-
Posts
1383 -
Joined
-
Days Won
15
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by valavan
-
முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
-
தயக்கமின்றி சொல்லலாம், மிக குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டு ஒரு இயக்கத்தை நடத்திய செயல்வீரன், இயக்கங்களிலேயே புலிகளுக்கடுத்ததாக இந்தியாவின் கண்களில் மண்ணை தூவி சர்வதேச கடல் எல்லையூடாக ஆயுதங்களை தனது இயக்கத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையும் மகேஸ்வரனுக்கு உண்டு என்று சொல்வார்கள். இயங்கங்களிலேயே பெரும்பாலும் எண்ணிக்கையில் குறைவானாலும் அனைத்தும் ஒரிஜினல் ஆயுதங்கள் வைத்திருந்ததும் இவர் தலைமை தாங்கிய இயக்கமென்றே பேச்சுண்டு., இயங்கங்களிலேயே ஒரிஜினல் மோட்டார் வைத்திருந்த ஒரேயொரு இயக்கம் தம்பா இயக்கம் என்று சொல்வார்கள். தனியொருவனாக அவர் ஆயுதங்களை கொண்டுவந்து சேர்த்த சர்வதேச தொடர்பு பற்றி புலிகளும் தகவல் எதுவும் பெற்றிருக்கவில்லையென்றும் கதைகள் உலவியதுண்டு. ஏறக்குறைய புலிகளின் B- Team தான் தம்பாவின் இயக்கம் என்றும் கூறுவார்கள். ஒரு கல்விமானாக, பொருளாதார பின்னணி, அக்காலத்திலேயே லண்டன் வாழ்வு என்று அத்தனையும் இருந்தும் அனைத்தையும் துறந்து தாயகத்துக்காக போராட வந்து எதுவும் நனவாகாமல் மீண்டும் மீண்டும் சிறை வாழ்வு, நாடுநாடாக அலைச்சல் என்று போய் கடைசியில் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலைக்கு போய் பட்டமரமாக அவர் வாழ்வு முடிந்தது. தனிமனிதனாக பெரும் திட்டங்களை செயல்படுத்த ஆசைப்பட்டிருந்தார், எதுவும் ஈடேறாமல் காலம் தடுத்து அவரை காலமாக்கிவிட்டது. தமிழர் தரப்பில் அரசியல் ரீதியாகவும், ஆயுதபோராட்ட ரீதியாகவும் பெரும் கல்விமான்கள்,சட்ட வல்லுனர்கள், செயற் திறனாளர்கள்,அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் , மிக நுண்ணிய திட்டமிடலாளர்கள் என அத்தனையும் இருந்தும், எவ்வளவோ முயன்றும் எதுவும் சாதிக்க முடியாமல் எம் கதை முடிந்துபோனது ஏனோ, எம்மீது யாரிட்ட சாபமோ தெரியல. செயல் வீரனுக்கு அஞ்சலிகள்.
-
ஏற்கனவே அமெரிக்காவின் பலநூறு தாக்குதல் விமானங்களுடன் 4 விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நாசகாரிகள் ஈரானின் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேலை காக்கும் நடவடிக்கையில் அங்கு தரித்து நிற்க......, முதல் தடவையாக உலகில் யாருக்கும் அமெரிக்காவால் விற்பனை செய்யப்படாத, முதன் முதலாக ஒரு நாட்டுக்கெதிராக தாக்குதலுக்கு தயாராக மத்திய கிழக்கை நோக்கி பெரும் எண்ணிக்கையில் புறப்பட்டு செல்லும் F-22 Raptor விமானங்கள் பின்விளைவுகளை நன்கறிந்து ஒப்புக்கு சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலை தவிர்த்து ஈரான் நீண்ட பெரும் போர் ஒன்றில் இஸ்ரேலுக்கெதிராக ஈடுபடாது என்று நினைக்கிறேன், மாறாக ஹிஸ்புல்லாவையும் ஏற்கனவே குற்றுயிராய் போன காமசையும்(நேற்றும் ஒரு முக்கிய தளபதி காலி என்று தகவல்) , ஹுத்தியையும் முன்னுக்கு தள்ளிவிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் அமெரிக்க இஸ்ரேல் நடவடிக்கையில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டலாம்
-
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
valavan replied to colomban's topic in ஊர்ப் புதினம்
இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள். 1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே? இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன. ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான் ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது. எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம். போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை, முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை, அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள். 83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள். மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன் பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன், நன்னி, எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது. இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி. -
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
valavan replied to colomban's topic in ஊர்ப் புதினம்
இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். -
உண்மைதான், ஒரு படித்தவர் அதே வைத்தியதுறையிலிருப்பவர் எப்படி அதை துறைரீதியான சட்டங்களுட்பட்டு ஒரு பிரச்சனையை அணுகாமல் நேரடியாக வைத்தியசாலைக்குள் நுழைந்து விசாரணை செய்ய முனைந்திருக்கலாம்? வைத்தியசாலை முறைப்படி எம் இரத்த சொந்தங்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தாலும் எழுந்தமானமாக பிரவேசித்து அவர்களை பார்வையிடமுடியாது என்பது உலகம் எல்லாம் உள்ள மருத்துவமனைகளின் விதி. நோயாளிகளையே பார்க்கமுடியாது என்ற சட்டம் இருக்கும்போது இவர் வைத்தியர்களையே விசாரணை செய்ய உள் நுழைந்திருக்கிறார். மருத்துவமனை விதிகள் நாட்டுக்குநாடு எப்படி கடைப்பிடிக்கப்படுகிறதோ இல்லையோ ஒரு வைத்தியர் கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டியதில்லையா? சமீபத்திய யூடியூப் சனல் ஒன்றில் தான் வைத்தியதுறையை விட்டு விலகிவிட்டேன் என்றும் அரசியலில் ஈடுபடபோகிறேன் என்றார் அப்போ எந்ததுறை அதிகாரத்தின் அடிப்படையில் இலகுவாக காவல்துறை அவர் நடவடிக்கை பாயும் வாய்ப்பு இருக்கும் இந்த செயலில் ஈடுபட்டார்? இந்த பிரச்சனையை தானே முன்னின்று பாதிக்கப்படவர்கள் சார்பில் நீதிமன்றம் கொண்டு சென்றிருக்கலாம் வழக்கு தொடுத்திருக்கலாம் அதுதான் சரியான அணுகுமுறை. டாக்டர் அர்ச்சுனா பக்கம் நியாயங்கள் கல்வி தகமை இருந்தாலும் திடீர் மக்கள் ஆதரவினால் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது, அவரின் உணர்ச்சிவசப்பட்ட செயல்களினால் அவர் எதிரிகளினாலும் சிங்கள அரசினாலும் மிக விரைவில் முடக்கப்படுவார் என்ற நிலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகிறது.
-
சோமாலிய தாக்குதலில் 32 பேர் பலி சோமாலியா தலைநகரில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த உணவகத்திற்குள் நுழைந்த அல் ஷபாப் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன்போது, சிலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததுடன், தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது https://www.tamilmirror.lk/செய்திகள்/சமலயவல-தவரவத-தககதல-32-பர-பல/175-341524 இந்த செய்தி யாரும் பகிர்ந்ததாய் காணவில்லை அதனால் இத்திரியில் இணைத்தேன்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம் அதாவது தேர்தலில் ரணிலுக்கும் வாக்கு போடோணும், சுமந்திரனுக்கும் வாக்கு போடோணும் எண்டு சுருக்கமா சொல்ல வர்றீங்க? சிறுவயசில் என்னோட வெறிகுட்டி மாமா ஒருத்தர்கூட கொழும்புக்கு அம்மா அப்பா அனுப்பி வைத்தார்கள் கையில நூறூரூபா காசும் தந்து, வவுனியா கடந்ததும் அந்தாள் என்ர காசை வாங்கி என்னமோ செலவு பண்ணிப்போட்டு கொழும்பு வரேக்க தருவன் எண்டு சொன்னார் சிறுவனா இருந்தபடியா அந்த காசு...