Everything posted by Kadancha
-
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
இவர் தானாக வழக்கு போட்டாரா. அல்லது us போடா வைத்ததா , அல்லது uk / பிரான்ஸ் ஏ போட வைத்ததா என்பதே கேள்வி ஆழ்ந்து பார்த்தல், வேறு எவரோ அல்லது எந்த சக்தியின் தூண்டுதலில் போட்ட அறிகுறிகுறிகள் நிறையவே தெரிகிறது. இப்படி உடனடியாக அதிகாலையில், நீதிபதியை நாடும் முறை இருக்கலாம், அனால் பணபலம் இல்லாமல், சட்ட விடயம் அறியாத சாதாரண ஒருவரால் செய்யமுடியாது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இங்கே விபரமாக பதிய நேரம் இல்லை. அனால் எனது அவதானங்கள் சுருக்கமாக (பிரான்ஸ் அதன் இழப்பை சமாளிக்க போடும் படம்.) அனால், இந்தியா ஊடகம் சொல்லும் பில்-15 ஐ சீனர் இயக்கியது என்பது, எவ்வளவு ஏய்க்கட்டும் கதை. அப்படியானால், விமானங்களையும் சீனர் இயக்கியதாக வரும். (அது சீனாவின் பார்வையில் எவ்வளவு ஆபத்தானது, தற்செயலாக தாக்குதல் , விபத்தில் பிடிபட்டால் என்பதும், கொல்லப்பட்டால் , ஒரு தேர்ச்சி பெற்ற விமானியை உருவாக்குவது எவ்வளவ்வு கடினம், செலவு போன்றதும், அதுவும் மட்டுபடுத்தப்பட்ட நடவடிக்கைக்கு என்பதும் ) இரண்டாவதாக, புதிய தொழில்நுட்பம் சீன கொடுத்தது - கொடுத்து இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கினைத்து பயிற்சி எடுத்து பாவிக்க நேரம் போதாது. இப்படி வேறு சிலவற்றிலும் இந்தியா ஊடகங்கள் சொல்வதில் இடைவெளிகள், ஓட்டைகள் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சொல்லாதது - கார்கிலில் கண்டறியப்பட்ட விமானப்படை அமைப்பு அடிப்படையிலான இன்னமும் நிரப்பப்படாத இடைவெளிகள், அமைப்பு அடிப்படையிலான பிரச்சனைகள், மற்றும் அரசியல் / அதிகார பீடம் இணக்கத்துக்கு வந்து முடிவு எடுக்கும் தன்மை வாமனப்படை கொள்வனவு, பயிற்சி போன்றவற்றில் உருவாக்கும் மிக மந்த நிலை போன்றவை. (உ.ம். இந்தியாவிடம் போதிய அளவு AWACS இல்லை, இருப்பது மிகவும் பழையது. பாகிஸ்தானிடம் போதிய அளவும், பிந்திய தொழில்நுட்பம் உள்ள AWACS இருக்கிறது. அதனால் பாகிஸ்தானின் command & control வானில் இருந்து இருக்க கூடிய வாய்ப்புகள், மிகவும் நன்மை ) அனால், முன்பே சொல்லி இருந்தேன் சீன இந்தியாவுக்குள் இருக்கும் படை, தளபாட விநியோகம், நகர்வுகள் போன்றவை பற்றி பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி இறுக்கலாம் என்று. (ஏனெனில், விமானங்கள் ஒரே தளத்தில் இருந்த்து களத்துக்கு அனுபுபடுவத்தில்லை, அதுவும் அந்த நேரத்தில் இந்தியா வடக்கில் இருந்த்து அனுப்பி இருக்காது, ஏனெனில் பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும், அநேகாக தெற்கில் / கிழக்கில் உள்ள தளங்களில் இருந்த்து, பாகிஸ்தானிடமும் கண்காணிப்பு வசதிகள் இருந்தாலும், இந்திய விமானங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வருவதும் , அததற்கு ஏற்றவாறு அதன் விமானங்களை வானில் வைத்து இருக்கும் வியூகத்துக்கு நேரம் வேண்டும்.) சுருக்கமாக , பாகிஸ்தான் விமானப்படையின் / அரசின் / அரசாங்கத்தின் முழு clockwork ஆக வினைத்திறனை கட்டி எழுப்பியதை , அதை களத்தில் நிரூபித்ததை மேற்கும், இந்தியாவும், மேற்கும் மலினப்படுத்துகின்றன.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
