Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kavi arunasalam

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  970
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by Kavi arunasalam

 1. உண்மை ராசவன்னியன். திருலோகச்சந்தர் நடிகர் அசோகனின் நண்பர் அசோகன் கேட்டதற்காகத்தான் எம்ஜிஆரின் அன்பே திரைப்படத்தை இயக்க அவர் ஒப்புக் கொண்டார். அன்பேவா திரைப்படத்தின் உதவி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
 2. உள்ளத்திலே உரம் வேணுமடா ஒரு விடயத்தை சத்தமாக உரத்த குரலில் சொன்னால்தான் புரியுமென்றில்லை. மென்மையாகஅமைதியாகச் சொன்னாலே போதும் மனதில் பதிந்து விடும். அறுபதுகளில் வெளிவந்த சரித்திரக் கதைகள் கொண்ட திரைப்படங்களில் நாயகன் குதிரையில்பயணித்துக் கொண்டே “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா உனை உணர்ந்து தலை நிமிர்ந்துசெல்லடா...” என்றோ, “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..” என்று குதிரைக்குளம்பொலிக்கேற்ற பின்னணி இசை ஒலிக்க உச்ச குரலில் பாடிக்கொண்டு வருவார்கள். அந்தக்கட்டத்தில் வெளிவந்த திரைப்படம்தான் விஜயபுரிவீரன். இந்த திரைப்படத்தில்தான் சி.எல்.ஆனந்தன்நாயகனாக அறிமுகமானார். எஸ்.ராமதாஸுக்கும் இதுவே முதல் திரைப்படம். மூன்று நண்பர்கள் இணைந்து குதிரையில் பயணித்தபடி பாடுவதாக விஜயபுரிவீரன் திரைப்படத்தில் ஒருபாடல் இருக்கிறது. தஞ்சை ராமையாதாஸ் பாடலை இயற்ற ரி.ஆர்.பாப்பா இசையமைக்க ஏ.ம்.ராஜாகுழுவினரோடு இணைந்து பாடியிருப்பார். ஏ.ம்.ராஜாவின் மென்மையான குரலில் மனதை தளுவும் இந்தப்பாடலின் வரிகளை இன்று கூட பலர் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். “ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ..” “வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விடக் கூடாது..” போன்ற வரிகள் மனதில் பதிந்து போனவை. உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விட கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் என்ற இந்தப் பாடல் அன்றைய இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பலரது விருப்பப் பாடல். கவி அருணாசலம் 23.02.2018
 3. ஜெயலலிதாவுக்கு பின்னணி பாடுவதற்கு எல்.ஆர்.ஈஸ்வரிதான் பொருத்தமானவர் என்ற கணிப்பு இருந்தது. பொதுவாகவே தான் நடிக்கும் படங்களில் இடம் பெறும் மெலோடிப் பாடல்களுக்கு எஸ்.ஜானகியையே எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்வார். ஜெயலலிதாவுக்காக அதை மாற்றி, சில பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியை பாட அனுமதி அளித்தார் என்பதில் இருந்து அந்த கணிப்பின் உண்மை தெரியும். எல்.ஆர்.ஈஸ்வரி, ரி.எம்.எஸ் உடன் இணைந்து குமரிக்கோட்டம் திரைப்படத்தில் பாடிய, “நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...” பாடல் அன்றைய காதலர்களுக்கு அமுதமாக இருந்தது. அதுவும் பாடலின் முதல் பாதியில் முழுவதுமாக (ஹம்மிங் தவிர்த்து) பெண் குரலை மட்டும் தனியாக ஒலிக்க விட்டு, பின்னர் ஆண் குரலும் இணைந்து கொள்ளும் போது பாடல் மேலும் இனிமையாகிறது. கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். பெண்ணுக்கு இடது கண்ணும், ஆணுக்கு வலது கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்பது முன்னவர்களின் கணக்கு. அதை இந்தப் பாடலில் வாலி நினைவூட்டியிருப்பார். மேலும் ஒவ்வொரு வரிகளிலும் உவமை வைத்து, ப‌ட்டப்‌ ப‌க‌லினில் நில‌வெரிக்க‌ நில‌வினில் ம‌ல‌ர் சிரிக்க‌ ம‌ல‌ரினில் ம‌து இருக்க‌ ம‌து உண்ண‌ ம‌ன‌ம் துடிக்க‌ வ‌ட்டக்‌ க‌ருவிழி வ‌ர‌வ‌ழைக்க‌ வ‌ர‌வினில் உற‌விருக்க‌ உற‌வினில் இர‌விருக்க‌ இர‌வுக‌ள் வ‌ள‌ர்ந்திருக்க‌ வெள்ளிப் ப‌னி விழும் ம‌லையிருக்க‌ ம‌லையினில் ம‌ழைய‌டிக்க‌ ம‌ழையினில் ந‌தி பிற‌க்க‌ ந‌தி வ‌ந்து க‌ட‌ல் க‌ல‌க்க‌ என்று அந்தாதியில் அமைந்த பாடலாகவும் எழுதியிருப்பார்.
 4. ராசவன்னியன் நன்றி. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ படம்: சந்திரோதயம் பாடலாசிரியர்: வாலி இசை: எம் எஸ் வி இந்தப் பாடல் எனக்கு பிடித்ததற்கான காரணம் அதனது இசை மட்டுமல்ல பாடலின் ஒவ்வொரு வரியிலும் கவிஞர் வாலி அள்ளிப் போட்டிருக்கும் உவமைகளுமே. சந்திரோதயம், பெண்ணோவியம், செந்தாமரை,குளிர் காற்று கிள்ளாத மலர். கிளி வந்து கொத்தாத கனி. மேகம் தழுவாத நிலவு. முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பு. நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பு. சங்கீதம் பொழிகின்ற மொழி. கோயில் குடி கொண்ட சிலை,இளம் சூரியனது வடிவம். செவ்வானத்தின் நிறம். பொன் மாளிகை போன்ற மனம் என்று பல உவமைகள் இந்தப் பாடலில் கொட்டிக்கிடக்கின்றன. இலங்கை வானொலியில் அன்று இந்தப் பாடலை ஒலிபரப்பும் பொழுது, “இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ மடிமீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ” என்ற வரிகளை இசைத்தட்டில் கேட்க முடிந்தது. தணிக்கை காரணமாக படத்தில், “எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ” என மாற்றி இருந்தார்கள். படத்தில் வந்த காட்சியை பாடலோடு தரவேற்றம் செய்திருப்பதால் அசலை கேட்க வாய்ப்பில்லை
 5. வீடியோ இணைப்பை சரியாக இணைக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ராசவன்னியன் உங்களுக்கு நன்றி.
 6. மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால் “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை” என்று மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் ஏ.மருதகாசியாகத்தான் இருக்க முடியும். அதிலும் “முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும் விதமாக ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை. டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் கே.வி. மஹாதேவன் இசையில் ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு டி.ஆர். மஹாலிங்கத்தோடு ஆட்டம் போடுபவர் அன்றைய. நாட்டிய தாரகை ஈ.வி.சரோஜா. பொறுமை இருந்தால் மட்டும் கேளுங்கள். பிறகு என்னை திட்டக் கூடாது. https://m.youtube.com/watch?v=7unLk8rkpuk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.