காசு எண்டு வடிவேலு ஸ்டைல்ல திரும்ப திரும்ப கேட்க இதைவிட கனக்க தருவன் கொழும்பு வந்ததும் ஜோசிப்பாய் மாமா எவ்வளவு நல்லவர் எண்டு ஆசைகாட்டி கொழும்பு வந்ததும் சொந்தகாரர்கிட்ட கொண்டுபோய் விட்டிட்டு அப்படியே ஓடிட்டான். அந்தநிலைதான் இதுவும். தமிழர் பகுதிக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தீ குளிப்பேன் என்று ஒரு தேரர் சொன்னதும் சிங்கள மக்களை திரட்டி மிக பெரும் போராட்டமே நடத்துவோம் என்று ஜேவிபி சொன்னதும்,காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு கொடுத்ததுக்கு சமம் என்று அப்பப்போ மஹிந்த ஆட்களுட்பட பல சிங்கள கட்சிகளும் தலைவர்களும் தேரர்களும் அறிக்கைவிடுவது ஊரறிஞ்ச விஷயம். ஒரு சில சிங்களவர்கள் என்னுடன் பேசும்போது போர் காலத்தில் நீங்கள் தனி தீர்வு கேட்டது நியாயம், இப்போதான் எந்த பிரச்சனையும் இல்லையே வடக்கிலிருந்து தெற்குவரை அனைத்து மக்களும் எங்கும்போய் எங்கும் வரலாம் அப்புறம் எதுக்கு தனியாக உங்கள் பகுதிக்கு மட்டும் தீர்வு என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கிறது அவர்கள் தற்போதைய மனநிலை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதுபோல் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த சிங்களத்துடன் இணைந்து மாஜஜால வார்த்தைகள் பேசி தமிழர் பிரச்சனைகளை இழுத்தடிப்பது காலப்போகில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எவனும் கேட்க வைத்திடும். காணி காவல்துறை அதிகாரம் கிடைத்தால் மகிழ்ச்சி , அதேநேரம் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு கொடுத்த ரணில் பதவியிலிருப்பாரா சிங்கள தேசம் பதவியில் விட்டு வைக்குமா என்பதையும் பார்க்க சுமந்திரனும் ரணிலும் சேர்ந்து அரசியல் தீர்வு தருவார்களென்று நம்பும் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளோம்.
-
ஈரான் - ஈராக் பெரும் யுத்தம் ஷியா சுன்னி என்ற மதபிரிவுகளுக்கு இடையிலான மோதல்தான் மிக பெரும் சர்வதேச பிரச்சனையானது குமாரசாமியண்ணா, அவனோட நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வுபெற்றுவிட்டு அவன் குடிமக்களையே கொன்று குவிப்பதை வினைவிதத்தவர்கள் வினை அறுக்கமுடியுமென்றால். நமது பிரச்சனையிலும் சர்வதேசம் ஓரவஞ்சகம் செய்து வினைவிதைத்தது , அதற்காக இஸ்லாமியர்கள்போல் நாமும் அரசுகள் செய்த தவறுகளுக்காக அவன் குடிமக்களை கொல்லலாமா அல்லது அப்படி செய்தால் நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா? அவர்கள் செய்ய முடியுமென்றால் நாங்களும் ஏன் செய்யகூடாது? இப்படி கேள்வி எழுப்புவதுகூட எனக்கு கொடூரமாகவே உள்ளது ஆனாலும் ஒரு கருத்து பகிர்வை நிறுவுவதற்காக பேச்சுக்கு கேட்கிறேன் அமெரிக்கா இஸ்ரேல் மேற்குலகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஆதிக்க சக்தி பெற்ற நாடுகள் அனைத்தும் பிறநாடுகள்/இனங்கள்/சமூகங்களுக்கெதிராக தீங்கிழைத்திருக்கின்றன ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன அப்படி நடந்து கொள்ளவில்லை என்று உலகில் எந்த ஒரு வல்லமை கொண்ட நாட்டையும் நீங்கள் விரல் நீட்டி காண்பிக்க முடியாது. ஆனால் இஸ்லாமியநாடுகள் உள்நாட்டிலும் அண்டைநாடுகளுடனும் கொண்ட மோதல் போக்க்கினால்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலகமும் அமெரிக்காவும் இடையில் புகுந்து தமது ஆயுத வியாபாரம் பொருளாதார நலன்கள் அரசியல் தலையீடுகள் என்று மூக்கை