முகாம்களில் இருப்பார்கள், , உறவினர் முகவருடன் பணத்துக்காக சேர்ந்து, அந்த உறவினர்கள் தாமும் சென்ற உறவுகளை பின் தொடர்ந்து வருவோம், வர இருப்பிப்பதாக ஆசை / உறுதி மொழி காட்டி, (முகாம்களில் இருக்கும் நிலை அறிந்தும்) உறவினர்களாலேயே ஏமாற்றப்பட்டு அனுப்பப்பட்டு சென்றார்கள். அப்படியான சந்தர்ப்பங்களும் இருக்கிறது. இப்படியாக இந்தியா செல்லவிருந்த, எனது தூரத்து உறவினரால் (அவர் சுத்துமாத்து பேர்வழி) ஒழுங்குபடுத்தப்பட்ட 10-12 பயணங்களை எனது மிககிட்ட உறவும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்து இருக்கிறார்கள். முகாம்களின் நிலையை, அந்த நேரத்தில், எனது கிட்ட உறவு, குடுமபத்துக்கு இருந்த தமிழ்நாட்டில் உள்ள தொடர்பின் வழியாக வாய் வழி அறிந்தே (கொழும்பில் இருந்து கடிதம் வழியாக) எனது கிட்ட உறவினரும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்தனர். அதில் இந்தியாவை உள்ள தொடர்புகள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை, அனால் முகாம்களின் நிலைபற்றியும், வருவது உசிதம் இல்லாதது என்ற தொனியும். அப்போது அப்டி செல்ல இருந்தவர்கள், பயணத்தை கைவிட்டு, சந்தர்ப்பத்தை இழந்து விட்டமோ என்று மனவருத்தம், மற்றும் எனது கிட்ட உறவினர், குடும்பத்துடன் சற்று கடிவாக இருந்தனர், ஆனல், காலம் போக அவர்களுக்கே தெரிந்தது, இலங்கையில் இருந்தது நல்லது என்று. (இதனால் தூரத்து உறவு எனது கிட்ட உறவினரை, என் குடும்பத்தில் தடுத்தவர்களை தாக்க இருப்பதாகவும் அறிந்து, சில முன்னேற்பாடுகளை செய்து இருந்தோம்) பொதுவாக செல்லாதவர்கள் எல்லோரும் இப்பொது நல்ல நிலையில் இருக்கிறார்கள், இடம் பெயர்ந்தாலும். ஏனெனில், அந்த முகாம்களில் வாழ்க்கை தேக்க நிலை (ஏனெனில், தமிழ் நாட்டில் தேவை இருக்கிறது, அவர்களை கடந்தே இவர்களுக்கு எந்த உதவியும்). ராஜீவ் மறைவு மிகவும் நீண்ட காலமாக அவர்களைமுகாம்களுக்கு உள்ளேயே நீண்ட நேரம் முடக்கிவிட்டது. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது, அத்துடன் முகாம் நிர்வகிக்கும் அதிகாரிகளின், சூழவுள்ள சமூகத்தில் இருந்த்தும் இவர்களின் நலிவன நிலையை துர்பிரயோகம் செய்வது போன்ற பலவற்றால் வாய்ப்புகள் இல்லை போன்றவையும். அனால், உயிருக்கு அஞ்சி போகும் போது வேறு தெரிவில்லை. அனால்,இதில் பெருமளவு மக்கள் உயிருக்கு அஞ்சி மட்டும் போலில்லை. அல்லது உயிர் ஆபத்து 2ம் - 3ம் பட்ச காரணிகள். இந்த மக்களுக்கு தமிழ்நாடு கொடுத்ததையும், கொடுப்பதையும் என்றுமே நன்றி மறக்க கூடாது .
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இன்னும் சற்று விளக்கமாக, வெளிப்படையாக அவற்றுக்கு தொடர்பு இல்லாத தோற்றம். அதை தான் நீங்கள் சொல்வது ஆகவே உங்களுக்கு அடியும் தெரியவில்லை, நுனியும் தெரியவில்லை என்பது வெளிப்படை. அனால், அப்படித்தான் வெளிநாட்டு, அரசியல், இராணுவ நகர்வுகள் , அடியும் தெரியாது, நுனியும் தெரியாது, அப்படி தெரிந்து வடாக கூடாது (அதாவது செய்பவரின் நோக்கம், போக்கு ) என்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டது. இதை கூட அறியாமல், ChatGPT ஐ நடச்சொல்வது. (குறிப்பு: சொல்லியவற்றை Chatgpt இடம் கொடுத்து, அதன் முடிவு என்ன என்பதையும், அந்த முடியின் அடிப்படியில் உங்கள் சிந்தனையால் அடைந்த முடிவை சொல்லலாம்.)
-
பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!
