து அதை தடுக்க எடுக்கும் நடவடிக்கையாக இருக்குமோ? அதிகாரங்களை பகிருகிறோம் என்றால் மீள் பரிசீலனை செய்யலாம், இது நடைபெற முடியாத காரியம், வேண்டுமென்றால், சுமந்திரன் டக்கிளஸ் இன்ன பிறர் நம்பலாம். நாங்கள் உங்களை நன்றாகவே கணித்து வைத்துள்ளோம். இவர்களின் தேர்தல் வாக்குறுதி, வடக்கில்; "பிரச்சனையை தீர்க்கிறோம்." தெற்கில்; "தமிழருக்கு உரிமை ஏதும் இந்த நாட்டில் இல்லை." இதுதான் இவர்களின் தேர்தல் மூலதனம். இதை தமிழர் நாம் தெரிந்து இந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து நிலைத்து நிற்போமானால், பின்னாளில் தெற்கும் மாறும்.
  13. அங்கேயும் கலவரம் வெடித்திருக்கிறது இவருக்கெதிராக. இவர் சாட்டிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட்டாலன்றி இவர் எங்கேயும் தொழில் புரிய முடியாது, இவரை ஒரு கலகக்காரராகவே துரத்துவார்கள், அதுவரை அவர் அமைதி காப்பது அவசியம். மக்களின் உணர்வையும் ஆதரவையும் வைத்து தன்னை அடையாளப்படுத்த நினைத்தால்; மக்களின் நிஞாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கவும் இன்னும் தாம் நினைத்ததை சாதிக்கலாம் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றி இவர் ஒரு நகைச்சுவையாளனாக சித்திரிக்கப்படலாம். தேவையற்ற நேர்காணலையும், நேரலையில் தோன்றுவதையும் தவிர்ப்பதே இவரது தொழிலுக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் நன்மை பயக்கும். இல்லையேல் எல்லோரையும் சலிப்படைந்து விலத்திப்போக வைத்துவிடுவார்.
  14. தமிழர், தம்மையும் தம் குடும்பத்தையும் மன்னிக்கப்போவதில்லை என்பதும் அவர்கள் வாக்கில்லாமல் தாம் தப்பிப்பிழைப்பது கஸ்ரமென்பதும் எப்படி அவர்களின் வாக்கால் கட்டிலேறினோம், அவர்களை தூக்கி எறிந்ததால் என்ன ஆனோம் என்பதும் இந்த தம்பிக்கு தெரியும். இவரது ஜனாதிபதிக்கனவு அந்தரத்தில் தொங்குது, அதை எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால் தமிழரை அணைக்கவேண்டும், அதற்கு ஒரு இளிச்ச வாய் தமிழன் தேவை. முன்பு உறுதியளித்து வாக்குப்பலம் பெற்று எங்களை நாடோடிகளாக, வக்கற்றவர்களாக மாற்றி வெற்றி கொண்டாடியதை இவர் மறைக்கலாம், ஆனால் நாம் அதை மறக்கப்போவதில்லை. "சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது."
  15. அது சரி... அதே காதலியைத்தான் கைப்பிடிச்சீங்களா? அல்லது உங்களின் வீர சாகசத்தை கண்டு அவாவே விலகி விட்டாவா? ஏன் கேக்கிறேன் என்றால்; எனது காதலி என்று எழுதியிருக்கிறீர்கள், அவரே மனைவியானார் என்பதை குறிப்பிட வில்லை, அந்தக்காதல் என்னவானது என்றும் முடிக்கவில்லை, அதனாற்தான் கேட்டேன். காதற்கதை என்றால் மிகவும் சுவாரசியம் நிறைந்ததல்லவா?
  16. ம், பெற்றோர் பேச்சுத்தட்டாத பிள்ளையாக்கும். இப்பவும் காதலிக்கலாம், வீட்டுக்காரி சம்மதித்தால்...... ? முறைக்க வேண்டாம், நான் சொல்லுறது உங்கள் வீட்டுக்காரியையே, அடுத்த வீட்டுக்காரியையல்ல.
  17. ம்ம், ரொம்பத்தான் அனுபவம் பேசுது! அடி வாங்கினீர்களோ, கொடுத்தீர்களோ? என்றதையும் விலாவாரியா எடுத்து விடுறது...... ரசிப்போமேல்ல. ஒருவேளை முகநூலில் வந்த காதலாக இருந்தால், அந்தப்பக்கம் பெண்போல யாராவது இந்த தாக்குதலாரி ஒருவன் ஏமாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் அல்லது அந்தப்பெண் கதைக்கும்போது உறவினரிடம் மாட்டுப்பட்டோ, தெரிவித்தோ இருக்கலாம் இல்லையெனில் பெண்ணே ஏமாற்றியிருக்கலாம். அப்பாவிப்பையன் மாட்டுப்படுள்ளான். விசாரணை நேர்மையாக நடந்தால் விபரம் வெளிவரும்!