நுழைத்தன. இப்போது தவறு எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்கள்? கடாபியும் சதாமும் எப்படியான மேற்குலகுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தார்கள் என்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டிய ஒரு விஷயம் அல்ல, கடாபி மேற்குலத்தை எதிர்ப்பதே கொள்கையாக வைத்திருந்தார் ,அமெரிக்க பயணிகள் விமானத்தையே தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்று அமெரிக்காவுடன் தீரா பகை வளர்த்தார், சதாம் அமெரிக்காவுடன் கூடி குலவிவிட்டு பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார், குர்து இனமக்களை விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கில் கொன்றார், அண்டைநாடான குவைத்மீது படை எடுத்து மேற்குலகத்தை அந்த பிராந்தியத்தில் இழுத்து அவர்கள் கையினாலேயே தனக்கான தூக்கு கயிறை கேட்டு பெற்றார். ஆசாத் சதாம் போலவே சொந்த நாட்டின் மக்கள்மீது ரசாயன தாக்குதல் நடத்தி அட்டூளியம் பண்ணி ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி தனக்கெதிரானவர்களுக்கெதிராக மிக பெரும் போர் தொடுத்து மேற்குலகுடன் போர் செய்தார், ஆம் சிரிய அதிபருக்கெதிரான போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக மேற்கின் அனைத்து நாடுகளும் உதவி செய்தன, அதேபோல சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா S-400 வான்பாகுகாப்பு கட்டமைப்பு, சுக்கோய் ரக விமானங்களுட்பட தனது ராணுவபடையையே கொண்டு சென்று இறக்கியது, ஆக அங்கே மோதியது அமெரிக்கவும் அதன் நேச படைகளும் எதிர் ஆசாத்தும் ரஷ்யாவும். அப்படியிருக்க ஆசாத் அவர்களுக்கு என்ன செய்தார் என்கிறீர்கள். சிரியாவின் மோதல்களில் எதிரும்புதிருமாக நின்ற ரஷ்யா மேற்குலபோரில் தமது ஆதரவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சிரிய அகதிகளை அழைத்து வந்தார்கள் அதனால் பூ கொடுத்து வரவேறார்கள், ஆதரவு வழங்கிய மேற்குலகத்திற்கு இவர்கள் நன்றிக்கடன் எப்படி மீள செலுத்தினார்கள் என்பதே இங்கேயுள்ல விவாத பொருள். முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை ஆனால் மேற்குலகத்தினர் சாதுக்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ முஸ்லீம்கள் சாதுக்களா இல்லையா? என்னைபொறுத்தவரை பிராந்திய கொள்ககள் என்று மேற்குலகம் வெவ்வேறு நிலைகளை கொண்டிருந்தாலும், தனது நாட்டில் பாதுகாப்பில்லையென்று தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு வதிவிட உரிமை கொடுத்து வசதிகள் கொடுத்து அவர்கள் சந்ததி சந்ததியாக வாழ் இடமும் கொடுத்து வாழவைத்த மேற்குலகம் சாதுக்கள்தான். இல்லையென்றால் அவன்நாட்டில் வாழ்ந்துகொண்டு அவனது மக்களையே கொன்று குவித்து அவனதுநாட்டை இஸ்லாமியநாடு ஆக்குவோம் என்று அறைகூவல் விட்டு எவ்வளவோ அநியாயம் பண்னினாலும் இன்னும் அவர்களை அகதியா தனது நாட்டுக்குள் அனுமதித்துக்கொண்டேயிருக்கிறான். இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான். எத்தனையோ உலகபணக்கார இஸ்லாமியநாடுகள் இருந்தும் எந்தநாடும் சக இஸ்லாமியர்களை தனதுநாட்டுக்குள் அகதியாக அனுமதிப்பதேயில்லை, அவர்களுக்கு தெரியும் அதன் பின் விளைவுகளும் தாக்கமும். மேற்குலகமும் அதன் அரசுகளும் சாதுக்கள் இல்லையென்றால் என்றோ அவனது பாஸ்போட்டுக்களை தூக்கி எறிந்துவிட்டு சாரை சாரையாக ஊர் திரும்பியிருப்போம். அப்படி திரும்பும் நிலையில் யாரேனும் உள்ளார்களா புறநடையாக ஓரிருவர் தவிர? அவர்கள் சாதுக்களா இல்லையா என்ற பந்து உங்கள் பக்கம் அதை உதைப்பதும் அணைப்பதும் உங்கள் செளகரியம்.