கனடா உண்மையான இதய சுத்தியுடன் இனப்படுகொலை நினைவகத்தை அமைத்து இருந்த்தால், கனடா மத்திய அரசு இதை பற்றி சிறிலங்கா கதை எடுப்பதை கூட நிராகரிக்க வேண்டும்,
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
முதலில் யாழ்ப்பாணம் தமிழீழம் அல்ல. அனால், அப்படி நடந்த்து இருந்தால் அது வரலாற்றில் பெரிய ஒரு சாதனை தான். சர்வதேச நியதி, அரசு- அரசு சாரா குழு என்ற அடிப்படையில், அரச படைகளை முறியடித்து வடக்கின் பெரு நகரத்தை கைப்பற்றுவது புலிகளின் நிலையை நகரம் / மாகாணம் அளவில் அரச மட்டத்துக்கு உயர்த்தி இருக்கும். அனால், ஒசாமா பின் லாடன் தன புகலிகள் அழிவுக்கு (ஆக குறைந்தது பகுதி ) காரணம் என்றால் - நீங்கள் அதை சொல்ல வருவதாகவே எனக்கு புரிகிறது. மேற்கு 2001 - 2002 இல் UN பாதுகாப்பு சபையில் இல் அரசு சாரா குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு இருக்கும் பாதுகாப்பை நீக்கி தீர்மானம் இயற்றிவிட்டும், ஏன் ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) இருக்கும் மேற்கு எதிர் அரசுசாரா குழுக்களை அழிக்க மேற்கு / us முயலவில்லை? மறுவளமாக, ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) மற்றும் அதனை அண்டிய வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில அரசுக்களே கைவைக்கப்பட்டது? மத்திய கிழக்கில், ஆக குறைந்தது, (அந்த தீர்மான தொனி அடிப்படையில்), நாடுகள் தாது அரச தலைமைள் குறிவைக் கப்பட்டது (சதாம், கடாபி,அசாத்) போன்றோர் இதில் ஈரானும் உள்ளடக்கம், அனால், மற்றவர்களின் அனுபவத்தில் ஈரான் மிகவும் பெரியது, சண்டைக்கு போய் இலக்குகள் எட்டாமல் காயத்துடன் வெளிக்கிட வேண்டி வரும் என்ற முடிவில், ஈரான் பின்போட்டு, இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது. அனால், ஆப்பிரிக்காவில் குறிவைக்கப்பட்டது அரசு சாரா குழுக்கள். ஏன்? இந்த பாதுகாப்பு சபை தீர்மானம் அடிப்படையிலேயே, புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் நீதியான போர். மேற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது (மறைமுக நேரடி ஈடுபாட்டுடன்). அதில் இநதியாவின் நோக்கமும், இலக்கும் மேட்ற்கு / us உடன் ஒத்து போனது. (இந்த தீர்மானம் ஒரு முக்கிய காரணம் இனப்படுகொலை என்பது கருத்தில் எடுக்கப்படாமல், அப்படி சொல்லப்படும் போது மேடற்கு அரசுக்களால் உள்நாட்டு சட்ட்டதை வைத்து, கடும்போக்காளர் என்ற முத்திரை குத்தி மூடப்படுவதற்கும் (குறிப்பாக US, UK ஆல்). இலங்கைக்கு UK சொல்லுவதே பொதுவாக கருத்தில் எடுக்கப்படும் மேற்கால், குறிப்பாக பாதுகாப்பு சபையில். ஏனெனில், பிரித்தானிய காலனித்துவ அகற்றத்தில் சிறிலங்கா அரசு உருவாகியது.) மேலே சொன்னது வெளித்தோற்றத்தில் தனித்தவை அல்லது தொட்டம் தொடமானவை , 2 கண்டங்கள், மூன்று புவியியல் பிரதேசங்களில். அனால், அவற்றுக்கு தொடர்பு இருக்கிறது. இவை முக்கியமானவை, மேலும் சில விடயங்களும் இருக்கிறது அப்படி விளங்காதவர்களே கொசுக்கடி என்போர். அதில் நீங்களும் ஒன்று. ஒன்றும் புதுமை இல்லை.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்திய சட்டத்தை பார்க்கும்போது, நீண்டகாலத்தில் சரி என்று வரும். இந்தியாவில் ஈழத்தமிழர் அகதியாக குடியேறி குடியுரிமை கோரலாம் என்றால், இப்பொது இருப்பதிலும் பார்க்க எம் சனத்தொகை குறைந்து இருக்கும். அத்துடன் சிங்களம் எம் சனஹோக்கையை குறைக்க எத்தனிப்பதும். (1983 இல் பிரித்தானிய open visa கொடுத்த போது, சிங்களம் உள்ளுக்குள் அரேவேற்றது.1990 களில் சிங்களம் பார்த்தும் பாராமல், காசும் வருகிறது முகவர்களால் என்று, உண்மையில் திறந்த்து விட்டது. சனத்தொகை குறைப்புக்கு.) ஆ னல் , நாங்கள் மலையகத் தமிழரை (அந்த