Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1641
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Everything posted by Kavi arunasalam

  1. இரண்டு பேரும் டிறேஷ்டனில் எந்தப் பக்கம் நின்றீர்களோ தெரியவில்லை. ஒருவேளை வீட்டில் உசாராகித் தடை போட்டு விட்டார்களோ தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று linkஐ அனுப்பி இருக்கிறேன். https://www.bild.de/video/clip/dresden-regional/nippel-alarm-in-dresden-oben-ohne-demo-durch-die-innenstadt-84533294.bild.html
  2. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இத்தாலி கலாச்சார மந்திரி கெனாரோ சங்கியுலியானோ பார்வைக்கும் வந்து சேர்ந்தது. உலகப் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு புராதன கட்டிடத்தில் கிறுக்குவது அநாகரிகமும் அவமதிப்பானதுமாகும் என அவர் tweeter இல் பதிய, பிரச்சினை கிளம்ப ஆரம்பித்து விட்டது. பழமை வாய்ந்த கொலோசியமில் கிறுக்கியதற்காக அந்த இளைஞனிடம் இருந்து பல ஆயிரம் யூரோக்கள் வரை தண்டனையாக அறவிடப்படலாம் அல்லது குறைந்தது ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன. எது எப்படியோ அந்த இளைஞன் எழுதிய “Ivan+Hayley” பெயர்கள் அங்கே கல்லில் இருக்கத்தான் போகின்றன. ஆனால் இந்த அமளியில் அவனின் காதலி Hayley அவனுடன் இருப்பாளா?
  3. கடலில் விழுந்த சிறுவனையும் அவனைக் காப்பாற்ற கடலில் குதித்த தாயையும் வெற்றிகரமாக மீட்டு அவர்களை சுவீடன் Karlskrona மருத்துவமனையில் NATOவில் பயிற்சி மேற்கொண்டிருந்த யேர்மனிய படைவீரர்கள் நேற்று சேர்த்திருந்தார்கள். ஆனால் மருத்துவமனையில், போலந்து நாட்டைச் சேர்ந்த தாயும்(38) மகனும்(7) இறந்து விட்டதாக சோகமான செய்தி இன்று (30.06.2023) மதியம் வந்திருக்கிறது.
  4. இரண்டு பேரும் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.
  5. “அதிகமான மக்கள் குறிப்பாக மேற்குலக நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு முக்கியமான வேலையை தவறாகச் செய்து கொண்டு வருகிறார்கள்” இப்படி சமூக வலைத்தளத்தினூடாகச் சொல்லி அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணர். பிரிட்டிஷ் சுகாதாரத் திணைக்களத்தில் சத்திரச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் வைத்தியர் கரண் ராஜன், தரை மட்டத்தில் உள்ள கழிப்பறையில்தான் உண்மையில் அற்புதமான ஒரு குவியலைக் காண முடியும் என்றும் இந்த நிலை சீனா முதல் பாகிஸ்தான் வரையிலான ஆசிய நாடுகளில்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார். குந்தி இருப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம் , ஆனால் இது மிக வேகமாக மலத்தை வெளியேற்ற உகந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட உதாரணமாக இது மூல நோய் ஏற்படும் அபாயத்தைக் கூடத் தடுக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மலம் கழிக்க இருக்கும் போது நீங்கள் இருக்கும் கோணங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் வயிறு மற்றும் தொடைகளுக்கு இடையே உள்ள கோணம் முடிந்தளவுக்கு குறைந்தளவாக இருப்பது நல்லது. குந்தி இருக்கும் போது மலக்குடல் தசை தளர்வடைவதால் மலம் கழிப்பது எளிதாக்கப்படுகிறது. மேலும் மலம் கழிக்கும் நிலையில் முன்னோக்கி சாய்ந்து தொடை மற்றும் உடற்பகுதிக்கு இடையே உள்ள கோணத்தை குறைப்பது உகந்தது எனக் குறிப்பிடும் வைத்திய நிபுணர் கரண் ராஜன், இப்பொழுது நடைமுறையில் இருக்கும், இருக்கையில் இருந்த வண்ணம் மலம் கழிக்கும் முறையைக் கடைப்பிடிப்பவர்கள், தங்கள் இடுப்புக்கு மேலே முழங்கால் வரும் வகையில் உயரமானதொரு பொருளை வைத்து அதில் கால்களை வைத்தபடி அமர்ந்தால் மலம் கழிப்பது இலகுவாகும் என்றும் பரிந்துரைக்கிறார். https://www.instagram.com/reel/CrWTK6ooabG/?igshid=NTc4MTIwNjQ2YQ==
