Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இது சுமந்திரனின் வழமையான செயற்பாடுதான். சிங்களத்துக்கு வாக்கு போடாவிட்டால் நாம் ஒன்றும் தீர்வு காணமுடியாது என்று பயமுறுத்துவது, அப்படி காலம் காலமாய் போட்டு என்னத்தை கண்டோம்? அது சரிவரவில்லையோ .... இதோ! தேர்தல் முடிந்த கையோடு தீர்வு, நான் தனிநபர் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன் என்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் பாக்கி என்றார், பின்னர் ரணில் ஏமாற்றி விட்டார் என புலம்பினார். ரணிலோ தற்காலிக ஜானாதிபதியானவுடன், சுதந்திர தினத்துக்குமுன் தீர்வு என்று வேறு சொன்னார், எதுவும் நடக்கவில்லை. உறுதியளிக்கும்போது தெரியாதா அவருக்கு இது எவ்வளவு அசாத்தியம் என்று? அப்போ பொழுது போக்குக்கு சொன்னாரா? உதெல்லாம் தேர்தற் பேச்சு, தேர்தல் முடிந்தால் போச்சு. அவசரமாக தேர்தல் தீர்வு பொதி தயார்! அவர்களிடம் தமிழருக்கான தீர்வு ஏதும் இருந்திருந்தால் ஏன் இவ்வளவுகாலமாக இழுத்தடிக்கிறார்கள்? இன்னும் ஏன் நமது நிலத்துக்குள் ஊடுருவுகிறார்கள்? தடை ஏற்படுத்துகிறார்கள்? திருப்பித்தரவேண்டாம், இருக்கிறதையே அச்சுறுத்தி பிடுங்குகிறார்கள். சிங்களத்தை நாடிபிடித்துப்பார்க்க சுமந்திரனுக்கு அனுபவமில்லை அல்லது சுயநலம் விடவில்லை. மக்களோடு மக்களின் பிரச்சனையில் பிரசன்னமாகாதவர், அவர்களின் பிரச்சனை என்னவென்று தெரியுமா? சிங்களத்தோடு சேர்ந்து வாழ்வது அவரது இனிய அனுபவத்தில் நமது பிரச்சனை தெரிய வாய்ப்பேயில்லையே. கோத்தபாய தப்பி ஓடும்வரை அரகலியாவை ரசித்தவர் பதவிக்கு வந்தவுடன் அதை எவ்வாறு சிதைத்து தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து தனது காரியத்தை நிறைவேற்றினார். ஆனால் பேரின வாதிகள் தமிழருக்கெதிராக முழக்கமிடும்போது ஏன் அமைதியாக இருந்தார்? அவரால் செய்ய முடியாததல்ல, செய்ய மாட்டார்கள். ஆசை காட்டி தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வார்கள் இந்தப்பிரச்சனை. இல்லாவிடில் அவர்களால் அரசியல் செய்ய முடியாத அனாதையாகி விடுவார்கள். பார்க்கவில்லையா நாமல்த் தம்பி சொன்னதை? தமிழரோடு அதிகாரங்களை பகிரவிரும்பாமல், இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் அடைந்து நிராதரவாய் நிற்கும்போது மன்னிப்பு கேட்க்காதவர், அதிகாரங்களை பகிர முன்வராதவர், ஏன் வெற்றிவிழாக்களில் பெருமிதமாக தோன்றியவர், இவ்வளவு காலமும் இல்லாமல் தேர்தல் வரும்போது, ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ வருவதை விரும்புகிறாராம். அதை ஏன் இவ்வளவு காலமும் அறிவிக்கவில்லை? இது நடக்கக்கூடிய காரியமா? ஒருவேளை சிங்களமக்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க தொடங்கிவிட்டால்; என்கிற சந்தேகம் வர ஆரம்பித்து அதை தடுக்க எடுக்கும் நடவடிக்கையாக இருக்குமோ? அதிகாரங்களை பகிருகிறோம் என்றால் மீள் பரிசீலனை செய்யலாம், இது நடைபெற முடியாத காரியம், வேண்டுமென்றால், சுமந்திரன் டக்கிளஸ் இன்ன பிறர் நம்பலாம். நாங்கள் உங்களை நன்றாகவே கணித்து வைத்துள்ளோம். இவர்களின் தேர்தல் வாக்குறுதி, வடக்கில்; "பிரச்சனையை தீர்க்கிறோம்." தெற்கில்; "தமிழருக்கு உரிமை ஏதும் இந்த நாட்டில் இல்லை." இதுதான் இவர்களின் தேர்தல் மூலதனம். இதை தமிழர் நாம் தெரிந்து இந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து நிலைத்து நிற்போமானால், பின்னாளில் தெற்கும் மாறும்.