நேரத்தில்) வேறுபடுத்தி கொண்டு, இந்தியா அவர்களை ஏற்றுக்கொண்டது பிழை என்கிறோம். அதாவது சனத்தொகையாக தேவை , எமது நலனுக்கு எதிராகவும் இருப்பதால். அனால் ஈழத்தமிழருக்கு வரும் போது இந்தியா ஏற்கவேண்டும் என்கிறோம். இந்திய சட்டத்தை வெளியில் பார்க்கும் போது பாகுபாடு தன்மை இருப்பதாக தோன்றினாலும் , அதன் நோக்கம் நன்மைக்கே, ஆழ்ந்து (வரலாற்றுடன்) பார்க்கும் போது அப்படி இல்லை. (இது ஏற்கனவே சென்றவர்களை பாதிக்கிறது என்பது உண்மை) இந்தியாவுடன் நில எல்லையை கொண்ட நடுகல் முஸ்லிம் நாடுகள். திபெத் பௌத்தம் (மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவமான வஜ்ராயண பௌத்தம், ஆனால் அதில் தேரவாத அம்சங்களும் இருக்கிறது. ) திபெத்தில் சீன வெளிக்கிட விடாது. அத்துடன், சீன திபெத் இல் அதனோடு இணக்கங்க கூடிய லாமா என்றால் பௌத்தத்துக்கு உண்மையில் விருத்தி செய்கிறது. (ஏனெனில் சீனாவில் ஏனெனில் சீனாவில் கம்யூனிச, அ தாவது cpc ஆட்சிக்கு வந்த போதே சமயம் ( அதாவது பௌத்தம் உட்பட , கிறிஸ்தவமும் சிறுபான்மையாக இருந்தது ) உத்தியோகபூர்வமாக இல்லாமல் செய்யப்பட்டது, அனால், வரலாற்று அடிப்படையில் அது பௌத்தம் , அதாவது ஹான் பௌத்தம். இதுவும் மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவம. சீன வாழ்கை, அரச தத்துவ அம்ஸங்களான தாவோஸ்ம் (Taoism), கொன்பியூசிநிஸ்ம் (Confucianism) அம்ஸங்கள் உள்ளடக்கியது. சீனாவில் பௌத்தமே மிகப்பெரிய நிறுனமயப்பட்ட சமயம்.) (மாறாக, சிங்களம் திறந்து விடும், இப்போதும் சிங்களம் இப்போதும் சொல்வது அது தானே. தமிழ்நாடே உங்கள் தாயகம் அங்கு செல்லுங்கள். இது சிங்களத்துக்கு சிறுவயதில் இருந்தே மகாவம்சம் வழியாக ஊட்டப்படுவது). மியன்மார் முஸ்லீம் இன் வரலாறு - பெங்காலிகள் என்பதில் இருந்து அராக்கன் இராகிய பூர்வீக குடிகள், அதாவது ராக்கின் பிரதேச பூர்வீகம். அத்துடன் அந்த பிராந்தியத்தில் 2 முஸ்லீம் நாடுகள். பாகிஸ்தான் (UN கோட்பாடே அந்த நேரத்தில் (பாகிஸ்தான்) முஸ்லிகளுக்கு, பெரும்பான்மை இந்து நிலத்தில் அரசு. இதே கோட்பாடு இஸ்ரேல் க்கும், யூதருக்கு பெரும்பான்மை முஸ்லீம் நிலத்தில் அரசு. சொல்லப்படும் வரலாறை கருத்தில் எடுக்கவில்லை 2 க்கும் UN. இதனால் தான் பாகிஸ்தான், இஸ்ரெல் UN இல் மிகவும் நெருங்கிய காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்படி வரலாற்றை எடுத்து இருந்தால் UN இந்த 2 அரசுகளையும் உருவாக்கி இருக்க முடியாது. பாகிஸ்தானில் இஸ்லாம் பின்பு வந்தது. இஸ்ரேல் க்கு , விவிலியபடியே Arabs ஆபிரகாமின் முதல் பிள்ளை Ishmael இன் அடிகள், பலஸ்தீனியர் ஒரு அரபி குழுமம், அரசு கொடுக்க முடியாது என்று வந்து இருக்கும். இதை அறிந்தே மேற்கு, தென்னமெரிக்க நாடுகள் (எல்லாமே விவிலிய அடிப்படையில் சமயம்) அந்த நேரத்தில் வரலாற்றை தவிர்த்து, பெரும்பான்மை நிலத்தில், சிறுபான்மை பாதுகாப்புக்கு சிறுபான்மைக்கு அரசு என்ற கோட்பாட்டை வைத்தது. சிலர் இங்கு தெரியாமல் கதைப்பது). பங்களாதேஷ் 77 இல் சமய சார்பு அற்ற பன்முக தன்மை (secularism) இராணுவ சட்டத்தின் கீழ் யாப்பில் இருந்து நீக்கி, பின் 88 இல் இஸ்லாமை அரச மதம் ஆக்கியது. அதில் இருந்து முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மைக்கு - இதுவும் சுலபம் அல்ல - முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மை என்று நிரூபிக்க வேண்டும். எவ்வளவு கடினம் அகதியாக வரும் போது - அநேகமாக முடியாது. உ.ம். பாகிஸ்தானில் இருக்கும் மிகவும் சிறிய தமிழ் சமூகம் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள். முஸ்லீம் என்று விட்டால் - பொருளாதார அகதிகள் மற்றும் தீவிரவாத, புலனைக்கு அபைப்பு ஊடுருவல் சாத்திய கூறுகள். முஸ்லிகளுக்கு முஸ்லீம் நாட்டில் துன்புறுத்தல் (persecution) என்று எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இதில் எல்லா பக்கத்தையும் பார்க்க வேண்டும்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
