Everything posted by Kavi arunasalam
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
திமுக, வேறு கட்சிகளை வளர விடாமல் இடையிலேயை கிள்ளி எறிந்து விடும். சினிமாவில் இருந்து ஒரு தளபதி வருகிறார். அவரை அரசியலில் இருந்து விரட்டுகிறார்களா? அவர் தாக்குப் பிடிப்பாரா? பார்க்கலாம்.
-
கருத்துப்படம் 03.10.2024
From the album: கிறுக்கல்கள்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
- கருத்துப்படம் 02.10.2024
From the album: கிறுக்கல்கள்
- பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
- கருத்துப்படம் 02.10.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
விசுகு, வரலாறுகளை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன். ‘எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது’ என்று சொல்லியிருந்தேன்.- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
‘பழம் தின்று’ என்று எழுதி கொமா போட்டுவிட்டு சற்று இடைவெளி விட்டுவிட்டீர்கள். அதனால் முதலில் நான் தப்பாக விளங்கிக் கொண்டுவிட்டேன்.- கருத்துப்படம் 30.09.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான். “யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன்” என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை. இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள். இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால் சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாது’ என்று. அதே நிலைதான் இங்கும். சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம். சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையா’ என்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி. ‘நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும் இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார். ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி. பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார் ‘போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்’ என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம். மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி’ என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லை’ என்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம். எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடி” என்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை. இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல் ‘இனவாதி’ என்று உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது. கஜினி பலமுறை (17) தோற்றும் இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.- கருத்துப்படம் 30.09.2024
From the album: கிறுக்கல்கள்
- இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
விமானத்தில் வழங்கப்படும் உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. அதைகண்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள். “நான் அந்தக் கரப்பான் பூச்சியை கண்டு பிடிக்க முன் எனது இரண்டு வயது மகன் அந்த உணவில் பாதியைச் சாப்பிட்டு விட்டான்.அந்த உணவை நான் விசமாகவே பார்க்கிறேன்” என Suyesha Savant டிவிட்டரில் (X) பதிந்திருக்கிறாள். https://indianexpress.com/article/business/aviation/cockroach-meal-air-india-delhi-new-york-flight-9593185/- பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.
- கருத்துப்படம் 29.09.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம். அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்? நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில் உங்களைப் போல எனக்கும் தேவை இருக்கிறது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள். ‘இனவெறியன்’ என்று சொல்லும் போதே இந்தப் பதிவின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது. உண்மையைத்தானே பதிவிடுகிறார் என்றால், ஜனாதிபதித் தேர்தலிலேயை இவைகளைப் பதிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் அனுரா சொன்னதுக்கு எதிராக ரணில் கேட்டபோதவது போட்டிருக்கலாம். இந்த இடத்தில் சுமந்திரன் ஏன் சுஜித்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்த்திருந்தார் என்பதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்து விடுகிறது. சுமந்திரன் மட்டும் அனுராவை (நேரடியாக) ஆதரித்திருந்தால், சங்கு மட்டுமல்ல முரசும் அடித்திருப்பார்கள். சுமந்திரனின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும் “பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்” இல் வந்துவிடப் போகிறது. இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம். வெண்ணை திரண்டு வர எப்பொழுதும் வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே நாங்கள் சட்டியை உடைத்து விடுவோம்.- பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.
அப்போ கிழக்கில் கிடைத்த வாக்குகள் எதை உணர்த்துகிறது? நாங்கள் மண்ணுக்குமேலே விழுந்தால்தானே மீசையில் மண் ஒட்டும்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
- கருத்துப்படம் 29.09.2024
From the album: கிறுக்கல்கள்
- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
- கருத்துப்படம் 29.09.2024
From the album: கிறுக்கல்கள்
- மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீண்ட வருடங்களாக நடந்த வழக்கு 2013இல் முடிவுக்கு வந்தது. ரைமுண்டோவுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனை அனுபவிக்க மட்டும் ரைமுண்டோ இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அவன் இருக்கிறானா? இறந்து விட்டானா? என்ற செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. கிவால்டோ இறக்கும் பொழுது அவனின் மகளான கிஸ்லேனுவுக்கு ஒன்பது வயது. தந்தையின் மரணம் அதுவும் அவர் கொலை செய்யப்பட்டது கிஸ்லேனாவை பெரிதும் பாதித்திருந்தது. தனது தந்தையின் மரணம், தந்தையைக் கொன்றவன் தண்டனையில் இருந்து தப்பியது, அவன் சுதந்திரமாக வாழ்வது எல்லாமே அவளது மனதை எப்பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்தன. அந்த உறுத்தல்களுக்கு மத்தியிலும் கிஸ்லேனா படித்து 2014இல் சட்டத்தரணியானாள். சட்டத்தரணியாக இருந்தாலும் ரைமுண்டோவை எப்படியாவது கண்டு பிடித்து, அவனுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது. பொலிஸ்துறையில் சேர்ந்து விட்டால் ஒருவேளை அது சாத்தியமாகலாம் என்று எண்ணியவள் அங்கே இணைந்து கொண்டாள். பயிற்சிகள் எல்லாம் முடித்து 2022இல் பொலிஸ் குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றத் தொடங்கினாள். தந்தையின் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தேடி எடுத்துக் கொண்டாள். ரைமுண்டோ பற்றிய தேடலை ஆரம்பித்தாள். அவள் குற்றப் புலனாய்வாளராக இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ரைமுண்டோ பற்றிய பல தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. கடந்த புதன் கிழமை (25.09.2024) ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ரைமுண்டோவை(60), கிஸ்லெய்ன் கைது செய்தாள். அவளது தந்தை கொலை செய்யப்பட்டபோது அவரின் வயது 36. தனது தந்தையைக் கொன்றவனை கைது செய்யும் கிஸ்லெய்னுக்கு தற்போது வயது 36. "இன்று எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள உணர்வு என்னவென்றால்,ஒரு குற்றவாளிக்கான நீதி வழங்கப்பட்டுள்ளது, இறுதியாக நாங்கள் எங்கள் அமைதியை ப் பெற்றிருக்கின்றோம்" என கிஸ்லெய்ன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறாள். இனி அவளுக்கான உறுத்தல் இல்லாமல் போகும். ஆனாலும் அவளின் தந்தையின் இழப்பு அவளிடம் இருந்து கொண்டே இருக்கும். https://www.facebook.com/reel/382733548229265- "தோஷமும் விரதமும்"
விரதத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருக்கின்றது. கண்,காது, மூக்கு, வாய் எல்லாம் உடலில்தானே இருக்கிறது. பறகு ஏன் ஐந்தாவதாக உடல் என்று தனியாகக் குறிப்பிடுகிறீரகள்? சுத்தமான ஆணாதிகத்தை. என் வீட்டிலே இதெல்லாம் எடுபடாது.- மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
இதை வாசித்த போது எனக்கு ஊர் தெருச் சண்டை ஞாபகத்துக்கு வந்தது. ”ஏலு மெண்டால் தொட்டுப்பார். அப்ப தெரியும் உனக்கு” - கருத்துப்படம் 02.10.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.