Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. மாட்டார்கள். இந்தியாவை பகைக்க மாட்டார்கள்.
  2. ஜேர்மனிக்கான மாற்று என்று ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியாக இருக்கும் கட்சிதன் AfD. எலன் மஸ்க் இந்தக் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். எலன் மஸ்க் ஜேர்மனிய அரசியலில் மூக்கை நுளைப்பதால், டிரம்பின் அமைச்சரவையில் உள்ள ஆலோசனைப் பதவி அவருக்குப் போதுமானதாக இல்லையோ தெரியவில்லை அவர் யேர்மன் கன்ஸிலர் ஸ்கோல்ஸை "திறமையற்ற முட்டாள்" என்று அழைக்கிறார். AfD இல் உள்ள பலர் Gruenheide இல் உள்ள எலன் மஸ்க்கின் (Tesla )டெஸ்லா தொழிற்சாலைக்கு எதிராக இருப்பது கூட அவருக்குத் தெரியவில்லை. இங்கே யார் முட்டாள்? எலன் மஸ்க், டிரம்ப் இருவரையும் மாஸுக்கு கொண்டே விட்டு விட்டு வந்தால் நல்லது.
  3. இது இறந்தகாலம். நிகழ்காலத்துக்கு சற்றே இறங்கி வாருங்கள்
  4. கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ‘அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்’ என்று செய்தி வந்து, அவர் நலம்பெற யாழில் பலர் வேண்டிக் கொண்டார்கள். பிரார்த்தனை பலித்திருக்கிறது.
  5. அவனது பெயர் ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில் Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான். யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான். ‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லை’ என்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான். சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான். ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத் தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இன்று நடந்த இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது. யேர்மனியில் இந்த வாரம்தான் நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
  6. கடந்த செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு ஒன்று இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கு பிரான்சில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அதிகமான கவனிப்பைப் பெற்றுள்ளது. அவிக்னோனில் ( Avignon ) நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கின் முக்கிய குற்றவாளியான டொமினிக் பெலிகாட் (Dominique Pelicot)டுக்கு மோசமான பாலியல் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக்கின் விதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி ஹீசலா (Gisele) மீது பாலியல் வன்முறையை மேற்கொண்ட மற்றைய 50 ஆண்களுக்கு இரண்டில் இருந்து பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக் பெலிகாட் ஹீசலாவுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மீண்டும் மீண்டும் போதை மருந்தைக் கொடுத்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றார். மேலும் ஐம்பதுக்கு அதிகமான பிற ஆண்கள் மூலம் அவரை பாலியல் பலாத்காரம் செய்வித்திருக்கின்றார். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தன்மேல் சுமத்தப் பட்ட அனைத்துக் குற்றங்களையும் டொமினிக் பெலிகாட் ஒத்துக்கொண்டிருந்தார். “எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறேன். என் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கான வழக்கு மூடிய கதவுகளுக்குள் நடைபெறுவதை நான் விரும்பவில்லை. இங்கே நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. நான் வெட்கப்படுவதற்கும், கூனிக் குறுகிப் போவதற்கும் ஒன்றுமேயில்லை. வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ஒதுங்கிப் போகாமல் எனது இந்த நடவடிக்கை மூலம் தைரியம் பெற வேண்டும். வெட்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்ட நாங்கள் அல்ல, எங்கள் மீது அதை ஈடுபடுத்திய ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டும். தண்டனை பெற வேண்டும்” என ஹீசலா பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கின்றார்.
  7. ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.