ஈழத்தமிழரை பொறுத்தவரை இந்திய அரசின் பார்வை ராஜீவுக் மறைவுக்கு முன், ராஜீவ் மறைவுக்கு பின் என்றும் வேறுபட்ட பார்வைகள். இந்திய அரசில் ஈழத்தமிழர் எந்த விடயத்திலும், வெளியில் சொல்லாவிட்டாலும், தேசிய பாதுகாப்பு கோணம் இருக்கிறது எந்த முடிவுகளிலும், தனிநபருக்கோ, குழுவுக்கோ. (எங்கள் தேசிய தலைமை ஒன்றுக்கு அப்படி ஒன்று நடந்து இருந்தால் ...? மற்றவர்களின் நிலையில் இருந்தும் அணுகுமுறையை சிந்திக்க வேண்டும்.) இந்த வழக்கு இந்திய அரசின் முடிவுக்கு எதிராக தானே. இந்திய அரச சார்பில் என்ன சத்திய கடுதாசி (affidavit) கொடுக்கப்பட்டதோ தெரியாது. (அது பொதுக எந்த அரசின் உரிமையும், வெளியில் சொல்லத் தேவை இல்லை, குறிப்பாக இன்ஹியா உச்ச நீதி மன்றத்தில்) . அதுடன் இவரின் பின்னணியும் இந்த , அதட்டல், பரிகசிக்கும் தொனி அரசு கொடுத்த சத்திய கடுதாசியால் வந்ததாக இருக்கலாம் அனால், சட்டங்களின் பிரயோகம் சரியாக இருக்கும், (உச்ச) நீதிமன்றம் என்பதால். இதில் வருத்தம் தான், இங்கு பலர் தனிமனித வழக்கின் முடிவை, ஈழத்தமிழர் தேச நலனுடன் ஒன்றாக்குவது., இது சரி அல்ல. மேற்கு நாடுகளும், தனிமனித ஈழத்தமிழர் அடைகலத்தை நிராகரிக்கின்றன,
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இதில் பாவிக்கப்பட்டு இருக்கும் மொழி - சத்திரம் அல்ல என்பது உண்மையில் வலி என்றாலும், விடயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டு இருப்பது. அதட்டும், பரிகசிக்கும் தொனியும். இப்படியான மொழி வேறு எந்த அடைக்கலம் கேட்டவர்களுக்கு பாவிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். (மேற்கில் அடைக்கலம் நிராகரிக்கப்படும் எவருக்கும் தொனி ஒன்று - எப்போதும் தனிமனித மரியாதையை பாதிக்காமல், முடிவு எவ்வளவு கடினமாக இருப்பினும்). முன்பு சொல்லி இருந்தேன் இந்தியாவின் சனநாயகம் மேற்கு போன்றது இல்லை. அப்படியான தோற்றமே இருக்கிறது. உண்மையில், ஒரு அதிகாரபீடம் முடிவு எடுத்த போலவே நீதிபதிகளின் அணுகுமுறை, தொனி இருக்கிறது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சர்வதேசம் என்ன சத்திரமா? மற்றவை பற்றி சொல்ல தேவை இல்லை உங்கள் அறிவு (சிந்திப்பது பின்) எதிர்பார்த்தது. இது உண்மை என்றால், சிங்களவர் சிந்திக்க தெரிந்தவார்கள் தானே. அனால் , நான் அது முற்றிலும் உண்மை என்று நம்பவில்லை. புலிகளும் அப்படி நம்பவில்லை. உங்களை போன்றோர் தான் இந்த கதை.
-
சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
அந்த நேரத்து இராச்சிய (மக்கள்) நலனுக்காகா தனயனை கூட சிரச்சேதம் செய்யத் தயங்காத செகராசசேகரனே, நீ என்றும் வாழி. அத்துடன், உள்ளே குளறுபடி, குடும்பத்தில் மர்ம இறப்புக்கள், கொலைகள் மூலம் இராச்சியத்தை அடைந்தாலும், போர்த்துக்கேயரால் பிடிக்கப்பட்டு ஆசை காட்டினாலும் மசியாத சங்கிலிக்கு (சங்கிலி குமாரன்), இறுதிவரை இராசியத்தை எழுதி கொடுக்காது, போர்த்துக்கேயரால் சிரச்சேதம் செய்யப்பட்ட சங்கிலியே, நீ என்றும் வாழி. ஆயினும், பட்டது ராணி, போர்த்துக்கேயரின் போலி உறுதிமொழிகளை நம்பி, மன்னனை காப்பாற்றும் நோக்கில், பழைய நல்லூரை போர்த்துக்கேயரிடம் எழுதி கொடுத்துவிட்டார். இராச்சியம் சரணடைந்தது என்ற எந்த ஆவணமும் (treaty) போர்த்துகேயரிடம் இல்லை. இதனால் தான் போர்த்துக்கேயர் அரச வம்ச சந்ததிகளை குடும்ப வாழ்க்கை தடுத்து, பிரம்மச்சாரிய வாழ்க்கை கொடுத்தனர்
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?!