-
யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது 90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள், இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம், மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம் சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின. பாலஸ்தீன பிரச்சனையில் பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா? இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள். அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட. ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா? ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும் நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது. அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள் அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே. அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா? பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள். நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை. அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே!
- 111 replies
-
- 10
-
இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது, நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா தலைமையும் போடப்படும் என்பதில் மாற்றமில்லை. எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.
-
எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.
-
இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது. சஹ்ரான் சாகுமுன் வெளியிட்ட ஒரு வீடியோவில் இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும் மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் சொன்னான். அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் . பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே .அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும் சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே!
- 111 replies
-
- 13
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
valavan replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
விசுகு அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? தடையை எடுக்கவேண்டியதில்லை என்ற தொனியில் நான் எதும் கூறவில்லை, தடை எடுக்கப்படும் நிலை வந்தாலும் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாக அதனை முன்பிருந்த அர்ப்பணிப்பு கட்டுக்கோப்பு நேர்மை துணிச்சலுடன் தொடர்ந்து நடத்தி செல்ல யாருண்டு என்பதே கருத்தாக இருந்தது, சரி நீங்களே சொல்லுங்கள் தடை நீக்கப்படின் புலிகளின் சார்பில் அதனை வழிநடத்த அதே அர்ப்பணிப்புடன் இன்று உங்களால் சுட்டி காட்டக்கூடிய தலைவர்கள், உறுப்பினர்கள் யார்? இந்தியா எதற்காக புலிகளை தடை செய்தது என்பதை நீங்கள் மீண்டும் சரி பார்த்தால் இந்தியா தடையை எடுக்குமா என்பதற்கு உங்களிடமே பதில் இருக்கும். ராஜீவ் ஈழத்தில் செய்தது என்ன என்று நாம் வாதிடலாம் ஆனால் வட இந்திய வெறியர்களும் கட்சிகளும் ஒருபோதும் எமது குரலை செவி சாய்க்கபோவதில்லை,. நான் சாதக பாதகங்கள் பற்றிதான் பேசுகிறேன் தடையை எடுக்ககூடாது என்ற வன்மத்தில் அல்ல. -
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