  2. அங்கேயும் கலவரம் வெடித்திருக்கிறது இவருக்கெதிராக. இவர் சாட்டிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட்டாலன்றி இவர் எங்கேயும் தொழில் புரிய முடியாது, இவரை ஒரு கலகக்காரராகவே துரத்துவார்கள், அதுவரை அவர் அமைதி காப்பது அவசியம். மக்களின் உணர்வையும் ஆதரவையும் வைத்து தன்னை அடையாளப்படுத்த நினைத்தால்; மக்களின் நிஞாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கவும் இன்னும் தாம் நினைத்ததை சாதிக்கலாம் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றி இவர் ஒரு நகைச்சுவையாளனாக சித்திரிக்கப்படலாம். தேவையற்ற நேர்காணலையும், நேரலையில் தோன்றுவதையும் தவிர்ப்பதே இவரது தொழிலுக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் நன்மை பயக்கும். இல்லையேல் எல்லோரையும் சலிப்படைந்து விலத்திப்போக வைத்துவிடுவார்.
  3. தமிழர், தம்மையும் தம் குடும்பத்தையும் மன்னிக்கப்போவதில்லை என்பதும் அவர்கள் வாக்கில்லாமல் தாம் தப்பிப்பிழைப்பது கஸ்ரமென்பதும் எப்படி அவர்களின் வாக்கால் கட்டிலேறினோம், அவர்களை தூக்கி எறிந்ததால் என்ன ஆனோம் என்பதும் இந்த தம்பிக்கு தெரியும். இவரது ஜனாதிபதிக்கனவு அந்தரத்தில் தொங்குது, அதை எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால் தமிழரை அணைக்கவேண்டும், அதற்கு ஒரு இளிச்ச வாய் தமிழன் தேவை. முன்பு உறுதியளித்து வாக்குப்பலம் பெற்று எங்களை நாடோடிகளாக, வக்கற்றவர்களாக மாற்றி வெற்றி கொண்டாடியதை இவர் மறைக்கலாம், ஆனால் நாம் அதை மறக்கப்போவதில்லை. "சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது."
  4. அது சரி... அதே காதலியைத்தான் கைப்பிடிச்சீங்களா? அல்லது உங்களின் வீர சாகசத்தை கண்டு அவாவே விலகி விட்டாவா? ஏன் கேக்கிறேன் என்றால்; எனது காதலி என்று எழுதியிருக்கிறீர்கள், அவரே மனைவியானார் என்பதை குறிப்பிட வில்லை, அந்தக்காதல் என்னவானது என்றும் முடிக்கவில்லை, அதனாற்தான் கேட்டேன். காதற்கதை என்றால் மிகவும் சுவாரசியம் நிறைந்ததல்லவா?
  5. ம், பெற்றோர் பேச்சுத்தட்டாத பிள்ளையாக்கும். இப்பவும் காதலிக்கலாம், வீட்டுக்காரி சம்மதித்தால்...... ? முறைக்க வேண்டாம், நான் சொல்லுறது உங்கள் வீட்டுக்காரியையே, அடுத்த வீட்டுக்காரியையல்ல.
  6. ம்ம், ரொம்பத்தான் அனுபவம் பேசுது! அடி வாங்கினீர்களோ, கொடுத்தீர்களோ? என்றதையும் விலாவாரியா எடுத்து விடுறது...... ரசிப்போமேல்ல. ஒருவேளை முகநூலில் வந்த காதலாக இருந்தால், அந்தப்பக்கம் பெண்போல யாராவது இந்த தாக்குதலாரி ஒருவன் ஏமாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் அல்லது அந்தப்பெண் கதைக்கும்போது உறவினரிடம் மாட்டுப்பட்டோ, தெரிவித்தோ இருக்கலாம் இல்லையெனில் பெண்ணே ஏமாற்றியிருக்கலாம். அப்பாவிப்பையன் மாட்டுப்படுள்ளான். விசாரணை நேர்மையாக நடந்தால் விபரம் வெளிவரும்!
