Everything posted by Kavi arunasalam
-
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீண்ட வருடங்களாக நடந்த வழக்கு 2013இல் முடிவுக்கு வந்தது. ரைமுண்டோவுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனை அனுபவிக்க மட்டும் ரைமுண்டோ இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அவன் இருக்கிறானா? இறந்து விட்டானா? என்ற செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. கிவால்டோ இறக்கும் பொழுது அவனின் மகளான கிஸ்லேனுவுக்கு ஒன்பது வயது. தந்தையின் மரணம் அதுவும் அவர் கொலை செய்யப்பட்டது கிஸ்லேனாவை பெரிதும் பாதித்திருந்தது. தனது தந்தையின் மரணம், தந்தையைக் கொன்றவன் தண்டனையில் இருந்து தப்பியது, அவன் சுதந்திரமாக வாழ்வது எல்லாமே அவளது மனதை எப்பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்தன. அந்த உறுத்தல்களுக்கு மத்தியிலும் கிஸ்லேனா படித்து 2014இல் சட்டத்தரணியானாள். சட்டத்தரணியாக இருந்தாலும் ரைமுண்டோவை எப்படியாவது கண்டு பிடித்து, அவனுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது. பொலிஸ்துறையில் சேர்ந்து விட்டால் ஒருவேளை அது சாத்தியமாகலாம் என்று எண்ணியவள் அங்கே இணைந்து கொண்டாள். பயிற்சிகள் எல்லாம் முடித்து 2022இல் பொலிஸ் குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றத் தொடங்கினாள். தந்தையின் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தேடி எடுத்துக் கொண்டாள். ரைமுண்டோ பற்றிய தேடலை ஆரம்பித்தாள். அவள் குற்றப் புலனாய்வாளராக இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ரைமுண்டோ பற்றிய பல தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. கடந்த புதன் கிழமை (25.09.2024) ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ரைமுண்டோவை(60), கிஸ்லெய்ன் கைது செய்தாள். அவளது தந்தை கொலை செய்யப்பட்டபோது அவரின் வயது 36. தனது தந்தையைக் கொன்றவனை கைது செய்யும் கிஸ்லெய்னுக்கு தற்போது வயது 36. "இன்று எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள உணர்வு என்னவென்றால்,ஒரு குற்றவாளிக்கான நீதி வழங்கப்பட்டுள்ளது, இறுதியாக நாங்கள் எங்கள் அமைதியை ப் பெற்றிருக்கின்றோம்" என கிஸ்லெய்ன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறாள். இனி அவளுக்கான உறுத்தல் இல்லாமல் போகும். ஆனாலும் அவளின் தந்தையின் இழப்பு அவளிடம் இருந்து கொண்டே இருக்கும். https://www.facebook.com/reel/382733548229265
-
"தோஷமும் விரதமும்"
விரதத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருக்கின்றது. கண்,காது, மூக்கு, வாய் எல்லாம் உடலில்தானே இருக்கிறது. பறகு ஏன் ஐந்தாவதாக உடல் என்று தனியாகக் குறிப்பிடுகிறீரகள்? சுத்தமான ஆணாதிகத்தை. என் வீட்டிலே இதெல்லாம் எடுபடாது.