உண்மையில் சிவசங்கர் அப்படி மணிக்கட்டு பகுதியை கீறி இரத்தத்தால் திலகம் இடும் போது மயங்கிவிட்டார். (அதில் வேறு சிலரும் அப்படி மணிக்கட்டை கீறி இரத்தத்தால் திலகம் இட்டனர்.) அதனாலேயே பொட்டு என்ற பெயர் வந்தது. சில வரலாறுகளை இபோதைக்கு அமைதியாக க விடுவது நல்லது. ஜெயராஜ் க்கு தெரியாததும் நல்லது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எதுவென்றாலும் நான் சொல்வது எமது சொந்த நலனில் இருந்து. இந்தியா உடைந்து எமக்கு தீர்வு / தனிநாடு வரும் என்பது - இதை என்னவென்று சொல்வது - இதை விட மாலைக்கனவு யதார்த்தமாக இருக்கும். எம்மிடம் ஆயுத பலம் இருந்தால் அதை ஓரளவு ஏற்காலம் (தமிழ் ந்நாட்டில் இருக்கும் மனித வலுவையும், தொழில்நுட்ப, உற்பத்தி வளத்தையும் இருபகுதியும் சேர்ந்து திரட்டலாம் என்று. இதன் உதாரணமான சமகால வரலாற்றை இப்போதைக்கு சொல்லாமல் விடுவது நல்லது.) சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் மிகவும் ஏற்றதும், உற்ற நிலையும் இந்தியா உடைவது - சாதாரண புவியியலை பார்த்தே மிகவும் இலகுவாக எந்த ராஜதந்திரி, பாதுகாப்பு கொள்கைவகுப்பவர்கள். பொருளாதார கொள்கை வாங்குபவர்கள் போன்றவர்கள் அந்த முடிவை அடைவார்கள். ஏனெனில் அவர்கள் சிந்திப்பது, இயங்குவது யதார்த்தின் அடிப்படையில். (உடையும் போது தமிழ்நாடும் எப்படி இருக்கும் என்பது ஏனெனில் ஆயுத பலம் இல்லை.) தெட்றக்கில், தேசஅரசு ஆயுதபாலமும், பயிற்றசையும் கொண்ட ஒரேயொரு அரசு சிறிலங்கா என்பதும். எல்லாற்றையும் தண்டி இந்திய உடைகிறது என்றால், முதலில் மேற்கு பாதுகாப்பது இலங்கை. சீன கூட இலங்கைக்கு எந்த விதத்திலும் பிரிவு வர கூடாது என்பதில். அது இலகுவாக செய்யக்கூடியதும். அந்த பகுத்தியில் இருக்கும் இரு நிலத்திணிவுகள் ஒன்று இலங்கை (ராஜதந்தியா மொழியில் நிலையான விமானந்தாங்கிகள், ஒன்று தாள்கிறது என்றால், மற்றதை எந்த அரசும் பாதுகாக்கும்) வரலாற்றிலும், இலங்கைத்தீவுக்கு வடக்கே திரண்ட வளம், பலம் ஒன்றில் இலங்கைத்தீவை பிரித்தது, அல்லது ஒன்றாகியது, அல்லது அழுத்தத்தை பிரயோகித்தது. அதே போல இலங்கைத்தீவில் பாரிய அரச மாற்றங்களை செய்ய முனையும் பகுதிகள் இப்பொது இந்தியாவை, வரலாற்றில் வடக்கில் திரண்ட அரச பலம் , வளத்தை கொண்டே செய்தன, செகின்றன, விடுதலைப் புலிகள் கூட அரசு சாரா அமைப்பாக வரலாற்றில் விதிவிலக்கான ஆயுத பலத்தை கொண்டு இருந்த்தும், இந்தியாவை வேண்டி நின்றனர் என்பதும். (உலகத்தில் ஆங்காங்கே அரசுக்கள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் திரள, முயல்கின்றன, இயற்கையான புவியியலாக இணைந்து இருந்தால் மேலதிக நன்மை)
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
எமக்கு போராடுவதை நாமே செய்ய வேண்டும். ஆனால், இந்திய அதிகார பீடங்கலில் இருக்கும் தேவை இல்லாத பயமான, இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் பிறிம்பான ( சுய) அதிகார அரச அதிதிகார பீடம் அமைவது ஒரு போதும். British Raj princely states நிலைக்கு கொண்டுவராது என்று அவர்களின் மதியில் இருக்கும் தேவை இல்லாத இருளை, பயத்தை தெடர்ந்து, பரந்த அதிகார பீடங்களுக்கு மீளமீள எடுத்து சொல்லி, இலங்கைத்தீவின் வடகிழக்கில்அரச அதிதிகார பீடம் உருவாக இந்திய அரசில் ஏது நிலையை தோற்றுவிக்க நீங்கள் முற்சி செய்யுங்கள். இது உங்களின் அரசியலை முன்னெடுக்கவும் உதவும் - ஒரு அட்டவணை அடிப்படையில் - ஒவொரு மாதமும் எதாவது 1 மத்திய அதிகார பீடம் 1 வேறு மாநில அதிகார பீடம் என்று சந்திப்பு , தமிழ் நாடு விடயங்களையும் சேர்த்து. உங்கள் சந்திப்பில் அரசியல் வாதிகளையும் சந்திப்பது (ஏனெனில் அப்படி பாரிய மாற்றத்துக்கு இரு பகுதியின் இணக்கமும் அவசியம் - அரசியல்வாதிகள், அதிகார பீடங்கள்) (இப்படியே இந்தியாவில் மிலிந்த மொரகொட செய்தது, தமிழருக்கு ஓன்றும் கொடுக்க கூடாது என்று. இந்தியா பிரிந்து இடும் என்று)
-
US loses last perfect credit rating amid rising debt
