Everything posted by valavan
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில்லை என்று பல ஆண்டுகளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தோம், இன்று என்னமோ நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டமாதிரி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். குழப்பம் எங்களிடம்தான் அவர்களிடமில்லை , அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரனை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும் தமிழர்கள் சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது சிங்கள அரச ராஜாங்க பதவியை நியாயப்படுத்த தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து இலங்கையை ஆள முடியாது. ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்! கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும், 2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது. 83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர், இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது , அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள். இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும் ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை. ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
சம அளவிலான பிரச்சனைகளாக இருந்தாலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதில் புலிகளின் போராட்டத்தையும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தயும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் புலி வெறுப்பாளர்களுக்கான பதிலாகவே உங்களின் கருத்தை எடுகோளாக்கினேன், மற்றும்படி அது உங்களின் மீதான விமர்சனம் அல்ல. பெரும்பாலும் எவருடனும் கருத்து மோதலில் ஈடுபடுவதில்லை, பொத்தாம் பொதுவாக மனசில் பட்டதை சொல்வதுதான் வழமை,
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது. புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா? அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது. ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு வந்து சேர்ந்திருக்கிறது? சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிச்சயமாக புத்தன், அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை. அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான சிங்கள அரசியலால் சிறிதளவாயினும் கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு, அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள், இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள். நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள். இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர் தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின் நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள். நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன். அவர்கள் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள். இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின், யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம் குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை. சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும் அதே மக்களும் மாணவர்களும் மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும் போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது. அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள் என வந்தால் இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
உலங்கு வானுர்தி பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை வாழ்த்துக்கள் மாணவர்களே- யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
நீங்கள் உங்கள் கருத்துக்களில் உறுதியாக தொடர்ந்து நில்லுங்கள் அது உங்களின் தனிமனித உரிமை.- யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
இலங்கையின் ஒருபகுதி ஒவ்வொன்றாய் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழர் பகுதியில் பத்து பத்தாய் தகர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது, தமிழர் பிரதேசங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யபோவதில்லை, சிங்கள அரசியலும் பெரிதாய் கண்டுகொள்ள போவதுமில்லை, கையில் காசு உள்ளவர்கள் அவரவர் தனிப்பட்ட முறையில் தமது வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இடிந்து தகர்ந்து போயிருந்து படிப்படியாக உருப்பெற முனையும் எம் மண்ணுக்கு எவர் வந்து உதவி பண்ணினாலும் நன்றியுடன் கைப்பற்றுவோம். வெளிநாட்டிலிருந்து வந்து கல்கிசை பீச்சிலும், கண்டி தெப்ப குள பக்கமும் திரியாமல் எம் தாயக பிரதேசத்திற்கு தம்மால் முடிந்ததை செய்த இவர்கள் நன்றிக்குரியவர்கள். இது உதவி என்ற ஒரு கோணத்தை விட்டு மறு கோணத்தில் பார்த்தால், இவர்களுக்குள்ள தொடர்புகளும் சர்வதேச ஊடக பார்வையும் நாம் ஆயிரம் செய்தாலும் கவன ஈர்ப்பை பெறாத இலங்கையின் வடபுலத்தின் மீதான சர்வதேச விழிப்புணர்வு. எமக்குள் நாமே வசனங்கள் விவாதங்கள் கண்ணீர் அஞ்சலிகள் நடத்தியதால்தான் இறுதிபோர்வரை சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியவில்லை, அந்நாளில் சிறு அளவுகூட எமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை, முடிந்ததெல்லாம் முடிந்தாயிற்று இதுபோன்ற நிகழ்வுகளால் சிறுதுளியாயினும் எதாச்சும் நாம் கவனம் பெற்றால் மகிழ்ச்சியே.- இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
இலங்கை அரசியலமைப்பின்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி கட்சிக்குள் பிரச்சனையென்றால் இலங்கை நீதி மன்றைத்தான் நாடவேண்டும். இலங்கையில் நீதி செத்துவிட்டது என்று அவர்கள் சொன்னது இனங்களுக்கிடையே காட்டப்படும் பாகுபாடு சம்பந்தமான இனப்பிரச்சனை பற்றி. இன பிணக்கும் கட்சியும் ஒன்றல்ல, நீங்கள்கூடத்தான் ஈழமக்கள் என்றபேரில் கட்சி நடத்துகிறீர்கள் அதனால் நீங்கள் ஈழமக்கள் எனும் இனத்தால் அமைச்சராக்கப்பட்டவர் என்று பொருளாகிவிடுமா? அல்லது ஈழமக்களும் நீங்களும் ஒன்றாகிவிடுமா?- வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை. தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான் பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள். அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும். கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும். ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல , அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும். இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர் பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம் மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள், இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன். இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும். கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான், எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம். இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின் பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது? நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை, அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.- புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
மிக நுட்பமாக முற்றாக புலம்பெயர்ந்தோரின் காணிகள், பிறர் பெயரில் அவர்கள் இலங்கையில் வைப்பிட்டிருக்கும் பணம் போன்றவற்றை குறி வைக்க போகிறார்கள் போல இருக்கிறது. இங்கிருந்தபடி அங்கிருப்பவர்கள் மூலம் சொத்துக்களை பராமரிப்பவர்களிடமிருந்து சுவீகரிக்கும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும் கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது. போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி, அறிமுகமில்லாத வேற்று மனிதர்களை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவோ குழந்தைகளை தொடவோ தூக்கி கொஞ்சவோ , மாமாக்கு ஒரு அவ்வா கொடுங்கோ என்று கேண தனமா உறவு கொண்டாட அனுமதிக்கவோ தனியாக எங்கும் அனுப்பி வைக்கவோ அனுமதிப்பது சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு சமம். ஒருசில மேலைநாடுகளில் குறிப்ப்பிட்ட வயதுக்கு பின்னர் பெற்ற தந்தையே தன்னோட மகளுக்கு உடை மாற்றுவது சட்டப்படி குற்றம், ஆரம்பத்தில் என்னடா இது கேவலமான சட்டம் என்று தோன்றியது, பின்னர் பெற்ற மகள் மீதே கை வைத்த கேவலமான ஒரு சில மனிதர்களை பார்த்த பின்பு சட்டம் பற்றி கேவலமா சிந்திச்சது நான்தான் என்று பின்பு தோன்றியது. அஞ்சலிகள் அந்த பிஞ்சுக்கு.- கொஞ்சம் ரசிக்க
- துவாரகா உரையாற்றியதாக...
புரிதலுக்கு நன்றி. அதனால்தான் ‘’உரையாற்றியதாக.....’’ என்று தலைப்பிட்டேன் அந்த புள்ளிகளின் தொடராய் எந்த வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியிலும் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்காலாம் என்றும் மறைமுகமா குறிப்பிட்டேன்..- துவாரகா உரையாற்றியதாக...
இதுபற்றி என்ன பேசி கொள்ளபோகிறார்கள் என்பதை அறியவே இணைத்தேன் பாலபத்திய ஓணாண்டி வேறொன்றுமில்லை.- துவாரகா உரையாற்றியதாக...
உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும் - வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.