-
மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
இதை வாசித்த போது எனக்கு ஊர் தெருச் சண்டை ஞாபகத்துக்கு வந்தது. ”ஏலு மெண்டால் தொட்டுப்பார். அப்ப தெரியும் உனக்கு”
-
கருத்துப்படம் 27.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
- கருத்துப்படம் 27.09.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 26.09.2024
From the album: கிறுக்கல்கள்
- ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அப்படிச் செய்ய மாட்டார்கள் நிழலி. Tamil guardian அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. அந்தப் பத்திரிகையைப் பிடித்தபடி பிரபாகரன் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது.- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி. நாங்கள் இன்னமும் தமிழர்களின் சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும். யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச் செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான். தமிழர் ஒருங்கிணைப்பானது விடுதலைப் புலிகளின் சகல நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம் ‘புலிகள் புராணம்’ பாடுவதைத் தவிர வேறு பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார். ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த அந்தச் செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல் மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/- பலியாடுகள் - நிழலி
உண்மை. இதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை- கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
சங்கு வேலைக்காகது என்று இந்த முறை முரசு கொண்டு வந்து, ‘கொட்டு முரசே’ என்று சொல்லி அடிப்பார்கள்.- ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நொச்சி, நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கோ, தேவையில்லாத வாதங்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு பின்னால் என்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட நேரமில்லாமல் அல்லல் படுவதற்கோ நான் இப்பொழுது தயாராக இல்லை. ஆனாலும் நீங்கள் தொடுத்த அம்பு ஒன்று என்னருகில் வீழ்ந்து இருக்கிறது.’கீறும்’ என்ற அம்பு அது. இன்று ஆயுதப் போராட்டமும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஏன் விடுதலைப் புலிகள் என்று கூட எவரும் இல்லை.அந்த அமைப்பில் இருந்தவர்கள் அதுவும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அது எதுவானாலும் நான் அதற்குள் போய் கிளறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நீண்ட பயணத்திலும் சரியான பாதை தெரியாமல் பரிதவிக்கும் நிலையிலேயேதான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். இதற்குள் அவரவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தேவைக்காகவும் போராட்டத்தையும் தியாகங்களையும் பயன் படுத்துவதால் ஒரு பலனும் தமிழர்களுக்கு வந்து விடாது என்ற நிலையில்தான் எதிர்க்கிறேன். இவ்வாறான எனது எதிர்ப்பு இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. நான் கீறும் படங்களை யேர்மனியில் புலிகள் என்று சொல்பவர்கள் பாவிப்பதில்லை. இது விடுதலைப் புலிகள் போராடும் காலத்தில் இருந்தே இருக்கிறது. காரணம் ‘ஏன்?’ என்ற கேள்வி எப்பொழுதும் என்னிடத்தில் இருப்பதால். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பொங்கு தமிழில் நான் எழுதிய பத்தி ஒன்றை கிருபன் முன்னர் பதிந்திருந்தார். https://alpha.yarl.com/forums/topic/152431-தூசு-தட்டியே-காசு-பிழைத்தவர்-மூனா/ நேரமின்மையால் அப்பொழுது அதில் எழுந்த கேள்விகளுக்கு நான் பதில் எழுதவில்லை. பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ‘தமிழர்களுக்கான தீர்வு வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான உங்கள் பாதை வேறு என் பாதை வேறு.- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எங்களது நாட்டில், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களைப் புகழ்வதும் பாராட்டுவதும் வழமை. இதேவேளை தோற்றுப் போனால், அவர்கள் மக்களை கணக்கில் எடுப்பதில்லை. தோற்றுப் போனவர்கள் மக்கள் மத்தியில் வருவதைக் கூட பெரிதும் தவிர்த்து விடுவார்கள். அடுத்த நாளோ அடுத்த வாரமோ ஒரு அறிக்கை வரும். அவ்வளவுதான். யேர்மனியில் நடைமுறை வேறுவிதம். அநேகமாக மேற்கத்திய நாடுகளிலும் அப்படித்தான் இருக்கும். தோற்றுப் போனாலும் மக்கள் மத்தியில் அவர்கள் உடனடியாகவே வந்து நிற்பார்கள். தங்களுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி சொல்வார்கள். “நாங்கள் எங்கள் குறிக்கோளை எட்டவில்லை. எங்களது வெற்றியை அடைய முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து, செயல்களில் மாற்றம் ஏற்படுத்தி எங்களது வெற்றிக்காகப் பயணிப்போம். உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி….” என்ற பாணியில் பேசுவார்கள். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவர்களுக்காக உழைத்தவர்கள், வாக்குப் போட்டவர்களுக்கு ஆறுதலும், நன்றியும் பொதுக்கட்டமைப்பிடம் இருந்து வரவில்லை. அந்த மக்களின் சேவையை செல்லாக் காசாக்கி இருக்கிறார்கள். பொதுத் தேர்தல் காத்திருக்கிறது- கருத்துப்படம் 23.09.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
- கருத்துப்படம் 22.09.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 21.09.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 22.09.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- கருத்துப்படம் 21.09.2024
From the album: கிறுக்கல்கள்
- 21.09.2024
- ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
இப்படி ஒரு கட்டுரையை ஈழநாடு எழுதாமல் இருந்திருந்தால் அது புத்திசாலித்தனம். எழுதியது முட்டாள்தனம்- புலிகளின் பணத்தை பதுக்கியவர்களே பொது வேட்பாளருக்கு நிதி
போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த தலைமுறையையும் நாசம் பண்ணாமல் விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது. - கருத்துப்படம் 27.09.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.