Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 13.10.2024
From the album: கிறுக்கல்கள்
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
வடலி வளக்கிறது வீண் வேலை. அது வளர்ந்து பனையாகி… அதுமட்டும் இருப்பமோ தெரியாது. பேசாமல் தமிழரசுக் கட்சி வைச்சிருக்கிற ‘பார்’ இலே போய் அடிச்சிட்டு வரலாம். அது சுகமான அலுவல். போற போது சொல்லிப் போட்டுப் போங்கோ. நானும் சிலவேளை வரலாம்.
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
மூன்று
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!
- கருத்துப்படம் 12.10.2024
From the album: கிறுக்கல்கள்
- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இதை, ‘வடலி வளர்த்துக் கள்ளு குடிப்பது’ என்று சொல்லல்லாமா?😂- மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
ஒருவிதத்தில் மறதியும் நல்லதுதான். சில விடயங்களை மறந்தால்தான் மனிதன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். நதி போல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டைதான். ஹிட்லர் செய்த கொடுமைகள் உலகம் அறிந்த விடயம். அதற்காக யேர்மனியை ஒதுக்கி வைத்தார்களா? ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு ஒரு யேர்மனிய மாது தலைமைதான் தாங்க முடியுமா? பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, நண்பர்கள் என்று கருதியவர்களால் வந்த ஏமாற்றங்கள், பெற்றவர்கள்,உறவினர்கள் உடன் பிறப்புகள், நண்பர்கள் ஆகியோரின் இழப்புகள், வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், அவலங்கள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்தால் எப்படி நகர முடியும்?- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
வீட்டில் இருந்து ஒரு கட்சி- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- கருத்துப்படம் 11.10.2024
From the album: கிறுக்கல்கள்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- கருத்துப்படம் 11.10.2024
From the album: கிறுக்கல்கள்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வைத்தியர் அர்ச்சுனாவையும் சேர்ததுக் கொள்ளலாம்.- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
நல்லதொரு மனிதன்.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
“நான் எழுதுவது கடிதம் அல்ல உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் ஏற்கனவே சொன்னதெல்லாம் கொஞ்சம்…” ஐயா தேர்தல் பிரச்சாரத்தை இந்த வழியில் ஆரம்பிச்சிட்டார்- இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் - சிறீதரன்
மாவையின் காலில் விழுந்து ஆசி பெற்றாரே அந்தப் படத்தையும் இணைத்திருக்கலாம்.- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
தமிழ்சிறி, கருத்தாடல்களுக்கு எந்த வடிவத்திலும் பதில் தரலாம். ஆனால் அவை கருத்துக்கான பதில்களாக இருக்க வேண்டும். ஓடி ஓடி எல்லா இடத்திலும் நீங்கள் பதில் அளிப்பதால் உங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன். நீங்கள் நின்று நிதானமாகப் பதில் தருவதுதான் உங்களுக்கு அழகு. பாரதிதாசனின் பாடல் ஒன்றின் சில வரிகள், பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச்சொல்க உன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும் புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் சரி விடயத்துக்கு வருவோம், “அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள்” என்று சொல்லி இருந்தீர்கள். நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. இப்பொழுது யேர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இனவெறிதான் ஊட்டப்படுகிறது. 2009க்குப் பிறகு தாயகத்தில் இருந்து வந்தவர்கள், அந்தப் பாடப் புத்தகங்களில் தமிழர்களது வரலாறு தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லி புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கி புதுப் புத்தகங்கள் அச்சடித்து தனியாகப் பாடசாலை நடாத்துகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதது அல்ல. இன்றைய நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வதுதான் நல்லது. இரண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் படிக்கும் போதே, மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே பிரதானம் எனத் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகே மற்றவைகள் எல்லாம். இன்றுள்ள நிலையில் தாயகத்தில் உள்ளவர்களைக் கேட்டால், உரிமை,தீர்வு, நாடு, எல்லாமே நான் குறிப்பிட்ட அந்த மூன்றுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஒரு வலுவான சமுதாயம் தாயகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறதா? இல்லையே! இன்னும் அடுத்தவர்களில் தங்கிக் கொண்டு, யாரேனும் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டுதானே அங்கு பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதாயின், ஏராளனின் ‘புலர் தொண்டு நிறுவனம்’. “யாரையும் எதிர்பார்த்திராது தாங்களே உழைத்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” இதைச் சொன்னது வேறு யாரும் இல்லை. பிரபாகரன்தான். அவர் மேலும் சொன்னார், “ஆயுதம் எங்கள் கையில் திணிக்கப்பட்டது” என்று. அவர் எதிர்பார்த்த அந்தச் சமுதாயமும் இன்று இல்லை. ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது நாட்டில் இல்லை. வாள் வீச்சுகளும் தேசிய வாய் வீச்சுகளும் போதைப் பொருளின் உச்சங்களும் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து தப்பி வர வேண்டிய தேவையும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோமா? இனப் பிரச்சினையைக் கிண்டிக் கிளறி இனங்களுக்குள் பிரிவுகளை வளர்ப்போமா? எது இப்பொழுது முக்கியம் என்பதைச் சிந்திப்பதுதான் அவசியம். நம்பி வந்த மக்களை ‘அம்போ’ எனக் கைவிட்டு விட்டு தலைவர்கள் சிலர் மாவீரர்களாகி விட்டார்கள். தப்பிய போராளிகளில் சிலர், வழிகாட்டல் வாழ்வாதாரம் இன்றி அலைந்து திரிந்து வாழ்வு தேடி பொது வாழ்க்கையில் தங்களை மெது மெதுவாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் வசதியும் ஆதரவும் இருந்ததால் ‘போதுமடா சாமி’ என்று வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கின்றது. ஓடி வந்தவர்களில் இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இலகுவாகக் கிடைத்தது. சாதாரண போராளிகள் நாதியற்றுப் போனார்கள். இரண்டு பக்ககமும் போரில் களைத்து விட்டன. பொருளாதாரத்தில் நாடு பாதாளத்தில் விழுந்து விட்டது. இப்பொழுது அங்கே நீங்கள் குறிப்பிட்ட ‘உரிமை,தீர்வு, நாடு’ என்ற குரல்கள் எல்லாம் இரண்டு தரப்பிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், அது ‘தேசியம்’ பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினதும், எழுத்தார்களுடையதும்தான். ஆனால் புலத்தில் அதுவும் குறிப்பாக நான் வாழும் யேர்மனியில், தேசியம் பேசும் வேசதாரிகளை மிக மிக நன்றாகவே நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மேலும் மேலும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்க வேண்டும். மக்களைச் சிரமப் படுத்தாதீர்கள். உங்கள் தேசிய சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் யாரிலேனும் தங்காது சுயமாக உழைத்து வாழும் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். அப்படி உருவானால் அந்தச் சமுதாயம் தங்களுக்கு உரிமை,தீர்வு, நாடு தேவையா என்பதைப் பின்னர் தீர்மானித்துக் கொள்ளும். இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
ஒருவகையில் இந்த மூளைச் சலவை என்பது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கூட புலிகள், போராட்டம்… போன்றவற்றில் இருந்து இன்னமும் மீளவில்லை. கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள். தமிழரை இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள். “உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் கதறி என்ன குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…”- தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
- கருத்துப்படம் 10.10.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
படங்களைப் பார்த்தால், எங்கேயோ இழவு வீட்டுக்குப் போய் இரங்கல் தெரிவிப்பது போல இருக்கிறது. கொஞ்சம் சிரிக்கச் சொல்லுங்கள்.- 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
அவருக்கு 19 வயதில் மகள். அவரும் மணம் முடித்து விட்டார். குடும்பமே மிக இளம் வயதில் மணம் முடிப்பவர்கள் போலே.- சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
- கருத்துப்படம் 12.10.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.