  6. வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. சிறிது நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்புப் படகினாலும் தாய் உலங்கு வானூர்தி மூலமாகவும் கண்டு பிடிக்கப் பட்டார்கள். ஆனால் இருவருமே மூர்ச்சையாகி சுயநினைவை இழந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவி வழங்கப் பட்டு இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
  7. அது நடந்தது அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு நீதிமன்றத்தின் மையத்தில். அதுவும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது. Joseph Zieler குனிந்து தனது சட்டத்தரணியின் காதில் ஏதோ சொல்வதற்கு எத்தனித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் நீதிமன்றில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று. கைகளில் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலும் Joseph Zieler தனது முழங்கையினால் சட்டத்தரணி Kevin Shirleyஇன் முகத்தின் நடுவில் தாக்கினார். சுற்றி நின்ற பாதுகாவலர்கள் Joseph Zielerஐ உடனடியாக மடக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொடூரமான குற்றம் பரிந்தார் என 61 வயதான Joseph Zielerக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 1990ஆம் ஆண்டு 11 வயதான Robin Cornellஐயும் அவரது பராமரிப்பாளரான Lisa Story (32) ஐயும் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்துக்காகவே அவருக்கு அந்த மரண தண்டனை வழங்கப்பட்டது. 1990இல் குற்றம் நடந்திருந்த போதிலும் பொலிஸாரால் அப்போது குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. குற்றம் நடந்த இடத்தில் படுக்கையின் விரிப்பில் இருந்த விந்தணு மூலம் பெறப்பட்ட டீஎன்ஏ Joseph Zielerஇன் டீஎன்ஏ உடன் ஒத்துப்போக 2016இல் அவர் கைது செய்யப்பட்டார். இரட்டைக் கொலையை தான் செய்யவில்லை என்றும் அப்போது தான் வேறு மாநிலத்தில் இருந்ததாகவும் அவர் வைத்த வாதம் பொய்யென்று நீதிமன்றால் நிரூபிக்கப் பட்டு அவர் குற்றவாளி எனக் கண்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. 33 வருடங்களுக்குப் பின்னர் நீதி கிடைத்திருக்கிறது என நீதி மன்றத்தில் Robin Cornellயின் தாயும் உறவினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். https://www.youtube.com/watch?v=8U8a28DCaCk ‘குசா’ என்னும் சட்டத்தரணி குமாரசாமி போன்றவர்கள் தங்கள் கட்சிக்கார்ர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இதை இணைத்திருக்கிறேன்
  8. nochchi, மொழியால் ஒன்றானாலும் நாடுகள் இரண்டு. கருணாநிதி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசிடம் மட்டுமே. கச்சதீவை சிறிலங்காவுக்கு இந்திரா காந்தி கொடுத்த போதும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. எம்ஜிஆர் கூட தனது பணத்தைத்தான் புலிகளுக்குக் கொடுத்தாரே தவிர அரச பணமல்ல.அதுவும் போராட்டத்துக்கு அல்ல புனர்வாழ்வுக்கு. ஒரு மாநில அரசு தனது கருத்தைச் சொல்லலாமே தவிர மத்திய அரசின் முடிவில் அதுவும் வெளிவிவகாரக் கொள்கையில் தலையிட முடியாது. சிறிலங்காவில் இருந்து இந்தியப் படைகள் திரும்பி வந்த போது அவர்களை சந்திக்கவோ, வரவேற்கவோ போகமட்டேன் என்று சொன்னவர் கருணாநிதி. ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் அவர் செய்தார். கருணாநிதி ஊழல் செய்திருக்கலாம். வாரிசு அரசியல் செய்திருக்கலாம். சாதிக் கலவரங்களைத் தூண்டி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். இது எங்கள் பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சனை. மீண்டும் நான் இந்தத் திரியில் எழுதிய இடத்துக்கே வருகிறேன். கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும்.