  7. யார் நின்றாலென்ன, வென்றாலென்ன? மக்களின் வாக்குகளை ஆசை காட்டி கவர்ந்து எசமான் முன் குவித்துவிட்டு தலையை குனிந்து வாலை ஆட்டும் கூட்டந்தான் என்பதை பலமுறை கண்டுவிட்டோமே. எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழருக்கு ஒரு துரும்பைத்தானும் தர முற்படவில்லை, எங்கள் நிலங்களில் வாழவிடவில்லை, இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று பரப்புரை செய்துகொண்டு அவர்ளுக்கான தேர்தலில் நாங்கள் முண்டியடித்துக்கொண்டு வாக்குச் செலுத்திவிட்டு, சிங்களம் எங்களை ஏமாற்றிவிட்டது, முதுகில் குத்திவிட்டது என்று அறிக்கை விடுவதுதான் அரசியலா? உங்களால் ஏமாற்றப்பட்ட நமக்கு உங்கள் மேல் இனி நம்பிக்கையுமில்லை, உங்களுக்கு வாக்களிப்பதால் எங்களுக்கு நன்மையுமில்லை என்று தெரிவித்து சர்வதேசத்துக்கு எங்கள் நிஞாயங்களை தெரிவித்து நம்மை பிரிந்து வாழ அனுமதியுங்கள் என்று கேட்பது சரியா? சம்மந்தர் போல இவரும் தன் வாழ்நாள் முழுவதும் பேசுவம் பேசுவம், தீர்வை பெற்றுத்தருவம் என்று பேய்க்காட்டி, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி, தனது செல்வாக்கை பெருப்பிக்கவும், தமிழரின் ஏகதலைவன் தான் என்று உல்லாசம் பண்ணிக்கொண்டு ஊர் சுற்றவும், தமிழருக்கு ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை என்பார். இவரை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்தால்; வேறொன்று பேசுவார். இவர் தமிழரின் அரசியலுக்குள் நுழைந்த பெரிய நகைச்சுவையாளன்!
  8. அது எந்த சமூகமென்றும் வெளிப்படையாக கூறலாமே? புதிதாக ஏதோ பேசி பீதியைக்கிளப்பப்போறார் போல இருக்கே... இதுதான் நமது இனத்துக்கு கிடைத்த சாபமும் வரமும். எந்தகாரியத்தில் இவர்கள் முழுமையாக இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள்? அதனாற்தான் நாம் எத்தனை முயற்சி எடுத்தாலும் முன்னேறமுடியாமல் எதிரிக்கு வாய்ப்பளித்து முன்னேற்றிவிட்டு புலம்புகிறோம்.
  9. ம் .....நீங்களும் அப்பப்போ, நடந்த உண்மையை நிராகரித்து மறு அறிக்கை விட்டு மூடப்பார்க்கிறீர்கள். ஆனால் பிக்குகளின் அடாவடிகளும் இனவாதிகள் விடும் சவால்களும் உங்களின் அறிக்கையை மறுத்து அவர்களின் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கின்றனவே? வெகு விரைவில் உலக நாடுகள் அனைத்துமே ஜஸ்டின் புரூடோவின் கருத்தையே ஆமோதிக்கப்போகின்றன. அப்போதும் நீங்கள் குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்டி சாகசம் செய்ய முனைவீர்கள்!
  10. இவர்கள் புலத்தில் இருக்கும்போது செய்த தொழில் என்னவென்று ஆராய்ந்தால் புரியும், இலங்கையின் கூலிப்படைகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் செய்த சமூக சீர்கேடுகள். சிலது புலிகளை சாட்டி புலம்பெயர்ந்துதுகள், சிலது கூலிப்படையோடு சேர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது எல்லாவற்றையும் கொள்ளையடித்து உரியவர்கள் தட்டிக்கேட்டபோது அதே கூலிப்படையின் அடக்குமுறையை பாவித்து அவர்களின் வாயை அடக்கி, பின் ஆமியால் பாதுகாப்பில்லை என்று படகில் போய் புகலிடம் பெற்றிருக்குதுகள். அந்த நாடும் பரிவிரக்கம் கொண்டு இவர்களை ஏற்று நல்வாழ்வளித்தால், அவர்களால் தம் தொழிலை விட முடிவதில்லை, அந்த நாட்டின் சுதந்திரத்தையும் வசதியையும் அனுபவித்துக்கொண்டு தமது பரவணிக்குணத்தை அரங்கேற்ற விடுமுறை என்கிற பெயரில் நாட்டுக்கு வருவதும், இங்குள்ள சமூக விரோதிகள், இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் காவல் துறை எனும் காவாலித்துறையை பயன்படுத்துவதும், தம்மை ஏதோ பெரிய பணக்காரர் போல பந்தாகாட்டுவதும், பின்னாளில் சரண் அடைந்த நாட்டில் தாம் அனுபவிக்கும் வசதிகளை இழப்பதோடு நம் இனத்தின் மீது அந்த நாட்டு மக்கள், அரசு காட்டும் இரக்கத்தையும் அக்கறையையும் நன்மதிப்பையும் எங்களுக்காக அவர்கள் எழுப்பும் நீதிக்கான குரலையும் இழக்கச்செய்யும். அதனால் கேடுகெட்ட கூட்டம் வெட்கப்படப்போவதுமில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை. அதெல்லாம் உண்மையான உயிர், சொத்து, தொழில் உறவுகளைதொலைத்தவர்களையே சேரும்.