valavan replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இதில் எனக்கு உடன்பாடு எப்போதுமே உண்டு. புலிகள் அமைப்பின் தடை நீக்கப்பட்டால் புலிகளின் பெயரில் மீண்டும் இயங்க போகிறவர்கள் மிக எளிதாக இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்கு வீழ்வார்கள், ஏனெனில் அப்போதிருந்த இரும்பு கோட்டை இப்போது இல்லை, ஆனானப்பட்ட தலைவன் இருந்தபோதே இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்காக அவர்கள் வலையில் வீழ்ந்த மாத்தையா- கருணா உருவாகியபோது இப்போது எஞ்சிருக்கும் உறுப்பினர்கள் நேர்மை ஆற்றல் எல்லாம் எந்த மூலைக்கு? அவர்கள் நெஞ்சுரம் நேர்மையாக செயல்படுவார்கள் என்று எதை வைத்து எதிர்பார்ப்பது? ஒரு பேச்சுக்கு இந்தியாவில் விடுதலைபுலிகளின் தடை நீக்கப்பட்டாலும், விடுதலைபுலிகள் வைத்திருந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் மாறி மாறி வரும் அரசுகளும் ஒருபோதும் ஏற்று எம் பக்கம் நிற்காது, எந்த காலமும் அவர்கள் தமது பிராந்திய நலன் சார்ந்து இலங்கை அரசுகூடவே நிற்பார்கள். அதுவும் சீனாவா இந்தியாவா இலங்கைக்கு நெருக்கம் என்று காண்பிக்க நடக்கும் தற்கால போட்டியில் எந்தகாலமும் தமிழர்களுக்காகவும் தமிழர் தரப்பில் உறுதியாக நின்ற விடுதலைபுலிகளுக்காகவும் ஒருபோதும் எம் நலனை மைய்யபடுத்தி இயங்கவே மாட்டார்கள். புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கினாலும் இலங்கையில் புலிகள் மீதான தடை இருக்கும்போது எந்த வகையிலும் புலிகள் அமைப்பின் பெயரால் அதன் கொள்கைகளை அரசியலை யாரும் இலங்கையில் தொடர முடியாது. அப்படி அவர்களின் நியாயமான போராட்டத்தை கோரிக்கைகளை தொடர்வதென்றால் சர்வதேச ஆதரவு அழுத்ததுடனேயே தொடர முடியும், அதற்கு சர்வதேசம் முழுவதுமே புலிகளுக்கு தடை இருக்கும்போது எந்த வகையில் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கும் அதன் தொடர்ச்சி அரசியல் செய்வதற்கும் சாத்தியம்? எத்தனை இழப்புகளை சந்தித்திருந்தாலும், எத்தனை வசதிகளை சிங்களவன் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்றுவரை தமிழர்பகுதியின் எந்த மக்களோ போராளிகளோ எமது இயக்கத்தையும் தலைமையையும் குறை சொல்வதே இல்லை, அந்த ஒரு தடை நீக்கம் மட்டும்தான் எப்போதும் நீடிக்கும் நாம் சாகும்வரை. மற்றும்படி அனைத்துமே இன்றுபோல் என்றும் வாழும். -
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் மரணம் ஒன்றேதான், லதா அம்மாவின் கருத்துக்கள் ஞானிகள் சொல்வதுபோல் இருந்தாலும், எதிர்காலத்தில் போகபோறோம் என்றெண்ணி நிகழ்காலத்தில் எவராவது இருப்பதை அனுபவிக்காமல் செத்தால் அந்த வாழ்விலும் ஒரு அர்த்தம் இல்லை. தெரிந்தவர்களின் மரணவிட்டுக்கு போகும்போதுதான் இவ்வளவுதானா வாழ்க்கை என்று ஒரு பயம் வரும், தெரியாதவர்களின் மரணம் கேள்விப்பட்டால் அது ஒரு நாளாந்த செய்திபோல கடந்துவிடும். எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் திருமணம் வாரிசுகள் என்று இல்லாமல் வாழ்வுக்காலம் முடிந்துவிட்டால் எந்த ஆதாரமுமின்றி சூனியம் நிறைந்ததாக போய்விடுகிறது நாம் வாழ்ந்த காலங்கள். இந்தியாவின் இசைகுயில் என்று அனைத்து வசதிகளுடனும் தனிக்காட்டு ராணியாக வாழ்ந்திருந்தாலும் நிஜ குயில்கள்போல் சொந்தமாய் ஒரு கூடில்லாமல் முடிந்து போனது லதா அம்மா சோக வாழ்க்கை.
-
ஏறக்குறைய 95% க்கு மேற்பட்ட தமிழ்மக்கள் சம்பந்தரையும் அவர்போன்ற ஜனநாயககட்சிகள் என்று தம்மை தாமே சொல்லிக்கொள்ளும் தலைவர்களையும் தமது தலைமகள் என்றோ, இவர்களால் எதுவும் முடியும் என்றோ நம்பிக்கை துளியும் இல்லாமல்தான் எம் ஆயுத போராட்டத்தையும் அதனை தலைமை தாங்கி நடத்திய தலைவரையும் ஆதரித்தோம் பூசித்தோம், ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்ததும் எப்படி மீண்டும் அந்த சம்பந்தர் வகையறா அரசியல் தலைவர்கள் எமக்கு ஏதும் செய்யவில்லை என்று ஆதங்கபடுகிறோம் கோபபடுகிறோம்? இயக்கத்தை நேசித்த மனசுக்குள் இவர்களுக்கும் ஒரு ஓரமாய் இடம் கொடுத்திருந்தோமா? அவர்கள் இனத்துக்கு விசுவாசமில்லையென்று வாதிட்டால் இவர்கள் எதாவது செய்திருந்திருக்கலாம் என்று நம்பி மாரடிக்கும் நாம் யாருக்கு விசுவாசமாயிருந்திருக்கிறோம்? தன்னிலை அறிந்து வெக்கப்படவேண்டியது சம்பந்தர் கோஷ்டியா நாங்களா?