US loses last perfect credit rating amid rising debt Image source,Getty Images Image caption, Moody's warned in 2023 that the US' triple-A rating was at risk Ali Abbas Ahmadi BBC News Published 16 May 2025 Updated 17 May 2025 The US has lost its last perfect credit rating, as influential ratings firm Moody's expressed concern over the government's ability to pay back its debt. In lowering the US rating from 'AAA' to 'Aa1', Moody's noted that successive US administrations had failed to reverse ballooning deficits and interest costs. A triple-A rating signifies a country's highest possible credit reliability, and indicates it is considered to be in very good financial health with a strong capacity to repay its debts. Moody's warned in 2023 the US triple-A rating was at risk. Fitch Ratings downgraded the US in 2023 and S&P Global Ratings did so in 2011. Moody's held a perfect credit rating for the US since 1917. The downgrade "reflects the increase over more than a decade in government debt and interest payment ratios to levels that are significantly higher than similarly rated sovereigns," Moody's said in the statement. In a statement, the White House said it was "focused on fixing Biden's mess", while taking a swipe at Moody's. "If Moody's had any credibility," White House spokesman Kush Desai said, "they would not have stayed silent as the fiscal disaster of the past four years unfolded." A lower credit rating means countries are more likely to default on their sovereign debt, and generally face higher borrowing costs. Moody's maintained that the US "retains exceptional credit strengths such as size, resilience and dynamism and the continued role of the US dollar as the global reserve currency". The firm said it expects federal debt to increase to around 134% of gross domestic product (GDP) by 2035, up from 98% last year. GDP is a measure of all the economic activity of companies, governments, and people in a country. The BBC has reached out to the US Department of Treasury for comment. The downgrade came on the same day as Trump's landmark spending bill suffered a setback in Congress. Trump's so-called "big, beautiful bill" failed to pass the House Budget Committee, with some Republicans voting against it. Figures showed the US economy shrank in the first three months of the year as government spending fell and imports surged due to firms racing to get goods into the country ahead of tariffs. The economy contracted at an annual rate of 0.3%, a sharp downturn after growth of 2.4% in the previous quarter, the Commerce Department said.
-
தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா
அமெரிக்காவின் சொல்லை கேட்டு சீனாவாய் மேற்கு நாடுகள் விண்வெளி ஆய்வில் விலக்கி வைத்தன. அதெ போல செய்ம்மதி (GPS) துறையிலும். இப்போது தான் தெரிகிறது, சீன விண்வெளித்துறையில் நிகர், சிலவற்றில் மேற்கத்தி விட வளர்ச்சி, சிலவற்றில் சற்றுப் பின். ஆனால், விண்எளிதுறை வளர்த்தி, மற்ற துறைகள், குறிப்பாக வான்வெளி யுத்த ஆயுதங்களில் வளர்த்திக்கு உதவும், உந்தி தள்ளும் போன்ற தன்மை இருக்கிறது. அண்மையில் நடந்த இந்திய - பாகிஸ்தான் தாக்குதலில் சீன ஆயுதங்கள் வினைத்திறன் கூட கொண்டுஇருந்தது, இந்த விண்வெளிதுறை வளர்த்தியின் ஒரு மிகச் சிறு பகுதி நீட்சி. முன்பு வேறு திரியில் சொன்னது: மேற்கை தொழிநுட்பத்தில், விஞ்ஞானத்தில் மற்றும் பல்வேறு துறைகளிலும் விஞ்ச வேண்டும் என்ற அவாவும், அதுக்கு வேண்டிய மதி, மன, பணம் மற்றும் வளம் கொண்ட அல்லது பெறக்கூடிய மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட அரசை மேற்கு முதன்முறையாக வரலாற்றில் காண்கிறது. இதனால் தான் சீனாவை எதோ ஒரு வழியில் கட்டுப்படுத்த வேண்டும் என்று மேற்கு முனைவது, அது சீனாவை குழப்புவதால் கூட செய்யப்படலாம் என்பதே மேற்கின் முனைப்பு.
-
இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமை குறித்து ‘திருப்தியடைகின்றேன்’- பிரிட்டிஸ் பிரதமர்'
அமெரிக்கா கொள்கையினால், புலிகள் அழிப்பு யுத்தத்தை (அடு இனப்படுகொலையில் முடியலாம் என்பதை தெரிந்தும்) ஆதரித்த கனடா, ஆக குறைந்தது மாகாணம் மட்டத்தில் இனப்படுக்கொலை நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறது. அனால், எல்லாம் தெரிந்த UK, தனித்த இராணுவ அதிகாரிகள் , அதுவும் (தனித்த, குளமும் அல்ல) )மனித உரிமையை மீறியதாக பேய்க்கட்டுவது. ஏனெனில் US, UK இவை இரண்டும், அந்த அழிப்பில் பங்கெடுத்து இருப்பது, இனப்படுகொலை நடக்கிறது என்பதை தெரிந்தும்.