  11. தேர்தல் வந்தால் எல்லோருக்கும் தேவைப்படுவது விடுதலைப்புலிகள். நம்ம அரசியல் வாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். மக்கள் புலிகளை விரும்பவில்லை என்று அறிக்கை விடுபவர்கள், உரையாற்றுபவர்கள் தேர்தல் காலத்தில் ஏன் புலிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்?
  12. கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!
  13. ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார். ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார்.
  14. வீட்டின் முன்னால் ஓடும் கழிவு நீர் வாய்க்காலின் ஒரு முனையில் ஒருவர் தன் இயற்கை உபாதைகளை வெளியேற்றிக்கொண்டு இருப்பார், மறுமுனையில் பாட்டி ஒருவர் அரிதட்டு வைத்து அதற்குள் எதையோ தேடிக்கொண்டு இருப்பார். சிங்களத்துக்கு முட்டுக்கொடுப்பதை விட்டு அந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கலாம். அந்த மக்களை அப்படியே வைத்து ஓட்டு வாங்கி தம்மை வளர்ப்பதே அவர்களின் குறிக்கோள்.
  15. ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தாராம், அங்கே ஒருவர் பொது இடத்தில் கூச்சமில்லாமல் மலம் கழிப்பதை பார்த்து, ஏன் இந்த நாட்டில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டாராம். அவமானத்தால் தலை குனிந்த இந்திய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியை பழிவாங்க ஒரு காலம் வருமென்று காத்திருந்தாராம். இன்னொருதடவை இந்திய ஜனாதிபதி அமெரிக்கா போனபோது தெருவில் ஒருவர் மலங்கழிப்பதை பார்த்ததும், இந்திய ஜானாதிபத்திக்கு இதுதான் சந்தர்ப்பம் என்று, அமெரிக்க ஜனாதிபதி முன்பு இவரை கேட்ட கேள்வியை இப்போ இவர் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து கேட்டாராம். அதற்கு, அமெரிக்கர் கொஞ்சம் பொறுங்கள்; அவரை அழைக்கிறேன், நீங்கள் அவரிடமே இந்தக்கேள்வியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த மனிதரை அழைத்தாராம். இவரும் அவரை அழைத்து விசாரித்த போது தனது பூர்வீகம் இந்தியா என்றாராம் அந்த மனிதர். நினைத்துப்பாருங்கள்..... இந்தியா ஜனாதிபதியின் நிலையை, இதற்கு பேசாமலே போயிருக்கலாம், மீண்டும் வாயை குடுத்து புண்ணாக்கி கொண்டோமே என்று நினைத்திருப்பார். இந்தியன் ஆமி வந்தபோது கூட சிலரை கேட்டார்களாம், எதற்கு சண்டை போடுகிறீர்கள்? வீட்டுக்கொரு கிணறு, கழிவறை இருக்கு, வசதியாய் இருக்கிறீர்கள். பின் எதற்கு உங்களுக்குள் சண்டை என்றார்களாம்? அவர்களது பிரச்சனை அது. எங்களது பிரச்சனையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
  16. நீங்கள் கட்டிய பார்சலை யாராவது தட்டிக்கொண்டு போயிருந்தால் இப்படி சொல்வீர்களா சார்? எப்படியோ சேதாரம் இல்லாமல் கட்டிய பார்சலை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டதால் இப்படி புகழ்கிறீர்கள், ஆனால் சாமியாருக்கும் ஒரு பாசல் காத்துஇருக்கு என்று சொல்லலையே..... அதுதான் எனது கடுப்பு!
  17. உங்கள் சந்திப்பு சுவாரிஸ்சயமாகத்தான் சென்றது. இப்போ அது தனியாக பிரிந்து சேர்ந்தவர்களை காரணம் சொல்லி கழட்டி விட்டிட்டு பாசல் கட்ட வீட்டுக்காரி பேரன் பேத்தியை கூட்டுச் சேர்க்கும்போதுதான், இது என்ன அனிஞாயம்? என தோன்றுகிறது. சாமியார் தானே இந்த வித்தையை உங்களுக்கு கற்றுத்தந்தவர்? நீங்கள் குருவை விஞ்சி விட்டீர்களே!