  18. யார் நின்றாலென்ன, வென்றாலென்ன? மக்களின் வாக்குகளை ஆசை காட்டி கவர்ந்து எசமான் முன் குவித்துவிட்டு தலையை குனிந்து வாலை ஆட்டும் கூட்டந்தான் என்பதை பலமுறை கண்டுவிட்டோமே. எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழருக்கு ஒரு துரும்பைத்தானும் தர முற்படவில்லை, எங்கள் நிலங்களில் வாழவிடவில்லை, இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று பரப்புரை செய்துகொண்டு அவர்ளுக்கான தேர்தலில் நாங்கள் முண்டியடித்துக்கொண்டு வாக்குச் செலுத்திவிட்டு, சிங்களம் எங்களை ஏமாற்றிவிட்டது, முதுகில் குத்திவிட்டது என்று அறிக்கை விடுவதுதான் அரசியலா? உங்களால் ஏமாற்றப்பட்ட நமக்கு உங்கள் மேல் இனி நம்பிக்கையுமில்லை, உங்களுக்கு வாக்களிப்பதால் எங்களுக்கு நன்மையுமில்லை என்று தெரிவித்து சர்வதேசத்துக்கு எங்கள் நிஞாயங்களை தெரிவித்து நம்மை பிரிந்து வாழ அனுமதியுங்கள் என்று கேட்பது சரியா? சம்மந்தர் போல இவரும் தன் வாழ்நாள் முழுவதும் பேசுவம் பேசுவம், தீர்வை பெற்றுத்தருவம் என்று பேய்க்காட்டி, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி, தனது செல்வாக்கை பெருப்பிக்கவும், தமிழரின் ஏகதலைவன் தான் என்று உல்லாசம் பண்ணிக்கொண்டு ஊர் சுற்றவும், தமிழருக்கு ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை என்பார். இவரை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்தால்; வேறொன்று பேசுவார். இவர் தமிழரின் அரசியலுக்குள் நுழைந்த பெரிய நகைச்சுவையாளன்!
  19. அது எந்த சமூகமென்றும் வெளிப்படையாக கூறலாமே? புதிதாக ஏதோ பேசி பீதியைக்கிளப்பப்போறார் போல இருக்கே... இதுதான் நமது இனத்துக்கு கிடைத்த சாபமும் வரமும். எந்தகாரியத்தில் இவர்கள் முழுமையாக இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள்? அதனாற்தான் நாம் எத்தனை முயற்சி எடுத்தாலும் முன்னேறமுடியாமல் எதிரிக்கு வாய்ப்பளித்து முன்னேற்றிவிட்டு புலம்புகிறோம்.
  20. ம் .....நீங்களும் அப்பப்போ, நடந்த உண்மையை நிராகரித்து மறு அறிக்கை விட்டு மூடப்பார்க்கிறீர்கள். ஆனால் பிக்குகளின் அடாவடிகளும் இனவாதிகள் விடும் சவால்களும் உங்களின் அறிக்கையை மறுத்து அவர்களின் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கின்றனவே? வெகு விரைவில் உலக நாடுகள் அனைத்துமே ஜஸ்டின் புரூடோவின் கருத்தையே ஆமோதிக்கப்போகின்றன. அப்போதும் நீங்கள் குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்டி சாகசம் செய்ய முனைவீர்கள்!
  21. இவர்கள் புலத்தில் இருக்கும்போது செய்த தொழில் என்னவென்று ஆராய்ந்தால் புரியும், இலங்கையின் கூலிப்படைகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் செய்த சமூக சீர்கேடுகள். சிலது புலிகளை சாட்டி புலம்பெயர்ந்துதுகள், சிலது கூலிப்படையோடு சேர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது எல்லாவற்றையும் கொள்ளையடித்து உரியவர்கள் தட்டிக்கேட்டபோது அதே கூலிப்படையின் அடக்குமுறையை பாவித்து அவர்களின் வாயை அடக்கி, பின் ஆமியால் பாதுகாப்பில்லை என்று படகில் போய் புகலிடம் பெற்றிருக்குதுகள். அந்த நாடும் பரிவிரக்கம் கொண்டு இவர்களை ஏற்று நல்வாழ்வளித்தால், அவர்களால் தம் தொழிலை விட முடிவதில்லை, அந்த நாட்டின் சுதந்திரத்தையும் வசதியையும் அனுபவித்துக்கொண்டு தமது பரவணிக்குணத்தை அரங்கேற்ற விடுமுறை என்கிற பெயரில் நாட்டுக்கு வருவதும், இங்குள்ள சமூக விரோதிகள், இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் காவல் துறை எனும் காவாலித்துறையை பயன்படுத்துவதும், தம்மை ஏதோ பெரிய பணக்காரர் போல பந்தாகாட்டுவதும், பின்னாளில் சரண் அடைந்த நாட்டில் தாம் அனுபவிக்கும் வசதிகளை இழப்பதோடு நம் இனத்தின் மீது அந்த நாட்டு மக்கள், அரசு காட்டும் இரக்கத்தையும் அக்கறையையும் நன்மதிப்பையும் எங்களுக்காக அவர்கள் எழுப்பும் நீதிக்கான குரலையும் இழக்கச்செய்யும். அதனால் கேடுகெட்ட கூட்டம் வெட்கப்படப்போவதுமில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை. அதெல்லாம் உண்மையான உயிர், சொத்து, தொழில் உறவுகளைதொலைத்தவர்களையே சேரும்.
  22. தேர்தல் வந்தால் எல்லோருக்கும் தேவைப்படுவது விடுதலைப்புலிகள். நம்ம அரசியல் வாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். மக்கள் புலிகளை விரும்பவில்லை என்று அறிக்கை விடுபவர்கள், உரையாற்றுபவர்கள் தேர்தல் காலத்தில் ஏன் புலிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்?
  23. கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!
  24. ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.