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்விற்கு ஆதரவு - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே
இவர்களுக்கு நன்றி. தெளிவான தீர்வை சொல்வதத்திற்கு. அதத்துடன் எம்மவர்கள் UN இல் இருக்கும் தருஸ்மன் அறிக்கையையும் இவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு அதில் சொல்லப்பட்டு இருப்பதையும் உள்வாங்கவேண்டும் என்பதையும் வலியுறுத்த சொல்லி. இந்தோனேசிய தருஸ்மான் அந்த பிராந்தியத்தவர், எல்லாத்துக்கும் UN ஐ தூக்கி பிடிக்கும் கிந்தியா வேண்டும் என்று தருஸ்மன் அறிக்கையை புறக்கணிக்கிறது. காரணம் வெளிப்படை, தருஸ்மன் அறிக்கையே வெளிப்படையாக சொல்கிறது, தீர்வானது சிறிலங்கா அரசில் இருந்து தனித்த தீர்வாக இருக்கவேண்டும் என்று (அப்படி பொருள்பட).
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இவ்வளவும் தான் உங்களின் விளக்கம் - முன்பே எதிர்பார்த்தது, எதிர் கூறியது. அனால் , நீங்கள் சொல்லியது, புலிகள் 2ம் தெரிவை கையில் எடுத்ததாக. புலிகளுக்கு உள்ள தெரிவு அது ஒன்றுதான் என்றே நான் சொன்னது நீங்களாவே goal போட்டதற்கு நன்றி .
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இவைகளை பற்றி நான் சொல்லவவில்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எந்த (நீங்கள் பிழையாக கருதும்) பிழைகள் விடாமல் இருந்தாலும், 2005 வரலாற்று வாய்ப்பு மூடப்பட்ட பின் புலிகளுக்கு இருந்தது 2 தெரிவு : 1. ஆயுதத்தை கைவிட்டு சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது அல்லது 2. அழிக்கபடுவதை எதிர்ப்பது (இதை புலிகள் செய்தது) வேறு எதாவது தெரிவுகள் உருவாக்குவாதற்கு புலிகள் சிறிலங்கா அரசை விட மிகப் பெரிய சக்தியாக அல்லது அழிவை உருவாக்கும் சோதிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டதாக இருந்து இருக்கவேண்டும்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என் பெயர் இருப்பதால், புலிகளின் அறிக்கையை நானா விட்டேன்? நான் சொல்வது உங்களின் அறிவு, புரிதல் மட்டத்துக்கு கொசு தொல்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த திரியில் நீங்கள் செய்வது இது தான். சும்மா (விளல்) வாய்ச்சொல்லில் வீரரடி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ராஜேச்வ காந்தி மூக்கை நுழைத்து, 10 - 15 வருடங்கள் பின் தான் புலிகள் அவர்கலின் அதி கூடிய நிலையை அடைந்து இருந்தனர். உங்களுக்கு, இங்கு இருப்போரில் கணிசமானவர்களுக்கு ஏன் புலிகளும் (தமிழீழமும்) மூடப்பட்டார்கள் என்பது இப்போதும் புரியாத, விளங்காத புதிர். ராஜீவுக்கு ஏதும் நடக்காமல் இருந்தாலும் அது நடந்து இருக்கும் (சில வேளைகளில் கூடிய காலம் எடுத்து, அழிவு உக்கிரம், செறிவு குறைவாக இருந்து இருக்கலாம்). இது கூட தெரியாது. 2005 இலேயே வரலாற்று வாய்ப்பு மூடப்பட்டது. எஞ்சி இருந்தது - புலிகள் ஆயுதத்தை கைவிட்டு , சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது, அல்லது புலிகள் அழிவை எதிர்கொள்வது. புலிகள் இயங்கிய விதம், கொள்கையால் புலிகளுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு அழிக்கப்படுவதை ஆயுத வழியில் எதிர்ப்பது. புலிகளே தாம் அழிக்கப்படுவார்கள் என்று அறிக்கை விட்டும், சும்மா வாய்க்கு வந்தபடி கதைப்பது. புலிகளில் அறிக்கை சொல்லாமல் சொல்லியது "நாம் அழிக்கப்பட போகிறோம், கொள்கையை கைவிடாமல் அழிப்பதை எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை." (புலிகளின் அறிக்கையை எத்தனை பேர் வாசித்து ஆய்வது - உங்களால் செய்ய முடியாது அது நிச்சயம்)
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இலங்கைதீவில் உள்ள தமிழ் இளம் சமூகம் சிறிலங்காகொடியை தேசிய கொடி என்று அர்த்தபூர்வமாக் அழைக்கிறது. இந்தியாவில் சொல்ல தேவை இல்லை.