  18. ம் ..... தங்களது சுயநலத்திற்காக சிங்களத்துக்கு தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, வரவேற்பளித்து உள்ளதையும் இழந்து நிற்கிறோம், படித்த கூட்டம் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் வேலை...... ஒவ்வொரு துறையாக அவர்களிடம் நாமே கையளித்துவிட்டு பிறகு குத்தி முறியிறது. எனக்கு ஏற்கெனவே தெரியும், சிங்களத்தை நம்பி அர்ஜுனா பேட்டி கொடுக்கிறார் முதுகிலே குத்து வாங்கப்போகிறார் என்பது. சிங்களத்தால் எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும் எங்களது சுயநலம் மாறாது, புத்தியும் வராது. இதுக்குள்ள தோத்துப்போன அரசியல் புழுக்கள் வேற நுழைந்து அரசியல் செய்து தம்மை பிரபல்யப்படுத்த பிரயத்தனம் எடுக்கிறார்கள்.
  19. அட கடவுளே.... இது என்ன அனிஞாயமாய் கிடக்கு! போறவாற இடமெல்லாம் பேரன், பேத்திகளை சொல்லி பாசல் கட்டுறது. விருந்தளித்தவர் வீட்டில் மிச்சம் மீதி விட்டிருக்கார்கள் போலிருக்கே. இனி இவர்களுக்கு அழைப்பு விடும்போது யோசிக்க வேண்டி உள்ளது. அது சரி... சாமியாருக்கு பாசல் கொண்டு வரவில்லையா? இனிமேல் உங்களுக்கு அழைப்பு இல்லை சாமியார் போகிற விருந்துகளில்.
  20. எண்டாலும் சாமியாரின் பரந்த குணம் யாருக்கும் வராது! ம். சாமியாரின் உறவுகளுக்கு மட்டும் உங்களைத் தெரிந்திருந்ததாக்கும்? தனியாக போய் விருந்துண்டால் ஒட்டுமா உடம்பில?
  21. உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று. அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல் கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்! இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும் பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?
  22. கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பழிவாங்கி, தன்னை புனிதராக காட்ட முயற்சிக்கிறார் போலும்.
  23. தான் கொண்ட கொள்கையில் உறுதியில்லாதவரை, நேரம் ஒரு பேச்சு பேசுபவரை யார் மதிப்பார்? சம்பந்தரால் எதுவும் சாதிக்க முடியாமைக்கும் சிங்களமே விமர்சிப்பதற்க்கும் இதுவே காரணம். தீர்வைப்பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து பாராளுமன்றம் போய் சிங்களமக்கள் விரும்பாத, அவர்களை கோபப்படுத்தும் தீர்வை ஏற்கமாட்டோம் எனும் சபதம் செய்தால் தீர்வை யார் கொடுப்பார்? அவர் ஏமாற்றியது அவரை நம்பி வழியனுப்பிவிட்டு தமக்கு தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களை. அதனாலேயே மக்களை அவர் சந்திப்பதில்லை, கேள்வி கேட்போரை அதட்டினார். பத்திரிகையாளர் மேல் சீறி விழுந்தார், எச்சரித்தார். யாருக்கும் இடம் விடவில்லை, நடுவுநிலையாக நடந்து நடந்து கொண்டவருமில்லை, மக்களுக்காக மக்களோடு நின்றவருமில்லை, மக்களையும் அவர் கனவுகளையும் ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்தார். அதன் வலியை தானே உணர்ந்திருப்பார் தன் இறுதி நாட்களில்.
  24. போலீசார் தமது கடமைகளை செய்யாமல் சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கும்போது, பாவம் நாய்களை கொண்டுவந்து என்ன செய்வது? அவற்றுக்கு லஞ்சம் பெறவோ உண்மைகளை மறைக்கவோ பேசவோ முடியாதே, வீணாக மக்களின் வரிப்பணத்தை செலவழித்து அவற்றிற்கு இறுதிக்கடன் செய்யவே முடியும் பொலிஸாரினால்.
  25. தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்ற விடும் புலுடாவாக இருக்கலாம். அல்லது சம்பந்தர் இனி இலையென்பதால் அடுத்த ஏமாந்த சம்பந்தர் என்று நினைத்து அழைக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.