-
நிச்சயமாக. சிங்களத்திற்கெதிரான திடகாத்திரமான, கடும் பயிற்சி பெற்ற பெரும் தொகையான போராளிகளை கொண்ட ராணுவ கட்டமைப்பொன்றை முதன் முதலில் உருவாக்கியது உமாமகேஸ்வரனையே சாரும். அக்காலத்தில் போதியளவு நவீன ஆயுதங்களும் பொருளாதார வசதிகளும் இருந்திருந்தால் புளொட் கையினால் சிங்கள ராணுவமும் இலங்கை தேசமும் சின்னாபின்னமாயிருக்கும். இங்கே ரஞ்சித் இணைத்த போராட்ட ஆரம்பகால தொடரை பார்த்தபோது ஆரம்ப நாட்களில் புளொட் போராளிகள் சிங்கள இயந்திரத்திற்கெதிராக நடத்திய துணிகர தாக்குதல்கள், ரவுடிகள் துரோகிகள் களையெடுப்புக்கள், தலைமறைவு வாழ்க்கை, சிங்களத்தால் கைதுக்கள் சித்திரவதைகள் என்று கணிசமான போராட்ட பங்களிப்பை தியாகத்தை எம் மண்ணிற்காக உமா தலைமையிலான புளொட் வழங்கியிருந்தது. பொருளாதார வசதியின்மையும் , இந்தியா புளொட்டின் ஆயுத கப்பலை பறிமுதல் செய்ததும் அதனால் தின்றுவிட்டு தூங்கும் நிலைக்கு ஆயிரக்கணக்கான புளொட்டின் போராளிகள் வந்ததும், ஊர்மிளா விஷயமும் ,புலிகளுடனான மோதல் போக்கும், தனது அமைப்பின் போராளிகள் படுகொலைகளும் புளொட்டின் பாதையை படிப்படியாக மாற்றி பின்னாளில் சோத்து பாசல் என்று கேலி செய்யப்பட்டு முடிவில் சிறு குழுபோலாகி காலமாற்றத்தில் இலங்கை அரசுடனும் சேர்ந்து மாணிக்கதாசன் உபயத்தில் தமிழின படுகொலை அமைப்பாகவும் ஆகி பின்னாளில் தலைமைத்துவத்தையும் படுகொலை செய்து தேய்ந்து மறைந்து போனதை எதுவென்று சொல்ல? ஆனால் இன மீட்புக்காக சிங்கள அரசமைப்பில் வகித்து வந்த அரச உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு அவர்களுக்கெதிராக ஒரு தமிழ் ராணுவத்தை கட்டிமைத்து போராடிய அந்நாளைய உமாமகேஸ்வரன் ஒன்றும் சாதாரணமானவரல்ல, தமிழர் பகுதியின் வீதிக்கு வீதி சிங்கள கூலிபடைகள் நின்ற அக்காலத்தில் சிங்கள தேசத்துக்கு எதிராய் போராட்ட இயந்திரத்தை கட்டியெழுப்பிய அந்நாளைய வீரமிக்க உமாமகேஸ்வரனுக்கு மட்டும் அஞ்சலிகள், அதன் பின்னர் திசைமாறிய உமாமகேஸ்வரனுக்கு அல்ல.
-
ஐரோப்பா வெளிநாட்டவர்களை வெறுப்பதற்கும் வெளியேற்ற ஆசைப்படுவதற்கும் , எனதுநாடு எனக்கே என்று ஆவேசப்படுவதற்கும் 70%மான காரணம் எவனையாவது கொன்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற இனிய மார்க்க இஸ்லாமியர்களே. ஏனைய காரணங்கள் மீதம்.