  9. இங்கே நாம் பேச வருவது அரசியல் இல்லை. மு.க.வின் எழுத்தாற்றலையும் அவரது பேனாவைப் பற்றியதும். இராமயணத்தைக் கொண்டாடுகிறோம். எங்களை வாணரங்கள் என்ற போதும், இராவணனை பெண் பித்தன் என்ற போதும் இராமரை வணங்குகிறோம். ஆனால் வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று தூற்றுகிறோமா? எழுத்தாளர்களின் படைப்பை விமர்சிப்பதை விட்டு அவரின் குணநலன்களை விபர்சிப்பது அவசியம் இல்லை. நாங்கள் மட்டும் யோக்கியர்கள் இல்லை. தமிழ்நாட்டில் நாங்களும் தவறுகள் செய்திருக்கிறோம். வினை விதைத்து அதன் பலன்களைப் பெற்றுக் கொண்டோம்.
  10. எத்தனை பேர் இருந்தும் என்ன? ஒரு சாதாரண ஆசிரியர் தன் எழுத்தை வைத்தே முன்னுக்கு வந்திருக்கிறார் என்பதில் அவரது திறமை தெரிகிறதல்லவா. ஏழ்மையில் இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயலாமையல்லவா?
  11. nochchi, அதிமுக இன்னும் இருக்கிறதா? கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும். உதாரணமாக, அதிமுக ஆரம்பித்த போது கலைஞர் கருத்து இப்படி, “ நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி என்று வரும். இப்வுபோ திமுகக்கு முன்னால் ‘அ’ போட்டிருக்கிறார்கள்” ‘500 தூண்கள்,25 கோடி, அம்மன் ஆலயம்’ இதற்கு ஒன்றும் சொல்ல மாட்டீர்களா? கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்,கருவில் இருக்கும் சிசுவுக்கும்…
  12. குற்றம் சாட்டப்பட்டவர் அங்காடிக்கு வந்த நேரம் கமராவில் பதிந்திருக்கிறது. வாகனங்கள் தரிப்பிடம் மற்றும் அங்காடியைச் சுற்றி உள்ள பகுதியில் உள்ள கமராக்களிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. அங்காடிக்குள்ளும் உள்ள கமராப் பதிவுகளிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. மாறாக அங்காடிக்குள் மது அருந்துவது முழுவதுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அங்காடிக்கு வருவதற்கு முன்னர்தான் அவர் மது அருந்தி இருக்க வேண்டும். ஆகவே, “என் கட்சிக்காரர் அங்காடிக்கு வந்த பின்னர்தான் மது அருந்தியுள்ளார்” என்ற திரு குமாரசாமியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. ஆனால் வாகனம் ஓட்டும் போது ஒருவர் மது அருந்தி இருந்தால், அவரது இரத்தம் பரிசோதணைக்கு உட்படுத்தி அவர் மது அருந்தி விட்டுத்தான் வாகனம் ஓட்டினார் என பொலீஸார் மன்றுக்கு ஆதாரப்படுத்தி இருக்க வேண்டும். இங்கு அது நடைபெறாத பட்சத்தில் குற்றம் சாட்டப் பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது……… பிகு. திரு. குமாரசாமி அவர்களின் கட்சிக்காரர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட்டு தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மது அருந்திவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு அவர் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
  13. ஈழப்பிரியன், இது ஒரு பழைய கட்டுரை 2014இல் வந்தது. அது இன்றும் பொருந்தும் என்பதால் இணைக்கிறேன். நேரம் கிடைக்கும் பட்சத்தில் வாசியுங்கள் https://manaosai.com/index.php/132-blogs/7blogs/577-2014-07-14-10-35-58
  14. https://www.merkur.de/lokales/erding/flughafen-muenchen-ort60188/sofia-am-muenchner-flughafen-nackte-passagierin-beisst-polizisten-lufthansa-92362584.html படம் இங்கே இருக்கிறது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்தமாதிரி இருக்காது
  15. தப்பு. கடலில் பேனா காலகாலமாக நின்று கருணாநிதி பேர் சொல்லும்.
