Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. ஶ்ரீதர் தயாரித்த அலைகள் படத்தில் ஜெயச்சந்திரன், “பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே….” என்ற பாடலைப் பாடியிருந்தார். நான் நினைக்கின்றேன் அந்தப் பாடல்தான் அவரின் முதலாவது தமிழ்ப் பாடலாக இருக்கும் என்று. இன்றும் அந்தப் பாடலை ரசித்துக் கேட்பேன்.
  2. இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு. தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது? புலிப்படம் போட்டு பிரசுரம் வந்திருப்பதால் நானும் ஒன்றைச் சொல்லலாம். யேர்மனியில் நான் வாழும் மாநிலத்தில் யாராவது கோயில் கட்டினால், இங்குள்ள புலிகளின்(?) செயற்பாட்டாளர்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி உறுப்பினர்களாக்கி, செயற்பாட்டுக்குழுவில் இடம் பெற வைத்து, வாக்கெடுப்பில் தலைவரையே மாற்றி கோயிலையும் தம் வசமாக்கி விடுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் கோவில்களுக்குள் மட்டும் என்றில்லை. கட்சிகளுக்குள்ளும் செய்வார்கள். ‘சங்கு’ ,’பார்’ எல்லாம் அதற்குள் அடங்கி இருக்கலாம். இது பற்றி பஞ்ச் அவர்களுக்கு என்னைவிட நன்கு தெரியும். விரும்பினால் எழுதட்டும். ஆக இவர்கள் வந்து அறிக்கை விட்டு என்னவாகப் போகிறது?
  3. மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான். ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார். "இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?" எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. "நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..." "அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? " "எனக்குத் தெரியாது.." "உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்." நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான். "அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.." மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன். "போட்டு வாறன்." "அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் " மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது. அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது. "எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..." நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.." "தெரியும்..." "தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?" குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன். "மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்." என்னால் எதுவுமே பேச முடியவில்லை. "புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.." "வாழ்த்துக்கள் மாஸ்ரர் " "அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?" கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். "அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான். நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போது “மன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்” என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்” என்று. 1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. “நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்” மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.
  4. இணையவன் குறிப்பிட்டதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர வேண்டும். யேர்மனியில் பயங்கரவாதம் நடந்தால், கன்ஸிலரை முட்டாள் என்கிறார். யேர்மனிய ஜனாதிபதியைக் கேவலப் படுத்துகிறார். அவரது தயாரிப்பான டெஸ்லா காரிலே குண்டு கொண்டு வந்து வெடிக்க வைத்த பயங்கரவாத த்துக்கு யாரை நோவது?
  5. குரங்கு பெடல் படமும் இதையொத்த கதையுள்ள திரைப்படம்தான்
  6. 2022இல் நான் கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வேலைக்கு வரும் பெண்ணுக்கு (வேலை நேரம் 9.00-16.00) நாளொன்றுக்கு ரூபா 1,500/_ கொடுத்தார்கள். அரியநேந்திரன் ஒன்றுமே செய்யாமல் சும்மா சங்கு ஊதுவதற்கு 60,000/_ கூட என்பது என் கணக்கு.
  7. பொதுவாக எங்கள் ஊர் பெண்கள் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு வருவது குறைவு. அதற்கும் தைரியம் வேண்டும். வந்தவர்களை வென்றவர்களை வாழ்த்துவோம். அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் கொப்மன் (Robert Hoffman) ஒரு இசை அல்பத்தை உருவாக்குவதற்காக 2020இல் இந்தியா வந்திருந்தார். அவர் உருவாக்க இருந்த இசை அல்பத்துக்கு சேரியில் வாழும் ஒரு சிறுமி தேவைப்பட்டாள். மும்பை சேரிக் குடிசை வாழ் சிறுமியைத் தேடிய போது அவரால் கண்டு பிடிக்கப் பட்டவள் தான் மலேஸா. அப்பொழுது அவள் 12 வயதுச் சிறுமி. “மும்பையின் நடுப்பகுதியில், தெருக்களில் அவள் வசிக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் யாரும் அவளைக் கண்டுபிடிக்கவில்லை. இதற்கான காரணமாக, கருமையான தோலை அழகற்றதாகப் பார்ப்பதுதான் இந்திய க் கலாச்சாரம் என்பது எனக்குப் புரிந்தது.ஆனால் சர்வதேச அழகுத் துறை அவளை வித்தியாசமாகப் பார்க்கும் என்பதை நான் உறுதியாக அறிவேன்” இப்படிச் சொல்கிறார் ரொபேர்ட் கொப்மன்.
  8. மருண்டவன் கண்ணுக்கு….🤪 ரசோதரன், இனிய புது வருட வாழ்த்து.
  9. உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவர் உண்டோ சொல் என் தோழா கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம் உண்டாவதில்லை என் தோழா அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா --சி.ஏ.லட்சுமணதாஸ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.