Everything posted by Kavi arunasalam
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது. விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin) வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்கு மேல் கட்டிப் பிடிக்க விரும்பினால் விமான நிலையத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குச் சென்று நீண்ட நேரம் கட்டிப் பிடிக்கலாம் என்கிறார். மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
யேர்மனியில் இப்படியான செயல்களுக்கு அனுமதி இல்லை.
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன் - கருணா
- கருத்துப்படம் 20.10.2024
From the album: கிறுக்கல்கள்
- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலின் சிசேரியா நகரில் ட்ரோன் எச்சரிக்கை! லெபனானில் இருந்து வந்த ஒரு ஆளில்லா விமானத்தால் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (74) அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியின்படி, நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவோ அவரது மனைவியோ இருவரும் வீட்டில் இருக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,“சனிக்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்கள் கடைசி நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டன. அதில் இரண்டு தடுத்து நிறுத்தப்பட்டன” என்றிருக்கின்றது.- இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
அல்பேனியா முகாமுக்குக் கொண்டு சென்றவர்களிர் நான்கு பேர்கள் திருப்பி அனுப்பப் பட்டு விட்டார்கள். இன்னும் 12 பேர்கள் இருக்கிறார்கள். 12 பேர்களையும் அந்த முகாமுக்கு அனுப்பியது தவறு உடனடியாக அவர்களை இத்தாலி திரும்ப அழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தீர்ப்பு, அதற்கு மேன் முறையீடு என இந்த விவகாரம் கொஞ்ச காலம் இழுபடும். என்ன இருந்தாலும் ஜிஓர்ஜியா மெலோனி(Giorgia Meloni) இறுக்கமான பெண்தான்- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
- கருத்துப்படம் 19.10.2024
From the album: கிறுக்கல்கள்
- இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
ஒரு பாவமும் செய்திருக்க மாட்டார்கள். லாபம் பார்க்க வாய்ப்பிருக்கும். சும்மா ஒன்றும் இடம் தரமாட்டார்கள்.- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
- கருத்துப்படம் 19.10.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 18.10.2024
From the album: கிறுக்கல்கள்
- இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது நடைமுறைப் படுத்தத் தொடங்கியிருக்கிறது. மத்தியதரைக் கடல் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை, அல்பேனியா நாட்டில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்கே வைத்துப் பராமரிப்பது என்பதே அந்தத் திட்டம். கடந்த திங்கட்கிழமை படகொன்றின் மூலம் இத்தாலிக்குள் நுளைய முயன்ற எகிப்து, பங்களாதேஷைச் சேர்ந்த பதினாறு ஆண்கள் இப்பொழுது அல்பேனியா நாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அந்த முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள். இந்த முகாமில் ஆண்கள் மட்டுமே பராமரிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் இத்தாலியிலேயிலேயே தங்க வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாவார்கள். அல்பேனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த முகாமுக்குக் கொண்டு வரப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களது விண்ணப்பங்கள் ஒரு மாதத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு, புகலிடம் பெறத் தகுதியுடையவர்கள் இத்தாலிக்கு அனுப்பப் படுவார்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அல்பேனியாவில் இருந்து உடனடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வருடம் மே மாதத்தில். இரண்டு முகாம்களை அல்பேர்னியாவில் அமைப்பது என்று இத்தாலி முடிவெடுத்திருந்தது. ஆனால் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற சிக்கல்கள் காரணமாக முதலில் ஒரு முகாமை மட்டும் அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அல்பேனிய நாட்டில் அமைக்கப்பட்டாலும் இந்த முகாமை இத்தாலியே நிர்வகிக்கிறது. இதற்கான செலவாக, தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு 670 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடொன்றின் முகாமுக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்துப் பராமரிக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மிளிர்கிறது. இத்தாலியைத் தொடர்ந்து யேர்மனி, பிரான்ஸ் நாடுகளும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே வைத்து பராமரிக்க முன்வரலாம். (செய்தியின் பிழிவு இங்கே இருந்து எடுக்கப்பட்ட்டது) https://www.zdf.de/nachrichten/politik/ausland/eu-migration-italien-albanien-lager-100.html- கருத்துப்படம் 17.10.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 16.10.2024
From the album: கிறுக்கல்கள்
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
- கருத்துப்படம் 15.10.2024
From the album: கிறுக்கல்கள்
- தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை!
- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
சந்திப்பதில் மகிழ்ச்சி- சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
- கருத்துப்படம் 15.10.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் இருந்து மாவையுடன் சேர்ந்து முடிவெடுப்பவராக இருந்திருந்தால், நிலாந்தன் இத்யாதிகளுடன் சங்கு ஊதப் போய் ஓட்டு மொத்த கட்சியையும் போட்டுடைத்திருப்பார் என்பதை நடக்கும் சம்பவங்களால் இப்பொழுது அறிய முடிகிறது. ஒரு கட்சியை நடத்துவதற்கான வல்லமை சிறீதரனிடம் இல்லை. ‘பார் லைசனஸ்’ விபரங்களை வெளியிடுங்கள் என சுமந்திரனும் கேட்கிறார். டக்ளஸும் கேட்கிறார். சிறீதரன் photoவுக்குக் கூட சிரிக்க மாட்டேன் என்கிறார். கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம் கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம். ஒருவர் மீது கொண்ட வெறுப்புக் கண்கள் யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.- பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
- கருத்துப்படம் 14.10.2024
From the album: கிறுக்கல்கள்
- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
ஏராளன், இந்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? - கருத்துப்படம் 20.10.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.