  16. புல்காரியப் பெண்கள் படங்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. கூச்சல் போடுவார்களா தெரயாது
  17. முதல் படத்திலேயே மூன்று வேடங்கலா? சொந்தப் பணம். அகலமாகக் கால் வைத்திருக்கிறார் ஈழத்தவர் தயாரிக்கும் இந்தியப்படம்?
  18. கடந்த வெள்ளிக்கிழமை 23.06.2023 யேர்மனி முனிச் நகரில் இருந்து சோபியா (பல்கேரியா)வுக்கு லுஃப்தான்சா விமானம் ஒன்று புறப்படத் தயாரக இருந்தது. திடீரென 27 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் தனது உடைகளைக் களைந்து விட்டு பெரும் சத்தமாகக் கூச்சல் போட ஆரம்பித்தாள். நிலமையைச் சீராக்க விமானத்துக்குள் பொலிஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவளுக்கு உடையை அணிவிக்கவோ, அவளைச் சமாதானப் படுத்தவோ முடியவில்லை. இதற்கிடையில் அவளது நிர்வாண மேனியை போர்வை கொண்டு மூடி விட எத்தனித்த ஒரு பொலிஸின் இடது கையின் முன்பக்கத்தில் கடித்து காயத்தையும் ஏற்படுத்தியிருந்தாள். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட பல்கேரியாவைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்துவச் சோதனைகளுக்காக Bezirks மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இந்த அமளியால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தைவிட மூன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக முனிச் விமான நிலையத்தில் இருந்து பறக்க ஆரம்பித்தது. பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, அவர்கள் மீதான உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து அந்தப் பெண்ணின் மேல் இப்பொழுது பொலிஸாரினால் வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது.
  19. அவளுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய நாளாக இருந்திருக்க வேண்டியநாள். ஆனால் மாறாக அந்தநாள் அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நாளாகிப் போனது. திருமணம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் இதயத்தில் இரத்தம் உறைந்து போனதால் அவளது கணவன் மரணித்துப் போனான். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. Johnnie Mae Davis, Toraze († 48) இருவரும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் புன்னகைகள் பூத்திருந்தன. இருவரதும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவிப்பதற்காக தேவாலயத்தில் கூடி இருந்தார்கள். அருட்தந்தையிடம் திருமணத்துக்கு “சரி” என்று இருவரும் ஒப்புக் கொடுத்ததன் பின்னர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது Toraze திடீரென சரிந்து விழுந்தான். சில வினாடிகள்தான் அவனது இதயம் நின்று விட்டது. ஏற்கனவே Johnnie அவளது தந்தையையும் இன்னுமொரு நெருங்கிய உறவினரையும் இதே போன்று இதய நோயால் இழந்திருக்கிறாள். இப்பொழுது மூன்றாவதாக அவளது கணவன். Johnnie க்கு உதவுவதற்காக அவளின் நண்பரான Miller இணையத்தினூடாக அன்பளிப்புகளை நாடினார். ஐந்து நாட்களில் 16,800 அவரால் திரட்ட முடிந்தது. Toraze இன் இறுதி நிகழ்வு 5ந் திகதி யூலையில் நடைபெற இருக்கிறது. Foto: Johnnie Mae Drummer-Davis/Facebook
  20. யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்காடியின் தரிப்பிடத்தைச் சுற்றிப் பார்வையிட்ட போது, எங்கே அவர் தனது காரை நிறுத்தி வைத்தாரோ அதே இடத்தில் அவரது கார் அமைதியாக நின்றது. அந்த ஆணிடம் தகவல்களைப் பெறும் போது அவரிடம் இருந்து மது வாசனை வருவதை அவதானித்திருந்த பொலிஸார் அவரை இரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது இரத்தத்தில் 2 புறோ மில்லி அற்ககோல் இருப்பது தெரிய வந்தது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினார் என்ற அடிப்படையில் அவரது சாரதிப் பத்திரத்தை பொலிஸார் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்பொழுது அவரது கார் அங்காடியின் வாடிக்கையாளர் தரிப்பிடத்தில் நிற்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.