-
யாழ்வரும்போது ஊர்புதினம் மட்டுமே அதிகமாய் பார்க்கும் வழக்கம் கொண்டவன், ஏனோ சம்பந்தர் போன செய்தியை கவனிக்கவேயில்லை, தற்செயலாக ஒரு இணையதளம் பார்த்தபோது அன்னாரின் இறுதி கிரியை ஏற்பாடு என்றிருந்தது , எப்போடா போனார் என்றிருந்தது, வேலை இடத்திலும் எவரும் இதுபற்றி பேசவில்லை சும்மா சொல்லகூடாது அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலில் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு போயிருக்கிறார் மனிசன். சம்பந்தர் எதுவும் பெற்றுதரவில்லை என்ற மனதாங்கலில் பலர் திட்டினாலும் சிங்களவன் கொடுத்தால்தானே இவர் வாங்க என்ற பரிதாபமும் உண்டு. ஆனாலும் அவன் தரமாட்டான் என்று தெரிந்தும் வாங்கி தருவோம் என்று சொல்லி ஆறு தசாப்தங்களுக்குமேல் ரீல் விட்டுபோட்டு போனதுக்கு திட்டலாம் தவறில்லை. சம்பந்தர் மட்டுமல்ல இன்று ஜனநாயக வழியில் போராடி சிங்களத்திடம் தீர்வு பெற்று தருவோம் என்று பீலாவிடும் அப்பர் , சுந்தரர்,மாணிக்க வாசகர்கள் எல்லாம் காலம் முடியும்வரை சிங்கள பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்படித்தான் கிளம்பி போவார்கள் என்பதில் எந்த குழப்பமும் எப்போதுமே இல்லை.
-
இலங்கை தீவில் சிங்கள பெளத்தர் அல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆகமுடியாது என்ற நிலமை இருந்தும் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்தி கிட்டிபுள்ளு விளையாடுவது ... தனி சிங்களவர்களின் பெரும் ஆதரவோடு வரபோகும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு எப்படி கோத்தபாய ஆட்சி தேர்வு செய்யப்பட்டதோ அதேபோல உங்களை நம்பி நாங்கள் இல்லையென்ற சிங்களவனின் எகத்தாளம் மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும். சிறிதரனுக்கு தெரியாத அரசியலா நமக்கு தெரிந்துவிட போகிறது , ஆனால் சிங்களவர்களின் நடுவில் சிக்கிகொண்டுவிட்ட எமது இனத்தின் அரசியல் சூழலை சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி கையாளவேண்டும் என்பதே ஆதங்கம்
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்பகுதியின் கடல்வள கொள்ளையை ஓரளவாவது தடுக்க வேறு என்னதான் வழி அவர்கள் வசம் இருக்கிறது? காலத்தோடு ஓடுவதை தவிர அவர்கள் கைவசம் ஏதுமில்லை, எம்மீது போர் தொடுத்த இனமென்று அவர்கள் தயவு தேவையில்லை என்று வடதமிழீழ மீனவர்கள் புறக்கணித்தால், இலங்கை கடற்படையும் தமிழர்பகுதிதானே எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று அவர்கள் பாட்டில் இருந்தால் பல ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் நெடுந்தீவு, மணற்காடு, பருத்திதுறை பொலிகண்டி,காங்கேசன்துறை, தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு வலைகளை உலர்த்திவிட்டு சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி புறப்படுவார்கள். -
-
நான் சொன்னது இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள ஆதரவாளர்கள் என்பது, புலிகள் அமைப்பு செயலிழந்த பின்னும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வலைபின்னமைப்பில் உள்ள தீவிர செயற்பாட்டில் உள்ளவர்கள் பற்றியதானது அவர்களும் , புலி ஆதரவாளர்களும் ஒன்றல்ல, உதாரணத்திற்கு புலி ஆதரவாளரான நீங்களும், சிங்களம் கருதிக்கொண்டிருக்கிற இன்னும் உடைபடாத புலம்பெயர் புலிகள் கட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் ஒன்றல்ல. ஆதரவாளர்களை கைது செய்வதென்றால் புலம்பெயர் தேசம் எதுக்கு வடகிழக்கில் கடந்த ஓரிரு வருடங்களில் மாவீரர்நாள் அனுஷ்டித்த மக்களை அங்கேயே சிங்களவன் கைது செய்யலாமே. சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.